முகப்பு |
ஏம கூடப் படலம்
|
|
|
4891.
|
நாரணன் என்னும் தேவும் நான் முகத்தவனும் முக்கண்
பூரணன் தானும் ஆகிப் புவி படைத்து அளித்து மாற்றி
ஆரண முடிவும் தேறா அநாதியாய் உயிர்கட்கு எல்லாம்
காரணன் ஆய மேலோன் கழல் இணை கருத்துள் வைப்பாம்.
|
1 |
|
|
|
|
|
|
|
4892.
|
திண்ணிய அவுணர் தம்மைச் செற்றிட இன்னே செவ்வேல்
பண்ணவன் ஏகும் எல்லா அமரரும் பாங்கில் செல்வர்
துண் என யானும் ஏகாது ஒழிவது சூழ்வு அன்று என்னா
எண்ணி வந்திடுவான் போல இரவி வந்து உதயம் செய்தான்.
|
2 |
|
|
|
|
|
|
|
4893.
|
இரவி
வந்து உதய வெற்பின் எய்திய காலை தன்னின்
அரி அணை மிசையே வைகும் அறுமுகம் கொண்ட அண்ணல்
பிரமன் மால் மகவான் தேவர் முனிவரர் பிறரும் கேட்ப
வரமிகு சிறப்பின் வீரவாகுவை நோக்கிச் சொல்வான். |
3 |
|
|
|
|
|
|
|
4894.
|
பாவமே பயிலும் சூரபன்மனும் அவுணர் ஆனோர்
ஏவரும் முடிவார் ஆக இமையவர் இடும்பை நீங்க மா இயல்கின்ற வீர மகேந்திரப் புரத்துக்கு இன்னே போவது புரிது நம்தேர் பொள் எனக் கொணர்தி என்றான். |
4 |
|
|
|
|
|
|
|
4895.
|
வள்ளல் மற்று இதனைச் செப்ப மால் அயன் மகவான் ஆதி
உள்ள பண்ணவர்கள் கேளா உவகை அம் கடலின் மூழ்கித்
தெள்ளிதின் எமது துன்பம் தீர்ந்தது தீர்ந்தது என்னாத்
துள்ளினர் ஆடிப் பாடி அவன் அடி சூடல் உற்றார். |
5 |
|
|
|
|
|
|
|
4896.
|
ஆயது காலை தன்னின் அரும் பெரும் கயிலை போற்றும்
நாயக நந்தி அண்ணல் நல் கணத் தலைமை பூண்டோன்
சேயது ஓர் மன வேகப் பொன்தேரொடு வலவன் தன்னைக்
கூயினன் கொண்டு வல்லே குமரவேள் முன்னர் உய்த்தான்.
|
6 |
|
|
|
|
|
|
|
4897.
|
முன் உற மருத்தன் தூண்டு முரண் தகு தடம்தேர் நண்ண
அன்னதை அருளின் நோக்கி அறுமுகம் படைத்த அண்ணல்
பல் நெடும் சீயம் தாங்கும் பைம் பொனின் தவிசு தன்னின்
மன்னினன் இருத்தல் நீங்கி எழுந்தனன் மறைகள் போற்ற. |
7 |
|
|
|
|
|
|
|
4898.
|
மாறு இல் பொன் சுடரும் மேரு வரைமிசை இருமூ வெய்யோர்
வேறு இலாது ஒரு பால் பட்டு விளங்கி வந்து இவரு மாபோல்
ஆறுமா முகத்து எம் ஐயன் அனைய தொல் இரதமீக் கண்
ஏறினான் ஏறிச் சூழ்வோர்க்கு இனையது ஒன்று இயம்புகின்றான்.
|
8 |
|
|
|
|
|
|
|
4899.
|
வார் திரை அளக்கர் நாப்பண் வரம்பு இலா அளவைத்து ஆகிச்
சீர்திகழ் மகேந்திரப் பேர்த் திருநகர் முன்னர் ஏகிச்
சூர்தனை அடுவான் போதும் துண் என நீவிர் நும் தம்
ஊர்திகள் தம்மில் மேவி ஊர்ந்து இவண் வருதிர் என்றான்.
