முகப்பு |
தருமகோபன் வதைப் படலம்
|
|
|
6524.
|
முடிவுறு புதல்வரை முன்னி முன்னியே
இடரினை உழந்திடும் இறைவன் தன் முனம் படியறு நல்லறப் பகைஞன் போந்திடா அடி முறை பணிந்து நின்று அறைதல் மேயினான். |
1 |
|
|
|
|
|
|
|
6525.
| மன்னவர் மன்ன நீ மனத்தில் இவ்வகை இன்னல் செய்து ஆற்றவும் இரங்குவாய் எனில் துன்னலர் மகிழுவர் சுரர்கள் யாவரும் நன்னகை செய்குவர் நமரும் வெள்குவார். |
2 |
|
|
|
|
|
|
|
6526.
| முந்துறு மாற்றலர் முனை வெம் போரிடைத் தந்தையர் விளியினும் தமர் கண் மாயினும் மைந்தர்கள் விளியினும் மான வீரர்கள் சிந்தை கொள் வன்மையில் சிறிதும் தீர்வரோ. |
3 |
|
|
|
|
|
|
|
6527.
| ஏற்றிகல் புரிந்திடும் எமரை வௌவிய கூற்று உளன் தொன்மை போல் படைத்துக் கூட்டுவான் நாற்றிசை முகன் உளன் நாமுளோம் நமது ஆற்றலும் இருந்துள அயர்வும் வேண்டுமோ. |
4 |
|
|
|
|
|
|
|
6528.
| அந்தம் இல் வெறுக்கையும் அழிவு இல் ஆயுளும் நந்தலில் வன்மையும் நடாத்தும் ஆணையும் இந்திர ஞாலமும் இருக்க எந்தை நீ புந்தியில் அமரர் போல் புலம்பல் ஆகுமோ. |
5 |
|
|
|
|
|
|
|
6529.
| விண்ணவர் சிறையினை விடாது வைத்திடக் கண்ணிய விரதமும் கழிந்த மானமும் நண்ணலர் தங்களை நலியும் தன்மையும் எண்ணலை இடையறாது இடுக்கண் போற்றுமோ. |
6 |
|
|
|
|
|
|
|
6530.
| மாற்றலர் ஆகிய அமரர் மானவர் கோற்றொடி மடந்தையர் குழவிப் பாலகர் ஆற்றிடு துயர் உனக்கு ஆவது அன்று எனாத் தேற்றினன் அமைச்சருள் தீமை மிக்கு உளான். |
7 |
|
|
|
|
|
|
|
6531.
|
ஆற்றிடும் தருமம் நீத்த அமைச்சன் வந்து இனைய வாற்றால்
தேற்றிடு கின்ற காலைச் சிறிது தன் அவலம் நீத்துக்
கூற்று என யானே சென்று கூடலர் தொகையை விண்மேல்
ஏற்றுவன் என்று சீறி அவுணர் கோன் எழுந்து சென்றான். |
8 |
|
|
|
|
|
|
|
6532.
|
சென்றிடு மன்னர் மன்னன் சேவடி முறையில் தாழா
இன்று இவண் இருத்தி யானும் அனிகமும் இன்னே ஏகி
வன் திறல் பகைஞர் தம்மை வளைத்து வல் விரைந்து சாடி
வென்றி உற்றிடுவன் என்ன வேண்டினன் அமைச்சர் மேலோன்.
|
9 |
|
|
|
|
|
|
|
6533.
|
அறம் தவிர் அமைச்சன் வேண்ட அவுணர்கள் முதல்வன் மீண்டும்
சிறந்திடும் மடங்கல் ஆற்றும் செம் பொன் செய் பீடம் மேவி
உறைந்தனன் அனைய காலை ஒல்லையில் விடை கொண்டு ஏகிப்
புறம் தனில் வந்து வல்லே போர்ப் பெரும் கோலம் கொண்டான்.
|
10 |
|
|
|
|
|
|
|
6534.
