சிங்க முகாசுரன் வதைப் படலம்
 
6813.
என்னலும் ஒற்றர் கேளா இறைவனை இறைஞ்சி ஏகி
உன்னுறு நினைப்பின் முந்தி உத்தரத்து அளக்கர் நண்ணி
மன்னகர் புகுந்து ஞெள்ளல் கடந்து மந்திரத்துள் புக்குச்
சென்னி ஆயிரம் கொண்டு உள்ள சிங்கமா முகவன்                                     கண்டார்.
1
   
6814.
களித்தனர் மகிழ்ந்து தூதர் கான் முறை வணங்கி நிற்ப
அளித்திடும் அரசின் வைகும் அரிமுகன் வந்தது என்னை
கிளத்திடுவீர்கள் என்னக் கேடு இலா அவுணர் மேலோன்
விளித்தனன் ஐய நின்னை விரைந்தனை வருக என்றார்.
2
   
6815.
சரத்தினும் கடியவர் இனைய சாற்றலும்
அரித்திறல் முகத்தவன் வினவி ஆயிடை
விருத்தம் உண்டேல் அது விளம்புவீர் எனா
உரைத்தனன் நன்று என ஒற்றர் கூறுவார்.
3
   
6816.
நும்பியை வரையொடு நுதி கொள் வேலினால்
அம்புவி வரைப்பில் வந்து அட்ட கந்தவேள்
நம்பதி முன்னவன் நகர் வந்து எய்தினான்
செம் பதுமன் முதல் தேவர் சூழவே.
4
   
6817.
வந்திடும் எல்லை போய் மலைந்து பைப்பயப்
புந்தி கொள் அமைச்சரும் சிறாரும் பொன்றினார்
உய்ந்தனன் இரணியன் உததி ஓடினான்
எந்தை அங்கு இருந்தனன் புதுமை ஈது என்றார்.
5
   
6818.
தொழுந்துணைக் கையுடைத் தூதர் இன்னணம்
மொழிந்தது வினவலும் முனிவும் மானமும்
அழுந்திடு துயரமும் ஆகம் போழ்ந்திட
எழுந்தனன் அவுணரோடு ஏகல் மேயினான்.
6
   
6819.
முன்புறு கடையுறா மொய்த்த தூதரை
என் பெரும் சேனையைக் கொணர்திர் ஈண்டு எனத்
தென் புலக் கோமகன் ஒற்றிற் செப்பலும்
மன்பெருந் தானைகள் வல்லை வந்தவே.
7
   
6820.
தூசி கொள் நால் படை துவன்றிச் சேர்தலும்
ஆசுறும் அரிமுகத்து அண்ணல் கண் உறீஇப்
பாசன மன்னவர் பாங்கர் சுற்றிடத்
தேசுடை மணி நெடும் தேர் ஒன்று ஏறினான்.
8
   
6821.
தாரொலி செய்தன தாள் வயப் பரி
பேரொலி செய்தன பிறங்கு பூட்கை சேர்
காரொலி செய்தன கண்டை ஆர்த்தன
தேரொலி செய்தன தெழித்த சில்லியே.
9
   
6822.
முரண் துடி சல்லிகை முரசம் காகளம்
உருட்டு உறு சுரி முகம் உடுக்கை துந்துபி
திரட்டு உறு தண்ணுமை திமிலை ஆதிகள்
இரட்டிய கேதனம் எங்கும் ஈண்டிற்றே.
10
   
6823.
தழங்குரன் மால் கரி புரவி தானவர்
அழுங்குறு தேர் நிரை அனிகம் வானமே
வழங்கு உறு நெறியதா வலிதிற் சென்றன
முழங்கில பெயர்கில முகில்கள் அஞ்சியே.
11
   
6824.
ஏயிது தன்மையின் ஈண்டு தானைகள்
பாயின சென்றிடப் பரிதிபோல் ஒளிர்
ஆயிர மவுலியன் அவுணர் நாயகன்
சேயுயர் விசும்பினில் எழுந்து சென்றனன்.
12
   
6825.
கன்னல் ஒன்று அளவையில் ககனத்து ஆற்றினால்
சென்னிகள் பல உடைச் சீய மாமுகன்
மன்னவன் உறை தரு மகேந்திரப் புரந்
துன்னினன் வெருவியே சுரர்கள் ஓடவே.
13
   
6826.
அடைத்தலை நீங்கிய அம்பொன் கோநகர்க்
கடைத்தலை வந்தனன் கனகத் தேர் ஒரீஇப்
படைத் தலை மன்னவர் பரவ உள் புகாக்
கிடைத்தலை மேயினன் கெழுமு சூரவை.
14
   
6827.
அரசியல் புரிந்திடும் அவையை நண்ணிய
முரண் உறு சிங்கமா முகத்தன் முன்னவன்
திருவடி மலர்களில் சென்னி தீண்டுறப்
பரிவொடு வணங்கினன் தொழுத பாணியான்.
15
   
6828.
வணங்கிய தம்பியை மலர்க்கை தொட்டு எடா
இணங்கிய மார்புறுத்து இறுகப் புல்லலும்
நிணங்கவர் வேலினாய் நினது செம்முகம்
உணங்கியது உற்றது என் உரைத்தியால் என்றான்.
16
   
6829.
என்னலும் அவுணர் கோன் இளையவன் தனை
முன்னுற இருத்தியே முரணின் மேலையோய்
என்னிடை உற்றன இசைப்பன் கேள் எனா
அன்னவன் உணர் வகை அறைதல் மேயினான்.
17
   
6830.
அன்று நீ போந்தபின் அயில் கொள் வேலினால்
குன்றினை எறிந்திடு குமரன் என்பவன்
தன் துணைச் சேனையும் தானும் இந் நகர்
சென்றனன் பாசறை சேர்ந்து வைகினான்.
18
   
6831.
மற்றவன் சேனைகள் மலைய மைந்தர்கள்
இற்றனர் அமைச்சனும் இறந்து போயினான்
அற்றன தானையும் ஆடகப் பெயர்
உற்றவன் இரிந்தனன் உததி ஓடினான்.
19
   
6832.
பொங்குளை அரிமுக புகுதி இன்னதால்
சங்கையில் படையொடு சமரின் ஏகியே
அங்கு அவன் வலியினை அடர்த்து மீளுதி
இங்கு உனை விளித்தனன் இதனுக்கா என்றான்.
20
   
6833.
எஞ்சலில் சூரன் மற்று இதனைச் செப்பலும்
வெஞ்சின அரி முக வீரன் தேர்வுறா
நெஞ்சினில் ஆகுலம் நிகழ முன்னவன்
செஞ்சரண் வீழ்ந்து நின்று இதனைச் செப்புவான்.
21
   
6834.
மல்லல் அம்புயம் உடை மைந்தர் தங்களைத்
தொல்லையில் அமைச்சரைச் சுற்றத் தோர்களை
எல்லவர் தம்மையும் இழந்து வைகினாய்
புல்லிது புல்லிது உன் புந்தி எண்ணமே.
22
   
6835.
மூலமும் முடிவும் இல்லாத மூர்த்தியைப்
பாலன் என்று எண்ணினை படுவது ஓர்ந்திலை
ஆலம் அது ஆனதே ஐய என் மொழி
மேலையின் விதியை யார் வெல்லும் நீரினார்.
23
   
6836.
சென்றிடு புனலினைச் சிறை செய்து ஆவது என்
இன்றினி ஏகியே எண்ணலார் எனத்
துன்றியே குழு எலாம் துடைத்து நுங்கியே
நின்றிடுகின்றனன் நீயும் காண்டியால்.
24
   
6837.
கந்தனாம் ஒருவனைக் கடக்கப் பெற்றிடின்
வந்து உனைக் காண்பனால் மற்றது இல்லையேல்
அந்தம் அது அடைவரால் ஆரும் ஐய நீ
புந்தியின் நினைந்தன புரிதியால் என்றான்.
25
   
6838.
என்று கை தொழுது பின் இறையும் அவ்விடை
நின்றிலன் விடை கொடு நிருதன் ஏகியே
துன்றியே தானைகள் சூழ மற்று அவண்
ஒன்று தன் மந்திரத்து உறையுள் எய்தினான்.
26
   
6839.
போனக மேருவும் புடையில் சூழ்வரும்
ஊன் எனும் வரைகளும் உலப்பு இல் சோரி நீர்
தேனொடு பால் தயிர் தேறல் ஆதிகள்
ஆன பல் கடல்களும் அயிறல் மேயினான்.
27
   
6840.
வாச நீர் தோய்ந்திடு நரந்த மான் மதம்
பூசினன் பாளித மிசை புனைந்தனன்
வீசுபன் மதுமலர் மிலைச்சு கின்றனன்
காசினி வரைப்பு எலாம் கந்தம் சூழ்தர.
28
   
6841.
களைந்தனன் பழையன கவினப் பூண்டனன்
வளம் தருகின்றது ஓர் யாணர் மாண்கலன்
மிளர்ந்திடு தினகரர் புணரி வீழ்ந்து உழி
ஒளிர்ந்துடன் பல கதிர் உதிக்குமாறு போல்.
29
   
6842.
படி தவிர் பருப்பதம் பத்து நூற்றினின்
முடி தொறும் இளம் பிறை முளைத்த வாறு போல்
நெடுமைகொள் அரிமுகன் நெற்றி தோறும் வெண்
பொடி தனை அணிந்தனன் புனிதம் ஆயினான்.
30
   
6843.
தண்டமும் நேமியும் சங்கரன் தரக்
கொண்டது ஓர் சூலமும் குலிசமே முதல்
அண்டர் தம் படைகளும் அன்னை ஈந்திடு
திண் திறல் பாசமும் செங்கை பற்றினான்.
31
   
6844.
கைத்தலம் யாவையும் கதிகள் கான்றிட
எத்திறப் படைகளும் பின்னர் ஏந்துறாப்
பத்து நூறு ஆயிரம் பரிகள் பூண்டதோர்
சித்திர மணி நெடுந் தேரில் ஏறினான்.
32
   
6845.
தந்திரத் தலைவரும் தனயர் யாவரும்
சிந்துரத் தொகுதியும் தேரும் மாக்களும்
இந்திரப் பெருவளம் யாவும் சூழ்தர
மந்திரத் திருநகர் வாயில் எய்தினான்.
33
   
6846.
மேற்படு கேசரி வெம்முக வீரன்
மாற்படு கோ நகர் வாய்தலின் மேவ
நாற்படை யானவும் நண்ணின வெம் போர்
ஏற்புடை வெள்ளம் இலக்கம் அது அன்றே.
34
   
6847.
வானவர் ஏற்றமும் மண்ணவர் வாழ்வும்
தானவர் இன்னலும் நீக்கிய தக்கோர்
ஊனம் இல் செய்கையர் ஒள் எரி உண்ணும்
கானம் எனப் பொலி காட்சியின் மிக்கோர்.
35
   
6848.
கார் பயில்கின்ற கருத்தினர் காமன்
கூர் பயில்கின்ற கொடுங்கணை உண்ணும்
தார் பயில் தோளர் சமர்த் தொழில் செய்தே
மார் பகம் அன்றி வடுப்புனை யாதோர்.
36
   
6849.
எண்ணமில் தொல் உயிர் யாவும் அலைக்கும்
அண்ணலை அன்னவர் ஆர் அழல் காலும்
கண்ணினர் வார் கழல் கட்டிய தாளார்
விண்ணினை யேனும் விழுங்கவும் வல்லோர்.
37
   
6850.
நேருதிர் என்று எதிர் நேர்ந்தவர் ஆகம்
கூர் நுதி வேல் கொடு கூறு படுத்துப்
பேர் உதிரம் தசை பெய்து நிரம்பா
வாரிதி என்ன வகுத்திடும் வாயார்.
38
   
6851.
தண்டம் மழுப் படை தட்டை முசுண்டி
விண்டுயர் கொல் சிலை வேல் எழு நாஞ்தில்
எண் தகு பல் படை யாவையும் ஏந்தி
அண்டம் உடைந்து அதிரும்படி ஆர்த்தார்.
39
   
6852.
அந்தரம் மா முகிலாம் என ஆர்க்கும்
தந்திகள் வீழ்த்துறு தானம் அது ஓடி
உந்திகள் ஆய் உலவைக் கதி கொண்டு
முந்திய தூசியின் முன் உறுகின்ற.
40
   
6853.
வேலைய தன்ன வில் ஆழிய வன்னிக்
கோலமது ஆன குரங்கொள் பதத்த
கால் விசை கொண்டன கந்துக ராசி
மால் உறு பூழியின் வான் புவி செய்வ.
41
   
6854.
சூழ் வரு தேரிடை துன்று பதாகைக்
காழ் வரு கோன் உதி கார் முகில் உந்தி
போழ்வன வாடுறு பூந்துகில் அங்கண்
ஆழ் வரு பூழை அடைத்தன அன்றே.
42
   
6855.
வரம் கெழு சூர் துணை மாய்ந்திடும் என்றே
உரம் கொடு முன்னம் உணர்ந்தன கொல்லோ
துரங்கம் அழுங்கின தோல் புலம்பு உற்ற
இரங்கின பல்லியம் ஏங்கின தேர்கள்.
43
   
6856.
கட்புலன் நாசி கவின் செவி துன்னப்
பட்டன பூழி பதாகையும் அற்றே
ஒட்டலர் விண் செல ஓட்டலர் என்னா
விட்டனர் தூக்கம் விரைந்தனர் வெய்யோர்.
44
   
6857.
தேரினர் ஓர் பலர் திண் திறல் வாசி
ஊருநர் ஓர் பலர் ஓங்கிய வேழம்
பேருநர் ஓர் பலர் பேர் அடல் கொண்டு
பாரினர் ஓர் பலரால் படை மள்ளர்.
45
   
6858.
துங்கம் இல் சூர் துணை தொல் படை மன்னன்
அங்கு அவன் என்ன அரித்தலை கொண்டான்
மங்கல மாயவள் மாமகன் ஆடல்
சிங்கன் எனப்படு சீர்ப் பெயர் உள்ளான்.
46
   
6859.
போர்ப் படை கொண்டு புறம் படர்கின்ற
தேர்ப் படை காற்படை சிந்துரம் வாசித்
தார்ப் படை கொண்டு தடங்கடல் என்ன
ஆர்ப் படை நெற்றியன் ஆகி அகன்றான்.
47
   
6860.
நீள் வயிர் பேரி நிசாளம் உடுக்கை
தாளம் வழிப்படு தண்ணுமை தக்கை
காளம் வலம் புரி கைத்துடி ஆதி
யாளி முகன் முன் அளப்பில ஆர்ப்ப.
48
   
6861.
ஆகிய தால் அமர் ஐதென யாமும்
ஏகுதும் உண்டி எமக்கு உளது என்னா
மாக நெருங்கின வன் கழுகு ஈட்டம்
காகம் வருந்திய காளிகள் கூளி.
49
   
6862.
ஆழியை ஒத்து உயரம் பொன் தேர்களில்
ஆழியை உண்டு எழு புயல் தந்து ஆர்த்தன
ஆழிய நிலத்து உருண்டு அழுதியோ எனா
ஆழியை வினவியே அமர்தல் போலுமால்.
50
   
6863.
இவ்வகை சேனைகள் யாவும் ஏழ் பெரும்
பவ்வமும் ஒரு வழி படர்ந்ததே என
அவ்வயில் போந்திட அமரை முன்னியே
தெவ்வடும் அரி முகன் சேறல் மேயினான்.
51
   
6864.
சேரலர் ஆவி கொள் சீய முகத்தோன்
பேர் அனிகத்தொடு பேர்ந்திடல் காணூஉ
வாரிச மேலவன் வாசவன் வானோர்
ஆரும் வெரீஇயினர் அச்சம் அடைந்தார்.
52
   
6865.
செய்ய கரத்தினர் சிந்தை வியர்த்தே
மெய்யல சுற்றிட மேல்துகில் சோர
ஐயுறும் எல்லையில் ஆகம் இரைப்ப
ஒய் என யாவரும் ஓடினர் போனார்.
53
   
6866.
ஆவது ஒர் பாசறை ஆலய வைப்பில்
தேவர்கள் ஈண்டு உறு சிற்சபை தன்னில்
மேவரு வேல் படை விண்ணவன் முன் போய்ப்
பூவடி தாழ்ந்து புகன்றிடு கின்றார்.
54
   
6867.
ஆயிரம் ஆன அகன் தலை கொண்டான்
ஆயிரம் ஆயிரம் அங்கை படைத்தான்
ஆயிர மேற்படும் அண்டமும் வென்றான்
ஆயிரம் யோசனை யாவுயர் மெய்யான்.
55
   
6868.
நெஞ்சில் எவர்க்கும் நினைப்பு அரிதாகும்
வஞ்சமும் மாயையின் வன்மையும் வல்லோன்
எஞ்சலில் வன்மையன் இவ்வுலகு எலாம்
துஞ்சினும் ஆருயிர் துஞ்சுதல் இல்லோன்.
56
   
6869.
ஓங்கல் இனங்கள் உவாத் தொகை நாகம்
பாங்கு அமராமை பரித்திடல் மாற்றி
ஈங்கு உலகங்கள் எவற்றையும் ஓர் நாள்
ஆங்கு ஒரு செங்கையில் ஆற்றிய தொல்லோன்.
57
   
6870.
பாந்தள் புனைந்த பராபர மூர்த்தி
ஈந்தது மாற்றலர் எல்லை இலோரைக்
காய்ந்து உயிர் உண்டு கறைப் பெரு நீத்தம்
தோய்ந்திடு கின்றது ஒர் சூலம் எடுத்தான்.
58
   
6871.
எண் திசை மேதினி ஏழ்பிலம் ஏனை
விண் தலம் அன்னதன் மேல் படும் எல்லை
அண்டம் அனைத்தும் ஓர் அங்கையில் வாரி
உண்டு உமிழ் கின்றது ஒர் வன்மையும் உள்ளோன்.
59
   
6872.
தூக்கு ஒரு பால் வலி தூங்கு உற ஓர் பால்
மேக்கு உயர் கோல் என மேதினிப் பாங்கர்
தேக் கெறி வேலைகள் சிந்தி விசும்பில்
தாக்கு உறவே நடை தந்திடு தாளான்.
60
   
6873.
தண்டம் இது என்று தருக்கின் எடுத்தே
அண்ட கடாகம் அதன் புடை மோத
நுண்டுகள் ஆதலும் நொய்து இது வென்றே
விண் தொடு மேருவை மீளவும் வைத்தோன்.
61
   
6874.
மாசறு நேமி வடாது புலத்தின்
ஆசுரம் என்னும் அகன் பதி வாழ்வோன்
வீசிடின் எவ்வுலகத்தையும் வீக்கும்
பாசம் இரண்டு பரித்திடு கையான்.
62
   
6875.
துங்கம் அது ஆகிய சூர் துணை ஆனோன்
அங்கு அவரின் பெரிது ஆற்றல் படைத்தோன்
நங்களின் நங்களை நாளும் நலித்தோன்
சிங்க முகா சுரன் ஆகிய தீயோன்.
63
   
6876.
அந்தம் இலா அவனி கக்கடல் சூழ
வெந் திறலோடு வியன் சமர் ஆற்ற
வந்தனன் மற்றவன் மன் உயிர் மாற்றி
எந்தை அளித்து அருள் எங்களை என்றார்.
64
   
6877.
அன்னதை ஓர்தலும் ஆறு முகேசன்
தன் அயல் நின்றிடு தாவறும் ஓதை
மன்னனை நோக்கி நம் வாலிய தேரை
முன் இவண் உய்க்குதி என்று மொழிந்தான்.
65
   
6878.
தீட்டிய வேல் படை செங்கை படைத்தோன்
மாட்டுற நின்ற வயம்புனை மொய்ம்பன்
கேட்டனன் எந்தை கெழீஇயின முன் போய்த்
தாட்டுணை வீழ்ந்து இதுசாற்றுதல் உற்றான்.
66
   
6879.
தந் நிகர் அற்ற சயம்புனை வீரர்
முன் உறு தானைகள் மொய்த்திட யான் போய்
ஒன்னலன் ஆவியை உண்டு இவண் மீள்வன்
என்னை விடுக்குதி எந்தையை என்றான்.
67
   
6880.
ஆண்டகை மூரல் ஒடு அம்மொழி கேளா
மாண்டிட வந்திடு மாற்றலன் வெம்போர்
வேண்டினை நன்று விடுத்தனம் முன் நீ
ஈண்டு உள தானையொடு ஏகுதி என்றான்.
68
   
6881.
என்றலும் வீரன் எழுந்து கை கூப்பி
வென்றி கொள் சாரதர் மெய்க்கிளை சூழ
மன்றம் அகன்று மணிக் கடை நண்ணி
ஒன்று தன் மாளிகை ஊடு புகுந்தான்.
69
   