|
9 |
|
|
|
|
|
|
|
4900.
|
இப்படி முகம் ஆறு உள்ள எம்பிரான் இசைத்தலோடும்
அப்பணி இசையா வேதன் அன்னத்தும் ஆழி மேலோன்
ஒப்பரும் உவணம் மீதும் உம்பர் கோன் மானம் மீதும்
செப்பு உறும் ஏனை விண்ணோர் தம் தம் ஊர்தியினும் சேர்ந்தார்.
|
10 |
|
|
|
|
|
|
|
4901.
|
அந்தம் இல் இலக்கத் தோரும் அவர் அலா எண்மர் தாமும்
மந்தரம் உறழும் வீர வாகுவாம் வன்மை யோனும்
எந்திர வயமான் தேரின் வீற்று வீற்று ஏறி யார்க்கும்
சிந்தையின் ஆனும் எட்டாத் தேவர்கள் தேவர் சூழ்ந்தார். |
11 |
|
|
|
|
|
|
|
4902.
|
சுப்பிரன் மேக மாலி சுவேத சீரிடன் கபாலி
அப்பிர சித்துச் சித்திராங்கனே சுவால தாலு ஒப்பு இல் வச்சிரனே வீமன் உக்கிரன் உக்கிரேசன் பிப்பிலன் நந்திசேனன் பிரமசன் பிரமசேனன். |
12 |
|
|
|
|
|
|
|
4903.
| பதுமனே கராளன் தண்டன் பத்திரன் பரிக நேமி உதவகன் புட்ப தந்தன் உருத்திரா காரன் வீரன் மதிசயன் கேது மாலி வக்கிரன் பிரம கேசன் அதி பதி கலிங்கன் கோரன் அச்சுதன் அசலன் சாந்தன். |
13 |
|
|
|
|
|
|
|
4904.
|
சித்திர
சேனன் பூரி சுசீலன் மாசயனே சிங்கன்
உத்தர மடங்கல் பேரோன் உபதிட்டன் சயனே ஈசன் மத்தகன் மதங்கன் சண்டி மகா பலன் சுவேதன் நீல பத்திரன் சுவாகு அண்டா பரணனே காக பாதன். |
14 |
|
|
|
|
|
|
|
4905.
|
பிங்கலன் சமானன் மாயன் பிறங்கிய நிகும்பன் கும்பன்
சங்கபாலன் விசாகன் சதநாவன் அயக் கிரீவன்
அங்கை ஆயிரத்தன் செம்கண் அயுதத்தன் அனந்தன் வாமன்
மங்கல கேசன் சோமன் வச்சிர மாலி சண்டன். |
15 |
|
|
|
|
|
|
|
4906.
| அசமுகன் சரபன் குந்தன் ஆடகன் கவந்தன் மேகன் விசயன் வித்துருமன் தண்டி வியாக்கிரன் காலபாசன் தசமுகன் குமுதன் பானு தனஞ்சயன் இடபரூபன் சுசிமுகன் அனல கேசன் சுபத்திரன் கேது மோகன். |
16 |
|
|
|
|
|
|
|
4907.
| மத்தன் உன்மத்தன் நந்தி மனோபவன் வாயு வேகன் பத்து நூறு அடிகள் பெற்றோன் பானுகம்பன் பதங்கன் சுத்தனே அனிகன் சீதன் சுனாதனே சுமாலி மாலி அத்திரி அவுணர் கூற்றன் அரிகேசன் சுவால கேசன். |
17 |
|
|
|
|
|
|
|
4908.
|
இங்கு இவர் பூத வெள்ளத்து இறையவர் ஒரு நூற்று எண்மர்
பொங்கு வெம் சினத்தர் எல்லாப் புவனமும் அட வென்றாலும்
அங்கு ஒரு நொடிப்பின் முன்னர் அடுபவர் ஆடல் மிக்கோர்
சங்கையில் வலியோர் யாரும் சண்முகத்தவனைச் சூழ்ந்தார்.