|
போதகத்து அரசு தம்முள் புண்டரீகப் பேர் பெற்ற
மாதிரக் களிற்றை அன்னோன் வல்லையில் கொணர்திர் என்னாத்
தூதுவர்க்கு உரைத்தலோடும் துண் என அனையர் ஓடி
மேதகு நிகளம் நீக்கி விடுத்து முன் உய்த்து நின்றார். |
11 |
|
|
|
|
|
|
|
6535.
|
புந்தியில் குறிப்பில் செல்லும் புண்டரீகப் பேர் பெற்ற
தந்தி அம் தலைவன் மீது தருமத்தை வெகுளும் வெய்யோன்
அந்தம் இல் படைகள் ஏந்தி அமைச்சர்கள் பலரும் சூழ
இந்திரன் இவன் கொல் என்ன ஏறினன் எழிலி போல்வான்.
|
12 |
|
|
|
|
|
|
|
6536.
| அறைந்தன படகம் பேரி ஆர்த்தன விரலை தீபம் செறிந்தன கரி தேர் வாசி தெழித்தன அவுணர் தானை நிறைந்தன பதாகை ஈட்டம் நெருங்கிய கவிகை வானம் மறைந்தன எழுந்த பூழி மாதிரம் இருண்ட அன்றே. |
13 |
|
|
|
|
|
|
|
6537.
|
எண் இலா வெள்ள மாவும் இபங்களும் இவுளித் தேரும்
வெண் நிலா எயிற்றுச் செங்கண் வீரரும் புடையில் சுற்றப்
புண்ணுலா முகத்துப் பேழ்வாய்ப் புண்டரீகத்தை யூர்ந்தே
அண்ணல் மா நகரம் நீங்கிப் போயினன் அறத்தை நீத்தோன்.
|
14 |
|
|
|
|
|
|
|
6538.
|
அண்டர் மற்று இதனை நோக்கி அம்மவோ அறத்தை நீத்த
கண்டகன் சிலை ஒன்று ஏந்தி மாதிரக் களிறு தன்னுள்
புண்டரீகத்தை ஊர்ந்து பொரும் எனில் இவனை ஆற்றல்
கொண்டிடல் அரிதாம் என்ன இரங்கினர் குலைந்த மெய்யார்.
|
15 |
|
|
|
|
|
|
|
6539.
|
ஆவணம் அனந்தம் நீங்கி அனிமுகம் தானும் ஏகி
மூ இரு முகத்து வள்ளல் முழுது அருள் பெற்ற சேனை
காவலன் வெகுண்டு நின்ற களத்து இடை அணுக லோடும்
மேவலர் எதிர்ந்தார் என்னா வியன் கழல் பூதர் ஆர்த்தார்.
|
16 |
|
|
|
|
|
|
|
6540.
|
பொற்றைகள் ஏந்தி ஆர்க்கும் பூதரை இலக்கர் தம்மைச்
சுற்று உறு துணையினோரைத் தொல்லை நாள் நகரம் செற்ற
கொற்றவன் தன்னை அன்னோர் வலியினைக் கொடியோன் நோக்கி
இற்றது கொல்லோ நம்தம் வாழ்க்கை என்று இரங்கிச் சொல்வான்.
|
17 |
|
|
|
|
|
|
|
6541.
|
பகைஞர்கள் ஆயினோர் பரவித் தன்மிசை
இகல் செய வருவரேல் இரங்கி ஏங்குதல் மிகு பழி இங்கு இது வினவின் மானவர் நகை செய்வர் பொருவதே நன்று போலும் ஆல். |
18 |
|
|
|
|
|
|
|
6542.
| எச்சம் இல் சேனையும் படையும் ஈண்டிய கைச் சிலை இருந்தது கரியும் ஒன்று உளது அச்சு உறுகின்றது என் ஆவது ஆகும் ஆல் பொச்சையர் கடன் நனி பொருமல் கொள்வதே. |
19 |
|
|
|
|
|
|
|
6543.
|
வெல்லினும்
செறுநர் முன் வெரிந தீயினும்
அல்லது விளியினும் ஆக யான் இனி மல்லல் அம் படையொடு மாற்றலார் மிசைச் செல்லுவது அன்றியே இரங்கல் சீரிதோ. |
20 |
|
|
|
|
|
|
|
6544.