6882.
நேர் முகம் ஆன நிசாசரர் தம் மேல்
கூர் முக வாளி குணிப்பில கோடி
ஓர் முகமாய் உலவாது உமிழ் நீரால்
கார் முகம் ஆயது ஒர் கார் முகம் கொண்டான்.
70
   
6883.
போது உறழ் அங்குலி புட்டில் செறித்தான்
கோதை அது ஒன்று கொடுங்கை பிணித்தான்
ஏதம் இல் சாலிகை யாக்கையின் இட்டான்
மேதகு தூணி வெரிந் புடை யாத்தான்.
71
   
6884.
மிக்கு உறு தெய்வ வியன் படை முற்றும்
தொக்குறவே கொடு தும்பை தரித்துச்
செக்கரின் விஞ்சிய செய்யது ஒர் வையம்
புக்கனன் வல்லை புறம் கடை வந்தான்.
72
   
6885.
எண்மர் இலக்கர்கள் இச்செயல் காணா
வண்மை தரும் படை மாட்சிமை எய்தித்
திண்மை உறும் தமது தேர்களில் ஏறி
அண்மினர் வீரனை ஆர்ப்பொடு சூழ்ந்தார்.
73
   
6886.
மேல் நிகழ் ஆயிரம் வெள்ளம் அது ஆகும்
சேனை எழுந்து செறிந்து பிறங்கல்
வான் உயர் தாரு வயப்படை பற்றித்
தானவர் கேசரி தன் புடை வந்த.
74
   
6887.
எறிந்தன பல் இயம் ஈண்டிய தானை
செறிந்தன மாண் கொடி செற்றின பூழி
அறந்தலை நின்றவன் அன்னது நோக்கிப்
பறந்தலை ஒல்லை படர்ந்திடல் உற்றான்.
75
   
6888.
ஆரும் வியப்பு உறும் ஆயிர வெள்ளம்
பாரிடர் தானை படைக்கு இறை ஆனோர்
சாருறு கேளிர்கள் தன்னொடு செல்ல
வீரன் அடைந்தனன் வெஞ்சமர் எல்லை.
76
   
6889.
ஆனதொர் காலையில் ஆளரி வெய்யோன்
சேனையும் வந்து செறிந்தது பூதர்
தானையும் அங்கு எதிர் சார்ந்தது கங்கை
வானதி சேர் தரும் வாரிதியே போல்.
77
   
6890.
கோடு புலம்பின கொக்கரை ஆர்த்த
மோடு கொள் பேரி முழங்கின பீலிக்
காடு தழங்கின கண்டை கலித்த
ஆடு பதாகைகள் ஆர்த்தன அன்றே.
78
   
6891.
தேர் ஒலி செய்தன திண் திறல் மாவின்
தார் ஒலி செய்தன தந்தியின் ஈட்டம்
பேரொலி செய்த பெருங் கடலோடும்
கார் ஒலி செய்திடு காட்சியது என்ன.
79
   
6892.
அந்த வேலையின் முருகவேள் தானையோர் அணுகி
முந்து வெஞ்சமர் முயன்றனர் அது கண்டு முனிந்து
சுந்தரம் திகழ் சிங்க மா முகன் படைத் தொல்லோர்
தந்தி தேர் பரி அணியொடும் போர் செயச் சார்ந்தார்.
80
   
6893.
தண்டம் ஓச்சினர் கணிச்சிகள் ஓச்சினர் தடக்கைப்
பிண்டி பாலங்கள் வீசினர் தோமரம் பெய்தார்
கொண்டலாம் எனத் தனித் தனி வார் சிலை குனித்துத்
துண்ட வெம் கணை துரந்தனர் தானவத் தொகையோர்.
81
   
6894.
விரைகள் வீசிய மலர்த்தரு வீசிய விண்தோய்
வரைகள் வீசிய தண்டெழு வீசிய மழுவின்
நிரைகள் வீசிய நேமியின் நிரந்த பல் வளனும்
திரைகள் வீசியதாம் எனப் பூதர் தம் சேனை.
82
   
6895.
வரங்கள் சிந்தினர் வன்மைகள் சிந்தினர் வயத்தாள்
கரங்கள் சிந்தினர் புயமலை சிந்தினர் கலன் சேர்
உரங்கள் சிந்தினர் மணி முடி சிந்தினர் உருளும்
சிரங்கள் சிந்தினர் அவுணரும் பூதரில் சிலரும்.
83
   
6896.
வருதி நீ எனத் தனித் தனி இகல் செயும் மறவோர்
கருதியே அடும் களத்தினில் அவர் உடல் காலும்
குருதி ஓடியே எங்கணும் பரத்தலில் கொடுந்தேர்ப்
பரிதி ஓடிய குடதிசை நிகர்த்தது படியே.
84
   
6897.
கொலை செறிந்திடும் பூதரும் அவுணரும் கொடும் போர்
நிலை செறிந்திடு களத்து இடை நீடு செந்நீரின்
அலை செறிந்த ஊன் செறிந்தன அடு களே வரத்து
மலை செறிந்தன செறிந்தன கழுகுடன் மண்ணை.
85
   
6898.
வெற்பு உறழ் தகுவர் சேனை வெள்ளமும் கணத்து                                    உளாரும்
தற்பமொடு எதிர்ந்து இவ்வாறு சமர் புரிந்திட்ட எல்லை
வற்புடன் அவுணன் தானை மள்ளர் வந்து அடர்ப்ப                                    மாய்ந்து
முற்படுகின்ற தூசிப் பூதர்கள் முரியல் உற்றார்.
86
   
6899.
செல் உறழ் பகுவாய் வீரர் சிதைந்து உழிப் பூதர் தம்முள்
கல் உறழ் மொய்ம்பிற் சிங்கன் கனன்று ஒரு தண்டம்                                     ஏந்திப்
பல் உறு தலைகள் சிந்தப் படிமிசை வீட்டிப் பானாள்
அல் உறு மதிபோல் நேரும் அவுணரை அடர்த்துச்                                     சென்றான்.
87
   
6900.
அங்கு அவன் செல்லும் வேலை அவுணரில் ஒருவன் நேமி
சங்கொடு தரித்தோன் அன்னான் தசமுகன் என்னும்                                    பேரோன்
எங்கு நீ போதி நில் என்று எதிர் உறச் சென்று வாகைச்
செங்கை வார் சிலையைக் கோட்டித் திருந்து நாண் ஒலி                                    செய்திட்டான்.
88
   
6901.
விட்டனன் மழை என விசிகம் ஆங்கு அவை
பட்டிடத் தண்டினால் படியில் வீட்டியே
அட்டு பூந் தாரினான் அடி ஒன்றால் அவன்
இட்டது ஓர் கவசமும் இறுத்து நீக்கவே.
89
   
6902.
கூற்று உறழ் தசமுகன் கொடியன் ஆவியை
மாற்றுவன் இவண் என வலிதின் ஓர் கதை
ஆற்றலின் விடுத்தலும் அரியின் பேரினான்
ஏற்றனன் மார்பு தண்டிற்று வீழ்ந்ததே.
90
   
6903.
வீண்டது நோக்கியே வீர வீரனும்
ஈண்டி இவனே கொல் என்று எண்ணி யாம் இனிக்
காண் தகும் வல்லையேல் காத்தி யீது எனா
ஆண்டு ஒரு கணிச்சியை அவுணன் ஓச்சினான்.
91
   
6904.
மாலொடு கடவுளர் மறுகத் தீ அழல்
காலொடு போந்திடும் கடுவின் வெம்மை போல்
மேல் உறு கணிச்சியை வீரன் செங்கையின்
பாலுறு தண்டினால் படியில் வீட்டினான்.
92
   
6905.
நீக்கினன் கணிச்சியை நெடியது ஓர் கதை
போக்கினன் தன்னொடு போர் செய்கின்றவன்
தாக்கு அணங்கு அமர் சிலை தன்னைச் சின்னமே
ஆக்கினன் அவுணர்கள் அலக்கண் எய்தினார்.
93
   
6906.
சீலம் இல் தசமுகன் செயிர்த்துக் காய் கனல்
கோலம் அது ஆகிய குந்தம் ஒன்றினை
ஆலம் அது என விட அரியின் பேரினான்
மேல் உற வருவதை விரைந்து நோக்கினான்.
94
   
6907.
பூங்கழல் புனை கழல் பூத நாயகன்
ஆங்கு அது காலை ஓர் ஆழி மாப்படை
ஓங்கிய பரிதி போல் உருட்டினான் அரோ
பாங்கு உறு சாரதர் பலரும் போற்றவே.
95
   
6908.
விடுத்திடு கின்றது ஓர் வேலை ஆழி போய்ப்
படுத்தது தசமுகப் பதகன் தண்டம் ஒன்று
எடுத்தது வீசலும் இமைப்பில் எய்தியே
அடல் புனை கழலினான் ஆகத்து உற்றதே.
96
   
6909.
ஆக மேல் அடைதலும் அரியின் பேரினான்
சோகம் மேல் கொண்டு செஞ்சோரி சோர்தர
மாக மேல் செம் புனல் மாரி கான்றிடு
மேகமே யாம் என விளங்கினான் அரோ.
97
   
6910.
பரந்து இழி குருதி நீர் பருப் பதத்து இடைப்
பிரிந்திடு நதி எனப் பெருக ஓடியே
அரும் திறல் தசமுகன் ஆகத்து ஓர் கையால்
விரைந்தனன் புடைத்தலும் வீழ்ந்து பொன்றினான்.
98
   
6911.
ஐந்திரு தலை உடை அவுணன் மாய்தலும்
தந்திர அவுணர் தம் தானை யாவையும்
கந்தடு தோள் உடைக் கணங்கள் மேல் செலா
முந்துறு பேர் அமர் முயல்வது ஆயினார்.
99
   
6912.
அவ்வழி இலக்கரில் அநகன் என்பவன்
மை வழி சிந்தையன் மடித்த வாயினன்
கை வழி வில்லினன் கடியன் சேனையை
எவ்வழி போதிர் என்று எதிர்ந்து தாக்கினான்.
100
   
6913.
வெலற்கு அரும் வில் உமிழ் வெங்கண் வாளியால்
அலைக்குநர் ஆகியே அடல் செய் மள்ளர் தம்
தலைக் குவை சிந்தியே தரையில் வீட்டியே
கலக்கினன் திரைக் கடல் கடைந்த மால் என.
101
   
6914.
ஆடியல் தானையான் அநகன் என்பவன்
சாடினன் திரிதலுந் தகுவர் யாவரும்
ஓடினர் அன்னதை உருத்து நோக்கினான்
பீடு உறு துன்முகன் என்னும் பேரினான்.
102
   
6915.
தன் முன் ஓடிய அவுணரை நோக்கி நீர் தளரேல்
மின் மினிக் குலம் கதிரினை வெல்லுமோ வெகுளின்
என் முன் நிற்பரோ பூதர்கள் செருத் தொழில் இழந்தார்
நின்மின் நின்மின் என்று உரைக்கவும் இறையும்

                                      நின்றிலரால்.
103
   
6916.
தானை பட்டன நோக்கினன் துன்முகன் தழல் மேல்
ஆனெய் பட்டென முனிந்தனன் பூதர்கள் அந்தோ
சேனை பட்டது என்று அலமரக் குனித்தனன் சிலையைச்
சோனை பட்டனவாம் என வடிக்கணை சொரிந்தான்.
104
   
6917.
சொரிந்த காலையில் பூதரும் பேர் அமர் தொடங்கி
விரிந்த வெற்பொடு தருக்களும் படைகளும் விடுப்ப
எரிந்து போயின சிற்சில இற்றவும் சிலவால்
நெரிந்து போயின சிற்சில எதிர் எதிர் நெருக்க.
105
   
6918.
ஈறு செய்தில கணை மழை இவரொடும் யானே
மாறு கொள்வதும் தனிமையில் அரிதென வலியோன்
ஊறு சேர்தரு மாயையால் ஒவ்வோர் பூதர்க்கும்
நூறு நூறு உருக் கொண்டு தாக்கு உற்றனன் நொடிப்பில்.
106
   
6919.
ஆய காலையில் துன்முகன் வடிவமும் அடரும்
தீ எனக் கிளர் சாரதரொடு செருச் செய்யும்
ஏய கொற்றமும் நோக்கினன் விம்மினன் வெகுண்டான்
மாயை கொல் என உன்னினன் வாகை அம் கதிரோன்.
107
   
6920.
மாற்று கின்றது எப் படைக்கலமோ என மதியாத்
தேற்று கின்றது ஓர் போதகப் பெரும் படை செலுத்தக்
காற்றின் முன்னுறு பூளையின் உரு எலாம் கரப்பக்
கூற்றம் அன்னது ஓர் துன்முகன் ஒருவனாய்க் கொதித்தான்.
108
   
6921.
கொதித்த துன் முகன் தன் பெருஞ் சிலையினைக் கோட்டி
நுதித் தனிக் கணை ஆயிரம் ஒரு தொடை நூக்க
மதித்து வீரன் தன் ஒரு பெருஞ் சிலையினை வாங்கிக்
கதித்த நோன் கணை ஆயிரம் சிதறினன் கடிதில்.
109
   
6922.
ஆயிரம் சரத்தால் அவன் விட்ட கோல் அறுத்துத்
தீயவன் தனிச் சிலையை ஏழ் வாளியால் சிந்தி
மேய சாலிகை தன்னை ஓர் பகழியால் வீட்டிக்
காயம் எங்கணும் அழுத்தினன் அளவை தீர் கணைகள்.
110
   
6923.
அழுந்திடு வடிக்கணை யாகம் போழ்தலும்
எழுந்திடு குருதிநீர் இரைத்துச் சென்றிடக்
கொழுந்தழல் புரைவது ஓர் கொடிய துன்முகன்
விழுந்தனன் மயங்கினன் விளிந்து உளான் என.
111
   
6924.
ஊறிய குருதியன் உறுகண் எய்துவான்
தேறினன் ஒல்லையில் செருவில் நேர்து மேல்
ஈறு இனி வந்திடும் இரிந்திட்டு உய்வதே
ஆறு என உன்னினன் அமருக்கு அஞ்சுவான்.
112
   
6925.
சிந்தையின் வழிபடல் செய்து மாயையின்
மந்திரம் ஒன்றினை மரபின் உன்னுறா
எந்திரத் தேரினும் எழுந்து துன்முகன்
அந்தரத்து ஆற்றினால் அருவில் போயினான்.
113
   
6926.
ஆயின காலையில் அடல் வெம் பூதரில்
தீயினை முருக்கு உறும் சீற்றத்தோர் சிலர்
மாயையின் வலியினன் வஞ்சன் வல்லையில்
போயினன் பற்றுதும் போதுவீர் என்றார்.
114
   
6927.
ஆங்கு அது கேட்டிடும் ஆடல் வெய்யவன்
ஈங்கு இது தவிருதிர் இகலுக்கு அஞ்சியே
நீங்கினன் ஒருவனை நெருக்கி ஆருயிர்
வாங்குதல் புகழதோ வலியின் பாலதோ.
115
   
6928.
ஓடினர் தம்மையும் உற்றுத் தாள் மலர்
சூடினர் தம்மையும் தொழுத கையராய்
வாடினர் தம்மையும் வலி இலோரையும்
சாடினர் அல்லரோ நவைக் கண் தங்குவார்.
116
   
6929.
வீரரை அல்லரை வெகுளலீர் எனப்
பேர் அடல் வெய்யவன் பேச அன்னது
காரியமே எனக் கருத்தில் உன்னியே
சாரதர் தொடர்ந்திடும் தன்மை நீங்கினார்.
117
   
6930.
அந்நேர் காணா ஆளரி மாமுக அடல் வெய்யோன்
இன்னே நம் தம் தானைகள் எல்லாம் இரிவாகும்
பின்னே நிற்றல் ஆவது என் என்னாப் பெயர்குற்றே
முன்னே சென்றான் பூதரை நோக்கி முனிகின்றான்.
118
   
6931.
நந்தா ஆற்றல் சிங்க முகத்தோன் அவன் நம்முன்
வந்தான் யாமே மாற்றுதும் அன்னான் வலி என்னாக்
கொந்தார் தாருச் சூழலும் வெற்பும் கொண்டு ஏகி
முந்தா நின்ற பூதர்கள் வெம்போர் முயல் கின்றார்.
119
   
6932.
மட்டார் தொங்கற் சிங்க முகன் மேல் மதி தோய்வான்
எட்டா நின்ற வெற்பு உள யாவும் எறிகின்றார்
விட்டார் தாருச் சூழல் கணிச்சி வீசுற்றார்
தொட்டார் சூலம் தண்டு எழு நாஞ்சில் சொரிகின்றார்.
120
   
6933.
சொரியும் காலைத் தீ எழ நோக்கிச் சுடர் வேலோன்
எரியும் காலும் கால உயிர்ப்ப எதிர் செல்லாக்
கரியும் தீயும் பூழியது ஆகும் ககனத்தே
திரியும் மீளும் அப்படை செய்யும் செயல் ஈதால்.
121
   
6934.
அன்னோ அன்னோ நம் படை எல்லாம் அடல் வீரன்
முன்னோ செல்லா தீய உயிர்ப்பின் முடிவாம் ஆல்
பின்னே செய்வது ஒன்று இலை யாம் பேர் அமர் செய்வது
என்னோ என்னோ யாரினும் மேலான் இவன் என்றார்.
122
   
6935.
என்றார் பூதர் சீற்றம் விளைத்தார் யாரும் போய்க்
குன்றாய் அங்கண் உற்றன யாவும் குழுவுற்ற
வன் தாருக்கள் ஆனவும் மாண் கைக் கொடு தொட்டுக்
சென்றார் ஆர்த்தார் சீய முகன் மேல் செல உய்த்தார்.
123
   
6936.
கைக் கொடு சாரத கணங்கள் ஆர்த்து உடன்
உய்க்குறு வரையெலாம் ஒருங்கு சென்றிடாத்
திக்கு உள வரைப்பு எலாம் செறிந்து ஞாயிறு
மெய்க்கதிர் வழங்கு உறும் விசும்பு தூர்த்தவே.
124
   
6937.
கல்லகத் தொகுதிகள் ககனம் தூர்த்துழி
எல்லுடைச் செங்கதிர் இரவி மாய்ந்திட
ஒல் எனத் திமிரம் வந்து உறலும் நோக்கியே
அல் எனத் குடம்பையுள் அடைவ புள் எலாம்.
125
   
6938.
வெற்பின் நிரைத்தலும் மறைய வெய்யவன்
எற்படு முன்னரே இரவி ஓடினான்
அற்புதம் அற்புதம் அடைந்தது அம்புயன்
கற்பம் என்று அறிஞரும் கலக்கம் எய்தினார்.
126
   
6939.
போற்றலன் தன் மிசைப் பூதர் தூண்டிய
மாற்றரும் பதலைகள் மலிந்து வான் படர்
ஆற்றினை அடைத்தலும் அஞ்சி நின்றனன்
காற்றினும் விரைந்து செல் கதிரின் பண்ணவன்.
127
   
6940.
இன்று காண் அவுணரால் இடர் உழந்தனம்
அன்றியும் பூதர் ஈண்டு அடுக்கல் வீசினார்
நின்றிடின் வருந்துதும் நிகழ்ச்சி தேர் எலாம்
சென்றிடல் துணிவு எனத் தேவர் ஓடினார்.
128
   
6941.
செருவலி வீரர்கள் செலுத்தச் சேண் படர்
பருவரை இடை இடை பயின்று சுற்றிய
கரு முகில் உண்ட நீர் கான்று தம் வயின்
உரும் இடி எங்கணும் உகுத்து வீழ்ந்தவே.
129
   
6942.
வெதிர் படு சிலம்பினும் வழுக்கி வீழ்ந்திடும்
அதிர் குரல் அரி இனம் அண்டச் செற்றின
எதிர் உறு தகுவனை இனம் என்று உன்னியே
முதிர் தரு காதலான் முன் உற்றால் என.
130
   
6943.
மைம் மலை இடை விராய் வதிந்த மோட்டுடைக்
கைம் மலை அரற்றியே கவிழ்வ காசிபன்
செம் மலை அரியென நோக்கித் தேம்பியே
விம்மலை எய்தியே வீழ்வது என்னவே.
131
   
6944.
பொற்றையின் மரங்களில் பொதிந்த கேசரம்
வெற்றி கொள் அரிமுகன் தொடையின் மேவின
விட்டவர் தம்மை விட்டு ஏதிலார் தமைப்
பற்றொடு கலந்திடு பரத்தை மாதர் போல்.
132
   
6945.
எறிந்திடு வரைகள் தம் தம்மில் எற்றிடச்
செறிந்திடு தீங்கனல் சென்ற திக்கு எலாம்
பொறிந்தன புகைந்தன பொரிதல் உற்றன
மறிந்தன உலந்தன மன் உயிர்த் தொகை.
133
   
