வரவு கேள்விப் படலம்
 
4927.
ஏக நாயகனாம் ஐயன் இவ்விடை இருந்த எல்லை
நாகர் மேல் அளிவைத் துள்ள நாரதன் அவற்றை நாடி
மாக நீள் புரிசை சூழ்ந்த மகேந்திர புரத்தில் சென்று
போகம் ஆர் உலகின் மேலாம் புரவலன் கோயில்                                   புக்கான்.
1
   
4928.
புக்கனன் அவுணர் உய்ப்பப் பொருவிலா இகல் வெம்                                        சூரன்
மிக்கு உயர் திருவினோடும் வீற்று இருந்திடுதல் காணூஉ
இக்கென இனைய தீயோன் இறப்ப என்று உன்னி வாயால்
தக்கது ஓர் ஆசி கூறிச் சார்ந்தனன் தவத்தின் மேலோன்.
2
   
4929.
அங்கைகள் மலர நின்றே ஆசி செய்தானை நோக்கி
எங்கு உளை இங்கு வந்தது என்னை நீ யாரை என்ன
மங்கை ஓர் பங்கன் மேவும் வட பெரும் கயிலை                                   வாழ்வேன்
நும் குலம் தலைமை ஆக வைகலும் நோற்றல் செய்வேன்.
3
   
4930.
கை தவம் புகலேன் வெய்ய காமமே முதல நீத்துச்
செய்தவம் பலவும் உள்ளேன் தேவருக்கு இடுக்கண்                                  செய்வேன்
மை தவிர் புகரினோடும் மருவு நண்பு உடையேன்                                   நின்பால்
எய்தி ஒன்று உரைக்க வந்தேன் நாரதன் எனும் பேர்                                   உள்ளேன்.
4
   
4931.
சிந்து வான் மதி தோய் வேணிச் செல்வன் நின் அடுவதாக்
கந்தனாம் முருகன் தன்னைக் காமர் கண் அழலால் நல்க
வந்த மா மதலை தன்பால் ஐய உன் பணியது ஆற்றும்
இந்திராதியர்கள் ஏகி இறைஞ்சியே ஏத்தி உற்றார்.
5
   
4932.
உற்று உளார் தமக்கு நின்னால் உறுதுயர் குமரன் கேட்பச்
சொற்றலும் அஞ்சல் என்று தொல் சிவன் அருள் மேல்                                    கொண்டு
கொற்ற வெம் பூத வீரர் குழாத் தொடும் புவியின் ஏகி
மற்று உனது இளவல் தன்னை வரையொடும் வேலால்                                    செற்றான்.
6
   
4933.
ஆண்டு அது புரிந்த பின்னர் அறுமுகன் செந்தி மேவித்
தூண்டினன் நினக்கு ஓர் ஒற்றைத் துண் என அவனும்                                      வந்து
மீண்ட பின் புகுதி நாடி வேலையைக் கடந்து தன்பால்
ஈண்டிய படையொடு அன்னான் இந் நகர் வடபால்                                      வந்தான்.
7
   
4934.
ஆங்கனம் பாடி வீடு ஒன்று ஆற்றுவித்து அனிகம் யாவும்
பாங்கு உற இருந்தான் செவ்வேள் பார்த்தனன் இனைய                                       எல்லாம்
ஈங்கு இது நிகழ்ந்த வண்ணம் என்றலும் அவுணர்                                       கோமான்
தீம் கனல் என்னச் சீறி நகைத்து இவை செப்பல் உற்றான்.
8
   
4935.
மேல் நிமிர் கொண்டல் உயர்த்தவன் அம்புயம் மிசை                                     வேதா
நீல் நிற மாயவன் ஊரது போல நினைந்தானோ
ஆன தொல் அண்டம் ஒர் ஆயிர கோடியும் அரசு                                     ஆள்வேன்
மா நகர் மேல் ஒரு பாலகனாம் பொர வருவானே.
9
   
4936.
அரியின் இனம் செறி சூழலின் அன்னவை அடல் உன்னி
கரியது கன்று உழை கலை பிறவற்றொடு கடிது ஏகில்
பொருது வயம் கொள வல்லது கொல் அதுபோல்                                  அன்றோ
முருகனும் வெம் படையுடன் இவண் வந்திடு முறைதானே.
10
   
4937.
வேலை கடந்து எனது ஆணை இகழ்ந்து வியன் பூதச்
சால நெடும் படை தன்னுடன் இந்நகர் சார்வான் ஆம்
காலம் இது அங்கு அவன் வீரம் அழிப்பல் கருத்து                                     இல்லாப்
பாலகன் என்றும் விடேன் வசை என்பதும் பாரேனால்.
11
   
4938.
முன் ஒரு சூழ்ச்சியின் அசமுகி ஒண்கரம் முரிவித்தே
ஒன்னலராய் அமர் உம்பர்கள் யாவரும் உய்ந்தாரோ
என் இளையானொடும் வெற்பினை அட்டனம் என                                     உன்னித்
தன் உயிர் போவது அறிந்திலன் இந் நகர் தனின்                                     வந்தான்.
12
   
4939.
ஆழிய தெண் திரை ஆழி கடைந்தவன் அலகு இல்லா
வேள்வி புரிந்திடும் வாசவன் அம்புய மிசை மேயோன்
வாழிய நம் பெயர் கூறினும் அஞ்சினர் மறை குற்றார்
பூழி புனைந்தவர் பாலகனோ அமர் புரிவானே.
13
   