|
கண்ணுறு படையை நோக்கிக் கருத்திடைக் கவலை எய்தி
எண்ணி நின்று அயர்தல் வீரர் இயற்கையது ஆமோ பின்னர்
நண்ணிய வாறு நண்ண நான் இனித் தளரேன் என்னாத்
துண் எனத் தேறிச் சென்றான் சூரனுக்கு அமைச்சன் ஆனோன்.
|
21 |
|
|
|
|
|
|
|
6545.
|
இங்கு இது பொழுது தன்னில் எங்கணும் இருள் குழாம் சூழ்
கங்குலும் பகலும் மாலைக் காலமும் கலந்தது என்ன
அங்கு அவன் தானை வெள்ளத்து அவுணரும் பூதர் தாமும்
பொங்கு ஒலிக் கடல் போல் ஆர்த்துப் பொள் என அமரின்
ஏற்றார். |
22 |
|
|
|
|
|
|
|
6546.
|
தலைப்பட எழுக்களில் தண்டில் தாக்கினார்
இலக்கு உற நேமிகள் கணிச்சி ஏவினார் மலைக்குவை எறிந்தனர் மரங்கள் வீசினார் சிலைத்தனர் வயிர்துடி செறி வெம் பூதரே. |
23 |
|
|
|
|
|
|
|
6547.
| வில் உமிழ் சரத்தினில் வேலில் வாளினில் கல்லினில் நாஞ்சிலில் கழுமுள் ஆயதில் வல்லையம் தனில் உடை வாளில் வச்சிரச் செல்லினின் நுதி கெழு திகிரி நேமியில். |
24 |
|
|
|
|
|
|
|
6548.
| தண்டினில் தோமரம் தன்னில் சங்கினில் பிண்டி பாலத்தினில் ஆற்றப் பீடுமேல் கொண்டது ஓர் எழுவினில் பிறவில் கொட்புறா அண்டரும் அவுணரும் அணிந்து போர் செய்தார். |
25 |
|
|
|
|
|
|
|
6549.
| அயர்ப்பு உறு தானவர் அமைச்சர் யாவரும் வியர்ப்பினில் வந்திடு வெங்கண் வீரரும் வயப்பெரும் சிலையினை வணக்கி வாளிதூய்ப் புயல் படு பெயல் எனப் பொழிந்து போர் செய்தார். |
26 |
|
|
|
|
|
|
|
6550.
| பெய்வது ஒத்து எங்கணும் பெரிதும் வீழ்தலால் உய்வது எத் தன்மை என்று உலகம் அச்சுற இவ்வகைத் திறத்தினர் இரண்டு சாரினும் தெய்வதப் படைகளும் மரபில் சிந்தினார். |
27 |
|
|
|
|
|
|
|
6551.
| மாய்ந்தனர் பூதரும் வரம்பில் தானவர் சாய்ந்தனர் கரங்களும் தலையும் சிந்தினர் வீந்தன கரி பரி விளிந்த தேர் நிரை பாய்ந்தன செம் புனல் பரந்த கூளியே. |
28 |
|
|
|
|
|
|
|
6552.
| நொந்தனர் இலக்கரும் நோன்மை நீங்கினார் முந்துறும் அமைச்சர் போர் முயன்று நின்றனர் அந்திலவ் வேலையில் அதனை நோக்கியே வெந்திறல் வெய்யவன் வெகுண்டு சென்றனன். |
29 |
|
|
|
|
|
|
|
6553.
| இடித்தென உரப்பினன் இமைப்பில் எய்தி முன் வடித்திடு சிலையினை வாங்கித் தானவர் முடித்தலை பனித்திட முழுதும் யாக்கைகள் பொடித்தென வழுத்தினன் புங்க வாளியே. |
30 |
|
|
|
|
|
|
|
6554.