6946.
ஆயின பல்லியல் அடையப் பூதர்கள்
ஏயின குன்றமும் தருவும் ஏகியே
சீய மா முகம் உடைச் செல்வன் சேர்ந்தனன்
தூயவன் கயிலையைச் சூழ்ந்த கொண்டல் போல்.
134
   
6947.
செடித்தலை எயினரில் திகழும் ஆயிரம்
முடித்தலை யான் மிசைப் பட்ட மொய்வரை
பொடித்தில இற்றில பூழி யாய்த்தில
படித்தலம் வீழ்ந்தன நொய்ய பான்மையால்.
135
   
6948.
துன்னல் பட்ட குன்று எவையும் சூர் துணை ஆனோன்
மின்னல் பட்ட மெய் இடைப் பட்டே வெற்பின் கண்
பன்னல் பட்டதாம் என வீழ்கின்றது பாரா
இன்னல் பட்டார் பூதர்கள் வானோர் ஏங்கு உற்றார்.
136
   
6949.
சீலம் புக்க பாரிடர் வெம்போர் செயல் காணூஉக்
கோலம் புக்க தேரிடை நின்றான் குப்புற்று
ஞாலம் புக்கான் பூதர்கள் தம்மை நலிதற்கு ஓர்
ஆலம் புக்கால் என்ன நடந்தான் அடல் செய்வான்.
137
   
6950.
பார்மேல் எற்றும் சிற்சிலர் தம்மைப் பகை விண்ணோர்
ஊர் மேல் எற்றும் சிற்சிலர் தம்மை உயர் பானுத்
தேர் மேல் எற்றும் சிற்சிலர் தம்மைத் திரை சேர் முந்
நீர் மேல் எற்றும் சிற்சிலர் தம்மை நெடிது ஓச்சும்.
138
   
6951.
பற்றா நிற்கும் சிலவரை மூரல் பகுவாயில்
குற்றா நிற்கும் சிலவரை வாரிக் குழுவோடும்
சுற்றா நிற்கும் சிலவரை அண்டச் சுவரின் கண்
எற்றா நிற்கும் சிலவரை அள்ளி எறிகிற்கும்.
139
   
6952.
புண்டரிகன் கண் சிலவரை வீசும் பொரு செங்கைத்
தண்டரதன் கண் சிலவரை வீசுஞ் சதவேள்வி
அண்டமதன் கண் சிலவரை வீசும் அகிலம் சூழ்
எண் திசையின் கண் சிலவரை வீசும் இகல் பேசும்.
140
   
6953.
மால் எரி வைப்பில் பலர் தமை வீசும் வானத்தில்
கால் எரி வைப்பில் பலர் தமை வீசும் கரை தீர்ந்த
வேலைகள் முற்றும் பலர் தமை வீசும் வியன் மிக்க
ஞாலம் அனைத்தும் பலர்தமை வீசும் நனி தூர்க்கும்.
141
   
6954.
சிங்கம் கொண்ட மாமுகன் வீசும் செறிவாலே
துங்கம் கொண்ட பார் முதல் விண்ணின் துணையும் தான்
எங்கும் பூதம் ஆயின அம்மா இது கொண்டோ
அங்கங்கு எல்லாம் பூதமது என்றார் அறிவு உள்ளார்.
142
   
6955.
மிதித்துக் கொல்லும் சிற்சிலர் தம்மை மிசை உந்திப்
பதத்தில் கொல்லும் சிற்சிலர் தம்மை படிவத்தைச்
சிதைத்துக் கொல்லும் சிற்சிலர் தம்மைச் செல் என்ன
உதைத்துக் கொல்லும் சிற்சிலர் தம்மை உலவுற்றே.
143
   
6956.
விள்ளா நிற்கும் சிற்சிலர் சென்னி விரல் மேலால்
தள்ளா நிற்கும் சிற்சிலர் சென்னி தாம் உற்றக்
கிள்ளா நிற்கும் சிற்சிலர் சென்னி கிளையோடு
மள்ளா நிற்கும் சிற்சிலர் சென்னி அடுகிற்கும்.
144
   
6957.
தாக்கில் கொல்லும் ஒரு சிலர் தம்மைத் தடிகின்ற
ஊக்கில் கொல்லும் ஒரு சிலர் தம்மை உரும் ஒத்த
வாக்கில் கொல்லும் ஒரு சிலர் தம்மை மருள் உற்ற
நோக்கில் கொல்லும் ஒரு சிலர் தம்மை நொடி தன்னில்.
145
   
6958.
வாரா நிற்கும் பாரிடர் ஆசியை வாரிப் பின்
சேரா நிற்கும் வாய் தொறும் ஈண்டச் சேர்த்திட்டே
ஆரா நிற்கும் ஆர்ந்த பின் ஆக அகல் மோட்டைத்
தூரா நிற்கும் தூர்த்த பின் ஆடல் தொழில் செய்யும்.
146
   
6959.
எழுவில் கொல்லும் ஒரு சிலர் தம்மை எரிகூர் வாய்
மழுவில் கொல்லும் ஒரு சிலர் தம்மை வய நாஞ்சில்
கொழுவில் கொல்லும் ஒரு சிலர் தம்மைக் கூர் சூலக்
கழுவில் கொல்லும் ஒரு சிலர் தம்மைக் கடிது ஓடி.
147
   
6960.
கரத்தில் கொல்லும் சிலவரை நோன் கார்முகம் உய்க்கும்
சரத்தில் கொல்லும் சிலவரை அம் பொன் தண்டத்தின்
உரத்தில் கொல்லும் சிலவரை அங்கண் ஒசிக்கின்ற
மரத்தில் கொல்லும் சிலவரை மண் மீதினில் வீட்டும்.
148
   
6961.
தேர் மேல் ஆனோ விண் உலகு ஆனோ திசையானோ
பார் மேல் ஆனோ வார் கடலானோ பதுமத்தோன்
ஊர்மேல் ஆனோ மேருவின் ஆனோ உயர் பூதர்
போர் மேல் ஆனோ தீயவன் என்றார் புலவோர்கள்.
149
   
6962.
அற்றார் தாள்கள் கைகள் இழந்தார் அடு திண் தோள்
இற்றார் சென்னி சிந்தினர் துண்டம் இலர் ஆனார்
பெற்றார் மார்பம் விண்டனர் வீழ்ந்து புரள் கின்றார்
செற்றார் தம்மை அட்டிடு பூதத்திறல் வீரர்.
150
   
6963.
சொரியா நின்ற சோரியர் ஆற்றத் துயர் மேலார்
மரியா நின்றார் எண்ணிலரால் மற்றவர் தம்முள்
பிரியா நின்ற சென்னியர் பல்லோர் பெயர்வு எய்தித்
திரியா நின்றார் ஆடு உறுகின்ற செயல் கண்டார்.
151
   
6964.
கருவந்து எய்தும் ஆருயிர் முற்றும் கவிழ்கின்ற
பருவம் தன்னில் தீயவன் உண்ணும் படியே போல்
செருவந்து உற்ற சீய முகத்துத் திறல் மேலோன்
ஒருவன் தானே நின்று அடுகின்றான் உலவாதான்.
152
   
6965.
அந்நீராகிப் பூதரை வெய்யோன் அடுகாலைச்
செந்நீர் நீத்தம் ஆயிடை தோறும் சென்று ஈண்டித்
தொல் நீர் வேலை புக்குவர் நீக்கித் துவராக்கி
முந்நீர் என்னும் தொன்மையை வேறாய் முடிவித்த.
153
   
6966.
ஆடா நின்றான் இத்திறம் வெய்யோன் அளவு இல்லார்
வீடா நின்றார் கண்டனர் வெம் பூதர்க்கு எல்லாம்
கேடா நின்றான் இங்கு இவன் என்னாக் கிளையோடும்
ஓடா நின்றார் வானவர் எல்லாம் உலைவு உற்றார்.
154
   
6967.
துன்னா நின்ற தொன் மரம் வெற்பின் தொகை வீசி
முன்னாகு உற்ற பூதர்கள் யாரும் முடிவாகக்
ஒன்னார் சிங்க மா முகன் அட்டே குலவு உற்று
மின்னார் செம் பொன் மேரு எனும் தேர் மிசை புக்கான்.
155
   
6968.
அவ்வேலை அன்னான் அமர் செய் விளையாடல் பாரா
மை வேலை போல்வான் அழல் கண்ணன் மனம் கனன்று
செவ்வே எதிர் புக்கு அரிமா முகன் சீறி வெய்யோய்
இவ் வேலை உன்னை முடிப்பன் இகல் முற்றி என்றான்.
156
   
6969.
என்று அங்கு உரை செய்திடு பூதனை ஏந்தல் நோக்கி
ஒன்றும் சிறிது உன்னலை அச்சமும் முற்று இலாதாய்
நின்று இங்கு இது கூறினை என்னின் நினக்கு நேரார்
நன்று உன் வலி என்று நகைத்தனன் நாகர் அஞ்ச.
157
   
6970.
அன்னான் நகை செய்தது காண்டலும் ஆழி நாப்பட்
கொன்னார் தழல் என்ன வெகுண்டனன் கூளி வேந்தன்
நின் ஆடலை நீக்குவன் காணுதி நீயும் என்று ஓர்
மின்னார் கழு முட்படை ஆங்கு அவன் மீது விட்டான்.
158
   
6971.
கூற்று ஆனவன் ஏவ வரும் படைக் கொள்கை நோக்கி
மாற்று ஆனவன் ஓர் படையும் வழங்காது நின்றான்
தோற்றான் என வானவர் ஆர்த்தனர் சூல மார்பின்
ஏற்றான் வரை மேல் படு கண்டகத்து இற்றது அன்றே.
159
   
6972.
உறுகின்ற சூலப் படை ஊற்றமும் ஓங்கல் மார்பத்து
இறுகின்றதும் அங்கு அவன் நின்றதும் யாவும் நோக்கிப்
பெறுகின்றவரில் இவன் பெற்றது பேறது என்னா
மறுகின்ற நெஞ்சன் ஒரு தண்டினை வல்லை உய்த்தான்.
160
   
6973.
உய்த்தலும் அனைய தண்டு உரும் உற்றால் என
அத்தலை அரிமுகத்து அவுணன் சாரதி
மெய்த்தலை கோடலும் வெகுண்டு நோக்கியே
கைத்தலம் இருந்ததோர் கதையை ஏவினான்.
161
   
6974.
மாவலி சேர் தரு மடங்கல் மா முகன்
ஏவிய வெங்கதை இமைப்பிற் பூதர்கள்
காவலன் அகல மேல் கலந்து தாக்கிற்றால்
ஓ என அனையனும் உளம் வருந்தவே.
162
   
6975.
செயிர் அறத் திருத்திய செம்பொன் குன்றின்மேல்
வயிர மெய்ப் படை அது வந்து ஆற்றாதலும்
அயிர் உறப் புனை கலன் ஆகம் கீண்டிட
உயிரினுக்கு அவ்வழி உலைவு மிக்கதே.
163
   
6976.
தாக்கிய வேலையில் தழலின் நாட்டத்தான்
மூக்கினின் மார்பினின் முழங்கு வாயினில்
தேக்கிய குருதி நீர் சிந்து கின்றது
மேக்கு உயர் கனல் மழை விரித்த தாரை போல்.
164
   
6977.
மறந்தனன் தொல் உணர்வு எனினும் வன் திறல்
துறந்திலன் வெவ்வழல் சொரியும் கண்ணினான்
சிறந்திடும் ஊசலில் திரிந்த தன் உயிர்
இறந்திலன் அவற்கு ஒரு கூற்றம் இன்மையால்.
165
   
6978.
ஆரழன் முகத்தவன் அயர்வு உற்று அவ்வழிச்
சோர்வொடு நிற்றலும் சூரன் பின் வரும்
வீரம் அது உடையவன் வேறு ஒர் பாகனைத்
தேர் இடை நிறுவினன் சேறல் மேயினான்.
166
   
6979.
மூண்டு அமர் இயற்றச் சீய முகத்தவன் வரலும் நோக்கித்
தூண்டிய வெகுளி மேலோன் சுமாலி என்று உரைக்கும்
                                       தொல்லோன்
நீண்டிடு மேரு என்ன நிவந்தது ஓர் அடுக்கல் தன்னைக்
ஈண்டு அரி முகன் மேல் செல்லக் கிளர்ந்தனன் வீசி
                                       ஆர்த்தான்.
167
   
6980.
மற்று அவன் விடுத்த குன்றை வாளரி முகத்து வீரன்
பற்றினன் ஒரு தன் கையால் பந்து என மீட்டும் உந்தப்
பொற்றட மார்பில் தாக்கப் புலம்பியே சுமாலி என்பான்
செற்றமும் தானும் ஆகச் செயல் அற்று நிலத்தன்
                                        ஆனான்.
168
   
6981.
நிலந்தனில் சுமாலி வீழ நெஞ்சினம் திருகி அங்கைத்
தலந் தனில் கதை ஒன்று ஏந்தித் தண்டி போய் அவுணன்
                                        தேரில்
கலந்தவன் உரத்தில் செல்லப் புடைத்தலும் காமம் தன்னில்
புலந்தவன் தனக்குக் காட்டும் உணர்வு எனப் பொடித்தது
                                        அன்றே.
169
4040.
இனைத்த வாகிய பெருவளம் எல்லையின்றி இவற்றை
மனத்தில் நாடினும் பல பகல் செல்லும் ஆல் மனக்கு
நுனித்து நன்று நன்று ஆய்ந்து இவை முழுவதும் நோக்க
நினைத்துளேன் எனின் இங்கு இது பொழுதினில் நிரம்பா.
91
   
6982.
பொடித்தலும் வயிரத் தண்டம் பூதரின் முதல்வன்                                       பொங்கிக்
கொடித் தடம் தேர் மேல் நின்ற கோளரி முகத்தன் தன்
                                      மேல்
இடித்து எனக் கையால் எற்ற எரி எழ நகைத்துத்
                                      தன்னோர்
அடித்தலம் கொண்டு தள்ளி அமரர்கள் வெருவ
                                      ஆர்த்தான்.
170
   
6983.
தாளினால் உந்தி விட்ட தண்டி சேண் எழுந்து மெல்ல
மீளுவான் அடுவன் என்னும் வெகுளியான் உயிர்ப்பு வீங்கி
யாளி சேர் வதனத்து அண்ணல் ஆடக வயிரக் குன்றத்
தோளின் மேல் குப்புற்றே தன் அடிகொடு துகைக்கல்
                                        உற்றான்.
171
   
6984.
ஆடிய தானை மன்னன் ஆயிரத்து இரட்டி தோளும்
ஓடினன் துகைத்துத் தாளும் ஓய்ந்தனன் அவற்றை நோக்கி
நாடினன் திரியா நின்றான் நாக நீள் குடுமிக் குன்றில்
கோடு உயர் பொதும்பர் தன்னில் பாய்ந்திடும் குரங்கு
                                      போல்வான்.
172
   
6985.
குரங்குளைக் குடுமிச் சூட்டுக் கோளரி முகத்து வெய்யோன்
கரங்களில் பாயும் அங்கண் கலந்திடு படையில் பாயும்
சிரங்களில் பாயும் மீளச் செவிதொறும் பாயும் பூந்தண்
மரங்களில் பாய்ந்து செல்லும் மணிச் சிறை வண்டும்
                                       போன்றான்.
173
   
6986.
செறிந்திடு கரமும் தோளும் சென்னியும் பூதன் செல்வது
அறிந்திலன் சிறியன் போலும் அரிமுகத்து அவுணன்
                                       நம்மேல்
எறிந்து உலவுற்றுச் சூழும் ஈகொல் என்று ஒரு தன்
                                       கையால்
சொறிந்தனன் சிறிது பின்னர்த் தண்டியைத் துடைத்து
                                       விட்டான்.
174
   
6987.
ஒரு தனிக் கரத்தால் தீயோன் உருட்டினன் துடைப்பத்                                        தண்டி
பெரிது நொந்து ஆற்றல் போகிப் பின்றினன் பெயர்ந்து
                                       போனான்
தெரி தரு பூதர் அஞ்சிச் சிந்தினர் செயல் ஒன்று இல்லார்
அரிது செய்தவமே அல்லால் ஆற்றல் பெற்றிடுவது
                                       உண்டோ.
175
   
6988.
பூதர்கள் இரிவு நோக்கிப் பொருதிறல் இலக்கத்து எட்டு
மேதகு வீரர் யாரும் வெய்யதேர் கடவிச் சென்று
தீது அறு சிலைகள் வாங்கிச் சீயமா முகவற் சுற்றித்
தாது அவிழ் மலர் பெய்து என்னச் சரமழை பொழிதல்
                                        உற்றார்.
176
   
6989.
பொழிந்திடு பகழி எல்லாம் புகுந்திடு சுவடு இன்றாகி
அழிந்ததும் இன்றி முன்போல் அவன் புடை வீழ நோக்கி
ஒழிந்தது எம் ஆற்றல் என்னா உட்கினர் ஒரு தன்
                                       தேரின்
இழிந்தனன் அவுணர் கோமான் இடிபடத் தெழித்துச்
                                       சென்றான்.
177
   
6990.
எடுத்தனன் சிலவர் தேரை எறிந்தனன் ஒன்றொடு ஒன்றின்
அடுத்தனன் சிலவர் தேரை அள்ளினன் அங்கை தன்னால்
ஒடித்தனன் சிலவர் தேரை உதைத்தனன் சிலவர் தேரைப்
பொடித்தனன் சிலவர் தேரைப் புதைத்தனன் சிலவர்
                                        தேரை.
178
   
6991.
இத்திற மடங்கல் வீரன் அடுதலும் இலக்கத்து எண்மர்
தத்தமது உயிரே தாங்கித் தனுவொடு படைகள் மானம்
மெய்த்திறல் சிந்திச் சாய்ந்தார் மேலவன் தேர் மேல்
                                        புக்கான்
அத்தலை நின்ற வீரவாகு மற்று அதனைக் கண்டான்.
179
   
6992.
ஆளரி அனைய வீரன் அது கண்டு பூதர் தம்முள்
கோளரி முகத்து வெய்யோன் கொன்றது ஓர் பாதி
                                      உண்டால்
தாள் உடை வில்லினாரும் சமர் இடத்து அழிந்தார் இந்த
நாளினின் முடியும் போலும் நம் பெரும் படையும்
                                      என்றான்.
180
   
6993.
அடல் பெறு புயத்து வள்ளல் ஆடக வரை போல் உள்ள
கொடு மரம் ஆனது ஒன்றைக் கோட்டினன் சினம் மேல்
                                       கொண்டான்
விடம் உறு தறுகண் கேது விரைந்து ஒரு பாங்கர் புக்கு
நடு எலாம் கவரத் தோன்று நாகு இளம் கதிரே போல.
181
   
6994.
வாங்கிய சிலையில் பூட்டி வடிக்கணை அநந்த கோடி
தூங்கலின் மழை கான்று என்ன உலப்பு உறான் சொரிந்து
                                  நிற்ப
ஆங்கு எதிர் அடர்த்துப் போர் செய் அவுணர் தம்
                                  தலைகள் பாறத்
தாங்கிய படைகள் சிந்தித் தரை மிசைத் துணிந்து
                                  வீழ்ந்தார்.
182
   
6995.
பரித்தொகை முழுதும் பட்ட பாழியந் தேர்கள் பட்ட
ஒருத்தலும் பிடியும் பட்ட உலப்பிலா அவுணர் பட்டார்
பெருத்தன பிணத்தின் குன்றம் பிறங்கின பேய்கள்
                                      மொய்த்த
திரைத்து எழு சோரி நீத்தம் தெண் திரை மடுத்தது
                                      அம்மா.
183
   
6996.
தேர் எனப்பட்ட வீரர் திறம் எனப் பட்ட மாவின்
பேர் எனப் பட்ட யானைப் பெருக்கு எனப் பட்ட தம்முள்
பேர் இடை படாத எல்லாம் பொருதிரைக் குருதி வாரி
வீரனுக்கு உதவி ஆக வேலையுள் உய்த்தது அன்றே.
184
   
6997.
பேரியின் ஒலியும் தீய அவுணர்கள் பிடித்த வில்லின்
நாரியின் ஒலியும் சூழும் நால் படை ஒலியும் மாண்ட
காரியின் ஒலியும் மோட்டுக் கணங்களின் ஒலியும் செந்நீர்
வாரியின் ஒலியும் ஆகி அடுகளம் மலிந்த அன்றே.
185
   
6998.
மலைகளை அறுக்கும் வேலை வாள்களை அறுக்கும்                                       செங்கைச்
சிலைகளை அறுக்கும் வெய்யோர் திண் திறல் கொண்ட
                                      தோளின்
நிலைகளை அறுக்கும் மார்பின் நிரைகளை அறுக்கும்
                                      கோடி
தலைகளை அறுக்கும் அம்மா இளையவன் சரம் அது
                                      ஒன்றே.
186
   
