இரண்டாம் நாள் சூரபன்மன் யுத்தப் படலம்
 
5347.
கங்குல் போந்திடுதலும் கண பணப் பன்னகம்
நுங்கு உறாது அகலவே நோற்று மால் ஏந்திடும்
சங்கமாய் மதிசெலச் சக்கர படையெனத்
துங்கமோடு எழுதல் போல் தோன்றினன் பரிதியே.
1
   
5348.
இரவி செல்லும் முன் அவுணர் கோன் துயில் ஒரீஇ                                 எழுந்து
மரபினில் புரி நாள் கடன் முடித்து மன்று எய்தித்
திரு மணிப் பெரும் தவிசிடை இருந்து தன் சிறுவன்
நெருநல் உற்றிடும் வசையினை உளத்து இடை                                 நினைந்தான்.
2
   
5349.
நினைதல் உற்றுழி உளத்து இடைப் பெரும் சினம் நீட
இனி அமர் தொழிற்கு யாரையும் விடுக்கிலன் யானே
அனிகமோடு போய் மாற்றலர் வன்மையை அழித்துப்
புனைவன் வாகை என்று உன்னினான் அழிவு இலா                                    புகழோன்.
3
   
5350.
செம் கண் வாள் எயிற்று அவுணன் இத் தன்மையைத்                                       தேற்றி
வெம் கண் ஒற்றரில் அளப்பு இலர் தங்களை விளியா
அம் கண் மாநிலம் முறை முறை சூழ்தரும் அளக்கர்
எங்கணும் செறி தானையைத் தம்மின்கள் என்றான்.
4
   
5351.
என்றலும் தொழுது ஆயிர கோடியோர் யாண்டும்
சென்று சென்று தம் மன்னவன் பணி முறை செப்பத்
துன்று தேர் கரி பரி மிசைப் படர்ந்தனர் தொல் நாள்
வென்றி கொண்ட நூறு ஆயிர வெள்ளத்தின் மிக்கோர்.
5
   
5352.
சூலமே கணிச்சி தண்டம் தோமரம் குலிசங் சாபம்
கோல வாள் பலகை வட்டம் குந்தம் வேல் நாஞ்சில்                                     பிண்டி
பாலமே முசுண்டி சங்கம் பரிதியே எழுவே தட்டி
பீலி வல் முசலம் ஆதி பெரும் படை கொண்டு சென்றார்.
6
   
5353.
எண் தகும் இனைய வாற்றால் இலக்கம்                          வெள்ளத்தினோரும்
திண் திறல் மகேந்திரப் பேர்த் திரு நகர் சுற்றி ஆர்ப்ப
விண் தொடு சிகரி என்னும் மேருவின் உச்சி போகித்
கண்டனன் அவுணர் மன்னன் கடல் பெரும் தானைச்                                        சூழல்.
7
   
5354.
தேக்கினன் கதிரும் செல்லாச் செல் உறழ் தானை ஈட்டம்
நோக்கினன் சிந்தை கொண்ட நோன்மைசார் துயரம்                                      யாவும்
நீக்கினன் வன்மை பெற்றான் நேர் அலர்ப் பொருது                                      வென்றி
ஆக்கினன் போல நின்றான் அறத்துடன் அருளைக்                                      கொன்றான்.
8
   
5355.
அழிந்திடுகின்ற காலத் தளக்கரின் ஆர்த்துச் சூழும்
கழிந்திடு தானை கண்டோன் கடிது போர்க்கு ஏக                                       முன்னிக்
செழும் கதிர் மதியம் ஆக்கும் திரு மணிச் சிகரி நின்றும்
இழிந்தனன் தலைமை நீங்கி இழி தொழில் பயின்ற                                       தீயோன்.
9
   
5356.
எடுத்தனன் சிலையும் ஏனைப் படைகளும் இமையோர்                           தொல்நாள்
கொடுத்திடு படைகள் யாவும் கொண்டனன் கரத்தில்                           கோதை
தொடுத்தனன் வெரிநில் தூணி தூக்கினன் விரல்கள்                           தோறும்
அடுத்த பொன் புட்டில் சேர்த்தான் அண்டங்கள்                           அனைத்தும் வென்றான்.
10
   
5357.
குந்தளச் சுழியல் குஞ்சிக் கோலமா மௌலி தன்னில்
சுந்தரத் துணர் மென் தும்பை தொடுத்திடு பிணையல்                                    சேர்த்தி
மந்தரப் பொருப்பு மேரு வரை இது என்று ஐயம் செய்யும்
இந்திரப் பெரும் தேர் ஒன்றின் ஏறினன் இரவியே போல்.
11
   
5358.
பண் உலாம் புரவிப் பந்தி பருமிதக் களிற்றின் ஈட்டம்
எண் இலாப் புரவி மான் தேர் ஏமம் ஆய்ப் பின்னர் ஏக
அண்ணல் வாள் அவுண வீரர் அமைச்சர்கள் அயலில்                                     செல்ல
விண் உலாம் புரிசைக் கோயில் வீதிகள் கடந்து                                     சென்றான்.
12
   
5359.
கோயிலின் எல்லை நீங்கிக் கோபுரம் கெழீஇய கொற்ற
வாயிலின் மருங்கு செல்ல மன்னவன் வரவு நோக்கிக்
காய் கதிர்த் தபனற் கண்ட கலிவியன் உலகம் என்ன
ஆயிர நூறு வெள்ளத்து அவுணரும் புடை சூழ்ந்து                                    ஆர்த்தார்.
13
   
5360.
அன்ன காலையில் அரி முகன் சேய் அதி சூரன்
துன்னு தாரகன் சுதன் அசு ரேந்திரத் தொல்லோன்
என்ன நின்றிடும் மைந்தர்கள் இருவரும் ஏகி
மன்னர் மன்னனை அடைதலும் இனையன வகுப்பான்.
14
   
5361.
திரைகொள் வேலை போல் நிறை தரு கோட்டகம்                                 சிறிதோர்
கரை இலா ஆழி உடைத்திடும் அன்னது கடுப்பப்
பொரு திறல் படை பல உள என்னினும் போற்றும்
அரசர் இல் வழி நின்றிடாது அன்னவை அழியும்.
15
   
5362.
ஆதலால் இனி நீர் இரு வீரர்களும் அமரின்
மேதகும் பெரும் சேனைக்கு முதல்வராய் மேவிப்
போதிர் முன் உற என்றலும் நின்றிடு புதல்வர்
ஈது நன்று என வணங்கியே ஏகினர் இமைப்பில்.
16
   
5363.
தந்த மான் தடம் தேர் மிசை ஏறியே சமரில்
கொந்து உலா மலர் வாகையை மிலைச்சிய குமரர்
வந்த நால் பெரும் படையையும் அணி பெற வகுத்து
முந்து தானை அம் தலைவராய் ஏகினர் முறையால்.
17
   
5364.
ஆகும் எல்லையில் அங்கு அது நோக்கு உறா அடுபோர்
வாகை கொண்ட நூறு ஆயிர வெள்ளத்து மறவோர்
ஓகை எய்தியே அமர் புரி பறந்தலை உன்னி
ஏகல் மேயினர் பணிகளும் சேடனும் இரங்க.
18
   
5365.
கடம் திகழ் கரிதேர் பாய் மாக் கலந்திடத் தானைவீரர்
படர்ந்திடுகின்ற காலைப் பருமணி வயிரத்தேர் மேல்
அடைந்திடும் அவுணர் மன்னர் அளக்கர் இல் வடவை                                       சுற்ற
விடம் தனி நடந்தது என்ன விண்ணவர் மருளச்                                       சென்றான்.
19
   
5366.
தொண்டகம் துடியே பம்பை தூரியம் முருடு கோடு
திண் திறல் படகம் மொந்தை திமிலையே தடாரி தக்கை
கண்டை ஆகுளியே பீலி காகளம் உடுக்கை பேழ்வாய்
கொண்டது ஓர் பதலை சங்கம் குடமுழா இயம்பிற்று                                  அம்மா.
20
   
5367.
தட்டு உடை நெடும் தேர் ஆர்ப்பும் தந்தியின் ஆர்ப்பும்                                     சேண்போய்
முட்டு உறு கொடிகள் ஆர்ப்பும் முரட் பரி ஆர்ப்பும்                                     வீரர்
கட்டு உறு கழலின் ஆர்ப்பும் கணிப்பு இல் பல் இயத்தின்                                     ஆர்ப்பும்
எட்டு உள திசையும் எல்லா உலகு முண்டு எழுந்த                                     அன்றே.
21
   
5368.
நீல் நிற முகில் போல் மேனி அவுணர்கள் நீத்தம் செல்லக்
கான் நிறை பூழி ஈட்டம் ககனம் மேல் செல்ல முன்னம்
தான் உறு கின்ற காலைச் சசி எனத் தயங்கிப் பின்னர்
மீன் எனக் கரந்தான் மேலாம் விரிகதிர் படைத்த                                  வெய்யோன்.
22
   
5369.
நேசம் ஒடு என்பால் வைகும் நெறியினார் தமக்கு வீடும்
ஆசு அறு பதங்கள் யாவும் வைகலும் புரிவேன் என்னை
ஏசுவர் போலும் கீழ் என்று இகல் புரிந்திடுவன் என்னாத்
தூசி பார் விடுத்ததே போல் துறக்கம் மேல் சென்ற பூழி.
23
   
5370.
கன்னிறை அழித்த மொய்ம்பில் கார் கெழும் அவுண                                    வெள்ளம்
துன் உற நடப்பச் செல்லும் தூளியின் படலைச் செய்கை
என் என உரைப்பன் அம்மா இந்திரன் என்போன் வைகும்
பொன் உலகம் தனை வல்லே பூ உலகு ஆக்கிற்று                                    அன்றே.
24
   
5371.
கண் அகல் தடம் தேர் மீதும் காய் சினக் களிற்றின் மீதும்
நண்ணிய கொடிகள் வான்போய் நளிர் புனல் கங்கை                                       நக்கி
மண் உறச் சிதறி ஆடி அலமரல் மகேந்திரத்தின்
அண்ணல் இன்று அழிவன் என்றே அழுதிறம் போலும்                                       மாதோ.
25
   
5372.
திங்கள் வெண் குடையும் நீலத் திரு நிழல் கவிப்பும் செம்                                        கேழ்ப்
பங்கய மலர்ந்தது அன்ன பருமணிக் கவிகை முற்றும்
தொங்கலின் தொகையும் வெய்யோன் தொல் கதிர் வரவும்                                        ஆற்றி
எங்கணும் செறிவு உற்று ஊழி இருளினை விளக்கிற்று                                        அம்மா.
26
   
5373.
ஆன இயல்பு எய்த அவுணப் படை களோடும்
வான் நெறி கொடே அவுணன் வையம் மிசை செல்லத்
தான் அது தெரிந்து அமரர் தம் இறைவன் ஓடிக்
கான் அமர் கடம்பன் அடி கை தொழுது சொல்வான்.
27
   
5374.
அன்று புரி வேள்வி இடை ஆதி அருள் செய்த
துன்று படை ஈட்டமொடு சூரன் எனும் வெய்யோன்
இன்று பொருவான் விரைவின் ஏகினன் எதிர்ந்தே
சென்றவனை வென்று எமது சீர் அருளுக என்றான்.
28
   
5375.
ஆம் பரிசு கூற அவனுக்கு அருள் புரிந்தே
ஏம்பல் உறு கேசரியின் ஏற்று அணையின் நீங்கிப்
பாம்பின் வலி செற்று உலவு பாகு தனை நோக்கி
வாம் பரி கொள் நம் இரதம் வல்லை தருக என்றான்.
29
   
5376.
என்றிடலும் நன்று என எழுந்து உலவை அண்ணல்
குன்று அனைய தேர் அது கொணர்ந்து முனம் உய்ப்ப
வென்றி அயில் அண்ணல் அதன் மீ மிசை புகுந்தான்
மன்றல் மலர் சிந்தி அயன் மாலொடு வழுத்த.
30
   
5377.
செழும் தருண மேதகைய தேரின் மிசை வானோர்
தொழும் தலைவன் ஆகிய அமர் தொல் முருகன் ஏறக்
கொழும் தழல் முடித்து அனைய குஞ்சி கெழு பூதர்
எழுந்தனர் தெழித்தனர் இரு கடலும் அஞ்ச.
31
   
5378.
நாட்டம் ஒரு மூன்று உடைய நாதன் அருள் மைந்தன்
வாட்டம் அறு வெவ் அவுணர் மன்னன் வலி தன்னை
வீட்டும் வகை சென்றிடுதல் விண்ணவர் உரைப்பக்
கேட்ட அனிக பூதர்கள் கிளர்ந்து படர் கின்றார்.
32
   
5379.
பாரிடர் களாய் அறுமுகற் பரவு கின்ற
பார் இடர் நடப்ப எழு பூழி படர்ந்து இன்னோர்
பார் இடர் புரிந்தனர் பரிக்கும் எனை என்னாப்
பார் இடம் விண்ணோடு பகர்தற்கு எழுதல் போலும்.
33
   
5380.
தக்கை யொடு உடுக்கை துடி சல்லரி தடாரி
தொக்கு உடைய தண்ணுமை துவைப்பின் மிகு பேரி
மெய்க் குட முழாப் படகம் வீணை குழல் ஆம்பல்
கொக்கரை இயம்பினர்கள் கோடி கண நாதர்.
34
   
5381.
நாடுதவ நாரதனும் நல் உவணர் தாமும்
கேடில் இசை வல்லது ஒரு கின்னரரும் ஆகிப்
பாடினர் குமாரன் அடி பன் முறை பணிந்தே
ஆடினர்கள் விண்ணவரும் ஆசு இல் முனிவோரும்.
35
   
5382.
சண்முகனது ஏவல் கொடு தாவில் இளையோனும்
எண் மரும் இலக்கர்களும் ஈண்டிய கணத்தின்
வண்மை கெழு மன்னவரும் வையம் மிசை ஆகித்
திண்மை படை ஊக்கம் ஒடு சேனை இடை சென்றார்.
36
   
5383.
மொய்ம் மலி படைத்தலைவர் முந்தி உறு தானை
இம் முறையினால் ஒழுக ஈசன் அருள் மைந்தன்
செம் மணி வீசி அமர் தேரின் இடை ஏகிப்
பொம்மல் உறு தானவர்கள் போர் முனை அடைந்தான்.
37
   
5384.
அடைந்த பொழுதில் புவியும் அந்தரமும் ஆகி
மிடைந்து வரும் சூரன் இகம் வெய்து என வளைந்த
தொடர்ந்து நுகர் தீ வலி தொலைத்தும் என முந்நீர்
படர்ந்து புடை சுற்றி இடும் பான்மை அது போல.
38
   
5385.
வளைந்திடும் காலையில் வய வெம் பூதர்கள்
கிளர்ந்தனர் தெழித்தனர் கெழுவு தானவர்
தளம் தனை அடர்த்தனர் அவரும் தாக்கினார்
விளைந்தது பெரும் சமர் விண்டது அண்டமே.
39
   
5386.
மாச்சினை மரங்களும் வரையும் தண்டமும்
தீச் சிகைக் கழுமுளும் திகிரி நேமியும்
மீச் செலும் கவண் கலும் வேலும் நாஞ்சிலும்
ஓச்சினர் பூதர்கள் ஒன்னலார் கள் மேல்.
40
   
5387.
மெய்ப்படும் அவுணர்கள் வெகுண்டு வில் உமிழ்
அப்பொடு கணிச்சி தண்டு ஆழி நாஞ்சில் வேல்
முப்புகர் இலைப் படை முசலம் முற்கரம்
கப் பணம் சிதறினர் கணங்கள் தம்மிசை.
41
   
5388.
பற்றுவர் கரிகளை பரி இனங்களை
எற்றுவர் பார்தனில் எறிவர் மாதிரம்
சுற்றுவர் விண் இடைக் கிழிப்பர் துண் என
முற்று உடல் எருத்தினை முரித்துச் சிந்துவார்.
42
   
5389.
இரதம் ஒர் ஆயிரம் எடுத்துச் செம் கையில்
பொரு களிறு ஆயிரம் புரள மோதுவர்
கரி கள் ஒர் ஆயிரம் கரம் கொண்டு எற்றியே
பரிதி பதினாயிரம் பாரின் வீட்டுவார்.
43
   
5390.
பாய் பரி ஆயிரத்துப் பத்துப் பாணி கொண்டு
ஆயிர கோடி ஆம் அவுணர் தங்களைச்
சேயிரு நிலத்து இடைச் சிதையச் சிந்துவார்
காய் கனல் சொரி தரும் கடும் கண் பூதரே.
44
   
5391.
குரங்கு உளைப் புரவியர் குஞ்சரத்தினர்
இரங்கு உறு தேரினர் நிலத்தின் ஏகினோர்
வரம் கெழும் அவுணர்கள் வளைந்து பூதரைச்
சரங்களில் பிறவினில் தடிதல் மேயினார்.
45
   
5392.
மலைதனைச் சிந்துவர் மறம் கொள் பூதர் தாள்
நிலைதனைச் சிந்துவர் நெடுங்கை சிந்துவர்
கொலை தனைச் சிந்துவர் கொய்வர் மொய்ம்பினைத்
தலை தனைச் சிந்துவர் தறு கட்டு ஆனவர்.
46
   
5393.
இவ்வகை மாறு கொண்டு இகல் செய்கின்றுழித்
தெவ் அடு பூதர் தம் சேனை மன்னர்கள்
அவ்விடை ஏன்று நின்று அமர் இயற்றுழி
வெவ் அசுரப் படை மிகவும் மாய்ந்ததே.
47
   
5394.
பொன் திகழ் படையொடு புவியும் வானும் ஆய்
நின்றிடும் அவுணர்கள் நீடு தொல் பிணக்
குன்று உரு ஆகியே குருதி ஆற்று இடைச்
சென்றனர் அளக்கரைத் திடர தாக்குவார்.
48
   
5395.
நீடிய வேல் படை நிமிலன் காண் உற
வீடினம் யாம் இனி வெய்ய தோற்றம் மேல்
கூடுவது இலை எனக் குனிக்கு மாறு போல்
ஆடிய உடற்குறை அனந்த கோடியே.
49
   
5396.
மானப் படை சேர் அவுணப் படையும் வயமான்                            தேர்ப்படையும்
ஏனைப் படையும் முடிவு உற்றிடவே இவ்வாறு இகல்                            செய்யும்
கூனல் சடிலப் பூதப் படையின் கொற்றம் தனை நோக்கித்
தானைத் தலைவன் அதிசூரன் எனும் தனையன்                            வெகுளுற்றான்.
50
   