|
18 |
|
|
|
|
|
|
|
4909.
|
ஏ எனப் பகரும் முன்னம் இவ்வகை எவரும் செவ்வேல்
சேயினைச் சூழ்தலோடும் செய்கை மற்று அதனைக் காணூஉ
மாயிருள் பரவை ஞாலம் வரைக் குலம் பனிப்ப ஆர்த்திட்டு
ஆயிரத்து இரட்டி வெள்ளத்து அனிகமும் எழுந்த அன்றே.
|
19 |
|
|
|
|
|
|
|
4910.
|
எழுந்தன அனிக வெள்ளம் ஈண்டிய எங்கும் விண்ணோர்
பொழிந்தனர் பூவின் மாரி பூதர் தம் தெழிப்பு விண்ணும்
ஒழிந்திடு திசையும் பாரும் உற்றன உலைந்தது ஆழி
அழிந்தன கருவி வானம் அண்டம் நெக்கு உடைந்த மாதோ.
|
20 |
|
|
|
|
|
|
|
4911.
| கல் என இரங்கு பேரி கரடிகை துடியே காளம் சல்லரி திமிலை தக்கை தண்ணுமை படகம் கோடு வல் இயல் உடுக்கை சங்கம் வான் குடமுழவம் ஆதிப் பல் இயம் அனந்த கோடி பாரிடம் இயம்பிச் சென்ற. |
21 |
|
|
|
|
|
|
|
4912.
|
கள்ளல் அம்புற்ற தண் தார் கவினிய மொய்ம்பில் பூத
வெள்ளம் அங்கு ஏகலோடும் விரிந்து எழு பூழி மாலை
தள்ளரும் சுடர் கண் மாற்றி அகிலமும் தானே ஆகி
அள்ளல் அம் கடலின் பேழ் வாய் அடைத்தது திடரே ஆக.
|
22 |
|
|
|
|
|
|
|
4913.
|
கலகல மிழற்றும் நோன் தாள் கழல் புனை பூத வெள்ளம்
வல வயின் எஃகம் ஏந்தும் வள்ளல் தாள் வழுத்திச் சூழ்ந்து
செல உறு கிரிகள் மானச் சென்று தம் தலைவரோடும்
அலை பொரும் அளக்கர் வேலை அகன் கரை இறுத்த அம்மா.
|
23 |
|
|
|
|
|
|
|
4914.
|
மடங்கலை உறழும் மொய்ம்பின் மா பெரும் பூத வெள்ளம்
தடங்கழல் கலிப்பத் தாளில் சலசல ஒலிப்ப மாறா நெடும் திரை அலமந்து உள்ள நேமி அம் கடலே ஆறா நடந்தன பொறை ஆற்றாது சேடனும் நடுக்கம் உற்றான். |
24 |
|
|
|
|
|
|
|
4915.
|
படி
தவிர் பூத வெள்ளம் படர்தலும் பரட்டின் காறாக்
கடல் அளவு அமைந்தது அன்றே கனல் விழிச் சுறவு சின்னை
கெடல் அரும் திமிங்கில் ஆதி கீடம் போல் உலவா நின்ற
அடி உறை பரலே போன்ற அதற்படு கிரிகள் முற்றும். |
25 |
|
|
|
|
|
|
|
4916.
|
தந்திரப் பூத வெள்ளம் தடம் கடல் ஆற்றில் சார
வெம் திறல் துணைவர் யாரும் விரிஞ்சனும் மாலும் மற்றை
இந்திரத் தலைவன் தானும் இமையவர் பலரும் சூழ
அந்தரத்து ஆற்றில் சென்றான் அறுமுகன் அணித்திண் தேர்மேல்.
|
26 |
|
|
|
|
|
|
|
4917.
|
மாறு பட்டவர் மேல் செல்லும் வயப் பெரும் பூதர் ஏக
ஆறுபட்டு அமரும் முந்நீர் அலமந்து தெளிவு இன்றாகிச்
சேறு பட்டு இறையது ஒன்று தேய்ந்திம் முன்னம் அஃதே
நீறு பட்டு எழுந்து சென்று எவ் உலகமும் நிமிர்ந்து சூழ்ந்த.