6999.
காழ் உறும் அவுணர் சென்னி கரதல நெடுந்தோள் மார்பம்
வாழிய முருகன் தூதன் வாளிகள் வௌவி ஏகி
ஏழு உள கடலும் நீங்கி எண்திசைக் கிரிகள் தாவி
ஆழியந் கிரி போழ்ந்து அப்பால் அண்டமும் பிளந்து
                                        செல்லும்.
187
   
7000.
கரண்டமது ஆன செந்நீர் ஆற்றிடைக் கவிழ்ந்து மூழ்கித்
திரண்ட ஊன் வௌவி மீண்டு சிறகரை உதறுகின்ற
முரண் தகு வீரர் சென்னி மூளை புக்கு அளைந்து வாரிக்
குரண்டம் மீது என்னல் ஆன கருநிறக் கொடிகள்                                  எல்லாம்.
188
   
7001.
இவ்வகை அவுணர் தானை இறந்திட வீரவாகு
அவ்வயின் நின்று சென்று ஆங்கு அடுதலும் அதனைக்                                      கண்டார்
தெவ்வரை முருக்கும் வைவேல் சீய மா முகத்தன் மைந்தர்
ஐவரை வெல்லும் ஆற்றல் ஐம்பதிற்று இருவர் என்பார்.
189
   
7002.
சினத்தனர் இதழைப் பல்லால் தின்றனர் நம் முன்                                  வெம்போர்
வினைத் தொழில் இயற்று வானை வெய்து என அடுதும்                                  என்னா
இனத்தொடு தேர் கடாவி ஏகியே வீரன் தன் மேல்
தனித் தனி வார் வில் கோட்டிச் சரமழை சிதறல் உற்றார்.
190
   
7003.
நூற்றுவர் ஒருங்கு நேர்ந்து நோன் தலைச் சிலைகள்                                    வாங்கி
மேற்றிகழ் முகில் கான்று என்ன வீசிய விசிகம் தன்ணை
ஆற்றல் சேர் வீரன் காணா அயில் கணை அநந்தம்                                    கோடி
காற்று எனத் துரந்து மாற்றிக் கடவுளர் புகழ ஆர்த்தான்.
191
   
7004.
தொலைவு உறும் அவுணன் மைந்தன் துண் எனக் கனன்று                                       பின்னும்
கொலை உடை நெடுங்கூர் வாளி கோடி கோடிகள் நின்று                                       உய்ப்ப
வலி உடை வீரவாகு மற்றவை மாற்றி அன்னோர்
சிலையொடு தேர்கள் தம்மைச் செஞ்சரம் தூண்டி                                       வீழ்த்தான்.
192
   
7005.
தேரொடு சிலைகள் மாயச் சீயமா முகத்தன் மைந்தர்
வீரனை எதிர்ந்து வில்லால் வென்றிடல் அரிது போலும்
கூர் உடை நுதி வாள் போரில் கொல்லுதும் இவனை                                     என்னாப்
பாரிடை வந்தோர் சூழ்ச்சி வகையினால் பகர்தல் உற்றார்.
193
   
7006.
காட்பு உடைச் சிலையின் விஞ்சை கற்றதே அன்றி எம்                                     போல்
வாட்படை பயின்று இலாய் கொல் வல்லையேல் அப்போர்                                     செய்யச்
சேட்படை அன்றி எம்முன் சேர்தியால் வீர என்னாத்
தோட்புடை கொட்டி ஆர்த்தார் கூற்றனும் துளக்கம் எய்த.
194
   
7007.
வன் திறல் அவுணன் மைந்தர் உரையினை வள்ளல் கேளா
நன்று இது புகன்றீர் என்னா நகை செய்து நாதன் தந்த
மின் திகழ் சுடர் வாள் கொண்டு விரைந்து கீழ்த் தலத்தில்                                      பாய்ந்து
சென்றனன் அதனை நோக்கித் தேவரும் இடுக்கண்                                      செய்தார்.
195
   
7008.
வார்ந்திடு கழற்கால் வீரன் வாள் கொடு வரலும் நோக்கித்
தீர்ந்தனன் ஆவி இன்னே செகுக்கலாம் இவனை என்னாக்
கூர்ந்திடு நாந்தகங்கள் தனித்தனி கொண்டு சென்று
நேர்ந்தனர் வளைந்து கொண்டார் மதியைச் சூழ் நிசியை                                         ஒப்பார்.
196
   
7009.
வளைந்தனர் வீரன் தோளின் மார்பினிற் கரத்தின்                          மொய்ம்பில்
களந்தனில் சென்னி தன்னிற் கருதினர் இலக்கம் நாடிக்
கிளர்ந்திடு நாந்தகத்தால் கிட்டினர் எறிதலோடும்
உளந்தளர் வில்லோன் மேனிக்கு உற்றில சிறிதும் ஊறு.
197
   
7010.
ஊறு இலாத் தன்மை நோக்கி உவனை யாம் பற்றி                                      மெல்லக்
கோறலே கருமம் என்னாக் குழுவொடும் அவனைப்                                      புல்லச்
சீறினான் தன் வாள் ஓச்சிச் சிறிது மெய் தெரியா வண்ணம்
நூறினான் கொல்லோ என்ன நூற்றுவர் தமையும்                                      அட்டான்.
198
   
7011.
அட்டிடு கின்ற வீரன் அமரர்கள் வழுத்த மீண்டு
தட்டு உடை நெடுந்தேர் புக்கான் தன் மனக்கு இனிய                                       மைந்தர்
பட்டிடு தன்மை நோக்கிப் பாடு உறும் அவுணர் கோமான்
மட்டறு துயரின் மூழ்கி மானத்தால் இரக்கம் உற்றான்.
199
   
7012.
கோள் உண்ட அரிமான் துப்பில் குமரரை ஒருவன்                                    கொண்ட
வாள் உண்டது என்று நெஞ்சம் வசையுண்டு வருந்தல்                                    மன்னோ
தாள் உண்டு பரித்து நிற்கத் தலைகள் உண்டு எண் இலாத
தோள் உண்டு கரங்கள் உண்டு சுமக்கலாம் போலும்                                    அன்றே.
200
   
7013.
என்னுடை மைந்தர் தம்மை யாவரும் காண ஈண்டு என்
முன்னுற ஒருவனோ தான் முடித்து உயிர் கொண்டு                                    நிற்பான்
பின் இனி இதற்கு மேலும் பெற்றிடும் வசை ஒன்று                                    உண்டோ
ஒன்னலர் தங்கட்கு எல்லாம் ஒரு நகை விளைத்தேன்                                    அன்றோ.
201
   
7014.
பொன்றினர் தம்மை உன்னிப் பொருமியே புன்கண் எய்தி
நின்றிடின் ஆவது உண்டோ நேரலர் தொகுதி எல்லாம்
கொன்று ஒரு கணத்தின் முன்னர்க் குழுவொடும் வாரி                                       வாரித்
தின்று தேக்கிட்டால் அன்றித் தீருமோ எனது சீற்றம்.
202
   
7015.
மேவலர் ஆகும் இன்னோர் குழுவினை விரைவின்                                  அட்டுத்
தாவறு சுடர் வேல் கொண்ட பாலகன் தனையும் வென்று
தேவர்கள் எனப் பேர் பெற்றோர் யாரையும் இன்றே                                  செற்று
மூவுலகினையும் யானே முடிக்குவன் விரைவின் என்றான்.
203
   
7016.
என்ன இத்திறங்கள் பன்னி எரியும் மெய் விதிர்ப்பச் சீறித்
தன்னுறு தடந்தேர் உய்க்கும் சாரதி தன்னை நோக்கிக்
கொன்னுனை அயில் வாள் செங்கைக் குமரர் தம்                            குழுவைக் கொன்றான்
முன்னுறக் கடவுக என்ன நன்று இது முதல்வ என்றான்.
204
   
7017.
பாகு நூல் உணர்ந்து வல்லோன் பரியினை எழுப்பிப்                                    பண்ணி
மாக நீள் தடந்தேர் தூண்ட அரிமுகன் வருதலோடும்
ஏக நாயகனாம் மூர்த்தி ஏவலான் அதனை நோக்கி
ஓகையால் தனது மான் தேர் அதனொடும் ஒல்லை                                    நேர்ந்தான்.
205
   
7018.
நேர்ந்திடு கின்ற காலை நிரைபடு விழிகள் தோறும்
சார்ந்து அழல் சிதற நோக்கித் தளைபடு தறுகண் சீயம்
ஆர்ந்திடு பகை கண்டு என்ன ஆற்றவும் சினமீக்                                   கொண்டு
சேர்ந்திடு வானை நோக்கிச் சிங்கமா முகத்தன்                                   சொல்வான்.
206
   
7019.
ஆதி தந்து அருளும் மைந்தன் அறுமுகன் அவன் நீ                                         அல்லை
ஏது இலா இரக்கர் என்றே இசைத்திடு வோர்கள் தம்முள்
நாதனோ எண்மர் தம்முள் ஒருவனோ நம் ஊர் வந்த
தூதனோ இனையர் தம்முள் யாரை நீ சொல்லுக என்றான்.
207
   
7020.
அல் உறழ் கண்டன் தந்த அறுமுகற்கு அடியன் ஆனேன்
தொல்லை நும் மூதூர் அட்டுத் தூதனும் ஆகி மீண்டேன்
எல்லையின் நுமரை எல்லாம் ஈண்டு ஒரு கணத்தின்                                     அட்டு
வெல்லுவது அமைந்து நின்றேன் வீரவாகு என்பேர்                                     என்றான்.
208
   
7021.
திண் திறல் சேவகன் செப்பும் இம்மொழி
விண்டிடு செவிதொறும் விடம் பெய்தால் எனக்
கொண்டனன் வெகுண்டு ஒரு கூற்றம் கூறினான்
உண்டிடும் அசனிகள் உமிழ்ந்திட்டால் என.
209
   
7022.
உறு படை உழப்பினை உணர்கு உறாதது ஓர்
சிறுவரை வெல்வதும் திருந்து மாநகர்
உறை தரும் எளியரை உடன்று கொல்வதும்
அறிகுதி ஈதும் ஓர் ஆண்மைப் பாலதோ.
210
   
7023.
நூற்று இயல் குமரரை நொய்தில் கொன்றநின்
ஆற்றலைக் கொடுக்குவன் ஆவி வாங்கியே
கூற்றுவற் குண்டியாக் கொடுப்பன் மெய்யினைப்
பாற்றினுக்கு உதவுவன் பாலன் காணவே.
211
   
7024.
உன்னுடை வன்மையும் உனது நாயகன்
தன்னுடை வன்மையும் தானை வன்மையும்
பின்னுடை அமரர்கள் பெற்ற வன்மையும்
என்னுடை வன்மையால் இறையின் நீக்குவேன்.
212
   
7025.
வானவர் சிறையினை மாற்ற உன்னியே
தானையொடு ஏகி என்றன் முன் எய்தின் நீர்
ஊன் உயிர் வாழ்க்கையும் ஒல்லை தீர்திரால்
ஆனது ஒர் ஊதியம் அழகிது ஆற்றவே.
213
   
7026.
மூண்ட தொல் விதியினான் முடிந்த மன் உயிர்
ஈண்டு தம் இயாக்கையுள் மேவும் என்னினும்
ஈண்டு எனை மாறு கொண்டு இகல் செய்கின்றவர்
மாண்டிடும் ஆறு அலால் மற்றும் உய்வரோ.
214
   
7027.
என்பதை அரிமுகன் இயம்ப எம்பிரான்
நன்பெருந் தூதுவன் நகைசெய்து அங்கையின்
மன் பெருஞ் சிலையினை வணக்கி வாளி ஓர்
ஒன்பதொடு ஒன்பதை உரத்தில் தூண்டினான்.
215
   
7028.
விரைந்திடு செலவினால் விசிகம் ஏவலான்
உரந்தனில் படுதலும் ஓசிந்து வீழ்ந்தன
இரந்திடு தொழிலவர் இன்மையாளர் போல்
கரந்தவர் இயற்கையைக் கருதி மீள்வபோல்.
216
   
7029.
முருகனது ஏவலால் முன்னம் விட்டிடு
பொருகணை அகலமேல் புகாது வீழ்தலும்
அரிகெழு முகம் உடை அவுணர் நாயகன்
கரமிசை இருந்தது ஓர் கதை ஒன்று ஏவினான்.
217
   
7030.
ஏவிய தண்டினை ஏந்தல் ஈர் இரு
தூ வயில் வாளியால் துண்டம் செய்திடா
ஓவரும் பான்மையால் ஒர் ஆயிரம் கணை
தேவரை அலைத்தவன் சிரத்தில் ஓச்சினான்.
218
   
7031.
சிரம் படுகின்றது ஓர் செய்ய வாளிகள்
பரம் படு பல துணி பட்டு வீழ்ந்தன
உரம் படும் அவுணர்கள் உறைதற்கு ஒத்த முப்
புரம் படுகின்றது ஓர் பூழியா என.
219
   
7032.
பொன் திகழ் வடிக்கணை பொடிப்ப இன்னும் முன்
நின்று அமர் புரியுமோ நென்னல் தூதுவன்
நன்று என அரிமுகன் நகைத்து தன் கையின்
மின் திகழ் சூலவேல் திரித்து வீசினான்.
220
   
7033.
காசினி எரிகிளர் காட்சித்தால் என
ஆசினி தனில் வரு சூலத்து ஆற்றலும்
தேசுடை நிலைமையும் திறலும் நோக்கியே
வீசினன் எதிர் உற விசிகம் ஆயிரம்.
221
   
7034.
நெட்டிலைச் சூல வேல் நிமலற் அன்பினோன்
விட்டிடு பகழியை வீட்டி மேல் செலப்
பட்டது நோக்கினன் பரிந்து பின்னரும்
தொட்டனன் ஆயிரம் சுடர் கொள் வான் கணை.
222
   
7035.
ஏவிய எல்லையில் எதிரும் வாளியைத்
தூவுறு கொன்னுனைச் சூலம் சிந்தியே
மேவலர் பரவுறும் வீரவாகு மேல்
தேவரும் மருளுறக் கடிது சென்றதே.
223
   
7036.
இலக்கரும் நடுங்கினர் எண்மர் ஏங்கியே
கலக்கம் அது அடைந்தனர் கணங்கள் யாவரும்
அலக்கண் உற்று இரங்கினர் அமரர் இப்படை
விலக் கரிதே கொல் என்று உயிர்த்து விம்மினார்.
224
   
7037.
கோள் கொண்ட பகழிகளின் கொலை கொண்டு நிலை                                     கொண்ட
தோள் கொண்டு செல்ல வரும் சூலத்தின் திறல் நோக்கி
நீள் கொண்டல் அன்னது ஒரு நீல மிடற்றவன் தந்த
வாள் கொண்டு குறைத்திட்டான் வலிகொண்டது                                     அகலாதான்.
225
   
7038.
சூலம் போய் இற்றிடலும் துணைவர்களாய் உள்ளோரும்
ஞாலம் சேர் பூதர்களும் நனி மகிழ்வு சிறந்தனரால்
ஆலம் போந்து அடர்த்திடலும் அமலன் உண்டு தமைக்                                       காத்த
காலம் போல் அமரர் எலாம் துயரம் போய்க் களி                                       சிறந்தார்.
226
   
7039.
அக்காலை வெள்ளி மலை அளிக்கு நந்தி கணத்து                                    இறைவன்
மெய்க் கால வடவையினும் வெகுளி உறு பெற்றியனாய்
இக்காலை இவன் உயிரை யானே உண்குவன் என்னா
மைக் காலன் தனை முடித்த வள்ளல் தனிப் படை                                    கொண்டான்.
227
   
7040.
எந்திரித்த இருக்கை தனில் இருத்தியே கருவிகளான்
மந்திரத்தின் விதி முறையின் மனப்படு பூசனை இயற்றி
அந்தரத்தில் இமையவர்க்கும் அரி அயற்கும் வெலற்கு                                     அரிய
சுந்தரத்தோள் அரிமுகனை அடுதி எனத் தொழுது                                     உய்த்தான்.
228
   
7041.
உய்ப்பது ஒரு படை அழல் கான்று உலகம் வெருக் கொள                                     வரலும்
எப்படையோ இஃது என்றான் இமையவர் தம் படை                                     வென்றான்
துப்படையும் செஞ்சடிலத் தோன்றல்படை எனத் தெரியா
அப்படையோ அடுவது என அண்டம் வெடிபட                                     நகைத்தான்.
229
   
7042.
அற்பட்ட புலன் உடைய அரிமுகத்தன் தான் நோற்று
முற்பட்ட பகற் கொண்ட முக்கணான் தனது படை
எற்பட்ட மணிக் கடகத்து ஒரு கரத்தில் இருந்தது                                  அதனைச்
சொற்பட்ட மந்திரத்தால் வழிபட்டுத் தூண்டினனால்.
230
   
7043.
தூண்டல் உறு பரன் படையும் தொல்லைவரும்                                 அப்படையும்
ஈண்டி எதிர் எதிர் துன்னி இணை கொண்டோர்                                 இருதலைவர்
காண் தகைய கேண்மையினால் கடிது வந்து கலந்தே பின்
மீண்டிடுவதே போல விடுத்தவர் பால் மேவினவால்.
231
   
7044.
தன் படை மீடலும் சயங்கொள் மொய்ம்பினான்
துன்பு உடை மனத்தனாய்ச் சூரன் என்பவன்
பின்பு உடையானொடு பேசப் பின் ஒரு
முன்பு உடையார் இலை என்று முன்னினான்.
232
   
7045.
ஆற்றலில் குறைவிலன் அழி உறாது அமர்
பேற்றினில் குறைவிலன் பிறரை அட்டிடு
கூற்றினில் குறைவிலன் கோடி கூற்றுவர்
ஏற்று எதிர் மலையினும் இமைப்பில் கொல்வனால்.
233
   
7046.
அவன் பெரு முயற்சியே ஆற்றலாம் என்கோ
தவங்களின் வன்மையே வன்மை தான் என்கோ
சிவன் புரி வரமதே சீரிதால் என்கோ
எவன் பெரிது என்று யான் இசைக்க வல்லனே.
234
   
7047.
விடல் உறு பகழியான் மெய்யில் ஊறிலான்
அடல் உறு படையினும் அழிவு பெற்றிலான்
கொடியது ஓர் அரிமுகன் குமரன் செங்கையில்
படைகளின் அன்றியே படுகிலான் அரோ.
235
   
7048.
தீயவன் ஆவியைச் சிந்தல் கூடு உறா
தாயினும் வெஞ்சமர் ஆற்றி இங்கு இவன்
சேய் உயர் தேரினைப் படையைச் சேனையை
மாய்வுறு வியப்பினால் வல்லையான் என்றான்.
236
   
7049.
இத்திறம் இளையவன் இயம்பி ஏழிரு
பொத்திரம் தூண்டியே பொருவில் கேசரி
வத்திரம் உடையவன் வையம் உந்துவான்
சித்திர நெடுந்தலை சிந்தி நீக்கினான்.
237
   
7050.
சாரதி தலையது தரையில் வீழுமுன்
சூரொடு தோன்றினான் சுளிந்து ஒர் தண்டினை
ஓர் இமை ஒடுங்கும் முன் உருமின் உய்த்தலும்
வார் கழல் இளையவன் மருமம் பாய்ந்ததே.
238
   
7051.
விடல் அரும் திறல் உடை வீர வாகுவின்
தடமிகும் உரம் புகு தண்டம் சாளரத்து
இடை இடை கதிர் வரும் எல்லை காண் உறும்
பொடி எனல் ஆகியே புகையில் போயதே.
239
   
7052.
தோள் துணை வாகையான் சுளிந்து துண் என
ஓட்டு உறு நெடுங்கணை உய்த்து ஒர் ஆயிரம்
மோட்டுடை விறல் அரி முகத்தன் ஏறிய
சேட்டுடை மணி நெடும் தேரை வீட்டினான்.
240
   
7053.
தேர் அழிந்திடுதலும் ஆர்த்துச் சிங்கனை
ஆருயிர் கொள்ளுதும் அற்றம் ஈது எனாப்
பாரிடர் வரைகளும் படையும் வீசியே
சார் உற வளைந்தனர் சமரின் முந்தினார்.
241
   
7054.
வெய்யவன் அங்கு அது வெகுண்டு நோக்கியே
செய்யது ஓர் மணி நெடும் சேமத்தேர் புகா
ஐ இரு நூறு வில் அதனை ஆயிரம்
கையினில் எடுத்தனன் கடிதின் வாங்கினான்.
242
   
7055.
கருமணி வரை புரை காமர் வில் எலாம்
அரவுறழ் குணங்கள் கொண்ட அவுணன் கையுற
திரு முடி பல உடைக் கிரியில் செல்லினம்
உருகெழு மின்னொடும் உறுவ போன்றவே.
243
   