|
நீண்டதோர்
சிலீமுகம் நெடிது மேலவன்
தூண்டிய காலையில் துணிந்த கையினர் வீண்டிடு தலையினர் விளந்த மெய்யினர் மாண்டனர் அமைச்சர்கள் வறந்த தானையே. |
31 |
|
|
|
|
|
|
|
6555.
| துறக்கம் அது அலைத்திடு தொலைவில் தானவர் மறுக்க முற்று அசைந்தனர் வந்து போர் செய விறல்படு சாரதர் வெகுண்டு மேற்செலா இறப்பு உறு வரை பல எடுத்து வீசினார். |
32 |
|
|
|
|
|
|
|
6556.
| வீசிய வேலையில் வெதும்பி விம்மியே மாசுறு தானவர் வாகை சிந்தியே ஆசு அறு போனகத் தட்டில் சூடுறு பூசையதாம் என உடைந்து போயினார். |
33 |
|
|
|
|
|
|
|
6557.
| இடைந்தனர் ஆகியே அவுணர் யாவரும் உடைந்தனர் போதலும் உலப்பில் பூதர்கள் படர்ந்தனர் தெழித்தனர் பையுள் மாலையில் தொடர்ந்தனர் பற்றினர் தொலைத்தல் மேயினார். |
34 |
|
|
|
|
|
|
|
6558.
| கண்டனன் ஆங்கு அவை அறத்தைக் காய்பவன் புண் திகழ்ந்து அனைய கண் பூதர் மேல் செலா விண் தொடர் பெரும் தனு வாங்கி வெவ்வுயிர் உண்டிடும் சரம் தெரீஇ உலப்பின்று ஏவினான். |
35 |
|
|
|
|
|
|
|
6559.
| ஏவிய நோன் கணை யாவும் ஏன்று எழு தீ விழிப் பூதர் பால் சேறல் இந்திரன் வாவிய ஊர்திகள் வாரி நேமியில் தூவிய துள்ளியின் தோற்றம் போன்றதே. |
36 |
|
|
|
|
|
|
|
6560.
| கைச் சிலை உகைத்திடு கணைகள் யாவையும் நச்சென விடுத்தலும் நடுங்கிப் பூதர்கள் அச்சுற மெலிந்தனர் அமரர் கோமகன் வச்சிரம் எய்திய வரைகள் மானவே. |
37 |
|
|
|
|
|
|
|
6561.
|
வானவர்கள் கோமகன் வயக் களிறிது என்னத்
தானவர்கள் போற்று தருமப் பகைஞன் ஊர்ந்த ஆனையது பூதர் தமை அங்கை கொடு வாரி ஊனொடு உயிர் சிந்திட உடற்றியதை அன்றே. |
38 |
|
|
|
|
|
|
|
6562.
| கோட தொரு நான்கு கொடு குத்தியது தாளின் ஊடு உற மிதித்து அவண் உழக்கியது வாலால் பாடு உற எறிந்தது பனைக் கையது கொண்டே வீடு உற முன் எற்றியது வீரர் படை தன்னை. |
39 |
|
|
|
|
|
|
|
6563.
| மாறகலும் வெங்கரி இவ்வாறு அடல் செய் காலை வீறு கெழு சாரதர்கள் வெற்புமிசை வீசி ஊறு செய அங்கதின் உலப்பில் கணை ஓச்சி நாறு நடுவார் தொகையின் நண்ணினர்கள் வீரர். |
40 |
|
|
|
|
|
|
|
6564.
| காய முழுது ஒன்றிய கணக்கு இல் படை யாவும் மூய தவளக் களிறு முற்றும் எழு சோரி பாய அணைகிற்பது பணிக்குழுவு கவ்வச் சேய பணி சுற்ற மறை திங்கள் படர்ந்து என்ன. |
41 |
|
|
|
|
|
|
|
6565.
|
வெந்திறல்
கொள் புண்டரிக வேழம் இது தன்மை
நொந்தது எனினும் தனது நோன்மை அழியாதாய் முந்தியிடு சேனையை முருக்க அது நோக்கித் தந்தி நிரை சாரதர் தமைத் தடிதல் உற்ற. |
42 |
|
|
|
|
|
|
|
6566.