5397.
தேர் ஆயிரம் ஆயிரம் அங்கு ஒரு பால் சேமத் தொடு                                    செல்லக்
கார் ஆயிரம் உற்றன தன் படிவம் கதிர்காள் இமைசார
ஈர் ஆயிரம் ஆம் இவுளித் தொகை பூண்டு ஈர்க்கும் தேர்                                    மீதே
ஓர் ஆயிரம் ஆம் கதிர் போல் அழலா உரன்                                    ஓடுறுகின்றான்.
51
   
5398.
வார் வில் அதனை விரைவில் குனியா வடிவாளிகள்                                 போக்கிச்
சோர் வில்லவனும் எதிர்கின்றனரைத் துணி செய்தனன்                                 நிற்ப
ஓர் வில் ஒருவன் தனியே இவண் வந்து உறு போர்                                 புரிகின்றான்
போர் வில் அறிவன் இவனே எனவே புகல்கின்றனர் பூதர்.
52
   
5399.
ஓதக் கடல் போல் அலமந்து அலமந்து உலையா இகல்                                 செய்யும்
பூதர்க்கு இறை உக்கிரன் என்று ஒருவன் புகை தீ உமிழ்                                 கண்ணான்
மேதக்க சலந்தரனார் உடலம் வீழும் படி கீண்ட
சோதிக் கடவுள் படை உண்டு உமிழும் தொல்லோன்                                 இகல் வல்லோன்.
53
   
5400.
எண் தானவருக்கு இறைவன் குமரன் இகல் செய்திடு மாறு
கண்டான் முனியா விரைவில் படர்வான் காலன் திறல்                                 கொள்ளும்
தண்டானது கொண்டவன் நேர் குறுகித் தடமார்                                 பிடையோச்ச
விண்டான் இவன் என்று அவுணப் படையோர் வெருவா                                 அலமந்தார்.
54
   
5401.
மாறு ஆகிய உக்கிரன் ஏவுதலும் வரு தண்டு அவன்                                      மார்பில்
கூறு ஆகிய சாலிகை சிந்திடவே கொதியா வருகின்றான்
பாறு ஆடுகளத்து இடை ஈங்கு இவனைப் பலி ஊட்டுவன்                                      என்னா
நூறு ஆயிரம் ஆசுகம் ஓர் தொடையின் நொய்தில் செலவு                                      எய்தான்.
55
   
5402.
வெய்தாம் அயில் வாளிகள் உக்கிரன் மேல் விறல் சேர்                                அதி சூரன்
எய்தான் அது மற்று அவன் மேல் படவே எருவைப்                                பெருநீத்தம்
எய்தான் முழுதும் பெருகு உற்றிடலும் விழுமத்து ஒடு                                செற்றம்
செய்தான் ஒருமால் வரை கொண்டு அவுணன் தேர் மேல்                                செல உய்த்தான்.
56
   
5403.
அதிர் பொன் கழலான் விடு திண் கிரியால் அதி சூரன்                                     மான் தேர்
பிதிர் பட்டிடலும் புவிமேல் படர்தல் பிழை ஆம் என                                     உன்னா
உதயக் கிரி போல் கனகத்து இயலும் ஒரு தேர்மிசை நீலக்
கதிர் உற்று எனவே கடிதில் பாய்ந்தான் காலன் மிடல்                                     தீர்ப்பான்.
57
   
5404.
பாயும் வேலை அப் பல் மணித் தேரினை
ஏய ஆற்றல் கொண்டு ஈர்த்திடும் வாசிகள்
மாயும் வண்ணம் மறம் புரி உக்கிரன்
சீயமாம் எனச் சென்று உதைத்தான் அரோ.
58
   
5405.
உதைக்க வெய்யவன் ஒண் பரி பார் இடைப்
பதைத்து வீழ்தலும் பையுளின் மாழ்கியே
சிதைப்பன் இந்தச் சிறியனை என்று மெய்
புதைப்ப நூறு பொரு சரம் தூண்டினான்.
59
   
5406.
தூண்டு கின்ற சுடர்க்கணை யாவையும்
ஈண்டியே தன் எதிர் உறும் பெற்றியைக்
காண்டலும் கதை கைக் கொடு அவ் உக்கிரன்
மீண்டிடும் படி வீசி நின்று ஆர்க்கவே.
60
   
5407.
வேறு ஒர் தேர் இடை வெய்து என எய்தியே
ஊறு நீங்கிய உக்கிரற் கண் உறீஇ
மாறி தெய்வத மாப் படை தொட்டு உனை
ஈறு காண்பன் இறந்தனை நீ எனா.
61
   
5408.
முன்னு பூசை முதலிய யாவையும்
முன்னியே நின்று ஒருங்குடன் செய்த பின்
வன்னி மாப்படை வாங்கி வணங்கியே
மின்னு தண் சுடர் மீக் கொள வீசினான்.
62
   
5409.
ஆசை தோறும் அழல் சிந்த மாற்றலன்
வீசு வெம் படை வீரத்தை நோக்கியே
ஈசன் மைந்தன் இணை மலர்த் தாள்களை
நேசமோடு நினைந்தனன் போற்றினான்.
63
   
5410.
எவ் எவர்க்கும் இறைவன் ஆகியோன்
அவ் வழித் தன் அருள் செய உக்கிரன்
செவ்விதில் செலும் தீச்சரம் பற்றியே
கவ்வி நுங்கினன் கண் கனல் கான்றிட.
64
   
5411.
நுங்குவான் தனை நோக்கி அரிமுகன்
துங்க மா மகன் தொல் புனல் மாப்படை
பொங்கு சண்டப் பொருபடை ஏவலும்
அங்கு அவற்றையும் பற்றி அருந்தினான்.
65
   
5412.
காற்றின் வெம் படை ஏவினன் கைதவன்
ஆற்றல் உக்கிரன் அன்னது நுங்கினான்
தேற்று கின்றுழிச் செய்தவம் அன்றியே
ஏற்றம் ஆன இரும் பொருள் ஆவதோ.
66
   
5413.
மற்றும் அவ்வதி சூரன் மலர் அயன்
ஒற்றை வெம் படை ஓச்சலும் உக்கிரன்
பற்றி நுங்க அப் பங்கயன் தாதை பால்
பெற்று இருந்த பெரும் படை ஏவினான்.
67
   
5414.
ஒய் எனச் சென்று உரு கெழு நாரணன்
பொய்யில் மாப் படை போந்திட ஆங்கு அதும்
கையில் வாங்கிக் கதும் என வாய்க் கொளா
வெய்ய உக்கிரன் மேயினன் என்பவே.
68
   
5415.
ஆன காலை அரிமுகன் காதலன்
யான் இனிச் செய் இயற்கை என்னே இவன்
தான் அவ் ஈசன் கொல் கண்ணன் கொல் தாமரை
மேல் நிலாவிய வேதன் கொலோ என்றான்.
69
   
5416.
மூவர் ஆகிய மூர்த்திகள் அல்லதை
ஏவரே மற்று இது செயும் பெற்றியார்
ஆவன் ஆவன் அவர்க்குள் இவன் எனாத்
தேவர் மாற்றலன் பின்னரும் செப்பினான்.
70
   
5417.
சீற்றம் கொண்ட அவுணர் திரைக் கடல்
தோற்றம் கொண்ட அச் சூர் கெழும் உக்கிரன்
ஏற்றம் கண்டுழி என் செய்தும் என்றனர்
கூற்றம் கொண்ட உயிரில் குலைந்து உளார்.
71
   
5418.
அண்ணல் வாசவன் ஆதியர் ஆகிய
எண் இல் வானவர் யாவரும் இச்செயல்
கண் உறா இகல் கண்டு அருள் நான் முகப்
பண்ணவன் முன் பணிந்து இது கூறுவார்.
72
   
5419.
எங்களால் வரும் எண் இல் பெரும் படை
செம் கணான் படை தீய நின் மாப் படை
அங்கியாவும் அணுக இப் பூதர் கோன்
நுங்குமாறு என் நுவலுதி என்னவே.
73
   
5420.
இந்திரர் ஆதியர் கேண் மின்கள் ஈங்கு இவன்
அந்தி வான் சடை அண்ணல் வரத்தினான்
கந்தன் எந்தை கழல் இணை போற்றியே
வந்துளான் எவ் வலியையும் ஆற்றுவான்.
74
   
5421.
எம்மை ஆள் உடை ஈசன் அருள் பெறும்
செம்மை ஆனவன் செம் பொன் சிலம்பு அடி
மும்மையும் தொழு முத்தி பெற்றான் இவன்
எம்மினும் பெரியான் என்றும் ஈறு இலான்.
75
   
5422.
மைக் கரும் கடல் வண்ணன் முன் ஏவிய
சக்கரம் நுகரும் தவத்தோனினும்
மிக்க ஆற்றலன் வெற்றியின் மேலையான்
உக்கிரன் என்று உரைத்திடும் பேரினான்.
76
   
5423.
பண்டு நாம் அருள் பல் படை யாவையும்
உண்டதோ வியப்பு ஒல்லையில் எல்லை இல்
அண்டமும் சிதைத்து ஆக்குவன் ஈங்கு இவன்
கொண்ட தொல் புகழ் கூறத் தொலையுமோ.
77
   
5424.
என்ன நான் முகன் எண்ணி இயம்பலும்
அன்ன கேட்டலும் அண்டர்கள் யாவரும்
துன்னு சென்னி துளக்கிப் பெரும் திறல்
இன்னும் ஆக இவற்கு என்று இயம்பினார்.
78
   
5425.
வான மேல் இது நிகழ்ந்துழி மாறு இலா அவுணர்
சேனை காவலன் பூதனை நோக்கி நின் சிதைப்பல்
ஊனம் ஆகிய படை என உன்னலை உமை பால்
ஞான நாயகன் படைதொடுவேன் என நவின்றான்.
79
   
5426.
மந்திரம் தனில் பூசனை முதலிய வகுத்துச்
சிந்தை மேல் உறு வெகுளியோடு அரன் படை செலுத்த
அந்தம் இல்லது ஓர் உலகு எலாம் முறுவலால் அடர்க்கும்
எந்தை கொண்டது ஓர் உரு எனத் தோன்றியது                                      இமைப்பில்.
80
   
5427.
நஞ்சும் ஆர் அழல் நாகமும் நடுவனது உருவும்
விஞ்சு பூதமும் கணங்களும் வேறு பல் படையும்
எஞ்சல் இல்லது ஓர் அங்கியும் போற்ற எவ் உலகும்
அஞ்சிடும் படி நடந்தது ஆல் அரன் படை அதுவே.
81
   
5428.
ஈசன் மாப் படை வருதலும் உக்கிரன் என்னும்
ஆசு இல் வீரன் தன் அங்கையில் கதையினை அகற்றிப்
பாசம் நீக்கும் அஞ்சு எழுத்தினை விதிமுறை பன்னி
நேசமோடு கை தொழுதரன் பொன்னடி நினைந்தான்.
82
   
5429.
ஆண்டை உக்கிரன் நிற்றலும் அஞ்சலி புரிவான்
மாண்ட தொல் படை இல்லவன் துதி செயும் வாயான்
ஈண்டு இவன் தனை அடுகிலன் யான் என எண்ணி
மீண்டு சென்றது சிவனருள் படைக்கலம் விரைவில்.
83
   
5430.
அண்ணல் அம் படை துறந்தவர் மேல் விடின் அவர்பால்
நண் உறாது நம் பக்கல் வந்திடும் என நல்க
விண் உலாம் புகழ் அவுணர் கோன் பெறுதலின் விடையூர்
பண்ணவன் தனை அடைந்தது ஆங்கு அவன் அருள்                                       படையே.
84
   
5431.
ஆன பெற்றி கண்டு இங்கு இவன் சிவன் கொல் என்று                                   அயிர்த்துச்
சேனை காவலன் துளங்கினன் பூதர்கள் சிறந்தார்
வான் உளோர் மலர் மாரிகள் தூர்த்தனர் மாறாம்
ஏனை வீரர்கள் விழிபொழி தாரைகான் றிரிந்தார்.
85
   
5432.
நீங்குகின்றது ஓர் தானவர் குழுவினை நீவிர்
ஏங்கு கின்றதை விடுமின்கள் என்று தேர் இழிந்து
பாங்கர் உற்றது ஓர் தண்டு கொண்டு அரிமுகன் பாலன்
வீங்கு தோளிடை எற்றினன் உக்கிரன் வெகுண்டான்.
86
   
5433.
எற்று தண்டினை அங்கையால் உக்கிரன் என்போன்
பற்றி வாங்கியே அவன் தனது உரம் பதை பதைப்பத்
தெற்றெனப் புடைத்திடுதலும் நிலனிடைச் சேர்ந்தான்
மற்று அவன் தனது உயிர்கொடு போயினன் மறலி.
87
   
5434.
துஞ்சி வீழ் அதி சூரனை நோக்கியே துகடீர்
மஞ்சு போலவே வரும் அசுரேந்திரன் மனமும்
நஞ்சும் ஆம் எனக் கொதித்தனன் அழல் எழ நகையா
விஞ்சு பூதர் தம் குழுவின் மேல் சென்றனன் விரைவின்.
88
   
5435.
கடிது சென்ற சுரேந்திரன் இந்திரன் கரத்தின்
நெடிய வில்லினும் ஆயிரத்து இரட்டி மேல் நிமிர்ந்த
கொடிய வார் சிலை வாங்கியே குணத்து ஒலி கொளுவப்
படியும் வானமும் குலைந்தன உயிர் எலாம் பதைப்ப.
89
   
5436.
பூதர் அங்கு அது நோக்கியே தண்டமும் பொருப்பும்
பாதவங்களும் தாரகன் தந்திடு பதகன்
மீது சென்றிட விடுத்தலும் அனையன விலக்கிச்
சோதி வெம் கணை இறுதி நாள் முகில் எனச்                            சொரிந்தான்.
90
   
5437.
வடி கொள்வார் கணை விடுத்தலும் பூதர்கள் வலிதின்
விடு பிறங்கலே முதலிய இடை இடை வீட்டி
முடியும் கைகளும் ஆகமும் முகத்தொடு மொய்ம்பும்
அடியும் சோரி நீர் கான்றிட அழுந்திய அவர் பால்.
91
   
5438.
மற்றும் வெம் கனை உலப்பில தூண்டலும் மண்மேல்
அற்ற கைகளும் துணிந்திடு தோள்களும் அடியும்
இற்ற கண்டமும் ஆகி வெம் பூதர்கள் இறப்பக்
கொற்ற வீரரில் கனகன் என்பவன் எதிர் கொண்டான்.
92
   
5439.
எதிரதாய் வரு கனகன் மேல் தாரகன் ஈந்த
அதிரும் வார் கழல் அண்ணல் ஓர் வடிக்கணை அழுத்த
உதிர வாரியோடு அன்னவன் தேர் மிசை உற்றான்
கதிரின் மேல் வரும் செய்ய கோளாம் எனக் கடிதின்.
93
   
5440.
பாகன் தன் உயிர் உலந்திட உதைத்து வெம் பனைக்கை
நாகம் தந்திடு மதலை தன் வரிசிலை நாணைக்
காகம் போல வெள் எயிற்றினால் கீறி வெம் கறை சேர்
மேகம் தாரணி மிசை இழிந்தால் என மீண்டான்.
94
   
5441.
இழிந்து மால் வரை ஒன்று கீண் டசுரர் இந்திரனாம்
கழிந்த சீர்த்தியான் மீ மிசை ஓச்சலும் கரத்தின்
அழிந்த வில்லினை நீத்து வேறு ஒரு சிலை அதனைக்
குழிந்த கண் உடைப் பூதர்கள் வெருக்கொளக் குனித்தான்.
95
   
5442.
குனித்து நான்கு இரு சுடுசரம் தொடுத்து அறை கூவித்
தனித்து மேல் வரும் கனகன் ஏவிய கிரி சாய்த்துப்
புனிற்று இளம் பிறை செக்கர் வான் நுழைந்து எனப்                                       புயங்கள்
பனித்திடும் படி அழுத்தினன் ஆயிரம் பகழி.
96
   
5443.
பகழி ஆயிரம் படுதலும் ஆடகன் பையுள்
நிகழ நிற்றலும் வேறு ஒரு வலவனை நிறுவிப்
புகழ் இல் தானவன் தேர் கொடு பூதர் மேல் போத
அகழும் மால் வரை ஒன்று எறிந்து உன்மத்தன்                              ஆர்த்தான்.
97
   
5444.
அவன் எறிந்திடும் பருப்பதம் விரைவில் வந்து அடர்க்கக்
கவன வெம்பரி ஆயின உலந்தன காணாப்
பவன வேகத்தின் வேறு ஒரு தேர் மிசைப் பாய்ந்தான்
புவனம் உண்ணிய நின்றது ஓர் கடவுளே போல்வான்.
98
   
5445.
முந்து வெம் கணை உலப்பில தூண்டலும் முந்நீர்
செம் துகிர்க்கொடி போர்த்து எனக் குருதி நீர் செறிய
வந்த முற்றிலன் புவி மிசை இருந்தனன் ஆங்கே
மந்தன் என்பவன் தாரகன் புதல்வன் நேர் வந்தான்.
99
   
5446.
வருத லோடும் ஆங்கு அவன் மிசை ஐ இரு வாளி
குருதி கால் உற வழங்கலும் எரி எனக் கொதியாப்
பரிதி மேவரத் தகுவது ஓர் பருப்பதம் பறித்துக்
கருதி ஏவினன் அவுணர் கோன் அங்கு அது கண்டான்.
100
   
5447.
சென்று மார்பு எதிர் ஏற்றலும் வந்து உழித் தெறித்துக்
குன்று மீண்டும் அற்றவன் புடை போயது கொடியோன்
ஒன்று போலிய ஆயிரம் பகழிகள் உய்த்தான்
நின்று மந்தன் அங்கு அயர்ந்தனன் சிங்கனும் நேர்ந்தான்.
101
   
5448.
எடுத்து மால் வரை ஒன்று அவன் உரத்தின் நேர் எறியத்
தடுத்து ஒர் வாளியின் அகற்றினன் அமர் இடைத் தரியார்
விடுத்தது ஓர் கதை எறிதலும் அவன் அது விலக்கித்
தொடுத்து நூறு கோல் அழுத்தினன் சிங்கனும்                               தொலைந்தான்.
102
   