7056.
பிடித்திடும் விற்களில் பிறங்கு நாண் ஒலி
எடுத்தனன் எடுத்தலும் உயிர்கள் யாவையும்
துடித்தன அண்டமும் துளக்கம் உற்றன
முடித்தலை பனித்தனன் முளரித் தேவனும்.
244
   
7057.
வணக்கிய விற்களின் மடங்கல் மாமுகன்
கணக்கு இல ஆகிய கடல்கள் வான் எழீஇத்
தணக்கில பொழிந்தெனச் சரங்கள் சிந்தலும்
பிணக்குவை ஆயினர் பெயர்ந்த பூதர்கள்.
245
   
7058.
தாள்களும் கரங்களும் தலையும் சிந்தினர்
கோள் உறு தசையொடு குருதி சிந்தினர்
மூளைகள் சிந்தினர் முடியும் கால் பொரப்
பூளைகள் சிந்தின போலப் பூதர்கள்.
246
   
7059.
தருப் பயில் பாற்கடல் தனது சீகரம்
திரைப் பெரும் கரங்களால் சிந்தல் போன்றதால்
அரிப் பெரு முகத்தவன் ஆயிரம் கையால்
துரப்பு உறு கணைகளைத் தூண்டு கின்றதே.
247
   
7060.
மண்டல நிரந்தன வானம் தூர்த்தன
எண்திசை மறைத்தன கிரிகள் ஈண்டுவ
தெண் திரை எங்கணும் செறிவ அப்புறத்து
அண்டமும் போவன அவுணன் வாளிகள்.
248
   
7061.
மருப்பு உயர் திசைக் கரி மருமம் பாய்வன
பருப்பதம் ஏழையும் பகிர்வ மேருவாம்
பொருப்பையும் போழ்வன புணரிதோறு அமர்
நெருப்பையும் தணிப்பன நீசன் வாளியே.
249
   
7062.
மாறு பட்டவன் விடும் வாளி மாரியால்
ஈறு பட்டிடாதது ஓர் உயிரும் யாக்கைகள்
கூறுபட்டிடாதது ஓர் உயிரும் கொம் என
ஊறு பட்டிடாதது ஓர் உயிரும் இல்லையே.
250
   
7063.
எண்படும் அரிமுகன் எடுத்த வில் உமிழ்
புண்படு கணை மழை பொதிந்து போகுறா
விண்படு நெறி எலாம் விலக்கி மாற்றியே
ஒண் புவி ஆக்கியது உலகம் யாவையும்.
251
   
7064.
தாக்கு உறும் அரிமுகன் சரங்கள் பாரிடர்
யாக்கைகள் உருவியே எடுத்து நொய்து எனப்
போக்கு உறுகின்றன புலாலின் சூட்டினைக்
கோக்கு உறு சலாகையின் குழுவு போலவே.
252
   
7065.
மெய்ந்நெறி உணர்கிலார் வெறுக்கை பெற்றது
துன்னிய கிளைக்கு ஒரு துன்பம் ஆதல் போல்
ஒன்னலன் விடுங் கணை உலப்பின்று ஓடலால்
தன் உறு படைகளைத் தானும் கொன்றவே.
253
   
7066.
தீந்தொழில் அரிமுகன் செறித்த வாளிகள்
வாய்த்திடும் சேண்நெறி மாற்றும் பான்மையால்
காய்ந்திடும் செங்கதிர்க் கடவுள் மேல் திசைப்
போந்திலன் மீண்டிலன் புலம்பி நின்று உளான்.
254
   
7067.
கொம்பொடு பேரியும் குணிலும் ஏனைய
வெம்படை யாவையும் விரவி மேல் செலக்
கம்புளும் கரண்டமும் கனைந்து சுற்றிடச்
செம்புனல் கரும்புனல் அளக்கர் சென்றதே.
255
   
7068.
இத்திறம் அரிமுகன் இயற்றும் போரினை
மெய்த்திறன் மொய்ம்புடை வீரன் காண் உறாச்
சித்திரத்து அவன் எதிர் சென்று வாங்கினான்
கைத்தலத்து இருந்த தன் கடவுள் வில்லினை.
256
   
7069.
வாக்கிய சிலை தனில் வறிது நாண் ஒலி
ஆக்கினன் ஆக்கலும் மலைந்த தண்டமும்
தீக்கிளர் குஞ்சியர் செருச் செய் தானவர்
ஏக்கம் அது அடைந்தனர் இரிந்து போயினார்.
257
   
7070.
மாக்களின் இருந்தவர் மதம் கொள் வெங்கரி
மேக்குற வைகினோர் தேரின் மேவினோர்
தாக்கு உறு படைகளும் சயமும் சிந்தியே
யாக்கைகள் நடுக்கு உற யாரும் வீழ்ந்தனர்.
258
   
7071.
அவ் வழிப் பட நாண் ஒலி உறுத்தியே அடலோன்
கை வழிப்படு சிலையினில் கணை மழை சிதறித்
தெவ் வழிப்படு சீய மா முகத்தவன் செலுத்தும்
எவ்வழிப் படு பகழியும் அறுத்தனன் இமைப்பில்.
259
   
7072.
பிரமர் எண்ணிலர் பயந்திடும் உயிர்களைப் பின் நாள்
ஒருவன் ஆகிய கண் நுதல் தொலைக்கு மாறு ஒப்பச்
செருவல் ஆளனாம் இளையவன் பகழிகள் சிதறி
அரியின் மாமுகன் விடுகணைத் தொகை எலாம்                               அறுத்தான்.
260
   
7073.
மிக்க நேமியில் புவனியின் அகலிரு விசும்பில்
திக்கின் மேருவின் வரைகளில் தீயவன் பகழி
புக்க புக்கது ஓர் இடங்களில் தன் கணை பூட்டி
அக்கணம் தனில் அவன் விடு வாளிகள் அறுத்தான்.
261
   
7074.
புறத்தராம் என மன் உயிர்க்கு இன்னலே புரியும்
திறத்தன் வாளியை மைந்தன் இன்று அட்டது தேவர்
குறித்து நோக்கியே சூர் முதல் கிளை எலாம் குமரன்
அறுத்த நாள் வரு மகிழ்ச்சியைக் கிடைத்து நின்று                                     ஆர்த்தார்.
262
   
7075.
அகழி யார் கலி நொச்சி சூழ் முது நகர் அடர்த்தோன்
திகழி யானைகள் வெருவரும் அரி முகத் திறலோன்
பகழி யாவையும் அட்டதோ அங்கு அவன் படைத்த
புகழி யாவையும் அட்டது அன்றோ எனப் புகன்றார்.
263
   
7076.
அள்ளல் செற்றிய அளக்கர் சூழ் ஆசுரத்து அரசன்
தள்ளல் உற்றிடு பகழியைத் தனது கைச் சரத்தால்
வள்ளல் அத்துணை அறுத்தனன் அகற்ற மற்று அதனைக்
கள்ளல் அலைத்தார் அரிமுக மேலையோன் கண்டான்.
264
   
7077.
வில் எடுத்தது நின் பொருட்டு ஆகுமால் விரைவின்
மல் எடுத்த நின் மொய்ம்பினைக் கரங்களை மார்பைத்
பல் எடுத்திடு தலையினை நாசியைப் பதத்தைச்
சொல் எடுத்திடு நாவினைச் சரங்களால் துணிக்கேன்.
265
   
7078.
திரண்ட கையுளேன் சிலைத் தொழில் காட்டுறு செருவில்
இரண்டு கையுடை நீ கொலாம் என் முனம் ஏற்பாய்
முரண்டன் இச்சிலை தொட்ட நின் கையினை முடித்துக்
கரண்டம் உண்ணிய புரிகுவன் முந்து நீ காண.
266
   
7079.
எமர் இருக்குறு மகேந்திர நகர் தனில் ஈண்டும்
சமர் அகத்தினில் என் பெருந்தானைகள் தம்மில்
குமரர் தங்களிற் கொற்ற மாக் கொண்டன முற்றும்
உமிழு விக்குவன் உன் உயிர் தன்னை யான் உண்பேன்.
267
   
7080.
என்னும் மாற்றங்கள் அரிமுகன் இசைத்தலும் ஏந்தல்
பன்னு கின்றது என் பற்பல நினக்கு உள படையைத்
துன்னு தானைகள் யாவையும் செற்று உனைத் துரப்பேன்
என்னுடைச் சிலை வன்மையைப் பார்த்தியால் என்றான்.
268
   
7081.
சொற்ற மாத்திரத்து அவுணர் அழல் விழித் தூண்டக்
கொற்ற வெஞ்சிலை பத்து நூறு ஒருதலை குனித்துப்
பொற்றை ஈர்ங்கணை ஆயிரத்து ஆயிரம் பூட்டி
வெற்றி மொய்ம்புடை ஒருவன் மேல் சென்றிட விடுத்தான்.
269
   
7082.
சீற்றம் மிக்க நம் இளையவன் சிலை எனக் கொண்ட
கூற்றை வாங்கியே பத்து நூறு ஆயிரம் கொடுங்கோல்
ஆற்றல் மிக்கன தூண்டியே மேலவை அறுத்து
வீற்றும் ஆயிரம் ஆயிரம் பகழிகள் விட்டான்.
270
   
7083.
நம்பி தொட்டிடு கணையினை மகேந்திர நகரோன்
தம்பி பத்து நூறு ஆயிரம் கணைகளால் சாய்த்து
வெம்பி ஆயிர கோடி வெவ் வாளிகள் விடுப்ப
எம்பிராற்கு இளையோனும் அக்கணையினை எய்தான்.
271
   
7084.
குரா அணிந்திடு குமரனுக்கு இளையவன் கொடுங்கோல்
பரா வலன் விடு பகழியைப் பாரிடைப் படுத்தக்
கரா சலங்களை அடுமுகன் அதற்கு முன் கணைகள்
இராயிரம் தொடுத்து தண்ணறன் சிலையினை இறுத்தான்.
272
   
7085.
மாறு இல் வெஞ்சிலை இற்றுழி இளையது ஓர் வள்ளல்
வேறு ஒர் கார் முகம் வாங்கு முன் அகலத்தில்                                வெய்யோன்
நூறு கோடி புங்கவங்களை அழுத்தலும் நொய்தின்
ஆறு கோடி ஒத்து இழிந்தன அகல் இரும் குருதி.
273
   
7086.
குருதி யாகத்தின் இழிந்திடத் தன் சிலைக் குனித்துப்
பரிதி ஒண் கதிர் என்ன நூறு ஆயிரம் பகழி
கருதி விட்டிடக் கருதலன் அங்கு அது காணா
இருது நாண் முகிலாம் என அவை தொடுத்து இறுத்தான்.
274
   
7087.
அல்லின் ஓர் மதி எழுந்து என அவுணருள் உதித்த
மல்லல் வாலிய அரிமுகன் தொடுகணை மாரி
ஒல் என் வாளியான் மாற்றி ஆயிரம் கணை உந்திச்
சில்லி ஆழிகள் அறுத்தவன் தேரினைச் சிதைத்தான்.
275
   
7088.
ஏறு தேர் அழிந்திடுதலும் அரிமுகன் இமைப்பின்
மாறொர் வையம் மேல் பாய்ந்தனன் வார் சிலை வளைப்ப
ஆறு மாமுகற்கு இளையவன் கணைகளால் அவுணன்
நூறு பத்து எனும் சிலையையும் அறுத்தனன் நொடிப்பில்.
276
   
7089.
வில் இழந்தனன் மானமும் இழந்தனன் வீரச்
சொல் இழந்தனன் பெருமிதம் இழந்தனன் தொல் சீர்
எல் இழந்தனன் பெருமையும் இழந்தனன் இலங்கும்
பல் இழந்திடு விடவரா ஒத்தனன் பதகன்.
277
   
7090.
ஏதிலான் ஒருங்கு ஆயிரம் சிலைகளும் இழந்து
மா துயர்ப் படு நிலைமையை நோக்கியே மறங்கொள்
பூதர் ஆர்த்தனர் அமரர்கள் ஆர்த்தனர் புரைதீர்
வேதர் ஆர்த்தனர் முகுந்தரும் ஆர்த்தனர் விண்மேல்.
278
   
7091.
ஆயிரம் சிலை ஒரு தலை துணிந்ததும் அமரர்
நாயகன் தனக்கு அடியவன் வில் தொழில் நலனும்
மாயன் ஆதியர் இகழ்ச்சியும் பூதர் தம் வலியும்
காயு நெஞ்சு உடை மடங்கல் மா முகத்தவன் கண்டான்.
279
   
7092.
தேவர் ஆர்ப்பையும் இந்திரர் ஆர்ப்பையும் திசையின்
காவலாளர் தம் ஆர்ப்பையும் எமை அடக் கருதும்
மூவர் ஆர்ப்பையும் சாரதர் ஆர்ப்பையும் முனிவோர்
ஏவர் ஆர்ப்பையும் துன்பினுக்கு உதவுவன் என்றான்.
280
   
7093.
தீயாருக்கு ஓர் எல்லை அது ஆனான் திறல் மேலான்
தூயாருக்கே இன்னல் புரிந்தான் தொலை கில்லான்
தாயாய் முந்தே தம்மை அளித்தாள் தருகின்ற
மாயா பாசம் தன்னை எடுத்தான் மறம் மிக்கான்.
281
   
7094.
ஒட்டிப் போர் செய் மாற்றலர் தம்மை ஒரு பாலால்
கட்டிக் கொள்ளா ஆருயிர் உண்டு கடிது ஏகிக்
கிட்டித் தொல்லை ஞாயிறு தோன்றும் கிரி உய்த்து
விட்டுப் பேராது ஆண்டு உறைக என்னா வீசுற்றான்.
282
   
7095.
மறியா நிற்கும் தெண் திரை ஏழும் வந்து ஒன்றாய்ச்
செறியா நிற்கும் கொல் இது என்னத் திசை சூழ் போய்
எறியா நிற்கும் பாசம் இருட்கு ஓர் இடம் ஆகிப்
பொறியா நிற்கும் தீ அழல் சிந்திப் புகுந்தன்றே.
283
   
7096.
சேணாடு உற்றோர் யாரும் இரிந்தார் செரு ஆற்றல்
பூணா நிற்கும் பூதரும் யாரும் பொரும் உற்றார்
ஆணா உற்றோர் யாரினும் மேலோன் அது தன்னைக்
காணா ஈது ஓர் மாயை கொல் என்றே கருது உற்றான்.
284
   
7097.
ஆர்ப்பாய் உற்ற தெண் திரை கொல்லோ அஃது                                    அன்றேல்
போர்ப்பான் வந்த பாயிருள் கொல்லோ புயம் வீக்கி
ஈர்ப்பான் உற்ற நாண் அது கொல்லோ யாதேனும்
தீர்ப்பேன் வல்லே என்று நினைந்தான் திறல் வாகு.
285
   
7098.
ஆற்றான் மற்று இவ்வாறு தெரிந்தே அது தீர்ப்பான்
மாற்றா கின்ற தொல் படை தன்னை வாங்கா முன்
கூற்றாய் நின்றோன் வீசிய பாசம் குழுவோடும்
காற்றாய் வந்து இங்கு யாவரையும் கட்டியது அன்றே.
286
   
7099.
பல்லோர் ஆகிப் போர் புரி பூதப் படையோரும்
வில்லோர் ஆகும் எண்மரும் ஏனை விறலோரும்
தொல்லோர் கூறும் ஆடல் கொள் மொய்ம்பின்                               துணையோனும்
எல்லோர் தாமும் வீக்கு உறு பாசத்து இடை உற்றார்.
287
   
7100.
மேற்றான் எய்தி வீக்கிய பாசம் மிடல் வீரர்
மாற்றா நிற்பர் தொல் உணர்வோடு மலிவாரேல்
ஆற்றார் என்னச் செய்குவன் யான் என்று அவர் புந்தி
தேற்றா வண்ணம் செய்து உளது அம்மா சிறு போழ்தின்.
288
   
7101.
தொன்னிலை உணர்வு மாழ்கித் தொல்வலி சிந்திச் சோரும்
அன்னவர் தொகையை எல்லாம் அந்தர நெறிக் கொண்டு                                     ஏகித்
மின் என அளக்கர் வாவி மேருமால் வரை போல் நின்ற
பொன் அவிர் உதயம் என்னும் பொருப்பு இடை புகுந்தது                                     அன்றே.
289
   
7102.
கதி படர்கின்ற காலில் கருத்தினில் கடிதின் ஏகித்
துதியுறு திருவின் கேள்வன் துயில் புரி கடலில் துஞ்சும்
உதய மால் வரையின் எய்தி உயிர்ப்பு இலாது உறங்கு                                       கின்ற
மதவலி வீரர் தம்மை வைத்துடன் இருந்தது அன்றே.
290
   
7103.
விழுமிய பூதர் யாரும் வீரரும் விளந்து வெய்யோன்
எழுதரும் உதயம் புக்கார் என்பது தெரிந்து நோக்கித்
குழுவொடு பொருது உளாரைக் கொன்று உயிர் குடித்தேன்                                        வல்லே
அழகிது என் ஆற்றல் என்றான் அமரரை அலக்கண்                                        கண்டான்.
291
   
7104.
ஓடினான் கொல்லோ போர்க்கு என்று உற்றதும் இலையோ                                    எங்கும்
தேடினேன் காண்கிலேன் ஆல் யாண்டையான் சிறுவன்                                    அம்மா
சாடினான் சாடினான் என்று உரைப்பது சழக்கோ தம்பி
வீடினான் அல்லனோ என்று அண்டங்கள் வெடிக்க                                    ஆர்த்தான்.
292
   
7105.
கேசரி முகன் இவ்வாறு கிளத்தினன் ஆர்க்கும் எல்லைத்
தூசியின் முந்து போன தூதுவன் ஒருவன் நண்ணி
ஆசறு பூத வெள்ளம் ஆயிரத்தோடு செவ்வேள்
பாசறை இருந்தான் யானும் பார்த்தனன் வந்தேன்                                  என்றான்.
293
   
7106.
ஒற்றனது உரையைக் கேளா ஒள் எயிறு இலங்க நக்குப்
புற்று உறை அரவம் என்னப் புதல்வன் என் பொருவான்                                       அஞ்சி
மற்று அவண் உறைந்தான் கொல்லோ வல்லையில் யானே                                       ஏகி
இற்றை ஓர் கணத்தில் அன்னான் இருஞ்சமர் முடிப்பன்                                       என்றான்.
294
   
7107.
என்றனன் படரும் எல்லை இன்னது ஓர் நிகழ்ச்சி யாவும்
ஒன்றற நோக்கி வானோர் உயங்கினர் ஓடல் உற்றார்
சென்றனன் அதனை நாடிக் கால் எனும் திறலின்                                  வெய்யோன்
குன்று எறி நுதிவேல் அண்ணல் குரைகழல் பணிந்து                                  சொல்வான்.
295
   
7108.
அத்த கேள் பூதரோடும் அடுபடைத் தலைவர் ஏகி
மெய்த்திறல் பெரும் போர் ஆற்ற வெகுண்டு அரிமுகத்து                                வெய்யோன்
கைத்தலத்து இருந்த சூழ்ச்சிக் கயிற்றினால் நமரை                                எல்லாம்
எய்த்திட வீக்கி வெய்யோன் உதயத்தில் இட்டான்                                என்றான்.
296
   
7109.
ஆண்டகை வரம்பு சான்ற அறுமுகன் அவன் சொல்                               கேளா
யாண்டு உளான் யாண்டு உளான் அவ் வரிமுகத்து                               அவுணன் என்னத்
தூண்டிடு கொடித்தேர் மேலோன் சூழ் தரு படையின்                                சீரான்
மாண்டிடு பொறியால் இங்ஙன் வருகுவான் போலும்                                என்றான்.
297
   
7110.
என்னலும் நகைத்துச் செவ்வேள் அரியணை இருக்கை                                      நீங்கிப்
பன்மணி குயின்ற செம் பொன் பாதுகை சரணம் சேர்த்திப்
பொன் அவிர் கழல்கள் ஆர்ப்பப் புறங்கடை காறும்                                      போந்து
தன் அயல் வந்த காலைத் தருதி நம் தேரை என்றான்.
298
   
7111.
ஆறுமா முகத்து வள்ளல் அருள் பணி தலைக் கொண்டு                                    ஏகி
மாறு இலா முதல்வன் தந்த வையம் அது அழைத்து                                    வெங்கால்
தாறு சேர் கோலும் நாணும் தாங்கினன் கடாவி உய்ப்ப
ஏறினான் அதன் மேல் ஐயன் இமையவர் யாரும்                                    ஆர்த்தார்.
299
   