|
கண்டைகெழு தாரின் ஒலி கல்லென விரைப்ப
அண்டம் உடைந்து என்ன நனி ஆர்த்த அவுணன் ஊரும் புண்டரிக வெங்களிறு போர்த் தொழில் இயற்ற உண்டை கெழு பூத நிரை ஒய்யென உடைந்த. |
43 |
|
|
|
|
|
|
|
6567.
| தண்டம் உடைகின்ற செயல் தன்னை விறல் வெய்யோன் கண்டனன் அழன்று தன கார் முகம் அது ஒன்று கொண்டனன் எடுத்தது குனித்து அழலின் வாளி அண்டர் பகை யூர்தியின் அடைச்சி நனி ஆர்த்தான். |
44 |
|
|
|
|
|
|
|
6568.
| ஆர்த்து அடரும் வேலையில் அடற்களிறும் அங்கோர் மூர்த்தம் அயர் உற்றது முனிந்து அவுணர் கோமான் பார்த்து இறையின் நூறு கணை பாலமிசை ஓச்சத் தேர்த்து லவு சோரியொடு தேர்மிசை இருந்தான். |
45 |
|
|
|
|
|
|
|
6569.
| இருந்த திறலோன் மிசை ஒர் எஃகம் அது வாங்கி விரைந்து தருமப் பகை விடுத்திடலும் நோக்கி மருந்து என முன் வந்து திறல் வாசவன் அவ் வைவேல் முரிந்து துணி ஆக ஒர் முரட் கணை தொடுத்தான். |
46 |
|
|
|
|
|
|
|
6570.
| மத்த கயம் அன்ன திறல் வாசவன் விரைந்தே பொத்திரம் அது ஒன்று கொடு போர் அயில் முருக்கிக் குத்திரம் அது ஒன்று அவுணர் கூவி வெருக் கொள்ள அத்திரம் என் மாரிகொடு அவன் தனை மறைத்தான். |
47 |
|
|
|
|
|
|
|
6571.
|
மறைத்தலும் மறப் பகைஞன் வாளி மழை தூவிக்
குறைத்தனன் அளப்பு இல் கணை ஏனவை குழீஇப் போய்ச்
செறுத்தவனது ஆகம் மிசை சென்று செருக்கு இன்றி
விறல் கவச நக்குபு விளிந்து புடை வீழ்ந்த. |
48 |
|
|
|
|
|
|
|
6572.
|
மீண்ட வேலையின் வெய்ய சூழ்ச்சியோன்
மாண்டுளான் என வாகை வீரன் மேல் பூண்ட யங்குறு பொன்னம் தண்டம் ஒன்று ஈண்ட வீசினான் யாரும் அஞ்சவே. |
49 |
|
|
|
|
|
|
|
6573.
| எழுவின் நீள் கதை இமைப்பில் சென்றவன் பழுவின் மார்பகம் பட்ட வேலையின் விழும நோய் உறா விம்மினான் அரோ வழுவை மேலையோன் வயத்தின் மேவவே. |
50 |
|
|
|
|
|
|
|
6574.
| கருத்தில் நல் அறம் காய்ந்த வன் செயல் தெரித்து நின்றிடும் திறல் கொள் வாகினான் உருத்து நோக்கியே உரையும் தன் உளக் கருத்தும் பிற்படக் கடிது செல்லுவான். |
51 |
|
|
|
|
|
|
|
6575.
| நின்னில் ஐய நின் நேரலன் புயம் தன்னை யாத்து நிற்றருவம் யாம் எனப் பன்னு மானவர் பௌவம் நீத்து ஒராய் முன்னு தானவர் முதல்வன் நேர்புக. |
52 |
|
|
|
|
|
|
|
6576.
|
எதிர்
இலாமையால் யாரும் அஞ்சவே
அதிரும் நோன்கழல் ஆடல் மொய்ம்பனை மதியில் தானவன் மழைகள் மின் குழுச் சிதறி என்னத் தீச் சிந்த நோக்கினான். |
53 |
|
|
|
|
|
|
|
6577.