5449.
ஒழிந்த சாரதத் தலைவர்கள் யாவரும் உடன்றே
அழிந்து நின்றனர் தாரகன் குமரன் ஆசுகங்கள்
பொழிந்து மற்று உள பூதரை முடித்திடும் போதில்
கழிந்த துன்பொடும் இலக்கரில் தண்டகன் கண்டான்.
103
   
5450.
தனது கார் முகம் வாங்கியே தண்டகப் பெயரோன்
முனை இரும் கணை ஆயிரம் கொடியவன் முகத்தின்
நனி புகுந்திட விடுத்தலும் நடலை உற்று இரங்கி
மனம் வெகுண்டு பின் தன் பெரும் சிலையினை                              வளைத்தான்.
104
   
5451.
வளைத்து நாலு இரண்டு அம்பினைத் தண்டக மறவோன்
குளத்தின் மேல் பட விடுத்தலும் எழுந்தன குருதி
இளைத்து நின்றனன் தேர் மிசை அன்னவற்கு                            இளையோன்
கிளத்து சோமுகன் தாரகன் மகன் எதிர் கிடைத்தான்.
105
   
5452.
எதிர் புகுந்தவன் அகல மேல் ஐம்பதிற்று இரட்டி
கதிர் தெறும் கணை அவுணர் கோன் அழுத்தலும் கவலா
அதிர்தரும் தனது ஒண் சிலை வாங்கி ஆயிரம் ஆம்
நுதி கொள் வெம் சரம் தூண்டினன் சோமுகன்                               நொடிப்பில்.
106
   
5453.
பல்லவங்கள் ஆயிரமும் அத் தாரகன் பாலன்
சில்லி அம் தனித் தேரினை வலவனைச் சிதைப்ப
மெல்ல வேறு ஒரு தேர்மிசைப் பாய்ந்து வேல் ஒன்றை
ஒல்லை இங்கு இவன் உயிரினை உண்க என உய்த்தான்.
107
   
5454.
உய்த்த வேல் அவன் அகலமேல் படுதலும் முயங்கி
எய்த்து மற்று அவன் தேர் மிசை மயங்கினன் இருப்ப
நித்தன் வேர் உறு சோமுகற்கு இளையவன் நெடுமால்
ஒத்த வன்மையன் விசயன் என்பவன் கடிது உற்றான்.
108
   
5455.
விசயன் ஆங்கு ஒரு கொடு மரம் வாங்கியே வெகுண்டு
நிசித வெம் கணை ஆயிரம் உய்த்து நேர் இல்லா
அசுரர் இந்திரன் வலவனைத் தடிந்து மற்று அவன் கை
இசையும் வில்லொடு நாரியைத் துணிபட இறுத்தான்.
109
   
5456.
முற்று நூல் உணர் பாகுயிர் உலத்தலும் முனியா
இற்ற நாண் ஒடு வார் சிலைத் துணியினை ஏந்திக்
கொற்றம் ஆர் அசுரேந்திரன் மத்திகை கொண்டு
பொற்றை அன்னதன் தேர் விடு வலவனின் பொலிந்தான்.
110
   
5457.
தகுவர் கோன் ஒரு வலவனை நிறுவி ஓர் தண்டம்
இகலும் வன்மையால் எடுத்தனன் அவன் மிசை எறியப்
புகுதும் எல்லையில் கண்டு எதிர் விசயனாம் புகழோன்
மிகவும் எல்லையில் சரங்களைத் தூண்டினன் விடுத்தான்.
111
   
5458.
தொட்ட தொட்டன கணை எலாம் துகள் படத்                                   தொலைத்து
மட்டு உலாம் தொடை விசயன் மார்பகத்து இடை வந்து
பட்ட காலையில் அவன் தனது இரதம் மேல் பதைத்து
விட்ட வில்லொடு குருதியும் தானுமாய் வீழ்ந்தான்.
112
   
5459.
விழுந்த காலையில் இலக்கரில் ஏனையோர் வெகுண்டு
பொழிந்த வாளியால் தாரகன் மகனொடு பொருதே
அழுந்தி யாவரும் இரிந்தனர் போதலும் அது கண்டு
உழந்த துன்பொடு வீர மொய்ம் பினன் விரைந்து உற்றான்.
113
   
5460.
வீர வாகு வேள் இணை அடி போற்றியே வெகுண்டோர்
கோர வெம் சிலை வாங்கினன் நாண் ஒலி கொளுவி
யாரும் வானவர் வியப்பு உற அவுணர்கள் அயரத்
தாரகா சுரன் மதலையை மறைத்தனன் சரத்தால்.
114
   
5461.
மறைப்ப மெய் எலாம் குருதி கொண்டிடலும் வல்                                      அவுணன்
விறல் கடும் சிலை ஒன்றினை வளைத்தவன் மிசையே
பிறைத் தலைக் கணை ஆயிரம் அழுத்தினன் பெரிதும்
உறைத்த செம்புனல் இருவரும் இளம் கதிர் ஒத்தார்.
115
   
5462.
தாரகத் திறலான் மகன் தூண்டி ஏழ் சரத்தால்
சூரர் இத்திறல் அண்ணல் கைச் சிலைதனைத் துணிப்ப
வீரன் மற்று ஒரு கார் முகம் வாங்கியே விடம் கால்
கூர் அயில் கணை ஆயிரம் விடுத்தனன் குறியால்.
116
   
5463.
ஏகும் வார் கணை தாரகன் மகன் சிலை இறுத்துப்
பாகன் ஆவி உண்டு இரதமோடு அயங்களைப் படுப்ப
வாகை இன்றியே வேறு ஒரு தேர் மிசை வறியன்
போகலோடு மற்று அன்னது கண்டனர் புலவோர்.
117
   
5464.
வெருவரப் பொரும் தாரகன் மதலையை வீரன்
பொருது வெற்றி கொள்வான் கொலாம் இனி எனப்                                  புகழ்ந்தார்
அரிய அற்புதமோ அவன் வென்றிடல் அவுணன்
கரிதரும் சுதன் சிம்புளின் சுதன் இவன் கழறின்.
118
   
5465.
மாறு ஒர் தேர் இடைப் பாய்ந்தவன் ஒரு தனு வளைத்து
நூறு கோல் விடுத்தவன் இரதத்தினை நூறச்
சீறி வான் எழீஇ வீரவாகுப் பெயர்த் திறலோன்
ஆறு மா முக முதல்வனைப் பரவி நின்று ஆர்த்தான்.
119
   
5466.
உறை கழித்து வாள் உருவியே உம்பரில் படர்ந்து
சிறை கழித்திடும் வரை புரை அவுணர் கோன் தேர் மேல்
குறை கழித்திடும் பணி கவர் மதி எனக் குப்பு உற்று
இறை கழிக்கும் முன் அவன் தனைக் கையில் ஒன்று                                    எறிந்தான்.
120
   
5467.
எறிந்த காலையில் இற்றது ஓர் கைத்தலம் இறலும்
குறைந்த கை இடைச் சல சல இழிவன குருதி
செறிந்த நீல வொண் கிரிதனக்கு ஒரு புடை சென்றே
உறைந்தது ஓர் கரும் பணி அழல் மணி உமிழ்ந்தது ஒப்ப.
121
   
5468.
கை அறுத்தலும் தாரகன் தன் சுதன் கனன்று
மொய் உடைக் கதை ஒன்று எடுத்து அவன் மிசை மோத
ஒய் எனத் திறல் மொய்ம்பினன் வான் எழுந்து ஒருதன்
செய்ய பொன் பதத்து உதைத்தனன் அங்கு அவன்                                     சிரத்தில்.
122
   
5469.
காமர் தாளினால் உதைத்து விண் படர்தலும் கண்டு
தூமம் ஆர் விழியான் அசுரேந்திரன் தொடர்ந்து ஓர்
சேம வாள் கொடு வான் எழ மேலையோன் சீறி
ஏம நாந்தகத்தால் அவன் தலை அற எறிந்தான்.
123
   
5470.
எறிந்த சென்னியும் யாக்கையும் இம்பரின் வீழ்ந்து
மறிந்து மற்று அவன் மன் உயிர் போயது வான் மேல்
செறிந்த விண்ணவர் ஆர்த்தனர் இன்னது ஓர் செய்கை
அறிந்த தானவக் கடல் எலாம் ஓடின அன்றே.
124
   
5471.
மக்கள் ஆயினர் இருவரும் இறந்தது மலைந்து
பக்கம் மேயின தானைகள் இரிந்ததும் பாராத்
தொக்க பேர் அழல் உலகு அட எழுந்த தோற்றம் போல்
மிக்க சீற்றம் மேல் கொண்டனன் அண்டங்கள் வென்றான்.
125
   
5472.
சீற்றமே தகு காசிபன் மதலை போர் செய்யும்
ஆற்றலார் தமை அடுவன் ஆல் விரைந்து என மதித்துக்
காற்றின் முந்து செல் தேர் இடைக் கடிது வந்து எய்திக்
கூற்றின் வெம் பசி தணிப்பது ஓர் சிலையினைக்                             குனித்தான்.
126
   
5473.
வாணி போற்றிடும் சயமகள் வீரமா மடந்தை
நீணிலைப்பட வேறு சோ பானத்தின் நெறிபோல்
பூண் அளாவிய பொன்னவாம் சிலை தனில் புணர்த்த
நாணின் ஓதையைக் காட்டினன் அணி விரல் நகத்தால்.
127
   
5474.
கரம் கொள் வில் ஒலி கேட்டலும் பாரிடைக் கணங்கள்
மரங்கள் சிந்தினர் சிகரிகள் சிந்தினர் மலையும்
உரங்கள் சிந்தினர் வீரமும் சிந்தினர் உடலும்
சிரங்கள் ஆனவும் பனித்திட ஓடினர் சிதறி.
128
   
5475.
யாண்டும் ஆகியே இரிந்தனர் அல்லது இந் நிலத்தில்
வீண்டு உளார் சிலர் பதைத்து நின்றார் சிலர் வீழ்ந்து
மாண்டு உளார் சிலர் மயக்கம் உற்றார் சிலர் மற்றும்
ஆண்டு பன்னிரண்டு ஒழிந்திலது அவுணன் வில் அரவம்.
129
   
5476.
வேதன் அஞ்சினன் மால் முடி துளக்கினன் விண்ணோர்
நாதன் அஞ்சினன் மறலியும் அஞ்சினன் நடுங்கிக்
கோது இல் நல் அறம் அஞ்சின ஐவகை கொண்ட
பூதம் அஞ்சின உயிர்த் தொகை அஞ்சின பொருமி.
130
   
5477.
வஞ்சன் வார் சிலை நாண் ஒலி கேட்டலும் மறத்தால்
விஞ்சு பூதம் ஈர் ஆயிரம் வெள்ளமும் வெருவி
எஞ்சியே அவண் நின்றிடா திரிந்துள என்றால்
அஞ்சு பூதங்கள் அஞ்சுவ அற்புதத் தனவோ.
131
   
5478.
சூரன் வில் பெரும் முழக்கினைக் கேட்டலும் துளங்கிப்
பார் இடத் தொகை அழிதர அன்னது பார்த்துப்
போர் இயற்படை தலைவர் நூற்று எண்மரும் புகுந்து
மாரியில் பொழிந்திட்டனர் வரைகளும் மரமும்.
132
   
5479.
அன்ன வேலையில் பத்து நூறு ஆயிரம் கோடி
பொன்னின் வெம் கணை அவுணர் கோன் முறை முறை                                     போக்கித்
தன் உழைப் புகும் வரையொடு தருக்களைத் தடிந்து
துன்னு பாரிடத் தலைவ தம் யாக்கையைத் துளைத்தான்.
133
   
5480.
முடி துளைத்தனன் முகத்தினைத் துளைத்தனன்                             மொய்ம்பைத்
தொடையல் மார்பினைத் துளைத்தனன் பாணியைத்                             துளைத்தான்
கடி துளைத்தனன் குறங்கினைத் துளைத்தனன் கழல்சேர்
அடி துளைத்தனன் பாரிடத் தலைவரும் அயர்ந்தார்.
134
   
5481.
துளைத்து மெய்யினை வெம் சரம் போதலும் துயர்                                     கொண்டு
இளைத்து நின்றனன் அதிபலன் வக்கிரன் என்போன்
களைத்து வீழ்ந்தனன் வச்சிரன் இரங்கினன் கபாலி
உளத்தின் வன்மையது அழிந்தனன் உன் மத்தன்                                     உலைந்தான்.
135
   
5482.
நீடு குன்றினை ஏந்தியே அச்சுதன் நின்றான்
ஓடு கின்றிலன் எதிர்ந்திலன் மாபலன் உளைந்தான்
வாடுகின்றனன் மதிசயன் மேகனும் மருண்டான்
ஆடுறும் துயர் அறிந்தனன் அண்டவா பரணன்.
136
   
5483.
மேக மாலி உள் நடுங்கினன் சுப்பிரன் மெலிந்தான்
காக பாதன் மெய் பதைத்தனன் உதவகன் கவன்றான்
ஆகம் வீழ்ந்திடு குருதி உள் அழுந்தினன் அசலன்
மாக வந்தன் நொந்து இரங்கினன் அத்திரி மறிந்தான்.
137
   
5484.
பத்திரன் சிறிது இடைந்தனன் உடைந்தனன் பதுமன்
எய்த்து அசைந்தனன் வியாக்கிரன் தனஞ்சயன் இரிந்தான்
மத்தன் வைது வெய்து உயிர்த்தனன் பினாகி மெய்                                      மறந்தான்
சித்திராங்கனும் கனகனும் துயர்க்கடல் திளைத்தார்.
138
   
5485.
நெஞ்சு அழிந்தனர் மாலியும் நீலனும் நெடும் கண்
பஞ்சு அடைந்தனர் கும்பனும் நிகும்பனும் பதைப்பு உற்று
அஞ்சி ஏங்கினர் சண்டியும் தண்டியும் ஆவி
துஞ்சல் கூடினர் வாமனும் சோமன் என்பவனும்.
139
   
5486.
வெம் கண் உக்கிரன் எழுவதற்கு உரன் இலன்                                   வெகுண்டான்
சிங்கன் ஓய்ந்தனன் சுவேத சீரிடன் மறம் தீர்ந்தான்
சங்க பாலன் வீழ்ந்து உருண்டனன் நந்தியும் சலித்தான்
பிங்கலன் உயிர்க்கின்றிலன் உரோமசன் பெயர்ந்தான்.
140
   
5487.
இனைய தன்மையால் இவர் முதலான நூற்று எண்மர்
அனிக வேந்தர்கள் போர் வலி இன்றியே அழியத்
துனைய மற்று அது கண்டு நூறு ஆயிரத் தொகையோர்
கனையும் வார் சிலை வாங்கியே தூர்த்தனர் கணைகள்.
141
   
5488.
தூர்த்து மற்றவர் மாறு கொண்டிடு உழிச் சூரன்
வேர்த்து வெம்கணை மாரி தூய் அனையன விலக்கி
ஆர்த்து வெம் சரம் ஆயிர கோடி தொட்டு அங்கண்
மூர்த்தம் ஒன்றினில் அனையவர் சிலைகளை முரித்தான்.
142
   
5489.
முரித்து மற்றவர் வார்சிலை எடுப்பதன் முன்னம்
திரித்தும் ஆயிர கோடி வெம்கணையினைச் செலுத்திப்
பரித்திறம் பல பூண்டிடும் தேர்களைப் படுத்தி
உரத்தில் அன்னவர்க்கு இலக்கம் ஆயிரம் கணை                                    உய்த்தான்.
143
   
5490.
உய்த்த வாளிகள் நெஞ்சு போழ்ந்திடுதலும் உளைந்தே
எய்த்து வீழ்ந்தனர் இலக்கரும் அனைய கண்டு இரங்கி
வித்தகம் கெழு வீர மார்த்தாண்டனாம் விடலை
கைத்தலம் கெழு சிலையொடு நேர்ந்தனன் கடிதின்.
144
   
5491.
வாங்கு வில்லினன் எறிந்த நாண் ஒலியன் வார் கடல்கள்
ஏங்கும் ஆர்ப்பினன் அவுணன் மேல் கணை எனும் எழிலி
தூங்கு வித்தலும் சரங்கள் தூய் அன்னவை தொலைத்துத்
தீங்கடும் கணை ஆயிரம் நுதல் இடைச் செறித்தான்.
145
   
5492.
செறித்த காலையில் வீரருள் வெய்யவன் செயிர்த்து
மறித்தும் வெம் சரம் தூண்டவே ஆயிரம் வாளி
குறித்து வீசியே அவன் விடு கணையொடும் குனிவில்
அறுத்து உளம் பிளந்து அம்பு பெய் தூணியும் அட்டான்.
146
   
5493.
அட்ட காலையில் வீர மார்த்தாண்டன் உள் அழுங்கிப்
பட்டு உளான் என வீழ்ந்தனன் பரிசு அது நோக்கி
ஒட்டலான் வலி அடக்குவன் யான் என உருத்து
விட்ட தேரொடும் வந்தனன் அரக்கன் ஆம் விறலோன்.
147
   
5494.
வந்த வீர ராக்கதன் எனும் நாமத்து வலியோன்
கொந்து உலாம் தொடை தூங்குதன் கொடுமரம் குனியா
ஐந்து நூற்று இரண்டு அடு சரம் துரந்திட அதுகால்
உந்தி ஆர்த்தனன் அவுணர் கோன் ஒர் ஆயிரம்                                   கணைகள்.
148
   
5495.
முட்டு வெம் கணை வீர ராக்கதன் எனும் மொய்ம்பன்
தொட்ட வாளியை விலக்கி அங்கு அவன் சிலை துணிக்க
நெட்டு இரும் சுடர் வாளம் ஒன்று ஏந்திநீள் விசும்பில்
எட்டு மாதிரக் கரிகளும் வெருவ ஆர்த்து எழுந்தான்.
149
   
5496.
விண் எழுந்தவன் அவுணர் கோன் நின்றிடும் வியன்                                     தேர்க்
கண்ணில் வாவியே ஆங்கு அவன் கொண்டகார்                                     முகத்தைத்
துண் எனச் சுடர் நாந்தகத்து எறிதலும் சூரன்
வண்ணவார் சிலை முடிந்திலது ஒடிந்தது மணிவாள்.
150
   
5497.
நெடிய வாள் படை இற்றிட விறல் உடை நிருதன்
தொடையல் மார்பகத்து எற்றுவான் முயறலும் சூரன்
படை இழந்திடும் வலியிலர் கொல்வது பழி என்று
அடியின் மேல் படுத்து எறிந்தனன் அண்ட மேல் செல்ல.
151
   