7112.
இந்திரன் கவரி சாய்ப்ப இமையவர் வட்டம் வீசச்
சந்திரன் தபனன் என்போர் தண்ணிழல் கவிப்புத் தாங்க
அந்தகன் உடைவாள் பற்ற இயக்கர் கோன் அடைப்பைக்                                       கொள்ளச்
சிந்து நீர் அரசன் செம்பொன் படியகம் ஏந்தச் சென்றான்.
300
   
7113.
நாயகன் குமரன் போர் மேல் நடப்பது தெரிந்து பூதர்
ஆயிர வெள்ளத் தோரும் ஆர்கலி நாண ஆர்த்துக்
காயெரி உமிழும் சூலம் கணிச்சி தண்டு எழுவு நாஞ்சில்
மீ உயர் பழுவம் குன்றம் கொண்டனர் விரைந்து                                 சூழ்ந்தார்.
301
   
7114.
அடித்தனர் பறைகள் சங்கம் ஆர்த்தனர் ஐயன் சீர்த்தி
படித்தனர் பாங்குர் எங்கும் பன் மணிக் கவிகை வட்டம்
பிடித்தனர் தமது வீரம் பேசினர் மூரி ஏற்றுக்
கொடித் தொகை அநந்த கோடி கொண்டனர் குணிப்பில்                                          பூதர்.
302
   
7115.
மூவர்கள் முதல்வன் வந்தான் முக்கணான் குமரன்                                    வந்தான்
மேவலர் மடங்கல் வந்தான் வேல் படை வீரன் வந்தான்
ஏவருந் தெரிதல் தேற்றாது இருந்திடும் ஒருவன் வந்தான்
தேவர்கள் தேவன் வந்தான் என்றன சின்னம் எல்லாம்.
303
   
7116.
ஆசறு பூதர் சூழ அமரர் வாழ்த்து எடுப்ப ஐயன்
பாசறைக் களத்தை நீங்கிப் பறந்தலை நிலத்தின் எல்லை
வீசுறு மருத்து மின்னும் வெள்குற நொடிப்பில் செல்லக்
கேசரி முகத்தினானும் கிளர் படையொடு நேர்ந்தான்.
304
   
7117
பருப்பு உறும் எழுவும் வான் தோய் பழுவமும் பரசும்                                        தண்டு
நெருப்பு உமிழ் சூல வேலும் நேமியும் கொழுவும் குன்றும்
பொருப்புறழ் பூதர் வீசிப் பொருக்கு என அவுணர் தம்மை
மருப்பு உயர் களிற்றை மாவை வையத்தை அடுதல்                                        உற்றார்.
305
   
7118.
குந்தமும் மழுவும் தண்டும் குலிசமும் எழுவும் கோலும்
முந்திய கழுமுள் வேலும் முசலமும் கொழுவும் சங்கும்
எந்திரக் கவண் வீழ் கல்லும் எஃகமும் பிறவும் எல்லாம்
சிந்தி நின்ற அவுணர் பூதப் படையினைச் செறுத்தல்                                    உற்றார்.
306
   
7119.
இரு திறப் படைகள் தம்மில் இத்திறம் பொருத எல்லைக்
குருதி வந்து அலைப்ப மார்பு சென்னி தோள் குறைந்து                                       வேறாய்த்
தரை இடை மறிந்தார் பல்லோர் சங்கரன் விடுத்த மூரல்
விரிகனல் சிதறிப் பற்ற வெந்துீழ் புரம் அதே போல்.
307
   
7120.
கண்டனன் அனைய செய்கை கனல் பொழி பரிதிக்                                  கண்ணான்
மண்டமர் புரியா நிற்கும் மாற்றலர் தம்மை வாரி
உண்டனன் எனது சீற்றம் ஒழிக்குவன் ஒல்லை என்னா
அண்டமும் திசையும் தானே ஆகவோர் வடிவம்                                  கொண்டான்.
308
   
7121.
ஆயிர முடியின் மௌலி அண்டத்தின் முகட்டை நக்கப்
பாயிரும் கரங்கள் அண்டப் பாங்கரை அலைப்பப் பாருட்
போயின பதங்கள் அண்டத்து அடியினைப் பூழை செய்ய
மாயையால் இனையவாறு ஓர் வடிவு கொண்டு ஆர்த்து                                       வந்தான்.
309
   
7122.
வந்திடு சீற்றத்துப் பின் மடங்கலின் தோற்றம் நோக்கித்
அந்தகன் அசைந்து நின்றான் ஆதவன் இரியல் ஆனான்
இந்திரன் துளக்கம் உற்றான் எரி பதை பதைத்துச்                                   சோர்ந்தான்
சிந்தையின் மருட்கை உற்றார் திசைமுகன் முதலாம்                                   தேவர்.
310
   
7123.
அன்னது ஒர் எல்லையில் ஆளி முகத்தோன்
முன் உறு பூதம் முழங்கு ஒலி நீத்தம்
என்னதும் அங்கை இராயிரம் ஓச்சி
உன்னு முன் வாரினன் உண்டல் பயின்றான்.
311
   
7127.
அண்டம் ஒர் ஆயிரம் ஆங்கு ஒரு பாங்கர்
விண்டு வெவ்வேறு விளங்குவ போலும்
கண்டகன் வெய்ய கணங்களை எல்லாம்
உண்டிடு கின்ற உலப்பில பேழ்வாய்.
315
   
7125.
ஆயிர கோடி ஒர் அங்கையின் ஆகப்
போயின பாணிகள் பூதரை அள்ளச்
சீய முகம் கெழு செம்மல் அகன் பேழ்
வாய்களில் இட்டு விழுங்கினன் மன்னோ.
313
   
7126.
மீனம் அது ஆக வியன் படை அங்கைக்
கான் உறு குன்று கறித் திறன் ஆக
வான பல் பூதரை அட்டிடு சாலைப்
போனக மாமிசைந்தான் புகை வாயான்.
314
   
7127.
அண்டம் ஒர் ஆயிரம் ஆங்கு ஒரு பாங்கர்
விண்டு வெவ்வேறு விளங்குவ போலும்
கண்டகன் வெய்ய கணங்களை எல்லாம்
உண்டிடு கின்ற உலப்பில பேழ்வாய்.
315
   
7128.
செப்பரும் வென்றி கொள் சீய முகத்தோன்
கைப்புகு பூத கணத்தினர் யாரும்
அப்பெரு வாய்களின் ஆற்றுறு மாக்கள்
உப்பிடை சென்றென உற்றனர் அன்றே.
316
   
7129.
தானவன் அங்கை தனில் படு பூதர்
மேல் நிகழ் வாய்தொறு மேவரு பான்மை
ஊனம் இல் விண்ணவர் ஊர் தொறும் இம்பர்
மானவர் யாரும் வழிக் கொளல் போலும்.
317
   
7130.
மண்ணிது அன்று எனின் வானவர் வைகும்
விண்ணிது அன்று எனின் வெவ் வசுரேசர்
நண்ணுலகு ஈது என நாடினர் தீயோன்
கண் அகல் வாயது கண்டிடு பூதர்.
318
   
7131.
வாய்க் கொளும் எல்லை மடங்கல் முகத்தோன்
மூக்குடன் அஞ்செவி மூலமும் வல்லே
நோக்கினர் இங்கு இது நூழை கொல் என்னா
ஊக்கொடு சிற்சிலர் ஓடினர் போனார்.
319
   
7132.
அந்தம் இல் சீயன் அகன் பெரு வாய் போய்க்
கந்தரம் நீங்கினர் நெஞ்சு கடந்தார்
உந்தி புகுந்தனர் ஒண் புவி உள்ளோர்
சிந்துறு கீழ் நிலை சென்று உறு மாபோல்.
320
   
7133.
சீய முகம் கெழு செம்மல் உயிர்ப்பில்
போயினர் உந்தி புகுந்தவர் சில்லோர்
ஆயிரம் யோசனை அந்தரம் மீண்டு
மேயினர் அங்கு அவன் மீண்ட உயிர்ப்பால்.
321
   
7134.
வெவ் விடம் என்ன விளங்கு அசுரேசன்
துவ்விடவே அகற்றிடு தொல்லோர்
அவ்விடம் யாவினும் ஆதியை உன்னற்கு
இவ்விடமே இனிது என்றனர் சில்லோர்.
322
   
7135.
களித்தவன் மடியுறு கணவர் ஆயிடைக்
கிளைத்தனர் கைகளில் படையில் கீறினர்
துளைத்தனர் கெடாமையில் தொல்லை வன்மைபோய்
இளைத்தனர் ஒரு சிலர் யாது செய்வர் ஆல்.
323
   
7136.
ஆயிரம் வெள்ளம் ஆம் ஆடல் பூதரை
வாய் இடைப் பெய்து தன் அகட்டில் வைத்துள
சீய மா முகத்தவன் செயலைப் பற்கல்
ஓய்வற மொழியினும் ஒழிதற் பாலதோ.
324
   
7137.
இத்திறம் நிகழ்ந்திட ஈண்டு பாரிடர்
பத்து நூறு எனப்படும் பரவை நீத்தமும்
கைத்தலம் வாரினன் கயவன் மோட்டினுள்
வைத்தலும் கண்டனர் வான் உளோர் எலாம்.
325
   
7138.
எண் கெழு பூதரை நுங்கினான் இனி
மண் கெழு பொருள் எலாம் வாரி நுங்குமால்
விண் கெழு நம்மையும் விரைவில் பற்றியே
உண்குவன் என மருண்டு உம்பர் ஓடினார்.
326
   
7139.
நேடிய ஒற்றுவர் நின்றிலார் விரைந்து
ஓடினர் அவுணர்கோன் உபயத் தாள் மலர்
சூடினர் சென்னியில் தொழுத கையினர்
மாடுறு பலசன மகிழக் கூறுவார்.
327
   
7140.
ஏதம் இல் அரி முகத்து இளவல் கந்தவேள்
தூதனைப் பிறர் தமைத் தொலைவு இல் பூதரில்
பாதியை நாண் வலைப் படுத்து வீட்டியே
ஆதவன் எழுகிரி அகத்தர் ஆக்கினான்.
328
   
7141.
ஈங்கு இது வினவியே ஈசன் தன் மகன்
தாங்கிய வேலொடு சமரின் ஏற்றிட
ஓங்கும் ஓர் வடிவு கொண்டு உனது பின்னவன்
ஆங்கு எதிர் பூதரை அள்ளி நுங்கினான்.
329
   
7142.
இவ்வரை நிகழ்ந்தன இனைய இத்துணை
மை வரு மிடற்றினன் மதலையோடு போர்க்
கவ்வையை இயற்றிடும் கன்னல் ஒன்றினில்
தெவ்வர்கள் இலர் எனச் செய்து மீளுமால்.
330
   
7143.
என்னலும் அரியணை இகந்து போய்த் தழீஇ
நன்னய மொழிபல நவின்று தூதுவர்
உன்னினர் விழைந்த சீர் உதவி மன்னவன்
தன் உழை ஒருவனை நோக்கிச் சாற்றுவான்.
331
   
7144.
கந்தனொடு அரிமுகன் கனன்று போர் செய்வான்
முந்துள தானையின் முடியும் பற்பல
இந்த நல் நகர் உறை படைகள் யாவையும்
உந்துதி ஆயிடை ஒல்லை நீ என்றான்.
332
   
7145.
சாற்றிய உரை கொடு தாழ்ந்து கம்மியன்
காற்று என ஏகியே கறங்கு தாளையுள்
போற்றலன் அமர் இடைப் போமின் போமின் என்று
ஏற்றுரி முரசினை எறிவித்தான் அரோ.
333
   
7146.
பணை ஒலி கேட்டலும் பதியுள் வைகிய
இணையறு தானைகள் வெள்ளம் யாவையும்
மணி கெழு வகுப்புடன் ஆர்த்துச் சென்று சூர்த்
துணையவன் அமர் புரி சூழல் புக்கவே.
334
   
7147.
அம்புதியாம் என அனிகம் சென்றுழித்
தும்பை அஞ்சிகழிகைச் சூரன் என்பவன்
எம்பி தன் போர் வலி காண்பன் யான் எனாச்
செம் பொனம் தவிசினும் தீர்ந்து போயினான்.
335
   
7148.
தன் பெரு மந்திர நடுவண் தங்கிய
கொன் பெரும் சிகரியாம் மேருக் குன்றின் மேல்
இன்புறு திருவொடும் ஏறினான் அரோ
பொன் புனை இதய மேல் இரவி புக்கு என.
336
   
7149.
தாது அவிழ் தார் முடித் தம்பி கொண்டது ஓர்
மே தகு வடிவமும் தமியேன் வேளுறப்
பூதர்கள் உண்டியாய்ப் போன தன்மையும்
காதலின் அவுணர் கோன் கண்ணின் நோக்கினான்.
337
   
7150.
வரும் இதம் என்று மன் உயிர்கட்கு அல்லல் செய்
கருமித வழிக் கொரு கனலில் தோன்றினான்
பெருமிதம் விம்மிதம் பெரிதும் எய்தினான்
உரும் இதமாம் என நகைக்கும் ஓதையான்.
338
   
7151.
இங்கு இவன் நின்றிட இதற்கு முன்னரே
சங்கையில் பாரிடத் தானை முற்றவும்
சிங்க மா முகத்தவன் நுகரும் செவ்வியின்
அங்கு உறும் அறுமுகன் அதனை நோக்கினான்.
339
   
7152.
ஒருத்தனை ஆகியே உலகு எலாம் அடும்
நிருத்தன் அது அருள் மகன் நேரலாரொடும்
செருத் தொழில் புரிவது ஓர் சிறிய ஆடலைக்
கருத்து இடை உன்னினன் கணிப்பு இல் ஆற்றலான்.
340
   
7153.
செய்ய தாமரை வனங்களும் செங்கதிர்த் தொகையும்
ஐய சேயொளி ஈன்று இருந்து என்ன ஆறு இரண்டு
கையும் மூவிரு முகங்களும் உடையவன் காலோன்
வையம் உந்திட அடு தொழில் இயற்றுவான் வந்தான்.
341
   
7154.
வந்திடு கின்ற காலை வயப் பெரும் பூதர் யாரும்
அந்தம் உற்று அதனை ஓரா அடு கரி பரி தோர் செற்ற
வெந்திறல் அவுணர் கோன் தன் மேதகு படைஞர் முற்றும்
கந்த வேள் தன்னைச் சூழ்ந்தார் கனலி சூழ் கடலே                                      என்ன.
342
   
7155.
சூழ் தரும் அவுண வீரர் தொலைவு இல் தம் படைகள்                                    முற்றும்
ஊழ் தரும் உருமில் பெய்ய உலகு உடை முதல்வன்                                    காணாக்
காழ் தரு மேரு அன்ன கார் முகம் ஒன்று வாங்கி
வீழ் தரும் அருவி போலும் வியன் குணத்து ஓதை                                    கொண்டான்.
343
   
7156.
ஆயிர கோடி ஞாலத்து அண்டங்கள் வெடித்த மற்றைப்
பாயிரும் புனலின் அண்டப் பத்திகள் பகிர்ந்த பாங்கர்
தீ அழல் அண்டம் கீண்ட செறி மருத்தண்டம் விண்ட
மீ உயர் வெளிமூதண்டம் வெய்து என உடைந்த அன்றே.
344
   
7157.
அப்பெரு நாணின் ஓதை அரிமுகன் தானை மன்னர்
செப்பு உறு கேள்வி ஆற்றும் செவிப்புலம் புகுதலோடும்
கைப்படை சிந்தி வீழ்ந்தார் கவிழ்ந்தன களிறு மாவும்
ஒப்பில்சீர் அருளித் தேர்கள் ஒல் என உடைந்த அன்றே.
345
   
7158.
மூரிவில் கொண்ட நாணின் முழக்கினை வினவி அற்றால்
பாரிடைக் கவிழ்ந்த தானைப் பரப்பையும் நோக்கி                                   நின்றான்
ஆர் இதைப் புரியும் நீரார் அரன் மகன் இவனாம்                                   முன்னம்
தாரகற் கடந்தான் என் கை சரதமே போலும் என்றான்.
346
   
7159.
வால் உளை அலங்கு நெற்றி மடங்கலோன் இனைய கூறிப்
பாலகன் வன்மையானே படுத்தனன் மீள்வன் என்னாக்
கால் உடை நெடுந் தேரோடும் கையனோர் கணத்தின்                                     நேர்ந்து
வேல் உடை அண்ணல் தன்னை நோக்கினன் விளம்பல்                                     உற்றான்.
347
   
7160.
கண் நுதல் முதல்வன் மைந்த கழறுவன் ஒன்று கேண்மோ
எண்ணலர் வலியை மாற்றல் இறையவர் கடனே அற்றால்
விண்ணவர் தமைத் தண்டித்தோம் அவர்க்குளும் அல்லை                                        வேறு ஓர்
நண்ணலன் எமருக்கு இல்லை நடந்தது என் அமருக்கு                                        என்றான்.
348
   
7161.
உறைதரும் அளியன் தன்னை வலியவன் ஒறுக்கின் நாடி
முறை கெழு தண்டம் ஆற்றி அண்டங்கள் முழுவதுக்கும்
இறையினைப் புரிதும் அற்றால் நீவீர்கள் இமையோர்க்கு                                  இட்ட
சிறையினை அகற்ற வந்தேஞ் செருவும் அத்திறத்துக்கு                                  என்றான்.
349
   
7162.
எங்கள் நாயகமாய் உள்ள இறையவன் இனைய கூறச்
சிங்க மா முகத்து வீரன் உரும் இடி திளைத்தது ஒப்ப
அங்கையோடு அங்கை தாக்கி அண்டமும் குலுங்க நக்குப்
பொங்கு வெம் சீற்ற மேலான் இங்கு இவை புகலல்                                     உற்றான்.
350
   
7163.
ஈங்கு எமர் தமையும் வென்றாய் இமையவர் சிறையும்                                     இன்றே
நீங்கினர் ஆவர் நீயும் நீக்குதி போலும் போலும்
நாங்களும் அளியர் தாமே நன்று நின் சூழ்வே ஆற்றல்
ஓங்கியது உனது மாட்டே உண்மை இது அன்றி உண்டோ.
351
   
7164.
இந்திர குமரன் தன்னை இமையவர் குழுவை வாரி
வெந்தளை மூழ்கு வித்து வீட்டிய சிறையை நீக்கல்
சந்திர மௌலி அண்ணல் தன்னினும் முடியாது என்றால்
மைந்தன் நீ ஒருவன் கொல்லோ முடித்திட வல்லை                                     மன்னோ.
352
   
7165.
கண் நுதல் உனக்குத் தந்த காமரு சுடர் வேல் ஆற்றல்
எண்ணலன் மறலி ஆகி இகழ்ந்து போர் இயற்றினானை
உள் நிகழ் ஆவி கொண்டாய் ஓடினால் உய்தி ஈண்டு
நண்ணிய தன்மை எங்கண் நல்வினை தந்தது அன்றே.
353
   
7166.
கடம்பு அமர் கண்ணியாய் கேள் கடவுள் வேல் கொண்ட                                         ஆற்றல்
திடம்படு நினது வன்மை யாவையும் தெரி தந்து உள்ளேன்
தடம் படு குவவுத் திண் தோள் தாரகன் போல ஞாட்பின்
மடம் படுகின்ற தில்லை வல்லை போர் புரிதி மாதோ.
354
   
7167.
பொருதிறல் வயவர் யாரும் பூதரில் பலரும் மாய்ந்தே
எரிகதிர் உதயம் புக்கார் ஏனையோர் நீயும் காண
விரைவில் என் அகடு சேர்ந்து விளிந்தனர் தமியன்                                     நின்றாய்
செருவினை இழைத்தும் என்னும் ஊக்கமே சீரிது அம்மா.
355
   
7168.
தாது அவிழ் தருவின் நீழல் சயந்தனை அமரர் தம்மைத்
தீது உறு சிறையின் நீக்கச் சென்ற நீ துணைவரோடு
பூதர் தம் தொகையை வாளா போக்கினை தமியன்                                    நின்றாய்
ஊதியம் இதன் மேல் உண்டோ உனக்கு இது கிடைத்தது                                    அன்றே.
356
   
7169.
முனை கெழு சமரின் வந்து முடிந்தனர் முடிவு இலாதார்
இனைவொடு புறம் தந்து ஏகி இரிந்து உளார் தொகையும்                                      அஃதே
அனையதை உணராய் கொல்லோ அமர் குறித்து ஈண்டு                                      வந்தாய்
கனவினும் விடுவது உண்டோ கடவுளர் சிறையை என்றான்.
357
   
7170.
என்ற சொல் இறுக்கு முன்னம் இராறு தோள் உடைய                                       வள்ளல்
நன்று இவன் கொண்டது என்னா நகை செய்து சிலையில்                                       பூட்டி
ஒன்று ஒரு வயிர வாளி ஒல் எனத் துரப்பத் தீயோன்
பொன் திகழ் மருமம் புக்குப் புறத்து உரீஇப் போயது                                       அன்றே.
358
   