4940.
அந்தர மேல் வரும் செம் கதிரைச் சிறை அமர் வித்த
மைந்தனை நால் படை தன்னொடு மேவி வயப் போரால்
முந்திய பூதரை ஏனைய வீரரை முடிவித்தே
கந்தனை ஒல்லையின் வெற்றி கொள்வேன் இது                               காண்கிற்பாய்.
14
   
4941.
என்ற சுரேசன் இசைத்தலும் நாரதன் இவை கேளா
நன்று இது நன்று இது தாழ்க்கலை இன் இனி நகர் சூழச்
சென்றவனைப் பொர நின் படை ஏவுதி செல்கின்றேன்
வென்றி நுமக்கு உற நோற்றிடு வான் என விண்                                    போனான்.
15
   
4942.
நாரதன் இனைய கூறி நகையொடு போதலோடும்
சூர் அருள் ஆற்றல் மிக்கோன் துண் என அயலின் நின்ற
கோரன் உற்கோரன் என்னும் ஒற்றரைக் குறித்து நோக்கி
வாரிதி இறைவன் பற்றி வல்லையில் கொணர்திர் என்றான்.
16
   
4943.
என்றலும் அனையர் ஓடி எறிகடற்கு அரசைக் கூவி
வன் திறலோடு பற்றி வல்லை முன் கொணர்ந்தே உய்ப்பக்
கன்றிய மனத்தன் ஆகிக் கைதொழுது அவலம் கூர்ந்து
நின்றனன் அவனை நோக்கி நெருப்பு எழ விழித்துச்                                    சொல்வான்.
17
   
4944.
பவ்வ நீர் அரச கேண்மோ பங்கயத்து அவனும் மாலும்
செவ்விதின் உணரா வண்ணம் ஒளித்தவன் சிறுவன்                                    தன்னை
வெவ் வலி கடந்த பூத வெள்ளத்தை நமது மாறா
இவ்விடை விடுத்தது என்னை என்னலும் இசைக்கல்                                    உற்றான்.
18
   
4945.
மண் படு புவனம் போற்றும் மன்னகேள் புயங்கம் மீது
கண் படு முகுந்தன் வேதாக் கடவுளர் தலைவனோடும்
எண் படு துணைவர் ஆனோர் யாவரும் புடையில் சூழ
விண்படு நெறியில் சென்றான் வீரவேல் தடக்கை                                 அண்ணல்.
19
   
4946.
மடல் கெழு நீபத் தண் தார் வள்ளல் வான் நெறியில்                                      போத
மிடல் கெழு பூதர் என்பால் மேவினர் சென்றார் அன்னார்
அடிகளின் பரட்டின் காறும் அமைந்திலன் அவரை யானே
தடை செய வல்லேன் போலும் தக்கதே இது மற்று                                      அன்றே.
20
   
4947.
ஊழியும் உலையாப் பூதர் ஒல்லெனச் செல்லத் தாளில்
பூழியால் அளறு பட்டு ஆங்கு இடையறப் புலம்பல்                                உற்றேன்
ஆழியன் என்னும் பேரும் அற்றனன் வசையே பெற்றேன்
ஏழையேன் செய்வது என் கொல் எதிர் உண்டோ                                வலியர்க்கு அம்மா.
21
   
4948.
தெள்ளிதில் தமிழ் தேர் காட்சித் திரு முனி கரத்தில் வாரி
உள்ளுறக் கொண்டதே போல் ஒல்லையின் மிவைர்                                   போலாம்
கொள்ளையில் செறி பூதர்க்குள் ஒருவர் ஓர் குடங்கை                                   தன்னின்
அள்ளுதற்கு ஆற்ற கில்லேன் ஆதலின் உய்ந்தேன்                                   அன்றே.
22
   
4949.
உடல் சின வசனி தன்னை ஒண் பணி விலக்க வற்றோ
கடு முரண் அரிமான் ஏற்றைச் களிறு எதிர் விலக்கிற்று                                     உண்டோ
மிடல் கெழு விதியைப் புந்தி விலக்குமோ அஃதே                                    அன்றோ
அடல் மிகு பூதர் தம்மை அளியனேன் தடுப்பது என்றான்.
23
   
4950.
இற்று எலாம் அளக்கர் கோமான் இசைத்து மெய் துளக்கம்                                          எய்தி
நிற்றலும் நெடு வேல் அண்ணல் நீள் நகர் நணிய தன்மை
ஒற்றரில் சிலவர் காணா ஓடினர் ஒல்லை சென்று
கொற்றவன் பணிந்து நின்றே இவை இவை கூறல் உற்றார்.
24
   
4951.
அரா அணை அண்ணல் வேதா அரி முதல் அமரர் சூழ
விரா உறும் இலக்கத்து ஒன்பான் வெலற்கு அரும் வீரர்                                         போற்ற
இராயிரம் பூத வெள்ளம் ஈண்டிட எறி நீர்ச் சென்னிப்
பரா பரன் மைந்தன் நம்தம் பதி வடதிசையில் போந்தான்.
25
   
4952.
வட திசை அதனில் போந்து வானவர் புனைவல்                                 கொண்டே
படி புகழ் தகைமைத்து ஆன பாசறை புரிவித்து ஆங்கே
புடைதனின் அனிகம் ஆன பூத வெவ் வீரர் மேவ
நடுவண் ஓர் நகரம் தன்னின் நண்ணி வீற்று இருந்தான்                                 அன்றே.
26
   
4953.
கண்டனம் இதனை இன்னே கடவது புரிதி என்னாத்
திண் திறல் வெய்ய தூதர் செப்பலும் அதனைக் கேளா
அண்டமும் புவனம் யாவும் அலமர அழலில் சீறிப்
புண் திகழ்ந்த அனைய கண்ணான் இவை இவை புகலல்                                        உற்றான்.
27