| நோக்கி நீ கொலோ நோன்மையோடு எனைத் தாக்குமாறு வந்து அனையை யான் உனை யாக்கை சிந்திய அமைந்து நின்றனன் காக்க வல்லையேல் காத்தி நீ என்றான். |
54 |
|
|
|
|
|
|
|
6578.
| மொழியும் ஆடல்சேர் மொய்ம்பன் கேட்டு இது விழுமி தாரினும் வெற்றி பெற்றனன் அழிவனே நினக் காடல் கொள்வன் யான் கழியை நீந்துதல் கடலில் பாடதோ. |
55 |
|
|
|
|
|
|
|
6579.
| மற்று உன் வன்மையும் மதர்ப்பும் நின் பெரும் கொற்றம் ஆனதும் வரத்தின் கொள்கையும் இற்றை வைகலே ஈறு செய்வன் நீ கற்ற போரினைக் கடிது செய்க என. |
56 |
|
|
|
|
|
|
|
6580.
|
கானக் களி வரிபம்பிய கமழ் தார் புனை அகலம்
வானக் கிறை தனது ஊர்திகள் மரபோடு சென்று இசைக்கும்
தீனக் குரல் என நாண் ஒலி திசை எங்கணும் செல்லக்
கூனல் சிலை தனை ஒல்லையில் தருமப் பகை குனித்தான். |
57 |
|
|
|
|
|
|
|
6581.
|
மற் கொண்டிடும் மிடல் மொய்ம்பு உள மதி இல்லவன்
ஒரு பால்
எற் கொண்டு எழு களிற்றின் மிசைச் சிலை வாங்கினன் இருத்தல்
கற் கொண்டதொர் வெள்ளிக்கிரி மிசை காணிய கணை தூய்
வில் கொண்டு ஒரு பசுங் கார் முகில் மேவுற்றெனல் ஆமால்.
|
58 |
|
|
|
|
|
|
|
6582.
|
அது அன்றியும் அவன் உந்திய அடு வெங்களிறலர் தண்
கதிரின் குழு முழுது ஒன்றுபு ககனம் தனில் எழு செம்
மதியம் தனது ஒரு பங்கை ஒர் வயவெம்பணி நுகரப்
புதிதொண் பிறையது ஓன்றிடை புக நின்றது பொருவும். |
5
|
|
|
|
|
|
|
|
6583.
|
முந்தேயவன் எடுக்கின்றது ஒர் முரண் வெஞ்சிலை குனியாக்
கந்தே என நிமிர் தோளுடைக் கடும் சூழ்ச்சியன் ஒழுகும்
செந்தேன் உறழ் குணத்தில் சரம் செலுத்தாத் திறன் மொய்ம்பல்
கந்தேயும் மெய் வெளி இன்றென அவனைக் கரந்து ஆர்த்தான்.
|
60 |
|
|
|
|
|
|
|
6584.
|
கரக்கின்றவன் விடுவாளிகள் கந்தன் படைஞன் மெய்
அரக்குன்று பட்டு அயின் மாய்ந்தவை அயல் வீழ்ந்தன கண்டான்
இரக்கின்றவர்க்கு உதவான் கரந்து ஏற்காத் திருவினர் பால்
பரக்கும் பொருள் உகுத்து அன்னதில் பயன் பெற்றிலன் எனவே.
|
61 |
|
|
|
|
|
|
|
6585.
|
அயில் சிந்திட முரண் வெங்கணை அயல் வீழ்தலும் அடுபோர்
முயலும் திறல் கெழு மொய்ம்பினன் முனிந்து எஃகம் ஒன்று
எடுத்துப்
புயல் அன்னது ஒர் வடிவத்தவன் பூண் ஆரு நெஞ்சு எறியச்
செயல் அன்னது கண்டு ஆங்கு எதிர் தீவாளிகள் உய்த்தான்.
|
62 |
|
|
|
|
|
|
|
6586.