5498.
அரக்கர் வீரனை அவுணர் கோன் எறிந்திட அலமந்து
இரக்கம் எய்தியே வீழ்ந்தனன் புவிமிசை இது கண்டு
உரக்கடும் கணை மாரிகள் ஒன்னலன் தேரும்
கரக்க வீசி வந்து ஏற்றனன் மகேந்திரன் கடியோன்.
152
   
5499.
சூரன் அங்கு அது விலக்கியே கணைமழை துரப்ப
வீரன் மற்று அது சிந்தினன் பகழிகள் வீசிச்
சாரி வட்டம் அதாய் வர அவுணனும் தக்கோன்
தேரை வட்டணை வந்தனன் சிலீமுகம் சிதறி.
153
   
5500.
திரியும் வட்டணை முறையினால் சரமழை சிதறி
வருதிறத்தினால் ஐயம் அது ஆவவர் வடிவை
ஒரு திறத்தரும் தெளிகிலர் உணர்ந்திட அற்றோ
இரு திறத்தரும் வீரமா மகேந்திரர் என்றால்.
154
   
5501.
ஆள் அரிக்குடன் வந்தவன் அத்துணை அழன்று
கோள் அரிக்குடன் வந்தவன் விடுசரம் குறைத்துத்
தாளின் முப்பது மரும மீது இருபது தடம் பொன்
தோளின் முப்பது கணைவிடுத்து அவன் வலி                            தொலைத்தான்.
155
   
5502.
வலி தொலைந்தவன் வீழ்தலும் மாக்களின் தொகை மேல்
புலி அடைந்து என அவுணர் கோன் உரப்பினன் புகலும்
மெலிவில் ஆற்றலன் வீரதீரன் எனும் வெய்யோன்
சிலை குனிந்திடப் பகழி வான் நிமிர்ந்திடச் சென்றான்.
156
   
5503.
சென்ற வீர தீரன் விடு கணையொடு சிலையை
ஒன்று ஒர் ஆயிரம் வாளியால் வீட்டியே உயர்ந்த
குன்றம் அன்னது ஓர் தேரை ஏழ் கணையினால் குறைப்ப
நன்று நன்று எனாத் தண்டம் ஒன்று எடுத்து மேல்                                      நடந்தான்.
157
   
5504.
நடத்தல் ஆகிய எல்லையில் பகழி ஓர் நான்கு
தொடுத்து மற்று அவன் ஏந்திய தண்டினைத் துணித்துத்
தடத்த மார்பினும் மொய்ம்பினும் ஏழ் இரு சரங்கள்
விடுத்து மண் மிசை வீட்டினன் யாரையும் வென்றான்.
158
   
5505.
ஆன காலையில் வீரமா மகேசனாம் அடலோன்
கூனல் வில்லினால் அரிதிவன் தன் வலி கோடல்
மான மார் திறல் மொய்ம்பற்கும் என மனம் வலியா
ஊனும் ஆவியும் கவர்வது ஓர் தெய்வ வேல் உய்த்தான்.
159
   
5506.
வேல் விடுத்துழிக் கண்டவன் வெம் சிலைக் குனித்துக்
கோல் விடுத்தலும் ஆயிரம் அன்னவை குறைத்துச்
சூல் விடுத்திடும் எழிலி பால் மின் வரும் தொடர்பின்
மால் விடுத்திடா அவுணன் மார்பு உற்றது அவ் வைவேல்.
160
   
5507.
உற்றது ஓர் எஃகம் நுண்டுகள் ஆகி விண் உலவிச்
சுற்று மாதிரம் சென்றது சூரன் மேல் வீரன்
மற்று ஒர் தண்டினை விடுத்திட எடுக்குமுன் வல்லோர்
சொற்ற சாபத்தின் முந்தும் ஏழ் கணையினைத்                                    தொடுத்தான்.
161
   
5508.
ஏழ் எனப் படு பகழியும் மகேசனாம் ஏந்தல்
பாழி மொய்ம்பினைப் பாழியது ஆகவே படுத்த
வீழல் உற்றது அங்கு அவன் உடல் உணர்ச்சிகள் வீந்த
சூழுகின்றது ஓர் மன் உயிர் அடைந்தது துரியம்.
162
   
5509.
மகேசன் என்பவன் மயங்கலும் மற்று அது நோக்கிக்
ககேசன் மேல் வரும் இராகுவின் அவுணனைக் கனன்று
நகேசன் மங்கையோடு இகலி வேங்கட கிரி நண்ணும்
குகேசன் ஏவல் செய் வீரகேசரி எதிர் கொண்டான்.
163
   
5510.
எதிர் புகுந்தவன் வணக்கியே நாண் ஒலி எறிந்த
துதி கொள் வார் சிலை தன்னை ஏழ் கணையினால்                                     துணியா
அதி குரல் மணித்தேரை நூறு அம்பினால் அறுத்து
நுதி நெடும் கணை அழுத்தினன் ஆயிர நுதலின்.
164
   
5511.
ஆயிரம் கணை நுதல் இடை அழுத்த அம் புவியில்
பாய்தரும் குருதிப் பெரு நதியொடு பாய்ந்து
சேய் இரும் குவடு ஒன்றினைச் செம்கையால் பறித்து
மாயை தந்திடு மதலை மேல் விடுத்தனன் மன்னோ.
165
   
5512.
எறித்த அரும் சுடர்த் தபனனும் சேடனும் இரங்கப்
பறித்து எடுத்து மேல் வீசிய பராரை அம் குன்றம்
வெறித்த அரும் தொடை அவுணர் கோன் விசிகம் ஒன்று                                    அதனால்
அறுத்து மார்பின் ஊறு அயில் கணை அழுத்தினன்                                    அம்மா.
166
   
5513.
கரம் புகுந்திடும் குனி சிலை உமிழ்ந்திடும் கணைகள்
உரம் புகுந்திட வீரகேசரி மனம் உளைந்து
பரம் புகுந்திடும் அவுணர் கோன் தேர்மிசைப் பாயா
வரம் புகுந்த குன்று அன்ன மார்பத்து இடை அடித்தான்.
167
   
5514.
வடித்த வில் படை அவுணர் கோன் மருமத்தின் வலிதாய்
அடித்த காலையில் வீர கேசரி தனது அங்கை
வெடித்ததாம் எனக் கீண்டது விண்டது சோரி
துடித்து உயிர்ப்பொடு தேர் இடை மறிந்தனன் துயரால்.
168
   
5515.
வீர கோளரி பதைத்து மான் தேர் இடை வீழச்
சூரன் மற்று இவன் கொல்வது பழிஎனச் சூழா
ஓர் கையால் அவன் தனை எடுத்து அச்சுதன் உறங்கும்
வாரிதிக்கு இடை எறிந்தனன் விண்ணவர் மருள.
169
   
5516.
பரந்த பாற்கடல் எறிதலும் வீழ்ந்து அவன் பதைப்பு உற்று
அரந்தை எய்தியே எழுந்து விண் நெறியின் மீண்டு                                     அணுகி
முரிந்த தம் இனம் கூடினன் அங்கு அதன் முன்னம்
புரந்தரப் பெயர் வாகையான் ஏற்று எதிர் புகுந்தான்.
170
   
5517.
ஏற்று எதிர்ந்திடும் வீரமா புரந்தரன் என்பான்
ஆற்றல் வெங்கணை சொரிந்து போர் செய்வனேல்                                அவற்றை
மாற்றி வென்றிடும் என்னையும் இவன் என மதித்துக்
கூற்றுவன் படைதொட்டனன் அவுணனைக் குறுக.
171
   
5518.
குறுகும் அப்படை வரத்தினை நோக்கியே கொடியோன்
முறுவல் செய்தனன் ஆங்கு அதற்கு எதிர் உற முரணால்
உறுவது ஓர் படை தொட்டிலன் இகழ்ந்திட உவன்மேல்
மறலி தன் படை பட்டு மாய்ந்திட்டது வரத்தால்.
172
   
5519.
தண்டகன் படை மாய்தலும் சயம் கெழு மகவான்
முண்டகன் படை எடுத்தனன் தொடுப்பதன் முன்னம்
கண்டகன் சிலை வாங்கி நூறு ஆயிரம் கணையை
விண்டகன் பெரு மார்பகம் திறந்திட விடுத்தான்.
173
   
5520.
நிறந்து அரும் சுடர்க் கணை புகும் துரத்தினை நெறியாத்
திறந்து போயின வீரமா புரந்தரன் செங்கை
உறைந்த நான்முகப் படையொடும் சோரிநீர் உமிழ்ந்து
மறிந்து மாய்ந்தனன் வந்தனன் வீரர் தம் மறலி.
174
   
5521.
தீரர் ஆம் திறல் அவுணர்கள் பூதர் ஆம் சிதைவார்
சூரர் ஆம் சிலை வல்லவர் நமர் எலாம் தொலையும்
நீரர் ஆம் செருச் செயல் இது நன்று என நிகழ்த்தி
வீரர் ஆந்தகன் வந்தனன் அந்தகன் வெருவ.
175
   
5522.
சார்ங்கம் அன்னது ஓர் வலியதாய் மாமதன் தனுவாம்
ஈர்ங் கரும்பு என அரி படு சிலை குனித்து ஏற்றுக்
கார்ங் கரும் புயலாம் என நாண் ஒலி காட்டிக்
கூர்ங் கொடும் கணை சிதறி நின்று ஆர்ப்பிசை                              கொண்டான்.
176
   
5523.
ஆர்ப்பு எடுத்தலும் அஞ்சினன் கதிரவன் அங்கம்
வேர்ப்பு எடுத்தனர் அமரர்கள் விஞ்சையர் விண்டார்
சீர்ப் பெடைக்குலம் அலமரக் கின்னரம் சிந்திப்
பார்ப்பு எடுத்து திரிகின்றன கேசரப் பறவை.
177
   
5524.
ஆன காலையில் வீரர் அந்தகன் விடும் அம்பின்
சோனை மாரியைக் கணைகளால் விலக்கியே சூரன்
ஊனும் ஆவியும் கவரும் ஆயிரம் கணை உய்ப்பத்
தானும் ஆயிரம் பகழி தொட்டு அன்னதைத் தடுத்தான்.
178
   
5525.
தடுத்த காலையில் அவுணர் கோன் சினவி முத்தலை சேர்
வடித்த வச்சிரச் சிலீ முகம் ஆயிரம் வல்லே
எடுத்து விட்டிட வீரர் அந்தகன் தமக்கு எதிரா
விடுத்த பல்லவம் யாவையும் சிந்தியே விரைந்த.
179
   
5526.
விரைந்து போய் விறல் அந்தகன் தேரினை வீட்டிக்
கரந்தனில் சிலை ஒடித்து வீரத்தினைக் கலக்கி
உரந்தனில் புகுந்து உணர்வு உண்டு சோரி நீர் உகுத்துப்
புரந்தரற்கு உளம் துணுக்கு உறப் போயது புறத்தில்.
180
   
5527.
விறல் படைத்திடும் அந்தகன் கணை பட வீழ்ந்து
மறல் படைத்திட ஆங்கு அது நோக்கியே மனத்தின்
உறல் படைத்திடு செற்றமும் மானமும் உகைப்பத்
திறல் படைத்திடு மொய்ம்பினான் அவுணன் மேல்                                    சென்றான்.
181
   
5528.
அரிகள் அச்சு உறும் வீரவாகுப் பெயர் அறிஞன்
இரதம் ஊர்ந்து வந்து ஏற்றலும் ஆங்கு அவன் எழில் சேர்
உருவ நோக்கு உறா ஒற்றனாம் இவன் என உன்னிப்
பெரிது வெஞ்சினம் எய்தியே அவுணர் கோன் பேசும்.
182
   
5529.
எமது வீரமா மகேந்திரம் சாடி எண் இல்லாத்
தமரை அட்டனை தானைகள் அளப்பு இல தடிந்தாய்
குமரர் தங்களைக் கொன்றனை நின் உயிர் கொண்டே
அமரின் ஆற்றலை இன்றொடே முடிக்குவன் அம்மா.
183
   
5530.
பற்று பட்டிமை பயிற்றியே அமைச்சரின் பன்னி
ஒற்றன் ஆகியே இன்னும் வந்தாய் எனின் உய்தி
மற்றதே கடன் வார்சிலை பிடித்தனை மாண்டாய்
இற்றை வைகலோ நின் உயிர்க்கு இழைத்த நாள் என்றான்.
184
   
5531.
தூதும் ஆகுவன் அமைச்சனும் ஆகுவன் துன்னார்
மீது வெஞ்சமர் ஆற்றுவன் இன்னமும் வேலோன்
ஓதிடும் பணி யாவையும் செய்குவன் உலகில்
ஏதும் வல்லன் யான் வேண்டும் போர் புரிதியால்                                 என்றான்.
185
   
5532.
என்று வீரன் ஓதிடுதலும் எரிந்தன நயனம்
தின்ற வாள் எயிற்று இதழினை உரோமங்கள் சிலிர்த்த
துன்று சீற்றம் உள் எழுந்தது சூரனாம் அவுணன்
குன்றம் அன்ன வில் குனித்தனன் நாண் ஒலி கொண்டான்.
186
   
5533.
சிலை பனித்திடக் குனித்திடும் காலையில் செம் பொன்
மலை பனித்தன பாரகம் பனித்தன வான் தோய்
அலை பனித்தன அண்டமும் பனித்தன அங்கண்
தலை பனித்தனன் அரவினுக்கு இறையவன் தானும்.
187
   
5534.
அம்முறை வேலையில் ஆடல் கொள் மொய்ம்பின்
செம்மல் தனாது செழும் கரம் உற்ற
மைம் மலிவார் சிலை வன்மையின் வாங்கிக்
கொம் என நாண் ஒலி கொண்டனன் ஆர்த்தான்.
188
   
5535.
ஆர்த்திடும் பேர் ஒலி ஆங்கு அவன் வாங்கும்
சீர்த்தனு ஆர்ப்பொடு சென்றிடும் காலை
மூர்த்தம் அது ஒன்றினின் முச்சக வைப்பும்
பேர்த்து எனவே பெயர்க்கு உற்றன அன்றே.
189
   
5536.
அங்கு அது காலையில் ஆயிரம் கோடி
துங்க நெடும் கணை தூர்த்தனன் ஆர்ப்பப்
புங்கவனுக்கு இளையான் புயல் என்ன
வெம் கணை வீசி விலக்கினன் நின்றான்.
190
   
5537.
விலக்கிய காலை வெகுண்டு இவன் ஆவி
கலக்குவன் என்று கடும் சரம் வெய்யோன்
இலக்கம் விடுத்திட ஏந்தல் தடுத்தான்
கொலைக் கணை ஆயிர கோடி தொடுத்தே.
191
   
5538.
வெற்றி கொள்வான் பினும் வெங்கணை கோடி
செற்றமொடே செறி வித்திடும் காலை
மற்று அவை சிந்தினன் வாளிகள் நூறு
நெற்றியில் விட்டனன் நீள் புய வீரன்.
192
   
5539.
அசுத்தன் ஆம் அவுணன் குளம் எய்தி
மெய்ச் சரம் நூறும் விளிந்து பின் விண்ட
வச்சிரம் ஆகிய மால் வரை ஒன்றின்
உச்சியின் உற்ற பொன் ஊசிகள் என்ன.
193
   
5540.
நூறு அயில் வாளி நுதற்கு இடை சென்று
மூறிலன் ஆகி உறும் திறல் நோக்கி
ஆறு முகேசன் அயில் படை அல்லால்
ஈறு செயாது இவன் யாக்கையை என்றான்.
194
   
5541.
என்றிடும் வீரன் இதன் பின்னும் வாளி
துன்று பல் கோடி சொரிந்திட வெய்யோன்
வன் திறல் வெம் கணையால் அவை மாற்றி
ஒன்றுடன் ஏழ்கணை ஒண் புயம் உய்த்தான்.
195
   
5542.
அம்பு இரு நான்கும் அணைந்து உடன் ஆடல்
மொய்ம்பினன் மொய்ம்பு உற மூழ்கி உள் உற்ற
செம் புனல் உண்டு செழும் பிடர் போழ்ந்தே
உம்பர் வெருக் கொள ஓடிய மாதோ.
196
   
5543.
ஓடிய வேலை உளைந்திடு நெஞ்சன்
ஆடல் கொள் மொய்ம்பினன் அவ் அசுரேசன்
பாடு உறு தேர் விடு பாகர் தம் மெய்யில்
கோடி பல் கோடி கொடும் கணை விட்டான்.
197
   
5544.
அலகில் நெடும் கணை ஆகம் அழுந்த
வலவர்கள் ஆற்ற வருந்தினர் ஆகிப்
புலவொடு சோரி புறத்தில் விளங்க
இலவம் அலர்ந்து என யாரும் இருந்தார்.
198
   
5545.
அங்கு அது நோக்கி அழன்று அசுரேசன்
செம் கணை ஐம்பது தீ என ஓச்சி
வெம் கண் விறல் புயன் மேதகு தேரைப்
பொங்கு உளை மாவொடு பொள் என அட்டான்.
199
   
5546.
அட்டிடும் காலை அடல் புயன் ஆங்கு ஓர்
வட்டணை ஆழி கொள் வையம் அது ஏறி
நெட்டழல் வாயு நெடும் படை தன்னைத்
தொட்டனன் ஆங்கு அது சூரன் அறிந்தான்.
200
   
5547.
வீறு ஆகிய அசுரர்க்கு இறை மிக மூரல் படைத்து
மாறு ஆக ஒர் படை தொட்டிலன் வரிவில்லொடு நிற்பச்
சூறாவளி அழல் மாப் படை சூரன் மிசை தாக்கி
ஊறு ஆயின நூறு ஆயிரம் உதிர் ஆயின பிதிராய்.
201
   
5548.
காற்றின் படை கனலின் படை கண்டம் பல ஆகக்
கூற்றின் படை கதிரின் படை கூடத் தொடுத்திடலும்
சீற்றம் கெழு சூரன் மிசை சென்றே அவை தாமும்
ஏற்றம் தனை இழந்தே கடிது இறந்திட்டன அன்றே.
202
   
5549.
அருணன் படை மறலிப் படை அழிவு எய்தலும் அம்மை
சரணம் தனில் வரு சத்திகள் தருமைந்தரில் தலைவன்
வருணன் படை நிருதிப்படை மகவான் படை மூன்றும்
முரணம் கொடு கொடியோன் உர மொய்ம்பில் புக                                     விடுத்தான்.
203
   