|
27 |
|
|
|
|
|
|
|
4918.
|
இவ்வகை அயில் வேல் அண்ணல் இராயிரம் பூத வெள்ளம்
கவ்வையின் அமைந்து செல்லக் கனை கடல் வரைப்பின் ஏகி
எவ்வம் அது அடைந்த தொல்லை இலங்கை அம் குவடு நீங்கி
மைவரை புரை சூர் மேவு மகேந்திர புரம் முன் போந்தான்.
|
28 |
|
|
|
|
|
|
|
4919.
|
போந்த காலை அயலின் வந்து போற்றி அங்கை கூப்பியே
நாந்தகம் சிலை கதை நலம் கொள் சங்கு சக்கரம் ஏந்தினோனும் நான்முகனும் இந்திரத் தலைவனும் ஆய்ந்து நேடி இன்ன தன்மை ஆர்வமோடு இயம்பினார். |
29 |
|
|
|
|
|
|
|
4920.
|
காண்டி ஈது சூரன் ஊர் கடும் கண் நீசர் செறிதலால்
ஆண்டு சேறல் முறையதன்று அதற்கு அடுத்த எல்லையாம் ஈண்டு பாசறைத் தலம் இயற்று வித்து இருந்த பின் வேண்டு மாறு புரிதி ஐய வினைய நாடி என்னவே. |
30 |
|
|
|
|
|
|
|
4921.
|
குன்று எறிந்த முருகன் அன்ன கூற்று உணர்ந்து இசைந்திடா
நன்று இது என்று அருள் கண் வைத்து நாகர் கம்மியன் தனை
மன்ற அன்பொடு விளித்து வல்லை ஈண்டு பாசறை
ஒன்று செய்திடு என்னலும் உளம் சிறந்து புகலுவான். |
31 |
|
|
|
|
|
|
|
4922.
| தாரகன் கடந்த வேல் தடக்கை வீர ஈண்டு யான் ஓர் இறைக்கு முன்னம் ஆக ஓங்கு பாசறைத் தலம் சீர் இதில் படைக்குவன் தெரிந்து காண்டி உனது பேர் ஆர் அருள் திறத்தின் என்று அடித்தலம் பணிந்து பின். |
32 |
|
|
|
|
|
|
|
4923.
| மாட கூட மண்டபம் வளம் கொள் சோலை வாவிகள் பீடு உலாய கோபுரம் பிறங்கு வீதி ஓர் திசை கோடி கோடி ஆக்கி மற்றோர் கோ நகர் இயற்றியே நாடும் ஏம கூடம் என்று நாமம் ஒன்று நாட்டினான். |
33 |
|
|
|
|
|
|
|
4924.
|
கருத்தில் அன்னவன் செயும் கவின் கொள் பாடி வீடுகண்டு
அருத்தியான் மகிழ்ச்சி எய்தி அருள் புரிந்து கந்தவேள்
திருத்தகும் சனங்கள் போற்றி செய்ய ஆண்டு சென்ற பின்
மருத்தன் உந்து தேர் இழிந்து மந்திரத்தை நண்ணினான். |
34 |
|
|
|
|
|
|
|
4925.
| அந்தம் அற்ற பூதர் தம்மை ஆவணங்கள் நிறுவியே முந்து கொற்ற வயவர் நான் முகத்தன் ஆதி அவரொடும் மந்திரத்துள் ஏகியே மகிழ்ந்து வீற்று இருந்தனன் இந்திரப் பெரு மடங்கல் ஏறு தாங்கு தவிசின் மேல். |
35 |
|
|
|
|
|
|
|
4926.
|
ஒன்பது
ஓடி இலக்க வீரர் ஒங்கலாளர் அறுவர்கள்
அன்பு செய்து போற்றி செய்ய அறுமுகேசன் அமர்கள் முன்பு செய் பணித்திறம் முறைப்படப் புரிந்திட இன்பினோடும் ஏமகூட எழில் இருக்கை வைகினான். |
36 |
|
|
|
|
|
|