|
உய்க்கும் சுடர் வடி வாளிகள் ஒருங்கே தவம் உருக்கி
மைக் கொண்டலை நிகர் மேனியன் மனம் துண் என அணுகி
மெய்க் கொண்டது ஒர் நெடுஞ்சாலிகை விளியும் படி வீட்டிப்
புக்கு உளுற மூழ்கித் தனி புறம் போந்தது விரைவில். |
63 |
|
|
|
|
|
|
|
6587.
|
புறம்
போதலும் இகல் மந்திரி பொருமிப் புகை உயிர்த்து
நிறம் போகிய செந் நீரொடு நினை கின்றிலன் இருப்ப மறம் போகிய தனி வெங்கரி மகிணன் செயல் ஓரா அறம் போகிய மனத்தான் தனை அடவுற்றதை அன்றே. |
64 |
|
|
|
|
|
|
|
6588.
|
முந்து உற்றிடு கரி திண் திறல் மொய்ம்பன்னி ரதத்தைத்
தந்தத் தொகை கொடு தாக்குபு சமரத்து இடை இட்ட கந்து ஒத்தது ஒரெழு ஒன்றது கைக் கொண்டவன் வலவன் சிந்தப் புடைத்தது காண்டலும் செந்தீ எனக் கனன்றான். |
65 |
|
|
|
|
|
|
|
6589.
|
வையம் தனது ஈறாதலும் வறியே அயல் பாயா
மெய் அங்கை அது ஒன்றால் அவன் மேல் வந்திடும் வேழக்
கை அங்கு உறப் பற்றாக்கடம் கலுழும் கவுண் மோதி
ஒய் என்று எடுத்து அப்பாலையின் உலகம் புக உய்த்தான். |
66 |
|
|
|
|
|
|
|
6590.
|
எறிந்தான் எடுத்தது காலையில் இபம் விண் இடையேகிப்
பிறிந்து ஆகவம் இயற்று எல்லையில் பெயர் காலையின் அமைச்சன்
அறிந்தான் கயம் இழந்தேன் கொல் என்று அயராவதனோடு
மறிந்தான் புனை கலம் தன்னொடு மணிமா முடி சிந்த. |
67 |
|
|
|
|
|
|
|
6591.
|
வீழ்கின்றது ஒர் களிறாற்றவும் வெருவிப் பதை பதைத்து
மாழ்கின்றது புடை போகிய மதி இல்லவன் எழுந்தே
காழ் கொண்டது ஒர் கதை ஒன்று தன் கைக் கொண்டு உரத்தெறியத்
தாழ் கொண்டது ஒர் கரத்தில் கடுத் தலை கொண்டது தறித்தான்.
|
68 |
|
|
|
|
|
|
|
6592.
|
வலி கொண்டது ஒர் தனித் தண்டது மடி வாதலும் மற்றோர்
குலிசம் தனை விட ஆங்கு எதிர் குறுகக் கரம் பற்றிப்
புலிகண்டது ஒர் கலைமான் எதிர் புக்கால் என அவுணர்
தலைவன் தனை அடல் மொய்ம்பினன் தட மார்பிடைப் புடைத்தான்.
|
69 |
|
|
|
|
|
|
|
6593.
|
மூளா உருத்து அறை கின்றுழி முதல் அற்றிடு தருப்போல்
வாளா புவி மிசை வீழ்தலும் வயம் மிக்கவன் ஒருகால் தாளால் உதைத்தனன் அத்துணை தருமப் பகை வீழ்ந்தான் கேள் ஆகிய அவுணப் படை கெட்டு ஓடியது அன்றே. |
70 |
|
|
|
|
|
|
|
6594.
|
விழுந்து அயர் புண்டரீக வெங்கரி உயிர்த்து மெல்ல
எழுந்தது தரும கோபன் இறந்த பாடு அதனை நோக்கி
அழுந்திடும் இன்னல் வேலைக் ககன் கரை கிடந்தால் என்னத்
தொழுந்திறல் வீரவாகுத் தலைவனை நேர்ந்து சொல்லும். |
71 |
|
|
|
|
|
|
|
6595.