5550.
ஏய் உற்றவை அவுணர்க்கு இறை இருதோள் உரம் எய்தி
வீயுற்றன அது காலையில் வீரம் கெழு மொய்ம்பன்
மாயப்படை அவுணப் படை வல்லே செல விடுப்பப்
போய் அப்படையவன் மெய்யிடை புகுந்தே பொடி ஆன.
204
   
5551.
விண்ணோர் படை இவை யாவையும் விளிவாதலும் வீரன்
நண்ணான் பெரு விறல் கண்டனன் நனி விம்மிதன் ஆகி
மண்ணோடு உயிர்த் தொகை யாவையும் வகுத்தோன்                                 படை நளினக்
கண்ணோன் படையொடு கூட்டுபு கடிதில் செல விடுத்தான்.
205
   
5552.
விடுக்கு உற்றிடும் அயன் மால் படை விரைந்தே சினம்                                வீங்கி
அடுக்கு உற்றிடும் உருமுப் புகை அழல் கால் பல                                படைகள்
மடுக்கு உற்றிடும் புணரித் தொகை வகுத்து எவ்வகை                                உலகும்
நடுக்கு உற்றிட அவுணர்க்கு எதிர் நடந்திட்டன மாதோ.
206
   
5553.
ஆண்டே வரும் அயன் மால் படை அவுணன் தட                                       மார்பம்
கீண்டு ஏகுதும் என்றே அவன் கிளர் தார் அகலத்தின்
மூண்டே சினமொடு தாக்கிய முழு மா மணி வயிரச்
சேண் தோய் கிரி துளைப்பான் முயல் சிறை வண்டினம்                                       எனவே.
207
   
5554.
மாயோன் படை உலகம் தரு மறையோன் படை அவுணத்
தீயோன் உரம் தனில் பாய்ந்து திருத் தொல் வலி சிந்தி
மீ ஓங்கிய அசுரேசரும் விண்ணோர்களும் நோக்கி
ஏயோ என வசை எய்தி இரிந்திட்டன அன்றே.
208
   
5555.
மீள் உற்றவை இரியும் செயல் விழி தீ உற நோக்கி
நீள் உற்றிடு திறல் மொய்ம்பினன் நிமலன் வர முன்னிக்
கோள் உற்றிடு பெரு விம்மிதம் கொண்டு உற்றிட                                   அண்டம்
ஆள் உற்றிடு அவுணர்க்கு இறை நகை செய்து இவை                                   அறைவான்.
209
   
5556.
முத்தேவரின் முதல் ஆகிய மூவா முதல் வரத்தால்
எத்தேவர்கள் படை உய்க்கினும் எனை வெல்கில எந்தப்
புத்தேள் படைவிடினும் எதிர் பொரவே ஒரு படையும்
உய்த்தே தடை வினை செய்கிலன் அவற்றின் வலி                                உணர்வேன்.
210
   
5557.
ஊன் ஈத்திடு தவ விண்ணவர் உலகம் புகழ் அயன் மால்
தான் ஈத்து உள படை என்னிடை சார்கின்றது ஒர் தன்மை
மா நீத்தம் எலாம் உண்டிடும் வடவைத் தழல் அதனைத்
தேனீத் தொகை தசை யீது எனச் சேரும் திறன் அன்றே.
211
   
5558.
தெரிந்து இட்டனை நீ ஓச்சிய திறல் வெம்படை என்பால்
புரிந்து இட்டது ஒர் வயம் ஒன்று இலை பொள் என்று                                   உரம் மேவி
முரிந்திட்டன மறிந்திட்டன முடிந்திட்டன பொடிந்தே
எரிந்திட்டன கரிந்திட்டன இடைந்திட்டன அல்லால்.
212
   
5559.
வில் வன்மை கொள் சரவன்மையும் விண்ணோர் படைக்                                       கலத்தின்
பல்வன்மையும் பிற ஆகிய படை வன்மையும் இயல்பாம்
தொல் வன்மையும் கண்டே உனைத் தொலைவு இல் படை                                       ஒன்றால்
கொல்வன் எனக் காலம் தெரி கூற்றாம் என நின்றேன்.
213
   
5560.
என்னா அசுரன் செப்பலும் இளையோன் இனி ஒன்றால்
ஒன்னார்களில் தலைவன் வலி உணர்வேன் என உன்னாத்
தொல் நாள் எயில் மூன்று அட்டு அருள் தூயோன்                                படைக் கலத்தை
மன்னார் அருள் புரி சிந்தனை வழி பாட்டொடு                                விடுத்தான்.
214
   
5561.
விடும் காலையின் இறைவன் படை விடம் வெம் கனல்                                        அசனி
கொடும் கால் இருள் கதிர் வெய்யவன் கூற்றம் பல கூளி
தொடும் கார் முகச் சரமாரிகள் சூலம் புடை சுற்ற
அடும் காலம் இது எனவே நெடிது ஆர்த்து உற்றதை                                        அன்றே.
215
   
5562.
உறுகின்றது ஒர் படை நோக்கினன் உரம் உற்று எனக்                                   குடைந்தே
இறுகின்றது ஒர் படை மற்று அல ஈசன் படை ஈது ஆல்
பெறுகின்ற அப்படையால் இது பிழை செய் குவல்                                   என்னாச்
செறுகின்றது ஒர் அவுணர்க்கு இறை சிவன் தொல் படை                                   எடுத்தான்.
216
   
5563.
ஊறு ஏற்றிடு தன் சிந்தையின் உறு பூசனை நிரப்பி
ஆறு ஏற்றிடு சடிலத்தவன் அடல் மாப் படை தொடுப்ப
நீறு ஏற்றிடு மொய்ம்பன் விடு நிமலப் படை எதிர் போய்
மாறு ஏற்று அமர் புரிந்திட்டது வையத்தவர் வெருவ.
217
   
5564.
காண் தகு நுதல் விழிக் கடவுள் மாப்படை
ஆண்டு அவை இரண்டும் நின்று ஆடல் ஆற்றியே
மாண்டிடும் உலகு என வானம் போற்றிட
மீண்டன ஒல்லையில் விட்டு உளோர்கள் பால்.
218
   
5565.
அன்னது நோக்கியே அசுரர் மேலையோன்
இன்னவை கொல் உனக்கு இயன்ற வன்மைகள்
உன் உயிர் இன் இனி ஒழிப்பன் காண்க எனாத்
தன் நெடும் சிலை வளை இச் சரங்கள் சிந்தினான்.
219
   
5566.
துன்பு உறு வடிக் கணை சூரன் சிந்தலும்
தன் பெரும் சிலையினைத் தானும் வாங்கியே
முன்பு உற நெடும் சரம் முகிலின் தூவினான்
பொன் புனை அலங்கல் அம் புயத்து வள்ளலே.
220
   
5567.
அத் தகும் எல்லையில் அவுணர் மன்னவன்
முத்தலை நெடும் கணை மூ ஐந்து ஏவியே
வித்தக மொய்ம்பு உடை வீர வாகுவின்
கைத்தல வில்லினைக் கண்டம் ஆக்கினான்.
221
   
5568.
சிலை அது துணிதலும் சீறி வீரன் ஓர்
இலை உடை வேலினை எடுத்து வீசலும்
தொலைவு அறு வரம் பெறு சூரன் மார்பு எனும்
மலை இடைக் குறுகியே மற்றது இற்றதே.
222
   
5569.
இற்று உழி அவுணர்கள் இறைவன் மால் அயன்
மற்று உள கடவுளர் வலியும் கொள்வது ஓர்
கற்றை அம் கதிர் மணிக் கதை ஒன்று ஓச்சினான்
வெற்றி கொண்டு உலவிய வீர வாகு மேல்.
223
   
5570.
திண்மை கொள் பல் தலைச் சேடன் பாங்கு உளார்
எண்மரொடு ஒன்றியோர் இயற்கைத்து ஆகியே
உண்மலி ஆர்ப்புடன் ஒழுகிச் சென்று என
வண் மணி கறங்கிட மணித் தண்டு உற்றதே.
224
   
5571.
வெம் கதை வருதலும் வீர வாகு ஓர்
செம் கதை எதிர் உறச் செலுத்தி நிற்றலும்
அம் கதை நீறு செய்து அவன் தன் மார்பு இடைத்
தும் கதை தன்னொடு துண் என்று எய்திற்றே.
225
   
5572.
மேக்கு உயர் பெரும் சின வீர வாகுவின்
மாக்கிளர் அகலம் மேல் வயிர மாக்கதை
தாக்கலும் விண்டது தாரைச் செம் புண் நீர்
தேக்கிய நதிகளில் திரைத்துச் சென்றதே.
226
   
5573.
ஆழ்ந்திடு சோரியன் அவுணன் தண்டினால்
போழ்ந்திடு மார்பினன் புகையும் நெஞ்சினன்
தாழ்ந்திடும் விறலினன் தளரும் யாக்கையன்
வீழ்ந்தனன் அமரர்கள் வெருவி ஓடவே.
227
   
5574.
ஆற்றல் இன்று ஆகியே அண்ணல் வீழ்தலும்
மேல் திகழ் வலவன் ஆம் விசாலி என்பவன்
தேற்று உறு பான்மையைச் சிந்தித்து ஓர் புடை
காற்று எனத் தேர் கொடு கடிது போயினான்.
228
   
5575.
போந்திடு காலையில் புலம்பி வீழ்ந்துளான்
மாய்ந்திடும் சரதம் ஆம் என்று மாறு இலான்
ஆய்ந்தனன் சிலை குனித்து அப்பு மாரி தூய்க்
காய்ந்தனன் சென்றனன் கணத்தின் தானைமேல்.
229
   
5576.
பொன்றிடா வரத்தினான் பூத சேனை மேல்
சென்றனன் கணை மழை சிதறிக் கோறலும்
நின்று அவை இரிந்தன நெடிய தீம் கதிர்
என்றினை அடைந்திடு பனியின் ஈட்டம் போல்.
230
   
5577.
தாக்கு இகல் வீரரும் சயம் கொள் மொய்ம்பனும்
நீக்கம் இல் ஈர் ஆயிர நீத்தத் தானையும்
ஊக்கிய வலி அழிந்து உடைந்த தன்மையை
நோக்கினன் பன்னிரு நோக்கம் கொண்டு உளான்.
231
   
5578.
ஆண்டு அது வேலையில் ஆறு மாமுகன்
பாண்டில் அம் தேர்மிசை பாகை நோக்கு உறா
ஏண் தகு சூரன் மேல் இரதம் ஒய் எனத்
தூண்டுதி என்றனன் சுரர்கள் போற்றவே.
232
   
5579.
இணை அறு முருகன் இவ்வாறு இசைத்தலும் இனையது                                     ஓரா
உணர் உறு பவனன் என்னும் ஒரு தனிப் பாகன் நாகர்
கண மணி செறிந்த பொற்பில் காமரு கடவுள் தேரைத்
துணை அறுசூரன் முன்னர்த் துண் எனத் தூண்டி                                     உய்த்தான்.
233
   
5580.
ஆயது காலை தன்னில் அவுணர் கோன் அநந்த கோடி
ஞாயிறு திரண்டு ஒன்றாகி ஞாலமேல் இருளை ஓட்டிச்
சேய் உயர் விசும்பை நீங்கிச் செரு நிலத்து உற்றது                                     என்னத்
தூயது ஓர் குமரன் போரில் தோன்றிய தோற்றம்                                     கண்டான்.
234
   
5581.
முண்டகம் மலர்ந்தது அன்ன மூவிரு முகமும் கண்ணும்
குண்டல நிரையும் செம்பொன் மவுலியும் கோல மார்பும்
எண்டரு கரம் ஈர் ஆறும் இலங்கு எழில் படைகள் யாவும்
தண்டையும் சிலம்பும் ஆர்க்கும் சரணமும் தெரியக்                                    கண்டான்.
235
   
5582.
சூர் எனும் அவுணர் கோமான் தொல்லை நாள் நோற்ற                                        வாறும்
பார் இடை முடிவு இன்று ஆகிப் பல் உகம் இருந்த                                        வாறும்
ஆரணம் அறிதல் தேற்றா ஆறுமா முகத்து எம் ஐயன்
பேர் எழில் உருவம் நோக்கிப் பெரும் பயன் கோடற்கு                                        ஏயே.
236
   
5583.
எஞ்சல் இல் அவுணர் செம்மல் இங்ஙனம் அமர் அது                                    ஆற்றித்
துஞ்சில் என் தொலை உற்றால் என் தூய வால் அறிவின்                                    மிக்கோர்
நெஞ்சினும் அளத்தற்கு ஒண்ணா நிரு மலக் குமர மூர்த்தி
செம்சுடர் வடிவம் கண்டு தீவினை நீங்கி உய்ந்தான்.
237
   
5584.
பூவுலகு அண்டம் எல்லாம் புரந்திடும் சூரன் தன்னைத்
தீவினை யாளன் என்றே செப்புவர் சிறப்பின் மிக்க
மூ இரு முகத்து வள்ளல் முன்னர் வந்து எய்தப் பெற்றான்
ஆவி இவன் தவத்திற்கு அன்றி அறத்திற்கும் முதல்வன்                                       அன்றோ.
238
   
5585.
இன்னமும் முனிவர் தேவர் யாவரும் இனையன் என்றே
உன்னரும் தலைமைத்து ஆகும் ஒரு தனிக் குமரன்                                     தன்னைக்
தன் இரு விழியால் கண்டான் தானவற்கு இறைவன்                                     என்றால்
அன்னவன் தவத்தின் பேற்றை ஆர் அறிந்து உரைக்கல்                                     பாலார்.
239
   
5586.
பொரு சமர் விளைப்பான் போலப் பொருக்கு எனப்                                போந்து சூரன்
இரு விழி தன்னில் காண்பான் எளிது தன் வடிவம் காட்டி
அருள் அது புரிந்தான் என்னின் ஆதி அம் குமரன்                                மாயத்
திரு விளையாடல் யார்க்கும் தெரிகில போலும் அன்றே.
240
   
5587.
சிந்தையால் அறிதற்கு ஒண்ணாத் திரு உரு விழியால்                                     கண்டு
முந்து தான் நின்ற சூரன் முழுது உலகு அடுவான்                                     நின்றோன்
மைந்தன் ஆம் இவன் என்று உன்னி மனத்தினில் வெகுளி                                     தூண்டக்
கந்த வேள் தன்னை நோக்கி இனையன கழறல் உற்றான்.
241
   
5588.
சேனையாய் நினைச் சூழ்ந்தவர் செரு வலி அழிந்து
போன போனது ஓர் மாதிரம் தெரிந்தில பூத
மான வீரரும் அழிந்தனர் சிலைத் தொழில் வல்ல
ஏனையோர்களும் என்னொடு பொருதனர் இறந்தார்.
242
   
5589.
இற்ற நின் பெரும் படைக்கு எலாம் தலைவனாய் என்பால்
ஒற்று வந்து உள வீரனும் பொருதுயிர் ஒழிந்தான்
மற்று நீ ஒரு பாலனோ என்னொடு மலைந்து
கொற்றம் எய்துதி நன்று நன்று உன் உளக் குறிப்பு.
243
   
5590.
மேலது ஆகிய நின்னுடைத் தாதையும் விண்ணும்
ஞாலமும் புரிந்து உதவிய நான் முகத்து இறையும்
மாலும் வெம் சமர் புரி திறம் கருதிலர் மற்று ஓர்
பாலன் வல்லை கொல் என்னொடு போர்த்தொழில் பயில.
244
   
5591.
முந்தை நாள் வலி இல்லது ஓர் அடுக்கலும் முன்யான்
தந்த செல்வத்தின் மயங்கிய தாரகா சுரனும்
புந்தி நீங்கிய அவன் படைத் தலைவரும் போல
மைந்த என்னையும் நினைந்தனை போலும் நின் மனத்தில்.
245
   
5592.
தேக்கு சீரினேன் வரத்தியல் உன்னலை சிதையா
ஆக்கம் உன்னலை பெரு மிடல் உன்னலை அடலின்
வீக்கம் உன்னலை படைத்திறம் உன்னலை வெம்போர்
ஊக்கம் உன்னலை சிறுவ நீ பெரும் சமர்க்கு உற்றாய்.
246
   
5593.
கமலம் மேல் உறை பகவனும் மாயனும் ககனத்து
அமரர் செம்மலும் மாதிரச் கிழவரும் அழுங்கச்
சிமைய மங்கையும் இரங்கு உற என் ஒரு சிலையால்
இமை ஒடுங்கு முன் நின் வலி அழிக்குவன் என்றான்.
247
   
5594.
சூரன் என்று உரைபெற்று உள்ள தொல்லையோன் இனைய                                         தன்மை
வீரமும் திறலும் சீரும் வெகுளியும் கொண்டு செப்ப
ஆர் அருள் உருவாய் நின்ற ஆதி அம் குமரன் கேளா
மூரலும் சிறிது தோன்ற இத்திறம் மொழியல் உற்றான்.
248
   
5595.
வெற்றியும் உடையம் ஆற்றல் மிகுதியும் உடையம்                                  மேன்மை
பற்றியும் உடையம் எண் இல் படைகளும் உடையம்                                  வீயாப்
பெற்றியும் உடையம் தானைப் பெரும் கடல் உடையம்                                  என்று
மற்று இனி அகந்தை கொள்ளேல் மாற்றதும் வல்லை                                  மன்னோ.
249
   
5596.
வரம் மிகு சிறப்பி னேமை மழ இளங்குமரன் கொல்லோ
பொருது வென்றிடுவான் வல்லன் என்று நின் புந்தி                                      கொண்டாய்
பெரிது நீ மடவை மாதோ பிரான் தனி நெற்றி நாட்டத்து
ஒரு சிறு பொறியே அன்றோ உலகு எலாம் அடுவது                                      அம்மா.
250
   
5597.
அறிவுடை முதியர் என்றும் ஆண்டு இளையோர்கள்                                     என்றும்
சிறியவர் பெரியர் என்றும் திருத்தகு வளத்தர் என்றும்
வறியவர் என்றும் வீரர் மதிக்கிலர் யாவ ரேனும்
விறல் வலி படைத்து நேரின் வெஞ்சமர் விளைப்பர்                                     அன்றே.
251
   