7171.
அருவியன் ஆகம் உள்ளான் அகன் பெரு விழிகண்                                     கூறாய்
அருவியன் ஆக மன்ன அரிமுகன் ஐயன் செங்கோல்
அருவியன் ஆக மூழ்க அலக்கண் உற்று இழியும் செந்நீர்
அருவியன் ஆக நின்றான் அமரர் மற்று அது கண்டு                                     ஆர்த்தார்.
359
   
7172.
கற்றை அம் கதிர் வேல் அண்ணல் காமரு பகழி பாய
மற்றவன் புறனும் மார்பும் வாயில்கள் ஆதலோடு
மற்றது நோக்கித் தீயோன் அகத்து உறை கணங்கள்                                      முற்றும்
புற்று எழு சிதலை என்ன அந்நெறி துருவிப் போந்த.
360
   
7173.
உய்குறு கணத்தின் தானை உந்தியை ஒருவி வாளி
செய்குறு வாயில் நீங்கித் தெழிப்பொடு புறத்தில் போக
மைகிளர் புந்தி வெய்யோன் மற்று அது கண்டு சீறிக்
கை கொடு நெறியை மாற்றிக் கந்தன் மேல் ஒரு தண்டு                                     உய்த்தான்.
361
   
7174.
அண்டம் விண்டது கொல் என்ன அணி மணித் தொகுதி                                       ஆர்ப்பத்
தண்டம் வந்து இடுதலோடும் தன் நிகர் இல்லா அண்ணல்
கண்டனன் இமைப்பில் நான்கு கணை தொடக் கதையைச்                                       சிந்தி
ஒண்திறல் சூரன் பின்னோன் நெற்றிபுக்கு ஒளித்த அன்றே.
362
   
7175.
ஒளித்திடு கின்ற காலை உருகெழு மடங்கல் பேரோன்
களித்திடல் ஒருவி மேலைக் கடுஞ் சினக் கோட்புச்                                    சிந்தித்
தெளித்திடும் உணர்வும் இன்றிச் செய்ய கோல் செலுத்து                                    மன்ன
அளித்திடல் ஒழிந்த காலத்து உலகம் போல் அழுங்கி                                    நின்றான்.
363
   
7176.
பேர்ந்திடும் உணர்வொடும் பிரிவு இல் துன்பொடும்
சேர்ந்திடும் அரிமுகத் தீயன் நின்றுழி
வார்ந்திடு குருதிதோய் வாயில் மூடுகை
சோர்த்தன அருள் வரத் தொலைந்த மாயை போல்.
364
   
7177.
அறம் தவிர்ந்து ஒழுகினோன் ஆகம் தன்னிடைத்
திறந்திடு நெறிகளால் சிறையின் வைப்பொரீஇப்
பறந்திடு புள் எனப் படர்ந்து கந்தவேள்
புறந்தனில் வந்தன பூதம் யாவுமே.
365
   
7178.
அன்று அரி முகத்தவன் அலைத்து நுங்கின
கொன்றன எறிந்தன கூளி யாவையும்
வென்றி கொள் வேல் படை விமலன் ஆணையால்
துன்றி வந்து அடைந்தன தொன்மை கூடியே.
366
   
7179.
அன்னது ஒரு காலை அறுமா முகக்கடவுள்
தன் நிகர் இலாத தனக்கு இளையோர் தங்களையும்
துன்னல் உறு பூதத் தொகையோர்கள் யாவரையும்
உன்னி அவர் தம்பால் ஒரு கோல் தொடுத்தனனே.
367
   
7180.
உந்தும் பகழி உறுதி பல கடந்து
முந்தும் கதிர் உதயம் முன்னுற்று மொய்ம்பர் தமைப்
பந்தம் கொடு சூழ்ந்த பாசவலை சிந்திடலும்
கந்தன் தனது அருளால் கண் துயில்வார் போல்                                   எழுந்தார்.
368
   
7181.
பாசத் தளையில் படுவார் அது நீங்கி
மாசு அற்ற நல் உணர்வு வந்து எய்த உய்ந்தனராய்ப்
பேசற்கு அரிய இன்பம் பெற்றோர்கள் தாம் ஆகி
ஈசற்கு இனியான் இணை அடிகள் வாழ்த்து எடுத்தார்.
369
   
7182.
ஆங்கு அது காலத்தில் அறுமுகவேள் உய்த்த கணை
பூங்கமலத் தோன் உதவு புட்பகத்தின் மாட்சியதாய்த்
தீங்கில் இளமைந்தர் தமைச் சேனையொடு முகந்து
தாங்கி விசும்பின் தலைக் கொண்டு சென்றதுவே.
370
   
7183.
என்று திகழ் வெற்பை இகந்து ஏழ் கடல் நீங்கிச்
சென்று கடிது செரு நிலத்தில் சேனையொடு
நின்ற குமரன் நெடுந்தாள் முனம் உய்த்துத்
துன்று கணை பொதிந்த தூணி இடைப் புக்கதுவே.
371
   
7184.
அந்த அமையத்தில் அடல் வீர மொய்ம்பினனும்
இந்திரனும் போற்றும் இலக்கருடன் எண்மர்களும்
அந்தம் இலாப் பூத அனிகங்களும் அளியால்
கந்தன் இணை அடிகள் கை தொழுது தாழ்ந்தனரே.
372
   
7185.
நீக்கம் பெறாது உயிர்க்குள் நின்றானைத் தொல்வறிஞன்
ஆக்கம் பெற்று என்ன அடி வணங்கிப் போற்றுதலும்
வீக்கும் கணை கழற்கால் வீரர் தமை நோக்கித்
தேக்கும் கருணையினால் ஈது ஒன்று செப்பினனால்.
373
   
7186.
தொக்கீர் அவுணன் தொடு மாயைச் சூழ் வலையில்
புக்கீர் புலந்ந்தீர் புலன் அழிந்தீர் யாப்பு உறவும்
தக்கீர் உதயந்தனில் புகுந்தீர் இவ்வாறு
மிக்கீரும் நொந்தீர்கள் போலும் மிக வென்றான்.
374
   
7187.
முந்தை உணர்வு முடிந்தால் என் ஆருயிர் போய்
அந்த நிரயத்து அழுந்தி அயர்ந்தால் என்
வெந்துயரம் மூழ்கி வினைப் பிறவி புக்கால் என்
எந்தை அருள் உண்டேல் எமக்கு என் குறை என்றார்.
375
   
7188.
ஆங்கு ஆகும் எல்லை அரு மறையும் தேறரிய
ஓங்கார மூலத்து உணர்வாய் உறை பகவன்
நீங்கா நெறியான் நிறை பேர் அருள் புரியப்
பாங்காக நின்ற பரிசனர்கள் போற்றினரே.
376
   
7189.
அன்னது ஒர் அமைதியில் அண்ணல் வார் சிலை
துன்னுறு நாண் ஒலி கேட்டுச் சோர்வுறா
முன்னுற வீழ் படை முதல்வன் ஆடலை
உன்னுறு செய்கையால் எழுந்த ஒல்லையில்.
377
   
7190.
ஈங்கு இவன் ஒரு மகன் எமை எலாம் சிலை
தூங்கிய நாணினால் தொலைக்கும் கொல் எனாத்
தாங்கிய படை உடைத் தகுவர் தானைகள்
தீங்கனல் பரந்து எனச் சினம் கொண்டு ஆர்த்தவே.
378
   
7191.
ஆழி மால் கடல் புரை அவுண மாப்படை
காழ் உலாம் பல படைக் கலமும் சிந்தியே
ஊழி நாள் எல்லையின் உலகு எலாம் அடும்
கேழிலான் மதலையைக் கிளர்ந்து சூழ்ந்தவே.
379
   
7192.
சுற்றிய வேலையின் முறுவல் தோன்றிட
நெற்றி அம் கண்ணுடை நிமலன் மாமகன்
கொற்ற வெஞ்சிலையினைக் குனித்துப் பூட்டியே
செற்றிய கணை மழை சிதறினான் அரோ.
380
   
7193.
அங்கியின் வடிவின ஆலம் போல்வன
கங்குலை நிகர்ப்பன காலற்கு ஒப்பன
பொங்கிய வெஞ்சினப் புயங்கம் நேர்வன
செங்கதிர் மலைவன செம்மல் வாளியே.
381
   
7194.
மின்னினும் சுடரின உருமின் வெய்யன
பொன் உறழ் நிறத்தன மணியின் பொற்பின
மன்னிய வானவில் மாறு கொள்வன
பன்னிறம் படைத்தன பகவன் வாளியே.
382
   
7195.
சூலம் போல்வன தோமரம் போல்வன சுடர் வாய்
ஆலம் போல்வன நாந்தகம் போல்வன அடல் வேல்
கோலம் போல்வன கழுமுளும் போல்வன குலிச
சாலம் போல்வன ஆறுமா முகன் விடு சரங்கள்.
383
   
7196.
அறத்தை நல்கலின் அந்தணன் போல்வன அகிலத்
திறத்தை அன்பொடு போற்றலில் செங்கண்மால் போல்வ
ஒறுத்து மன் உயிர் உண்குறும் அவுணரை ஒருங்கே
இறுத்தல் செய்திடும் தன்மையால் ஈசனே போல்வ.
384
   
7197.
காற்றில் செவ்விதில் செல்வன கறங்குவ கடுங்கண்
கூற்றிற்கு ஒப்பன மனத்தினும் கடியன கொடுந்தீ
நூற்றுக் கோடிகள் அணுகினும் விசையினால் நொய்தின்
மாற்றத் தக்கன குமரவேள் விடுத்திடும் வாளி.
385
   
7198.
ஒன்று தொட்டிடில் கோடியாம் ஒல்லையில் அவையும்
துன்று கோடி மேல் கோடியாம் மேலும் அத் தொகையே
அன்றி யார் அதற்கு எண் கொடுத்து உரைப்பவர்                                அநந்தம்
என்று சொல்வதே முருகவேள் தொடுங்கணைக்கு                                இலக்கம்.
386
   
7199.
கார் பிளந்திடும் அளக்கரை உண்டிடுங் கதிரோன்
தேர் பிளந்திடும் வடவையை விழுங்குறுந் தேவர்
ஊர் பிளந்திடும் மேருவைப் பிளந்திடும் உலவாப்
பார் பிளந்திடும் ஞான நாயகன் விடும் பகழி.
387
   
7200.
வரை கிழிப்பதும் புவியினைப் பிளப்பதும் வரம்பில்
திரை கடல் குடித்திடுவதும் பிறவும் ஓர் சிறப்போ
அரிய ஆயிர கோடி அண்டங்களாம் அனைத்தும்
உருவி நிற்கில பின்னரும் ஓடும் என்று உரைக்கின்.
388
   
7201.
தொடு நெடுங்கணை இவ்வகை செறிதலும் சூழ்வார்
அடி துணிந்தன கைத் தலம் துணிந்தன அணி தோள்
முடி துணிந்தன உரம் துணிவுற்றன முகில் தோய்
கொடி துணிந்தன இரதமும் துணிந்தன குலைந்தே.
389
   
7202.
கரைகள் பட்டு என அவுணர்கள் பட்டனர் கடலின்
நிரைகள் பட்டு எனக் களிறுகள் பட்டன நிரந்த
திரைகள் பட்டு எனப் புரவிகள் பட்டன செறிந்த
வரைகள் பட்டு எனப் பட்டன அளவை தீர் மான்தேர்.
390
   
7203.
ஒப்புக் கொண்டிடா மேலையோன் ஒன்றை ஒன்றாக்கும்
துப்புக் கொண்டிடும் அற்புதம் உணர்ந்தவன் தொன்னாள்
வைப்புக் கொண்ட பார் அண்டங்கள் முழுவதும் வரம்பில்
அப்புக் கொண்டது ஓர் அண்டமே ஆக்கிய அதனால்.
391
   
7204.
செப்பு உறத் தகும் விம்மிதம் அன்றி இது தேவர்
எப்புறத்தரும் காண்கிலார் எம்பிரான் கணைகள்
ஒப்புறத் தரும் அண்டத்தின் தொகை எலாம் உரீஇப்போய்
அப்புறத்தினில் இடுவன அவுணர் தம் தலைகள்.
392
   
7205.
மூரி அண்டலர் யாக்கைகள் எடுத்து உடன் முடுகிப்
பாரி அண்டங்கள் ஆயிரம் கோடியும் பகிர்ந்து
வாரி அண்டங்கள் இடை இடை சிந்தி மற்று அவற்றைச்
சோரி அண்டங்கள் ஆக்குவ அண்ணல் தொல் கணைகள்.
393
   
7206.
ஒண் துளிப்படு குருதியும் அவுணர்கள் உரமும்
கண்ட துண்டமும் சென்னியும் தோள்களும் கரமும்
முண்டம் ஆம் கரி பரிகளும் விளிந்த தேர் முற்றும்
அண்டம் எங்கணும் செறிந்தன அட்டிய திறம் போல்.
394
   
7207.
புள் உலாவு வேல் அறுமுகன் பகழி போர் புரிந்த
மள்ளர் மாப்படை அலைப்பதோ அரிது வல் விரைவால்
அள்ளல் வாரி சூழ் ஆயிரம் கோடி அண்டத்தின்
உள்ள தானவர் தம்மையும் முடிவு செய்து உலவும்.
395
   
7208.
குமர நாயகன் தொடுசரம் நிரத்தலும் குளிர்ந்த
கமல மாமலர் முகை பொரு முகத்தினர் கரத்தர்
தமர நேமிகொள் புகழ்ச்சியர் வணங்குறு தலையர்
அமரர் யாவரும் வான் இடைப் பிழைத்து நின்று                                   ஆர்த்தார்.
396
   
7209.
கங்கம் உற்றன கொடி பிற உற்றன கவந்த
சங்கம் உற்றன குணங்கரும் உற்றன தகுவர்
அங்கம் இற்றன கரி பரி இரதம் இற்றனவால்
சிங்க மாமுகன் ஒருவனும் நின்றனன் செருவில்.
397
   
7210.
மீ உயர்ந்து சூழ் அண்டத்தின் அளவு எலாம் விரவ
மாய வன்மையில் கொண்டிடு பெருந்தகை வடிவம்
தூயன் வாளிகள் பட்டு உணர்வு அழிதலால் தொலைந்து
சீய மாமுகன் தொன்மை போல் நின்றனன் தேர் மேல்.
398
   
7211.
நின்ற தீயவன் தான் உறும் அயர்ச்சியை நீங்கிச்
சென்ற தன் படை யாவையும் கண்டிலன் சிறுவன்
கொன்று வீட்டினன் என்பது தெரிந்து உளம் கொதியா
ஒன்று போலவோ ஓராயிரம் சிலைகள் கொண்டு உற்றான்.
399
   
7212.
அலை வளைந்த பாற்கடல் மிசைப் பத்து நூறு அம்                                        பொன்
மலை வளைந்து அமர் தன்மை போல் மன்னன் மாட்டு                                        அன்றித்
தலை வளைந்திடா அரிமுகன் தனது கைத்தலத்தால்
சிலை வளைந்திடக் குனித்தனன் சுடுசரம் தெரிந்தான்.
400
   
7213.
சீய மாமுகன் செஞ்சிலை பூட்டி நூறு
ஆயிரப் பத்து அடுசரம் ஏவலும்
நாயகன் அது கண்டு நகைப்புறா
ஓய்வில் வாளியொர் ஆயிரம் தூண்டினான்.
401
   
7214.
ஆற்றல் மேதகும் ஆயிரம் வாளியால்
மாற்றலன் கணை மாரி விலக்கியே
சாற்றுதற்கு அரிதாகிய தன்மையான்
வீற்றும் ஆயிரம் வெங்கணை உந்தினான்.
402
   
7215.
உந்து கோலை ஒர் ஆயிரம் வாளியால்
சிந்தியே திறல் சிங்க முகா சுரன்
ஐந்து நூறு இரண்டு ஆயிரம் வெங்கணை
எந்தை மேல் வர ஏவினன் என்பவே.
403
   
7216.
பதகன் வாளிகள் பத்து இலக்கத்தையும்
நுதி கொள் வெங்கணை நூறு பத்து ஆயிரம்
கதும் எனத் தொடுத்தே மறை காண்கிலா
அதிர் கருங்கழல் அண்ணல் அகற்றினான்.
404
   
7217.
திருத் தகும் திறல் சீய முகத்தினான்
உருத்து வாளி ஒர் ஆயிரம் தூண்டு உறாப்
பரத்தின் மேற்படு பண்ணவன் தேர்விடு
மருத்தின் மார்புற வல்லை அழுத்தினான்.
405
   
7218.
ஆர் அழல் சினத்து ஆளரி மாமுகன்
கூர் உடைக் கணை நெஞ்சு குளித்திட
மாருதப் பெயரோன் வலி சிந்திடாச்
சோரி மிக்கு எழத் துன்புற எய்தினான்.
406
   
7219.
பாகு பட்ட பருவரல் நோக்கியே
வாகை அண்ணல் வரிசிலை கால் வளைஇ
ஏக நூறு பகழி தொட்டு எண்ணலன்
சேகை மாண் கொடித் தேரினை வீட்டினான்.
407
   
7220.
தேர் அழிந்திடத் தீயரின் தீயவன்
ஊர் அழிந்த உடு பதி போன்று உளான்
கார் அழிந்திடக் கல் என ஆர்ப்பு உறாப்
பார் இழிந்தனன் பல்கணை வீசினான்.
408
   
7221.
வீசுகின்ற வியன் கணை யாவையும்
மாசில் காட்சியன் வாளியின் மாற்றிடா
ஆசில் வெஞ்சரம் ஆயிரம் தூண்டியே
நீசன் விற்களை நீள் நிலம் சேர்த்தினான்.
409
   
7222.
அண்டலன் கொண்ட ஆயிரம் சாபமும்
துண்டம் ஆகித் தொலைந்து நிலம் புக
விண்டு நான் முகத்தோனும் விண்ணோர்களும்
கண்டு நின்று கரம் எடுத்து ஆர்த்தனர்.
410
   
7223.
கோல் உமிழ்ந்த குனிசிலைக் கூட்டறக்
கால வெவ்வழல் என்ன கனன்று உளான்
சூலம் ஒன்று துளக்கினன் வீசினான்
ஆல காலம் அளக்கர் உய்த்தால் என.
411
   
7224.
துன்னலன் விடு சூலத்தை ஏழ் இரு
கொன்னுனைக் கணை தூண்டிக் குறைத்திடாப்
பின்னும் ஆயிரம் பேர் அழல் புங்கவ
மின்னெனத் துரந்தான் அடல் வேலினான்.
412
   
7225.
கொண்ட வேல் கைக் குமரன் சரங்களைக்
கண்டு தீயன் கன்ன்று கரம் தனில்
தண்டம் ஒன்றில் தரைபடச் சிந்தியே
அண்டம் விண்டிட ஆர்த்தனன் ஏகினான்.
413
   
7226.
விடுத்த வாளி பொடித்ததும் வெவ்வியோன்
பிடித்த தண்டொடு பேர்வதும் காண்குறா
வடித்த ஏழ்கணை தூண்டினன் வன் கதை
எடுத்த கையை இரு நிலம் சேர்த்தினான்.
414
   
7227.
சேர்த்து முன்னுறத் தீயவன் தோளினும்
பேர்த்தும் ஆங்கு ஒர் பெருங்கைப் புறப்படப்
பார்த்தலம் புகு தண்டினைப் பற்றியே
ஆர்த்து வீசினன் ஆதியம் தேவன் மேல்.
415
   
7228.
ஒட்டலன் தொட உற்ற தண்டத்தின் மேல்
நெட்டு அழற்கு நிகர் கணை ஆயிரம்
விட்டு அறுத்தனன் மேல் வரு பாந்தளை
அட்டிடும் கதிர் ஆதவன் என்னவே.
416
   
7229.
அண்டர் நாயகன் ஆயிரம் வாளியால்
தண்ட வீழத் தடிதலும் மாற்றலன்
கண்டு சீறிக் கடுந்திறல் கூற்று இடைப்
பண்டை நாள் கொண்ட பாசத்தை வீசினான்.
417
   
7230.
சுற்றுப் பாசத் தொடர்ச்சியை நோக்கி வேள்
சொற்று ஒர் ஆயிரம் தீக்கணை தூண்டலும்
வற்றல் மாண் கொடி வன்னியின் தீச்சுடர்
உற்றதாம் என ஒண் பொடி ஆயதே.
418
   
7231.
நாண் அற்றது கண்டனன் நாண் உறுவான்
ஏண் உற்றிடு சேய் ஐயாயிரம் ஆம்
பாணித் தொகையைக் கொடு பற்றிடுவான்
பேணிச் சினமொடு பெயர்ந்தனனே.
419
   