|
செய்யலை வெகுளி எந்தாய் சிறியனை அருளிக் கேண்மோ
பொய்யென நினையல் வாழி புண்டரீகப் பேர் உள்ளேன்
வையகம் போற்றும் சீரேன் மாதிரம் காவல் கொண்டேன்
கையன் இத் தரும கோபன் கடுஞ்சிறைப் பட்டேன் பன்னாள்.
|
72 |
|
|
|
|
|
|
|
6596.
|
வன் தளை மூழ்கும் தீ என் மதி இலா அமைச்சற் போற்றி
இன்று கார் ஊர்தி யானேன் ஏவின பலவும் செய்தேன்
ஒன்று நான் மறுத்தது உண்டேல் உயிர் குடித்து ஊனும் வல்லே
தின்றிடும் என்றே அஞ்சித் திரிந்தனன் செயல் வேறு இல்லேன்.
|
73 |
|
|
|
|
|
|
|
6597.
|
எட்டுள திசையில் வைகும் அரக்கர் தன் இகழ்ந்தார் என்று
மட்டறு வெகுளி வீங்கி மற்று எனை ஊர்ந்து தொன்னாள்
கிட்டினன் அவரை எல்லாம் கிளையொடு முடித்தோன் தன்னை
அட்டனை நீயே அல்லால் அவனை யார் அடுதற் பாலார். |
74 |
|
|
|
|
|
|
|
6598.
|
புந்தியில்
அறத்தைக் காயும் புரை நெறி அமைச்சன் தன்னை
வந்து நீ அடுதலாலே வானவர் கவலை தீர்ந்தார்
உய்ந்தனன் சிறந்தேன் எற்கும் ஊதியம் இதன் மேல் உண்டோ
முந்து உறு தளையின் நீங்கி முத்தி பெற்றாரை ஒத்தேன். |
75 |
|
|
|
|
|
|
|
6599.
|
தீது கொள் பவத்தின் நீரால் அவுணர்தம் சிறையில் புக்கேன்
மாதவம் செய்தேன் கொல்லோ மற்று உனை எதிரப் பெற்றேன்
ஆதலின் உய்ந்தேன் என்றன் ஆசையை அளிக்கும் ஆற்றால்
போதுன் தமியன் என்று தொழுதது புண்டரீகம். |
76 |
|
|
|
|
|
|
|
6600.
|
புண்டரீகத்தின் வாய்மை பொருக்கென வினவு வீரன்
அண்டரும் உவகை பொங்க அகலுதி இருக்கைக்கு என்ன
விண் தொடர் நெறியில் சென்றாங்கு அவுணர்க்கு வெருவல்
இன்றிப்
பண்டு அமர் திசையின் நண்ணிப் பரிவற வைகிற்று அன்றே.
|
77 |
|
|
|
|
|
|
|
6601.
|
மாதிரம் காவல் பூண்ட மதக் களிற்று அரசு செல்ல
ஆதியில் அறத்தைக் காயும் அழிதகன் இறுதி நோக்கிப் பூதர்கள் ஆர்த்து வீரன் புயவலி புகழ்தல் உற்றார் தூதுவர் அது கண்டு ஓடிச் சூரனைத் தொழுது சொல்வார். |
78 |
|
|
|
|
|
|
|
6602.
|
தண்டக முதல்வ கேண்மோ தனையும் தானும் ஏகி
மண்டு அமர் புரிந்து வீர வாகுவால் அமைச்சன் மாய்ந்தான்
உண்டையும் அழிதல் உற்ற உங்குவன் ஊர்ந்து சென்ற
புண்டரீகப் பேர் பெற்ற தந்தியும் போயது என்றார். |
79 |
|
|
|
|
|
|
|
6603.
|
பழுது உடைத் திறன் மந்திரி பட்ட சொல் வினவி
முழுது சுற்றிய இன்னலம் புணரியின் மூழ்கி அழுது உயிர்த்து மெய் உயிர் பதை பதைத்திட அம் கண் எழுது சித்திரப் பாவை போல் உணர்வு போய் இருந்தான். |
80 |
|
|
|
|
|
|