5598.
நூற்றுடன் எட்டது என்ன நுவல் உறும் உகத்தின் காறும்
பேற்றுடன் இனிது வைகும் பெரிய நின் வலியை இன்னே
தோற்றம் அது உறாத கொள்கைச் சிறிய நம் வன்மை                                      தன்னால்
ஊற்று உடைப் பாலில் புக்க உறை என அடுதும்                                      என்றான்.
252
   
5599.
என்னும் முன் வெகுண்டு அவுணர் கோன் இரு நிலம்                                      தன்னை
முன் அளந்தவன் போல் அண்ட முகடு தோய் உற்ற
கொன் நெடும் சிலை ஒன்றினைக் கரத்தொடு குனிப்ப
அன்ன பான்மையைக் கண்டனன் ஆதி அம் குமரன்.
253
   
5600.
மால் அயன் சுரர் பல்லியம் இயம்பி வாழ்த்து எடுப்ப
ஆலம் ஆர் வனத்து எம்பிரான் ஆடிய அந்நாள்
மேலை மூதண்ட முகடு உற எடுத்தது ஓர் வியன் தாள்
கோலம் என்ன ஓர் நெடும் சிலை எடுத்தனன் குமரன்.
254
   
5601.
அடல் பெரும் திறல் சண்டிதன் பெருமிதம் அடக்கிப்
படித் தலம் தனை அருளுவான் ஆடல் செய் பரமன்
எடுத்த சேவடி பகிரண்டம் அட்டிடா இயல்பால்
தடுத்த செங்கை போல் குனித்தனன் அறுமுகன் தனுவை.
255
   
5602.
குனித்த வில் இடைக் குமரவேள் நாண் ஒலி கொண்டான்
அனைத்தும் அண்டங்கள் உடைந்த பேர் ஓதை போல்
                                    அவுணன்
சினத்து மாறு தன் குணத்திசை எடுத்தனன் செகத்தில்
பனித் தடம் கடல் யாவும் ஆர்த்துத் துடைந்திடும் பரிசின்.
256
   
5603.
அள் இலைப் படை அவுணர் கோன் அடுசர மழை தூய்
வள்ளல் தன்னையும் தேரையும் உலகையும் மறைப்பத்
தெள்ளிதின் இங்கு இவன் விஞ்சை என்று எந்தை
                                    சிந்தித்துக்
கொள்ளை வெம் கணை துரந்தவை யாவையும்
                                    குறைத்தான்.
257
   
5604.
குறைத்த காலையில் சினவியே பின்னரும் கொடு நஞ்சு
உறைத்த பொன்கணை பல தொட வாளிகள் ஓச்சி
அறுத்து மற்று அவை குமர வேள் அவுணர் கோன்
                                    தன்னை
மறைத்து விண் நெறி மாற்றினன் பகழி மா மழையால்.
258
   
5605.
ஆன பான்மை சேர் பகழியின் படலிகை அவுணன்
சோனை வாளியால் துணித்து இடை வீட்டியே சுரர் தம்
சேனை காவலர் கண்டனன் வினைத் தளை சிந்தி
ஞான நாயகத் தாணுவைக் காணும் நற் றவர் போல்.
259
ஆன பான்மை சேர் பகழியின் படலிகை அவுணன் சோனை வாளியால் துணித்து இடை வீட்டியே சுரர் தம் சேனை காவலர் கண்டனன் வினைத் தளை சிந்தி ஞான நாயகத் தாணுவைக் காணும் நற் றவர் போல். 259
   
5606.
கண்டு தீயவன் பத்து நூறு ஆயிரம் கணைகள்
அண்ட நாயகன் குமரன் மேல் விடுத்தலும் அவற்றை
எண்டரும் சர மாரியால் விலக்கி ஈர் ஏழு
புண்டரும் கணை உய்த்தனன் ஆங்கு அவன் புயமேல்.
260
   
5607.
கயப் பொருப்பினை உரித்த மால் வரை தரு காளை
வயப் பொருப்பினை அடுகணை சூரனாம் வலியோன்
புயப் பொருப்பினை எய்தியே துளைத்தில புரைதீர்
அயப் பொருப்பை உற்று அடல் பெறா அழல் அவன்
                                    கதிர் போல்.
261
   
5608.
மாயை தன் மகன் வச்சிர யாக்கையின் வலியை
நாயகன் திரு மதலை கண்டு அழல் எழ நகைத்துத்
தீய அன்பினும் விடுவது ஓர் சரம் எலாம் சிந்தி
ஆயிரம் கணையால் அவன் சிலையினை அறுத்தான்.
262
   
5609.
சிலையினைத் துணித்திடுதலும் அவுணர் கோன் செயிர்த்து
மலையினைத் தடிந்தவன் மிசை மலர் அயன் தந்த
இலை அயில் படை ஒன்றினை எறிதலும் ஈர் ஏழ்
கொலை உடைக் கணை தூண்டியே அன்னதைக்
                                    குறைத்தான்.
263
   
5610.
ஏறு சேவகத்து அவுணர் கோன் அயில் படை இறலும்
வேறு ஒர் கார் முகம் வாங்கினன் சரமழை வீசி
மாறு மாறவன் தொடும் தொடும் கணை எலாம் மாற்றி
ஆறு மாமுகன் புயத்தில் ஏழ் வாளி தொட்டு ஆர்த்தான்.
264
   
5611.
செம்கதிர்ப் பகை தன்னை முன் உதவினான் செலுத்தும்
வெம் கணைத் தொகை பரம் சுடர் உருவம் ஆம் விமலன்
துங்க மிக்க தோள் புக்கு நுண் தூளியது ஆகிப்
பொங்கு கனல் திரள் பட்டது ஓர் பூளை போன்ற வால்.
265
   
5612.
மொய் இரும் கணை பட்டு நீறு ஆதலும் முருகன்
வெய்ய சூர் வலி நன்று நன்று ஆல் என வெகுளா
ஐ இரண்டு வான் பகழியால் அவன் சிலை அறுத்துச்
செய்ய தேரையும் ஆயிரம் கணையினால் சிதைத்தான்.
266
   
5613.
ஆழி பூண்டிடும் இரதமும் அங்கையில் சிலையும்
பூழி ஆதலும் அரசனுக்கு ஏமம் ஆய்ப் போந்த
ஏழ் இரண்டு நூறு ஆயிரம் தேரையும் இமைப்பின்
ஊழி நாயகன் தன் சர மழையினால் ஒழித்தான்.
267
   
5614.
சேமம் ஆகியே நின்றிடும் தேர் எலாம் செவ்வேள்
காமர் வாளியால் சிதைத்தலும் அன்னது கண்டான்
தூம வெம் கனல் தூண்டிய விழி உடைச் சூரன்
ஏமம் ஆகியே கொண்டிடு சூலம் ஒன்று எறிந்தான்.
268
   
5615.
நண்ணலன் விடு முத்தலைப் படையை நாற் கணையால்
பண்ணவன் திருமா மகன் இருதுணி படுத்துத்
துண் எனக் கணை ஏழினால் அவன் குடை துணியா
அண்ணல் அம் சுடர் முடியை ஓர் கணையினால்
                                    அறுத்தான்.
269
   
5616.
மணி படுத்திய மவுலியை அறுத்த பின் வலியோன்
பணி படுத்திய மெய் எங்கணும் பகழிகள் போக்கி
அணி படுத்தியே புனை தரு மதாணிகள் அனைத்தும்
துணி படுத்தினன் மறைகளும் துணிந்திடற்கு அரியோன்.
270
   
5617.
ஆன காலையில் சூரபன்மா எனும் அரசன்
மான வன்மையில் குறைந்தது நோக்கி மாடு உள்ள
சேனை காவலர் நால் படை தன்னொடும் சேர்ந்து
சோனையாப் படை வழங்கியே குமரனைச் சூழ்ந்தார்.
271
   
5618.
ஏழு நேமியும் எறிந்து மேருவை வளைந்து என்னக்
கேழில் பல் படை வீசியே ஆர்த்து உடன் கிளர்ந்து
சூழும் வெய்யவர் தானையைக் கண்டனன் தொல்நாள்
பூழி ஆகவே அவுணர் ஊர் அட்டவன் புதல்வன்.
272
   
5619.
குருதி வேல் படை கொண்டவன் தன் புடைக் குழுமிப்
பொரு திறல் பெரும் தானையைப் பொள் என அடுவான்
கருதி ஆங்கு ஒரு கரத்தினில் இருந்திடு கடவுள்
பரிதி அம் படை தொட்டனன் இரவியில் படர.
273
   
5620.
இலகும் வெய்யவன் நடுவு நாள் யாமத்தின் ஏகி
அலகு இல் பேர் இருள் அட்டு என ஆழிபோய் அவுணர்
தலையும் ஆகமும் கைகளும் அடிகளும் தடம் தோள்
மலையும் வீசிய படைகளும் துணித்தது மன்னோ.
274
   
5621.
மேனி லாவிய தேர்களைத் துணித்திடும் வெம்கண்
மான யானைகள் யாவையும் துணித்திடும் வயமாத்
தானை யாவையும் துணித்திடும் சமரினைத் தாங்கும்
சேனை காவலர் யாரையும் துணித்திடும் திகிரி.
275
   
5622.
அரம் துணித்த வாள் அவுணர்கள் அடுசமர் உன்னின்
உரம் துணித்திடும் இகழின் நாத் துணித்திடும் உரப்பில்
சிரம் துணித்திடும் படை தொடு முயற்சிகள் செய்யில்
கரம் துணித்திடும் எதிர்ந்திடில் துணித்திடும் கழல்கள்.
276
   
5623.
குடை துணித்திடும் கவரிகள் துணித்திடும் கொடியின்
தொடை துணித்திடும் தேர் நிரை பூண்ட மான்
                                    தொகையின்
இடை துணித்திடும் அவுணர்தம் கரங்களின் இருந்த
படை துணித்திடும் துணித்திடும் பல்லியத் தொகையும்.
277
   
5624.
கொற்ற மிக்கது ஓர் கோல் கொடு வலி உடைக் குலாலன்
சுற்றி விட்டிடு திகிரியின் விரைவொடு சுழன்று
பற்று அலார் பெரும் தானையைப் பஃறுணி படுத்தி
ஒற்றை நேமி அம் பெரும் படை திரிந்தது ஆல் உலவி.
278
   
5625.
போர் அழிந்திடும் அவுணர் தம் உடல் குறை புகையாச்
சோரி வன்னியாம் அதனிடைத் துணிந்து வீழ் பரியும்
தேரும் யானையும் அவிகளா எம்பிரான் திகிரி
வீர மாமகம் ஒன்று இயற்றுவது என விளங்கும்.
279
   
5626.
வெம் சமர்த் தொழில் புரிதரும் அவுணரை வீட்டி
வஞ்சகத் தொடு மாயம் ஆம் பேர் இருள் மாற்றி
எஞ்சல் உற்றிடும் குருதி அம் பெரு நிறம் எய்திச்
செம் சுடர்க் கதிர் ஆயதால் அறுமுகன் திகரி.
280
   
5627.
நச்சு தன் இடத்து அமலையை இருத்திய நம்பன்
இச்சு தன் தனி ஆழி சென்று ஆடு உறும் இயல்பை
அச்சுதன் கரத்து ஏந்திய நேமிகண்டு அதனை
மெச்சு தன்மையில் புகழ்ந்தது விம்மிதம் மேவி.
281
   
5628.
தீர்த்தன் உய்த்திடு நேமி அம் பெரும் படை செருவில்
ஆர்த்த தானை நூறு ஆயிரம் வெள்ளமும் அடைய
மூர்த்தம் ஒன்றினில் துணித்தது மூ இரு முகத்தோன்
வார்த்தை யால் அவை முழுவதும் மாற்றியவா போல்.
282
   
5629.
ஆடல் உற்ற வேல் பண்ணவன் அலர் கதிர்ப் பரிதி
பாடு சுற்றிய அவுணர் கோன் தானையைப் படுத்து
மோடு பெற்ற தொல் புகழொடு மீண்டது முளிபுல்
காடு முற்றவும் தனி படர்ந்து உண்டது ஓர் கனல் போல்.
283
   
5630.
கைம் மலிந்திடும் குடை பல காம்பு இடை துணிந்து
மெய்ம் மலிந்திடு விழு நிணச் சேற்று இடை வீழ்ந்து
பொம்மல் கொண்டு நிற்பு உறுவன பூவலர் தடத்தில்
செம்மல் கொண்டு அமர் தாமரைக் காடு போல் திகழும்.
284
   
5631.
அழுங்கல் கொண்டது ஓர் கரி பரி அவுணர் பேர்                                     அனிகம்
வழங்கல் இன்றி வீழ்ந்து அவிந்திடும் களேவரம் மலிதல்
தழங்கு தெண் திரை உலகு உள சயிலங்கள் அனைத்தும்
ஒழுங்கு அது ஆகி வந்து ஆயிடைத் தொக்கவாறு ஒப்ப.
285
   
5632.
அகல் விசும்பு கார் ஓங்கிய களேவரம் அதன் பால்
ஞெகிழி கொண்ட வாய்ப் பேயின நிணன் உண்டு சிரித்து
மிகவும் ஆர்ப்பு எடுத்து ஈண்டுவ மின்னியே இடித்து
முகில் இரும் கணம் முதுவரைச் சாரல் மொய்த்தது போல்.
286
   
5633.
மையல் யானையும் அவுணர்தம் யாக்கையும் மற்றும்
ஒய் எனக் கொடு குருதி அம் பேரி ஆறு ஒழுகல்
செய்யது ஓர் பணி கரும் கடல் மறைத்தல் சிந்தித்து
வெய்ய நஞ்சு உமிழ்ந்து இருநிலம் படர்தல் போல்
                                    விளங்கும்.
287
   
5634.
மாண் இலைப்படு பேய் சில களேவர வரை போய்ச்
சோண் இதப் புனல் ஆறு பாய்ந்திட அதன் துவலை
சேண் நிலத்து உளார் அரிவையர் புனைகலை தெறிப்ப
நாணல் உற்றனர் பூப்பு என நகைப்பர் என்று உன்னி.
288
   
5635.
சொல் அரும் திறல் அவுணரில் சிலர் தலை துணிந்து
வல்லையில் கிளர்ந்து ஆர்த்தலும் வலியினால் தம்மை
அல்லல் செய்திடு கோள் இரண்டு அல்லதை அவைபோல்
எல்லை இல் அவை வந்த என்று இரியும் ஆல் இரவி.
289
   
5636.
நீடி விண் படர் கொடி சில நிமிர் கவந்தத்தின்
காடு தன் இடைப் புகுந்து தம் தலைமிசைக் காட்டி
ஆடல் யானையின் களேவரம் குத்துவ அடுபோர்
ஊடு காக்கையின் முகரும் வந்தார் கொல் என்று உரைப்ப.
290
   
5637.
நீடல் உற்ற சீர் அவுணர் கோன் ஆணையால் நிலமேல்
வீடல் உற்றிடும் வயவர்க்குத் தம் உயிர் மீட்டும்
கூடல் உற்றிடும் திறன் எனக் கூளிகை கொட்ட
ஆடல் உற்றிடும் உடல் குறை அநந்த கோடிகளால்.
291
   
5638.
இனைய எல்லை இல் எம்பிரான் எரிகதிர்ப் பரிதி
முனையில் வந்து அடல் செய்ததை உணர்ந்திலன் முன்
                                    சூழ்
கனை இரும் கடல் படை எலாம் பட்டவா கண்டு
மனம் மருண்டு ஒரு தமியனாய் நின்றனன் வலியோன்.
292
   
5639.
நீண்ட தன் ஒரு வேல் படை உய்த்து நீக்கினனோ
பாண்டரங்கம் அது இயற்று வான் படையின் வீட்டினனோ
மாண்டு போக என்று ஒரு மொழி தன்னின் மாற்றினனோ
ஈண்டு தானையை முடித்தது எவ்வாறு இவன் என்றான்.
293
   
5640.
தேர் இழந்தனன் சிலையதும் இழந்தனன் திறல்சேர்
பேர் இழந்தனன் தானைகள் இழந்தனன் பெரும் பூண்
ஏர் இழந்தனன் மவுலியும் கவிகையும் இழந்தான்
பார் இழந்திடு மன்னர் போல் நின்றனன் படிமேல்.
294
   
5641.
நின்றிடும் திறல் அவுணர் கோன்நெடும் சினம் நெஞ்சில்
துன்ற மார்பகம் வியர்த்திட முடித்தலை துளக்கி
நன்று நன்று ஒரு பாலகன் வலி என நகையா
வென்றி நான் முகன் படைக்கலம் எடுத்து மேல்
                                    விடுத்தான்.
295
   
5642.
சூர்ப் புயல் அன்னது ஒர் சூரன் விடுக்கும்
மால் படு போதன் வயப் படை சென்று
பால் படும் எல்லை பரம் சுடர் செம்கை
வேல் படை சென்று விழுங்கியது அன்றே.
296
   
5643.
விழுங்குதல் கண்டனன் வெய்யவன் நெஞ்சம்
அழுங்குதல் செய்தனன் அச்சுத மூர்த்தி
வழங்கிய தொல்லை வயப்படை ஏந்தி
முழங்கு அழல் என்ன முனிந்து உடன் விட்டான்.
297
   
5644.
விட்டிடு மாயவன் வெம்படை ஏகி
மட்டறு கண்ணர் தம் மால் உரு ஈன்று
கிட்டிய காலை கிளர்ந்திடும் ஒள்வேள்
அட்டது தன்னையும் ஆர்ந்தது மன்னோ.
298
   
5645.
சயம் புனை செம்மல் தனாது அருள் நீரால்
அயன் படை தன்னுடன் அம்புவி கேள்வன்
வியன் படை தன்னையும் வேல் படை உண்ணக்
கயம் படு சூர் அது கண்டு விம்முற்றான்.
299
   
5646.
கறுத்திடு கின்றது ஒர் கந்தர வள்ளல்
விறல் படை தன்னை விடுத்திடின் யாரே
மறுத்திடுவார் அஃது என்று மனத்தில்
குறித்தனன் மாயை கொடுத்து அருள் கோமான்.
300
   
5647.
முப்புரம் நீறு எழ மூரல் விளைத்தோன்
மெய்ப் படைதன்னை விடுப்பது தேற்றி
அப்படை ஏந்தி அருச்சனை நீரால்
ஒப்பு அறு சீர்த்தியன் ஒய் என உய்த்தான்.
301
   