7232.
சிங்கத் திறலோன் வரு செய்கை தனை
எங்கட்கு இறை நோக்கி ஈர் ஆயிரராம்
வெங்கண் கணை ஆயின விட்டு அவுணன்
அங்கைத் தொகையாவும் அறுத்தனனே.
420
   
7233.
கொற்றம் கெழு உற்ற குகன் கணையால்
செற்றம் திகழ் ஆளரி செய் யகரம்
அற்றம் புவி வீழும் முன் அங்கை நிரை
முற்றும் புதிதாக முளைத்தனவே.
421
   
7234.
அற்று புவி வீழ் தருமங் கைகளை
மற்றத் துணை வந்து எழு மாண் கைகளால்
பற்றிக் செல அன்னது பார்த்தனனால்
நெற்றிக் கண் அளித்திடும் நீள் சுடரோன்.
422
   
7235.
ஓர் ஆயிரம் வாளிகள் உய்த்து அவுணன்
ஓர் ஆயிரம் நீண் முடி ஒல்லை அறா
ஈர் ஆயிரம் வெஞ்சரம் ஏவியவன்
ஈர் ஆயிரம் மொய்ம்பும் இறுத்தனனால்.
423
   
7236.
அன்பு அற்றவன் மொய்ம்புகள் அற்றன கண்டு
இன்பு உற்றனர் வானவர் ஈண்டு அவை
முன்பு உற்றது போல முளைத்து எழலும்
துன்புற்றனர் யாக்கை துளங்கு உறுவார்.
424
   
7237.
கண்டான் இது விண்ணவர் காண் பரியோன்
பண்டால் அவனத்து இடை பாணி சிரம்
தண்டாது அழல் கொய்திடு தன்மையினால்
உண்டாகிய வாறு என உன்னினனே.
425
   
7238.
உன்னும் பொழுதத்தினில் உம்பர் எலாம்
என் இங்கு இவன் மாய்வது எனத் தளர
முன்னம் பெயர் சிங்க முகன் முனியாச்
செந்நின்று இஃது ஓர் மொழி செப்பினனால்.
426
   
7239.
உளைக்கும் கணை தள்ளி யுகம் பல நீ
கிளைக்கும் தலை மொய்ம்பு கெடுத்திடினும்
முளைக்கின்றது அலான் முடிவு உற்றிடுமோ
இளைக்கின்றனை நீ கொல் எனைப் பொருவாய்.
427
   
7240.
மொய்யும் துதவத்து இயல் முன்னலை நின்
ஐயன் தரும் ஆற்றல் அறிந்திலை போர்
செய்யும் படி வந்தனை சேய் ஒரு நீ
உய்யும் படி அன்று உனது ஊக்கமுமே.
428
   
7241.
மாண்டேவர் தமைப் புரிவன் சிறைபோய்
ஆண்டே வருகின்றது மாற்றல் உளேன்
ஈண்டே அழிகின்றதும் இல்லை இவண்
மீண்டு ஏகுதி நின் உயிர் விட்டனனால்.
429
   
7242.
என்னலும் அதனை ஓரா எம்பிரான் குமரன் சொல்வான்
உன் உயிர் இழைத்த எல்லை ஒழிந்தது கூற்றும் வந்து
பின் உற நின்றான் என் நீ பிதற்றுதி உணர்வு இலாதாய்
முன் ஒரு கணத்தில் நின்னை முடிக்குவன் காண்டி                                    என்றான்.
430
   
7243.
படைப்பவன் குரவன் ஈது பகர்தலும் அவுணர் கோமான்
இடிப்பு என ஆர்த்துக் குன்றம் இராயிரம் பறித்து வீச
நொடிப்பினில் அவற்றை வாளி நூற்றின் நுண் துகள் அது                                   ஆக்கித்
தடப் பெரு மருமம் மூழ்கச் சரங்கள் ஆயிரத்தை                                 உய்த்தான்.
431
   
7244.
மாயிரு நெடுங்கண் வாளி மார்பத்தை அகழ்ந்து துன்னக்
காய் எரி கலுழும் கண்ணான் கைகளால் அளவை தீர்ந்த
பாயிருங் குன்ற நாடிப் பறித்தலும் கண்டு செவ்வேள்
ஆயிரம் கணை தொட்டு அன்னான் அணிமுடித்                      தொகையை வீழ்த்தான்.
432
   
7245.
அறுத்திடு தலைகள் வீழ ஆயிரம் சென்னி வல்லே
மறித்தும் வந்து எழுதலோடும் மடங்கல் மா முகத்தன்                                     முன்னம்
பறித்திடு குன்றம் வீசிப் பருவலித் தடந்தோள் கொட்டி
எறித்தரு கதிரும் விண்ணோர் யாவரும் உட்க ஆர்த்தான்.
433
   
7246.
ஆர்த்திடு காலைச் செவ்வேள் ஆயிரத்து இரட்டி                                கொண்ட
கூர்த்திடு பகழி தூண்டிக் குன்றங்கள் செற்று வெய்யோன்
தார்த் தட மொய்ம்பு முற்றும் தள்ளினன் தள்ளு முன்னர்ப்
பேர்த்தும் வந்து எழுந்த அம்மா தவத்தினும் பெரிது                                ஒன்று உண்டோ.
434
   
7247.
அத் திறம் காணா ஈதோர் ஆடலா உன்னி நூற்றுப்
பத்துடன் எட்டின் காறும் பரஞ்சுடர் உருவாய் நின்றான்
மொய்த்திடு பகழிமாரி முறை முறை துரந்து மொய்ம்பன்
கைத்தலம் சென்னி முற்றும் கண்ட துண்டங்கள் செய்தான்.
435
   
7248.
திசைகளில் போகும் நேமித் திறங்களில் போகும் வெற்பின்
மிசைகளில் போகும் பாரின் மீதினில் போகும் மாந்தர்
நசைகளில் போகும் விண்ணோர் நட்டிடைப் போகும்                                      சிங்கன்
இசைகளில் போகும் எங்கும் இற்றிடு சிரமும் கையும்.
436
   
7249.
அகரம் அது ஆதி ஆன எழுத்து எலாம் ஆகி பின்னர்
மகரமும் ஆன மேலோன் வடிக்கணை துணித்து வீசும்
சிகரமும் துகர முற்றும் சேண் இடைச் சென்று மாயோன்
நகரமும் தாவி அண்ட கோளகை நண்ணுகின்ற.
437
   
7250.
தூவுடை நெடுவேல் அண்ணல் சுடக்கணை துணித்து வீச
மேலவன் தனது சென்னி மெல் இதழ் அதுக்கி விண் மேல்
ஆவலங் கொட்டிச் செல்ல அச்சம் உற்று அங்கண் நின்ற
தேவர்கள் மயக்கம் எய்தித் திரு நில வரைப்பின்                                வீழ்ந்தார்.
438
   
7251.
வஞ்சரை வஞ்சம் செய்யும் வள்ளலார் குமரன் தொட்ட
செஞ்சரம் அநந்தகோடி சென்று சென்று அறுத்து வீட்ட
எஞ்சலில் அவுணன் மொய்ம்புந் தலைகளும் யாண்டும்                                      சிந்தி
விஞ்சையர் அமர்தற்கு ஒத்த வரைகளின் மேவல் உற்ற.
439
   
7252.
தூயவன் விடுத்த வாளி துணித்திடும் ஒவ்வோர் சென்னி
வாயினை அடுபோர் தன்னில் வந்த சில் கணங்கள்                                   நோக்கி
ஆயிரம் கோடி கொண்டே களேவரம் அதற்குள் இட்டு
மாயிரும் சிகர மாட மற்றிது என்று உற்ற அன்றே.
440
   
7253.
பாடுறு சிரத்தில் ஒன்று பதைத்து வாய் பகிர அங்கண்
ஆடுறும் அலகை கோடி அகன் பிணக் குவைகள் உய்த்து
மாட மீது என்று புக்கு மற்று அது கடிதின் மூட
ஓடி உள் அலைந்த தக்கன் வேள்வியில் உற்று உளார்                                        போல்.
441
   
7254.
மன் புரி அவுணர் தோன்றல் வாய் பொதி சென்னி புக்குத்
துன்புபுறும் அலகை துண்டம் செவி நெறி துருவிப் போன
முன்பு ஒரு முனிவன் இல்லை முயங்குவான் உறையுள்                                     புக்கோன்
இன்பொடு வன்மை சிந்தி நூழையால் இரிந்தவா போல்.
442
   
7255.
ஒன்னலன் தனது மொய்ம்பும் உருகெழு சிரமும் வீழ்ந்து
பன்னெடும் கிரிகளாக அவற்று இடைப் பல சூர்ப் பேயும்
துன்னுறு கொடியும் சூழ்வது ஒல்லையில் பொறிகள் நீங்க
முன்னவள் பதாகை யோடு முறையில் வந்து உற்றவா                                     போல்.
443
   
7256.
அரண்டரும் கழலான் இவ்வாறு அறுத்தலும் அவுணர்                                    கோமான்
முரண்தகு சிரமும் தோளும் பின்னரும் முளைப்ப                                    நோக்கித்
திரண்ட பல் கணைகள் ஓச்சிச் சென்னியில் ஒன்றும்                                    கையில்
இரண்டுமே நிறுவிப் பின்னர் யாவையும் தடிந்தான்                                    அன்றே.
444
   
7257.
நீள் உறு பதலை சிந்தி நின்று அமர் இயற்றுக் கின்ற
கோளரி முகத்து வீரன் குறைந்திடு முடியு இற்ற
தோள்களும் முன்னரே போல் தொன்றிடப் புகுதும்                                     எல்லை
ஆளுடை முதல்வன் ஆகும் அறுமுகன் அதனைக்                                     கண்டான்.
445
   
7258.
நாற்றிசை முகத்தினானும் நாகரும் பிறரும் உட்கச்
சீற்றம் அது உளன் போல் ஐயன் சிறிது அவண்                                  உரப்பலோடும்
மாற்றலன் ஆகி நின்ற மடங்கல் மா முகத்தன் தன்பால்
தோற்றிடு சிரமும் தோளும் துளங்கி மீண்டு ஒளித்த                                  அன்றே.
446
   
7259.
ஐயனது உங்காரத்தால் அரிமுகன் சிரமும் மொய்ம்பும்
மெய்யிடை ஓடுங்கிற்று அம்மா மேவினார் தம்மை நோக்கி
மையுறு கருந்தாது அன்னவன் புறக் கமடம் சென்னி
ஒய் என யாக்கை தன்னில் ஒளித்திடும் தன்மையே போல்.
447
   
7260.
குன்றினை எறிந்த வைவேல் குமரவேள் கணையால் இற்ற
தன் தலை பாணி தோன்றாத் தன்மையை அவுணன் பாரா
ஒன்று அற முந்து பன்னாள் உணர்ந்திடு விஞ்சை முற்றும்
மன்று இடை அயர்த்தோன் என்ன மானம் உற்று அழுங்கி                                         நின்றான்.
448
   
7261.
அங்கு அது கண்டு செவ்வேள் அருள் புரிகின்றான் நம்                                        தம்
வெங்கணை பலவும் சென்று வீட்டிய தலையும் உன்தன்
செங்கையும் தோன்றிற்று இல்லை எழுக எனச் செப்பு                                        கைய
இங்கு நீ பட்ட பின்கொல் முளைத்திட இருந்தது என்றான்.
449
   
7262.
இருதலை அயில் வேல் அண்ணல் இற்றன சிரம் தோள்                                       என்றே
கருதலை என்பேர் ஆற்றல் கடவுளர் யாரும் தேர்வர்
ஒருதலை இருகை கொண்டே உலகெலாம் தொலைப்பன்                                       என்னாப்
பொருதலை உன்னி ஆங்கு ஓர் பொருப்பினைப் பறித்து                                       விட்டான்.
450
   
7263.
விட்டிடு பிறங்கல் தன்னை விரிஞ்சனுக்கு ஆசான் காணூஉ
நெட்டு இலை வாளி ஒன்றால் நீறு செய்திடுத லோடும்
பட்டது தெரிந்து மாய்வோன் அமர் இடைப் பாணியோடும்
இட்டிடு தண்டம் ஒன்றை எடுத்து நின்று இதனைச்                                      சொற்றான்.
451
   
7264.
வேலினால் எறியு மாறும் வெஞ்சிலை வளைய வாங்கிக்
கோலினால் விடுத்தது ஒன்றைக் குறைத்திடு மாறும்                                     அல்லால்
பால நீ படைகள் வேறு பயின்றது ஒன்று இலை கொல்                                     என்னா
மூல காரணமாய் நின்ற முதல்வன் மேல் கதையைத்                                     தொட்டான்.
452
   
7265.
வெஞ்சின அவுணன் சொற்ற தன்மையும் விடுத்த தண்டும்
செஞ்சுடர் மேனி வள்ளல் சிந்தையின் மதித்து நோக்கிக்
கஞ்சம் அது அனைய ஓர்கைக் காமரு குலிசம் தன்னை
வஞ்சகன் உயிர் உண்டு ஒல்லை வருக என விடுத்தான்                                      மன்னோ.
453
   
7266.
விடுத்திடு குலிசம் ஏகி விரைந்து எதிர் தண்டம் தன்னைப்
பொடித்தது போலும் மென்னப் பூழி செய்து அடுக்கல்                                     செல்லும்
இடித் தொகை என்ன மார்பத்து எய்தியே அவுணன் ஆவி
குடித்தது புறத்துச் செந்நீர் கொப்பளித்து ஏகிற்று அன்றே.
454
   
7267.
தூண்டா விடு குலிசம் துண் என்ற கல்மார்பங்
கீண்டு ஆவி கொண்டு கிழித்து வெரிந் சென்றிடலும்
வீண்டான் பதை பதைத்தான் வீழ் குருதி நீர் அலைப்ப
மாண்டான் கிடந்தான் மடங்கல் முக வெய்யோனே.
455
   
7268.
அங்கு அப்பொழுதில் அடல் குலிசம் வான் போகிக்
கங்கைப் புனல் ஆழ்ந்து காமரு பூந்தாது ஆடிச்
சங்கத்தவர்க்குள் தலை ஆம் தமிழ்ப் புலவன்
செங்கைக்குள் வந்து சிறப்புற்று இருந்து உளதால்.
456
   
7269.
பார்த்தார் இந்நீர்மை தனைப் பங்கயத்தன் ஆதி                                    விண்ணோர்
ஆர்த்தார் முறுவலித்தார் ஆடினார் பாடி மலர்
தூர்த்தார் மகிழ்ந்தார் தொழுதார் எங்கோன் புடையில்
போர்த்தார் வணக்கம் புரிந்தார் புகழ்ந்திட்டார்.
457
   
7270.
என் நாயகன் அவ்விமையோர்கள் எல்லோர்க்கும்
தன்னார் அருள் செய்து சாரத வெள்ளத்தின் ஒடும்
மின்னார் புகர் அயில் வேல் வீரரொடு மீண்டனன் ஆல்
பொன்னாடு எனவே புனைந்த பொலன் பாசறையில்.
458
   
7271.
பாசறையின் கண் ஏகிப் பார் இடத்தோர் சூழ் போத
வாசவனும் நான்முகனும் மற்றோரும் பாங்காகக்
கேசரிகள் தாங்கும் கிளர் செம்பொற் பீடிகை மேல்
ஈசன் எனவே இனிது அருள் செய்து உற்றனனே.
459
   
7272.
வெற்றி நெடு வேலோன் வியன் பாசறை இருப்ப
மற்று அவனொடு ஆடி மடங்கல் முகத்து அவுணன்
செற்று கொடி உண்ணச் செரு நிலத்தின் மாய்ந்து அதனை
ஒற்றர் தெரிகுற்றே மகேந்திரத்தில் ஓடினரால்.
460
   
7273.
ஆடல் இளையோன் அவண் வீழ்ந்தது நோக்கி
வீடினனோ மான்றனனோ என்றைய மேல் கொண்டு
நீடு சிகரி இடை நின்றோன் பதங்கள் முடி
சூடி அவலித்துத் தொழுது இதனைச் சொல்லினரால்.
461
   
7274.
குன்றம் பிளந்த குமரேசன் வச்சிரத்தால்
உன் தம்பி ஆவி ஒழிந்தான் அவன் மிசையப்
பொன்றும் கணத்தோர் பொருப்பு உற்றார் எல்லோரும்
சென்று உய்ந்தனர் ஈது திண்ணம் எனச் செப்பினரே.
462
   
7275.
வேய் உற்றவர் சொல் வினவி உரோமங்கள் எலாம்
தீயப் பொறி துரப்பச் செங்கண் புனல் பெருக
வாயில் புகை செல்ல வாடிப் பதை பதைத்து
நோயுற்று வெங்கனலை நுங்கினர் போல் வீழ்ந்தனனே.
463
   
7276.
வண்ணச் சிகரம் வழுவுற்றுக் கீழ்த்தலத்தில்
கண்ணில் பொழிந்த கடலின் இடை வீழ்ந்தனனால்
ஒண் உற்ற காஞ்சி உமையவள் கோட்டத்தினின்றும்
தண் உற்ற நேமித் தடத்து இடையே வீழ்பவர்போல்.
464
   
7277.
மங்குல் என வீழ்ந்து மறிந்து நிலமிசையே
அங்கை புடைத்திட்டு அலமந்து தொல்வலியும்
துங்க விறலும் நலனும் தொலைவு எய்தப்
பொங்கு துயர்க் கடலின் மூழ்கிப் புலம்பு உறுவான்.
465
   
7278.
என்னையோ என்றன் இளவலோ தாரகற்கு
முன்னையோ சிங்க முகத்தவோ தானவர்கள்
அன்னையோ என்ன அருள் புரியும் ஆண் தகையோ
உன்னையோ தூதர் விளிந்தனை என்று ஓதியதே.
466
   
7279.
அன்று மகவான் முதலாம் அமரர் தமை
வென்று தமியேற்கு விசயம் தனை அளித்தாய்
இன்று சமரில் இளம் பாலகன் ஒருவன்
கொன்றனனோ உன் உயிரைக் கூற்றுவனும்                          கொண்டானோ.
467
   
7280.
உண்டு போர் என்னின் உளம் களிக்கும் உன் உயிரைக்
கொண்டு போனான் இன்று கூற்றன் எனவே கேட்கில்
தண் துழாய் மாலும் சதுர் முகனும் இந்திரனும்
பண்டு போல் தத்தம் பதி ஆளப் போகாரோ.
468
   
7281.
பொன்னை நிலம் தன்னைப் புதல்வர்களை மங்கையரைப்
பின்னை உள பொருளை எல்லாம் பெறல் ஆகும்
என்னை உடைய இளையோனே இப்பிறப்பில்
உன்னை இனிப் பெறுவது உண்டோ உரையாயே.
469
   
7282.
அண்டார் தமக்கு ஓர் அரியே அரிமுகனே
விண் தான் அடைந்தாய் எனவே விளம்புகின்றார்
தண் தார் அகலத்துத் தாரகனை மக்களுடன்
கண்டாயோ யான் இங்கு உறு துயரம் காணாதாய்.
470
   
7283.
உண்டிக் கடனும் ஒரு வயிற்றோர் செய் கடனும்
எண் திக்கும் போற்றி இட இன்று கழித்து ஏகினை நீ
அண்டத்தவரை அலைத்து வரும் உன் திறலைக்
கண்டு உற்றிடவே கடன் அற்றேன் தீயேனே.
471
   
7284.
உற்ற துணை நீ என் உயிர் நீ உணர்ச்சியும் நீ
சுற்றமும் நீ தாதையும் நீ என் இளைய தோன்றலும் நீ
நல் தவமும் நீ என்று நான் நினைந்தேன் நீ அதனைச்
சற்றும் நினையாமல் தனித்து இருக்கக் கற்றாயோ.
472
   
7285.
பொற்றைக்கு அயல் இருந்த பூட்கை முகன் துஞ்சிய பின்
ஒற்றைப் புயம் போய் உளம் தளர்ந்து வைகினன் யான்
இற்றைப் பகல் நீ இறந்தாய் அரி முகனே
மற்றைப் புயமும் இழந்தேன் வறியேனே.
473
   
7286.
என்னத் தனது அண்டம் எங்கும் செவிடு படத்
தன்னத் தனியோன் அரற்றும் ஒலி தாங்கேளா
நன்னத் தவனும் நளினத்தினில் உதித்த
அன்னத் தவனும் மகத்தவனும் ஆர்த்தனரே.
474
   
7287.
இத்தன்மை மன்னன் இரங்கித் தெளிந்து எழுந்தே
உத்துங்க மிக்க ஒரு தன் தவிசு ஏறி
நித்தன் குமரனுடன் நேர் போய்ச் சமர் இயற்றச்
சித்தம் தனிலே நினைந்து சினம் செய்தனனே.
475