5648.
அத்தகு வெம் படை ஆடல் இயற்றும்
முத்தலை வேல் படை மூர்த்திகள் கோலம்
எத்திசை தன்னினும் ஈண்டு உற ஆர்த்து
மெய்த்தழல் வீசி விரைந்தது மாதோ.
302
   
5649.
ஆடியல் யானைகள் ஆயின எட்டும்
வீடியவே என வீழ்ந்து அயர் உற்ற
நீடிய நேமியின் நின்றிடு செம் தீ
ஓடிய சேடனும் உட்கி உலைந்தான்.
303
   
5650.
படித்தலம் நெக்கது பல் வகை மேகம்
இடித்தொகை சிந்தி இரிந்தன பானுத்
துடித்தது திங்கள் சுழன்றது மேரு
வெடித்தது இடம் தொறும் விண்டது இவ் அண்டம்.
304
   
5651.
இலக்கர் நடுங்கினர் ஏனைய வீரர்
கலக்கம் அடைந்தனர் காண்தகு பூதர்
மலக்கம் அது எய்தினர் மற்று இது தன்னை
விலக்க அரிதால் என ஓடினர் விண்ணோர்.
305
   
5652.
புடவி முதல் புவனங்கள் அனைத்தும்
நொடி வரை செல்லும் முன் நொய்து என மாய
முடிவது இயற்றிடும் மூர்த்தி தன் நாமப்
படை வர அன்னது பார்த்தனன் வள்ளல்.
306
   
5653.
எந்தை தன் மாப் படை ஈது என ஐயன்
சிந்தை புரிந்து ஒரு செம்கை நீட்டி
வந்திடும் அப்படை பற்றினன் மாதோ
தந்தவன் வாங்கிய தன்மையது என்ன.
307
   
5654.
பெற்றம் உயர்த்த பெரும் தகை நாமக்
கொற்ற நெடும் படையைக் குமரேசன்
பற்றி ஒர் பாணி பரித்தனன் நின்றான்
மற்று அது கண்டனன் மாயவள் மைந்தன்.
308
   
5655.
விட்ட விட்டது ஓர் படைக்கு எலாம் வேறு வேறு ஒன்று
தொட்டிலான் அதனால் அது மாற்றுதல் துணியான்
கிட்டும் எல்லை இல் அவை எலாம் கவர்ந்தனன் கேடு
                                    இல்
அட்ட மூர்த்தி சேய் என்பது காட்டினன் அம்மா.
309
   
5656.
என் ஒடே பொரற்கு இவன் அலால் வேறு இலை                                     இனையோன்
தன் ஒடே பொரற்கு யான் அலாது இலை இது சரதம்
அன்ன பான்மையின் எனக்கு நேராம் இவன் அலது
பின்னை யார் உளர் தமியனுக்கு உவமையாப் பேச.
310
   
5657.
மான வேல் படை வன்மையும் வில் தொழில் வலியும்
ஏனையாய் உள வன்மையும் கண்டனன் இனிமேல்
பானல் வாய் மைந்தன் செய்வது பார்ப்பன் என்று உன்னி
மோனம் ஆகியே நின்றனன் அவுணர்கள் முதல்வன்.
311
   
5658.
பொருளின் நீர்மையால் புனை கலன் மாற்றலில் புவிமேல்
இருளின் நீர்மையாய்த் தோன்றினோன் அற்புதம் எய்தி
மருளின் நீர்மையால் நின்றது நோக்கியே வள்ளல்
அருளின் நீர்மையால் இனையன மாற்றங்கள் அறைவான்.
312
   
5659.
இந்திரன் தனி மதலையை இமையவர் தம்மை
அந்தம் இல் பகல் சிறை இடைப் படுத்தனை அதற்கு ஆம்
முந்து ஒர் ஒற்றனை விடுத்தனம் ஆங்கு அவன் மொழியும்
சிந்தை கொண்டிலை விடுத்திலை அமரர் தம் சிறையும்.
313
   
5660.
அன்ன தன்மையால் ஈண்டு யாம் வந்தனம் அமரில்
தன்னை நேர் இலாது இருந்திடு தாரகன் தன்னை
முன்னம் அட்டிடு முறை என நின்னையும் முனிவால்
இன்ன வைகலே அடுதும் என்று ஏகினம் மீண்டும்.
314
   
5661.
ஈண்டு நின் புடை ஈண்டிய இலக்கம் வெள்ளத்து
நீண்ட தானையும் நின் சிலை வன்மையும் நின்னால்
தூண்டல் உற்றிடு தெய்வதப் படைகளும் தொலைந்து
மாண்டு போயது கண்டனை வறியனாய் நின்றாய்.
315
   
5662.
நெடிய தாரகன் செற்ற வேல் இருந்தது நின்னை
அடுதல் இங்கு ஒரு பொருளும் அன்று அரிது மற்று
                                    அன்று ஆல்
படை இழந்திடு நின் உயிர் உண்டிடில் பழியாய்
முடியும் என்று தாழ்க் கின்றனம் தருமத்தின் முறையால்.
316
   
5663.
பன்னு கின்றது என் பல பல விண் உளோர் பலரும்
துன்னு தொல் சிறை விடுத்தியேல் உன் உயிர்
                                    தொலையேம்
அன்ன தன்மையை மறுத்திடின் ஒல்லை நாம் அடுதும்
என்னை கொல் உனது எண்ணங்கள் உரைத்தி ஆல்
                                    என்றான்.
317
   
5664.
வேறு வேறு நின்று உலகு எலாம் அளிப்பது வெஃகி
ஆறு மாமுகம் பன்னிரு செம் கை கொண்டு அருள்வோன்
ஊறு சேர் அவுணன் தனக்கு இனையன உரைப்ப
மாறு ஒர் வாசகம் சொற்றிலன் உளத்து இவை மதிப்பான்.
318
   
5665.
படை இழந்தனன் இவன் என உன்னியே பாலன்
இடை தெரிந்தனன் போலவே இமையவர் யாப்பை
விடுதி என்னவும் வல்லன் ஆயினன் விளி வில்லேன்
அடலும் ஆற்றலும் தெரிந்திலன் பிள்ளைமை அதனால்.
319
   
5666.
மன்றல் அம் தொடை அறுமுகன் வரம்பு இலா வைகல்
நின்று பேர் அமர் புரிய நான் வறிது நின்றிடினும்
கொன்றிடும் தொழில் வல்லனே தந்தை முன் கொடுக்க
என்றும் மாய்ந்திடா ஒரு வரம் பெற்றிடும் என்னை.
320
   
5667.
தொழு தகும் திரு மவுலியும் கவிகையும் துணிய
இழிவது ஆகியே தமியன் நின்று அமர் இயற்றிடினும்
அழிவது இல்லை ஆல் ஆவதும் இலை புகழ் அதனால்
பழியது ஒன்று உறும் அங்கு அது பாது காத்திடுவேன்.
321
   
5668.
வேற்று நீர்த் தடம் கொள்வதை அன்றி வெள்ளங்கள்
ஊற்று நீர்ப் பெரும் புணரியைக் கொள்வதற்கு உறுமோ
ஏற்ற தானையைப் படைகளைத் தொலைப்பதே அன்றி
மாற்றுமோ எனது அழி உறா வரத்தையும் மைந்தன்.
322
   
5669.
என்னை அங்கு அவன் முடித்திடல் அரியதால் யானும்
அன்னவன் தனை இத்துணை வெல்வதும் அனைத்தே
தொல் நகர்ப் பெரும் வளத்தொடும் படையொடும்
                                    துன்னிப்
பின்னர் வந்து அமர் இயற்றியே பெரும் திறல் பெறுவேன்.
323
   
5670.
வசையது அன்று இது செருச் செய்வோர் பற்பகல்                                     மலைந்து
விசையம் எய்தினும் மேன்மை ஆம் வியப்பும் ஆம்
                                    மேலும்
திசை விளங்குறு புகழும் ஆம் யானும் இச் செய்கை
இசைவதே கடன் அறிஞர் தம் சூழ்ச்சியும் இஃதே.
324
   
5671.
என்று பல பல சூழ்ச்சிகள் மனத்து இடை எண்ணி
ஒன்று ஒர் மாயையின் மந்திரம் தன்னை உள் உறுத்தி
நின்ற மன்னவன் ஒல்லையின் மறைந்து அவண் நீங்கிப்
பொன் திகழ்ந்திடும் மகேந்திரக் கோயில் உள் போனான்.
325
   
5672.
மறைந்து போய சூர் முயற்சியை மன் உயிர் தோறும்
உறைந்த நாயகன் கண்டனன் ஒரு தனிச் செவ்வேல்
எறிந்து மற்று அவன் உயிர் கொள நினைந்திலன் இன்னும்
மறிந்து தீயவன் உய்யுமோ எனும் திரு அருளால்.
326
   
5673.
ஆய வேலை தனில் ஆறு முகன் பால்
மாயனும் மயனும் வானவர் கோவும்
ஏய தேவர்களும் யாவரும் எய்தித்
தூய வந்தனையுடன் சொலல் உற்றார்.
327
   
5674.
என்று காசிபன் இடந்தனில் வந்தான்
அன்று தான் முதலா அசுரேசன்
வென்றியே கொடு வியப்பொடு இருந்தான்
உன் தன் ஓடு பொருது ஓடினன் இன்றே.
328
   
5675.
நீடு சூரனுடன் நீ அமர் செய்தல்
ஆடலே அலதை ஆங்கு அவன் ஆவி
கோடல் சிந்தை இடை கொண்டனை என்னின்
ஓடுமோ பொருதும் உய்திறம் உண்டோ.
329
   
5676.
துங்கம் உற்று உடைய சூர்தனை வேலான்
மங்கு வித்திடுதி மற்று அதன் முன்னம்
அங்கு அவற்கு எதிர் அரும் சமர் ஆற்றல்
எம் கண் வைத்து உடைய இன் அருள் அன்றோ.
330
   
5677.
என்று இயம்புதலும் எந்தை வினாவி
நன்று நன்று என நகைத்து இனி நம் முன்
சென்று நின்று சமர் செய்திடின் வல்லே
வென்று சூர் முதலை வீட்டுதும் என்றான்.
331
   
5678.
ஆடல் சேரும் அவுணன் சமர் ஆற்றாது
ஓடினாரும் உறு கண் உளர் ஆகி
வீடினார்கள் என வீழ்ந்து அயர் வாரும்
கூடினார் குமரவேள் புடை வந்தார்.
332
   
5679.
சங்கம் ஆகி உறு சாரதர் ஆனோர்
எங்கள் நாயகனை எய்தி இகல் சூர்
மங்குல் வான் இடை மறைந்தது தேரா
அங்கண் ஞாலம் அலை உற்றிட ஆர்த்தார்.
333
   
5680.
திகழ்ந்த பூதர்கள் செருத்தனில் எம்மை
இகழ்ந்த சூர் நகரின் இம் மதில் வீட்டி
அகழ்ந்து கோபுரம் அகன் கடல் இட்டு
மகிழ்ந்து மீண்டிடுதும் வம்மினம் என்றார்.
334
   
5681.
வம்மின் வம்மின் என வல்லை விளித்துத்
தம் இனங்களொடு சாரதர் மேலோர்
அம் மகேந்திரம் அழுங்கு உற ஆர்த்திட்டு
இம் எனக் கடிது எயில் புறம் உற்றார்.
335
   
5682.
உற்ற காலை தனில் ஒண் மதில் காக்கும்
கொற்ற வீரன் அதி கோரன் மருங்கில்
சுற்றுத் தானையொடு சோர்வு இலன் நின்றான்
செற்று பூதர் படை சென்றன கண்டான்.
336
   
5683.
கண்டுளான் நனி கனன்று இதழ் கவ்வித்
திண்டி பேரி திமிலைப் பறை ஆர்ப்பத்
தண்டல் இன்றி அமர் தானை களோடு
மண்டு போர் புரிய வந்து எதிர் புக்கான்.
337
   
5684.
எதிர் புகுந்திடலும் ஏற்று எதிர் சென்றார்
அதிர் புகும் கழலின் ஆடுறு பூதர்
பொதிர் புகுந்த இருள் போந்துழி எண்ணில்
கதிர் புகுந்த அனைய காட்சி படைத்தார்.
338
   
5685.
தோமரம் பரசு சூலமொடு எஃகம்
ஏமரும் கதைகள் ஏவினர் கோரன்
மா மருங்கு அவுணர் மற்று இவர் குன்றம்
கா மரம் படை கலந்து விடுத்தார்.
339
   
5686.
எடுத்து வேழ நிரை எற்றினர் தேரை
ஒடித்து எறிந்தனர் உகண்டுகள் பாய் மாப்
பிடித்து ஒர் கைகொடு பிசைந்தனர் வீரர்
துடித்திடும் படி துகைத்தனர் பூதர்.
340
   
5687.
எறிவர் பல் படையும் எய்குவர் வெம் கோல்
குறிய ஈட்டி கொடு குத்துவர் வாளால்
செறுநர் தங்கள் உடல் சிந்துவர் இவ்வாறு
அறியும் வெம் சமரை ஆற்றினர் தீயோர்.
341
   
5688.
சோரி பொங்கின சொரிந்தன மூளை
சார் உறும் குடர் சரிந்தன சேனம்
காரி பம்பின கணங்களும் ஏனை
வீரர் ஆம் அவுணரும் பலர் வீந்தார்.
342
   
5689.
ஈடு உறும் சமர் இழைத்துழி இவ்வாறு
ஆடல் வெம் கணவர் ஆற்ற முனிந்தே
சாடி வன்மையொடு தாக்கலும் நில்லாது
ஓடினார் அவுணராய் உளர் முற்றும்.
343
   
5690.
கோரம் மிக்க அதி கோரன் எனும் பேர்
வீரன் மற்று அதனை நோக்கி வெகுண்டே
ஓர் எழுத்தனை உரத்தொடு பற்றிச்
சாரதப் படைஞர் தம்மொடு நேர்ந்தான்.
344
   
5691.
தலை தனில் கர தலத்தினின் மொய்ம்பின்
மலையினில் பெரிய மார்பின் முகத்தின்
ஒலி கழல் கணம் உலைந்திட மோதிக்
கொலை விளைத்து ஒருவனே குலவு உற்றான்.
345
   
5692.
ஈடு இலாத ஒரு எழுப்படை பற்றா
ஓடி ஓடி உரும் உற்று என மோதி
வீடு உறாது அமர் விளைத்திடும் பூதர்
கோடி கோடி ஒர் இமைப்பு இடை கொன்றான்.
346
   
5693.
இந்த வாறு அவன் எழுக்கொடு தாக்க
முந்து தூசி முரி உற்றது கண்டான்
கந்தன் ஏவல் செய் கணப் படை மன்னன்
சிந்து மேகன் முனிவோடு எதிர் சென்றான்.
347
   
5694.
சென்ற பூதர் இறை செம் கையில் வைகும்
குன்றம் ஒன்றை அதி கோரன் எனும் பேர்
வென்றியான் மிசை விடுத்தலும் நோக்கித்
தன் தடக்கை எழுவால் தகர் வித்தான்.
348
   
5695.
தகரும் எல்லை தரியார் கடல் வற்ற
முகிலின் உண்டிடு முரட்பெயர் அண்ணல்
வெகுளியோடு அவுணர் வேந்தனை எய்தி
அகல மீதினில் அடித்தனன் மாதோ.
349
   
5696.
அடித்தலோடும் அவுணர்க்கு இறை ஆனோன்
இடுக்கண் எய்தி இவன் ஆவியை இன்னே
முடிப்பன் என்று முசலம் கொடு மொய்ம்பில்
புடைத்தனன் உருமு வீழ்வது போல.
350
   
5697.
பூதன் மொய்ம்பு இடை புடைத்த எழுத்தான்
ஏதம் ஆம் முரிய ஏற்று எதிர்த்து எவ்வைக்
காது கை கொடு கபோலம் அதன் கண்
மோதவே அவுணன் ஆவி முடிந்தான்.
351
   
5698.
வாய்தல் போற்றிய வயப் படை வீரன்
சாதல் உற்றுழி தலைத்தலை ஆர்த்துப்
பூத சேனையர்கள் பொம் என ஏகி
மூது எயில் தலை முதல் கடை சென்றார்.
352
   
5699.
ஆண்டி யோசனை ஒராயிரம் வான் போய்
ஈண்டு செம் மணிகளால் இயல் உற்று
மாண்ட தீய வடவா முகமே போல்
நீண்டது ஓர் சிகரி நின்றது கண்டார்.
353
   
5700.
கண்டது ஓர் சிகரி கை கொடு தொட்டுத்
தெண் திரைக் கடலின் மேல் செல விட்டார்
மண்டு மேரு வரையின் குவடு ஏந்திச்
சண்ட வாயு விடு தன்மையது என்ன.
354
   
5701.
அன்ன வேலையில் அலைந்தது ஞாலம்
பன்ன கேசனும் மிகப் படர் உற்றான்
மன்னு சூர் உறை மகேந்திர மூதூர்
துன்னு தானவர் துளங்கி அயர்ந்தார்.
355
   
5702.
ஈண்டு பூதர் எறியும் சிகரம் தான்
ஆண்டு அவ் வேலை இடை ஆழ்ந்து தொல் நாள்
நீண்ட மேனி இறை நின்று அளியா முன்
மாண்டு சாய்ந்து விழு மந்தரம் அன்ன.
356
   
5703.
பொலம் கெழு சிகரி அப் புணரி சேர்தலின்
கலங்கின விரிதிரைக் கைம் மறித்தது ஆல்
மலங்கினம் ஒடு சுறா அருந்தி மிங்கில
கிலங்களும் இரிந்த தம் கிளைகளோடுமே.
357
   
5704.
மாதலம் புகுந்திடும் சிகரி வாரியுள்
பூதர் அங்கு உய்த்திட விரைவில் போவது
வேத முன் கொணர் தரு மீனம் வேலையில்
பாதலம் புகுந்திடு பான்மை போலுமே.
358
   
5705.
கழல் கறங்கியது எனும் கண்ணர் உந்திய
அழல் கொழுந்து ஆகிய சிகரத்தாய் மணி
நிழல் பொலிந்திடுவன நீல வேலையில்
தழல் பரந்து எழுவது ஓர் தன்மை போலுமே.
359
   
5706.
நாகர மணி வெயில் நணுகும் வேலையில்
சீகரம் உம்பர் போய்த் தெறித்து மீள்வது
சாகரம் உற்றது தழல் என்று உன்னியே
மாகர வாரிநீர் வழங்கல் போலும் ஆல்.
360
   
5707.
காமரு சிகரியில் கவைஇய மாமணி
ஏமுற நிழற்றிய எழிலை நோக்கியே
பூ மது நுகர் தரு பொறி வண்டு ஆனவை
தாமரை வனம் என அயிர்த்துச் சாரும் ஆல்.
361
   
5708.
பங்கய மணி நிழல் பரப்பை நோக்கியே
இங்கு இவை தசை என எண்ணிப் புட்குலம்
நுங்கிய செல்வன நொய்தின் எய்தியே
அங்கி கொல் எனச் சில அகன்று போயின.
362
   
5709.
தெழித்திடும் வேலையில் செய்ய சோதி ஆல்
தழல் பொலி கோபுரம் தரிப்பு இன்று ஏகலால்
கிழித்தன பணி பதி கிளர்ந்து மற்று அவர்
விழித்தனர் உரும் என வெருவி ஓடினார்.
363
   
5710.
பூதர்கள் யாம் விடு பொலம் கொள் கோபுரம்
ஓத நெஞ்சு அடைதலும் உதிரம் கான்றதால்
சேதனமோ இது செப்பும் என்றனர்
மீது உறு கதிர் மணி வெயில் என்று உன்னலார்.
364
   
5711.
பொன் பகல் சிகரியுள் பொருந்தி ஆழ்பவர்
அற்பகல் நுகருமீன் அவரை நுங்கும் ஆல்
முன் பகல் ஓர் பாழி முடிக்கின் மற்று அது
பின் பகல் தமக்கு உறும் பெற்றி என்னவே.
365
   
5712.
ஆனது ஒர் கோபுரம் அளப்பு இலாது அமர்
தானவர் கிளையொடும் வீழ்ந்த தன்மையால்
மீன் உறு திரைக்கடல் வெள்ள மேல் செலா
மா நகர் எயில்தனை வளைந்து புக்கதே.
366
   
5713.
காதிடும் இயற்கையில் கால் கொண்டு ஏகலில்
பூதலம் வெருக்கொளப் பொங்கும் ஆர்ப்பினின்
மீது அமர் காரினில் விமலன் விட்டிடும்
பூதரை நிகர்த்தது அப் புரிசை சூழ்புனல்.
367
   
5714.
மைக் கடல் புவியினும் மகேந்திரப் புரம்
மிக்கது போலும் என்று ஐய மேல் கொளா
இக் கணம் நாடுதும் என்று சென்ற போல்
புக்கது நகர் இடைப் புணரி நீத்தமே.
368
   
5715.
மீன் எனும் மைந்தரை மிசைந்த தானவர்க்கு
ஆனதொர் இறுவரை அணுகிற்று இவ்விடை
யானவர்ப் பொருவன் என்றே எண்ணிச் சேறல் போல்
போனது அப்பதியின் உள் புணரி நீத்தமே.
369
   
5716.
இவ்வகை நிகழ்ந்திட எறிந்த கோபுரம்
பௌவம் உற்றிடுதலும் பைம் பொன் மாமதில்
வெவ்வலி அரசர்கள் விளிய ஈறு இலாக்
கௌவை கொள் திரு நகர்க் காட்சித்து ஆயதே.
370
   
5717.
எல்லை மற்று அனையதில் ஈண்டு சாரதர்
மல்லல் அம் புரிசையின் வடாது பாங்கரை
ஒல்லை இல் தம் பதத்து துதைப்பச் சாய்ந்தது
செல் உற வீழ்ந்திடும் சிகரமே என.
371
   
5718.
மா மதில் சாய்தலும் வலிய பூதர்கள்
காமரு நகரின் உள் கலந்து நண்ணினார்
ஏமரு கடம் கலுழ் இபங்கள் ஈண்டி ஓர்
தாமரை மலர்த்தடம் தன்னில் புக்க போல்.
372
   
5719.
கான் உறு பங்கயக் கடவுட்கு இப்பகல்
போனது ஓர் காலையில் புணரி யாவையும்
மா நிலம் கொள்வது மானப் பூத வெம்
சேனைகள் மகேந்திர புரத்தில் சென்றவே.
373
   
5720.
புக்கனர் வீரர்கள் புயலின் மேனியும்
செக்கரம் குஞ்சி ஆம் தீயும் கைகளாய்
மிக்கு எழு புணரியும் வேறு வேறுறா
மைக் கடல் உலப்பில வருவ போலவே.
374
   
5721.
துதித்திட அரியவன் நகரில் துண் என
எதிர்த்திடும் தானவர் இனத்தை ஒல்லையில்
சிதைத்தனர் மாளிகை சிகரம் யாவையும்
உதைத்தனர் வீட்டினர் உயர்ந்த பூதரே.
375
   
5722.
மதரொடு குறுகும் அவ் வய வெம் பூதர்கள்
அதிர் கழல் அடிகளால் அளப்பில் மாளிகை
பிதிர் பட உந்தலும் பிறங்கு பூழிகள்
கதிர் உறு கதியினும் கடந்து போனவே.
376
   
5723.
அங்கு அவ் எல்லையில் சாரத வேந்தர்கள் அயில் வேல்
புங்கவன் தனை நீங்கியாம் அவுணர் கோன் புரத்துள்
இங்கு இனிப் படர்கின்றது தக்கது அன்று என்னாச்
செம் களம் தனின் மீண்டனர் சேனையும் தாமும்.
377
   
5724.
ஆன காலையில் பூதர் தம் செய்கைகள் அனைத்தும்
ஞான நாயகன் காண்குறா நல் அருள் புரிந்து
மான வேல் படை வீரரும் அமரரும் வழுத்தச்
சேனை யாவையும் கொண்டு தன் பாசறை சேர்ந்தான்.
378
   
5725.
பாசறைப் புகு குமரவேள் பார் இடப் பகுதி
ஆசு அறப் புனை ஆவணப் சூழல் போய் அமர
வாசவத் தனிக் கடவுள் ஆதியர் புடை வழுத்த
ஈசனில் சிறந்து அரி அணை தன்னில் வீற்று இருந்தான்.
379
   
5726.
ஈண்டு தானவர் இலக்கம் வெள்ளத்தரும் இன்னே
மாண்டு போயினர் அனையரை மலிகதிர்க் கரத்தால்
தீண்டி வான்மையில் குறைந்தனன் என்று செஞ்சுடரோன்
ஆண்டு மூழ்குவான் புக்கு என அளக்கரை அடைந்தான்.
380
   
5727.
புரந்தரன் ஆதியர் புன்மை நீக்கியே
பெருந்திரு உதவுவான் பிரான் தன் காதலன்
இருந்தனன் பாசறை ஈது நின்றிடத்
திருந்து அலர் மாட்டு உறும் செய்கை செப்புவாம்.
381
   
5728.
ஒருவரும் உள்ளத்தினும் உணர்வு உறாவகை
அருவம் அது ஆகியே அகன்று சூர் முதல்
பொரு வரு மகேந்திரப் புரத்துக் கோயில் உள்
திரு மகள் மண மனைச் சேறல் மேயினான்.
382
   
5729.
பஞ்சடி நூபுரப் பதுமை கோயில் போய்
அஞ்சியல் அடுத்த மெல் அமளி மேல் உறாத்
துஞ்சலன் யாரொடும் சொல்லும் ஆடலன்
வெம் சமர் வினையமே உன்னி மேவினான்.
383
   
5730.
ஆனது ஒர் எல்லையில் அரசன் போர் செயப்
போனதும் பொருததும் புறம் தந்தோம் என
மா நகர் அதன் இடை வறியன் வந்ததும்
பானுவின் பகைஞனுக்கு ஒற்றர் பன்னினார்.
384
   
5731.
சொல் நடை மந்திரத் தொடர்பும் மாயமும்
தன் உறு படைகளும் சாதனம் செய்வோன்
அன்னது கேட்டலும் அலக்கண் எய்தியே
மன் உறு கடி நகர் வல்லை ஏகினான்.
385
   
5732.
மணி நிரை இகலியே மாறு வில் உமிழ்
இணை அறு சினகரம் எய்திச் சேக்கை மேல்
தணிவு அறு சூழ்ச்சியோடு அமர்ந்த தாதை தன்
துணை அடி வணங்கியே தொழுது கூறுவான்.
386
   
5733.
மாற்றலர் யாவரும் மறிய வல்லை போர்
ஆற்றுதி ஆல் என ஐய முன் பகல்
சாற்றினை விடுத்தனை தமியன் ஏகியே
ஏற்றலர் தம்முடன் இகல் செய்தேன் அரோ.
387
   
5734.
உற்றிலன் அறுமுகன் ஒழிந்த வீரர்கள்
சுற்றிய படையொடு துவன்றிப் போர் செய்தார்
பற்றிய மோகமாப் படையைத் தூண்டியான்
மற்று அவர் உணர்ச்சியும் வலியும் மாற்றினேன்.
388
   
5735.
சென்று அமர் இயற்றிய செறுநர் யாரையும்
வென்றனன் அத்துணை விமலன் மாமகன்
ஒன்று ஒரு மாப்படை உய்ப்ப என் படை
வன் திறல் நீங்கியே வருந்தி மீண்டதே.
389
   
5736.
அன்னது ஓர் பான்மையால் அனையர் யாவரும்
பின் உணர்வு எய்தியே பெயர்ந்து போயினார்
என் இது வெற்றி என்று யானும் மீண்டனன்
உன்னொடும் உரைத்திலன் உள்ளம் வெள்கினேன்.
390
   
5737.
நெற்றி அம் கண் உடை நிமலன் ஏனையோர்
முற்றரு படைகளால் முடிவின் மாயை ஆல்
பற்றலர் யாரையும் படுத்து நாளையே
வெற்றி கொள்குவன் எனா நென்னல் மீண்டனன்.
391
   
5738.
ஞாயிறு வந்த பின் நண்ணலார் மிசைப்
போய் அமர் இயற்றிடப் புறத்தில் சென்றனன்
ஆய தன் முன்னரே அனிகம் தன்னுடன்
ஏய் என ஏகினை எந்தை நீ என்றார்.
392
   
5739.
வரம் தனில் அழிவு உறா வள்ளல் ஈண்டு உறு
திருந்தலர் உடன் அமர் செய்தற்காக ஓர்
அரும் துணை வேண்டலை அதனை உன்னி மீண்டு
இருந்தனன் இப்பகல் ஈது என் செய்கையே.
393
   
5740.
ஓர்ந்திலை இத்திறம் உணர்வு உளாரொடும்
தேர்ந்திலை என்னையும் விளித்துச் செப்பிலை
சார்ந்திடு நால்பெரும் தானை தன்னொடும்
பேர்ந்தனை அமர்க்கு இது பெருமைப் பாலதோ.
394
   
5741.
அமரருக்கு ஆக்கமும் அவுணர்க்கு ஏக்கமும்
இமையவர் முதல்வனுக்கு இன்பும் நல்கினை
குமரனைக் கணங்களைக் குறித்து மன்ன நீ
சமரினுக்கு ஏகுதல் தலைமை ஆகுமோ?.
395
   
5742.
திகழ்ச்சி கொள் மேலவர் சிறியர் தம்மொடு
நிகழ்ச்சி கொள் போரிடை நேர்வரே எனில்
புகழ்ச்சி அது இல்லை ஆல் பொருது வெல்லினும்
இகழ்ச்சியின் பாலது ஆம் எவர் எவர்க்குமே.
396
   
5743.
சென்று அது கிடந்திடச் சிறியன் என்னினும்
ஒன்று இவண் மொழிகுவன் உள்ளம் கோடி ஆல்
இன்று இரவு அகன்ற பின் ஏகி யாரையும்
வென்றி கொண்டு ஏகுவன் விடுத்தி ஆல் எனை.
397
   
5744.
கொற்றவை சிறுவனைக் கொற்றம் கொள்வதும்
சுற்று உறு படையை யான் தொலைக்கும் தன்மையும்
ஒற்றுவர் கண்டு முன் உரைக்க எந்தை நீ
தெற்று என மகிழ்ச்சியில் சிறந்து வைகுதி.
398
   
5745.
கூரிய வேல் படை கொண்டு உடையோனை
வீரர்கள் தம்மொடு வெற்றி கொளேனேல்
வாரலன் ஈண்டு மகிழ்ந்து இறை நல்கும்
பேர் அரசாட்சி பிடிக்கிலன் என்றான்.
399
   
5746.
என்பது கேட்டலும் எவ் உலகிற்கும்
துன்பு புரிந்திடும் சூர பன்மா வாம்
முன்பன் மகிழ்ந்து முகத்து எதிர் நிற்கும்
தன் புதல்வற்கு இது சாற்றுதல் உற்றான்.
400
   
5747.
மூவர்கள் தாங்களும் முச்சகம் உள்ள
தேவரும் ஐ இரு திக்கு உடையோரும்
ஏவரும் ஏற்கினும் எம்பியை அட்ட
மேலவன் ஆற்றலை வெல்லல் அரிது அம்மா.
401
   
5748.
பன்னிரு செம் கை படைத்து உள சேயோன்
தன்னொடு எதிர்ந்து சமர்த்தொழில் செய்வார்
என் அலது இல்லை இவன் சிறியோன் என்று
உன்னலை வன்மையின் ஒப்பு இலனே காண்.
402
   
5749.
குன்றம் எறிந்திடும் கூரிய வேல் கை
வன் திறல் ஆளனை வன்மையில் யானே
வென்றிடு கின்றனன் மேல் அது நிற்க
ஒன்று உளது ஐய உரைப்பது கேண்மோ.
403
   
5750.
ஒற்று என வந்து நம் ஊர் அலை வித்துப்
பற்று அலர் நீடு படைக்கு இறை ஆகும்
கொற்றவனைத் தனை கூவி மலைந்து
செற்றனை ஏகுதி சேனையொடு என்றான்.
404
   
5751.
தந்தை புகன்றிடும் தன்மையை ஓரா
எந்தை பிராற்கு உளம் இத்திறம் ஆமேல்
முந்து இறை தன்னின் முடிப்பன் இது என்ன
மைந்தனை நோக்கி மகிழ்ந்தனன் மன்னன்.
405
   
5752.
அடுசமர் செய்வகை ஆங்கு அவன் ஏக
விடை அது நல்கி வியத்தகு மன்னன்
இடை உறு சூழ்ச்சிகள் யாவும் இகந்து
மிடை தரு தொல் வளம் மேவி இருந்தான்.
406
   
5753.
தாதை தன் ஏவல் தலைக் கொடு சென்றே
ஆதவன் மாற்றலன் ஆகிய மைந்தன்
ஏதம் இல் தன் குலம் ஏகலும் அம் கண்
தூதுவர் பலர் பலர் துண் என வந்தார்.
407
   
5754.
துங்கம் அது உற்று உள சூர் தரு மைந்தன்
செம் கமலம் புரை சீறடி தன்னைத்
தம் கண் முடிக் கொடு தாழ்ந்தனர் நின்றே
இங்கு இவை கேட்க எனா மொழி குற்றார்.
408
   
5755.
மன்னவன் இன்று போய் மலைந்து மீண்ட பின்
ஒன்னலன் மாட்டு உறும் உலப்பு இல் பூதர்கள்
இந் நகர் வடாது சார் எய்திக் காவலோன்
தன் உயிர் கொண்டனர் தானை சிந்தினார்.
409
   
5756.
தகுவர் தம் மாப் படை தலை அழிந்த பின்
அகல் இரு விசும்பு அளந்து ஆண்டு நின்றிடும்
சிகரியைக் கீண்டு தம் செம் கையால் எடா
வெகுளியொடு அளக்கரின் மீது வீசினார்.
410
   
5757.
நீடிய சிகரி போய் நேமி புக்க பின்
மாடு உறு வட புல மதிலை முற்றவும்
சாடினர் மீண்டனர் தலைவ இந்நகர்
கோடு இலதாம் கடல் குட்டம் போன்றதே.
411
   
5758.
என்றலும் வினவியே ஏந்தல் தன்புடை
சென்றிடும் வயவரில் சிலரை நோக்கியே
வன் திறல் உடைய நம் மரபில் தச்சனை
ஒன்று ஒரு கணத்தின் முன் உய்த்திர் என்னவே.
412
   
5759.
ஆயவர் விரைந்து போய் அவுணத் தச்சனை
மேயினர் இறைமகன் விளத்து உளான் எனக்
கூயினர் வருக எனக் கொடு வந்து உய்த்தனர்
மா இரும் கதிரை முன் வெகுண்ட மைந்தன் முன்.
413
   
5760.
தன் அடி வணங்கியே தச்சன் நிற்றலும்
மன்னவர் மன்னவன் மதலை வல்லை நீ
இந் நகர் வட மதில் சிகரி ஏனவும்
தொல் நெறி அமைக்க எனச் சொற்றுத் தூண்டினான்.
414
   
5761.
எல்லை மற்று அன்னதின் எல்லை தன் பகை
கல் உயர் மொய்ம்பன் மாகாயன் என்பது ஓர்
வல் அவுணன் தனை வருதி என்று கூய்
ஒல்லையின் இனையது ஒன்று உரைத்தல் மேயினான்.
415
   
5762.
சேய் உயர் வட மதில் சிகரி தன் இடைப்
போயினை அந் நெறி புரத்தியால் எனா
ஆயிரப் பத்து எனும் அனிக வெள்ளமோடு
ஏயினன் தான் உறும் இருக்கை எய்தினான்.
416
   
5763.
அத் துணை ஏகியே அவுணர் கம்மியன்
உத்தர நெடு மதில் ஓங்கு கோபுரம்
சித்திர உறுப்பொடு சித்தத்து உன்னியே
வித்தக வன்மையால் விதித்துப் போகவே.
417
   
5764.
அடு கரி புரவி தேர் அவுணர் தானை ஆம்
கடலுடன் சென்று மா காயன் என்பவன்
வட மதில் சிகரியின் வாய்தல் போற்றியே
சுடர்கெழு தீபிகை சுற்ற வைகினான்.
418
   
5765.
ஆயது நிகழ் உழி ஆழி வெற்பின் வாய்
ஞாயிறு நணுக நள் இருளின் யாம் இனி
போயது மெய்ப்புலன் புந்தி சேர் உழி
மாயை அது அகன்றிடும் வண்ணம் என்னவே.
419
   
5766.
கங்குல் என்று உரை பெறு கடவுள் கற்பு உடை
நங்கையை மேவுவான் நயப்பு மேல் கொளா
அங்கு அவளைத் தொடர்ந்து அணுகுவான் எனச்
செம் கதிர் அண்ணல் கீழ்த் திசையில் எய்தினான்.
420