முகப்பு |
இரணியன் புலம்புறு படலம்
|
|
|
7804.
|
அது நிகழ்ந்துழி அகன் பதி அவுணர்கள் ஒரு சில்லோர்
கதும் எனச் சென்று காவலன் கந்தவேள் உய்த்திட்ட
நுதி கொள் வேலினான் மாய்ந்தனன் என்பதை நுவல் உற்றார்
பதுமை அம்மொழி கேட்டனள் துணைவியர் பலரோடும். |
1 |
|
|
|
|
|
|
|
7805.
|
காவல் மன்னவன் இறந்தனன் எனும் உரை கன்னத்துள்
மேவும் எல்லையில் அசனி ஏறு உண்டவெம் பணியே போல்
தேவி ஆகிய பதும கோமளை எனும் திரு மங்கை
ஆவி நீங்கினள் தலை அளி ஆகியது அது அன்றோ. |
2 |
|
|
|
|
|
|
|
7806.
|
எவ்வெவர்க்கும் மேலாகிய அவுணர் கோற்கு இல்லாகி
அவ்விடத்து உறை துணைவியர் வயிறு அலைத்து அழுங்கு உற்று
வெவ்வழல் பெருங் குண்டம் ஒன்று ஆக்கியே விளி உற்ற
தெய்வதப் புனைவன் மகள் யாக்கை முன் செல உய்த்தார். |
3 |
|
|
|
|
|
|
|
7807.
|
மான் கிளர்ந்தன அரிமதர் மழைக் கண் மெல்லியர் எல்லாம்
வான் கிளர்ந்து எழுகின்றது ஓர் மா பெரும் கனல்
ஊடே
கான் கிளர்ந்திட மலர் தரும் தாமரைக் கானத்தில்
தேன் கிளர்ந்து தம் இனத்தொடும் புகுந்து எனச் செல்லுற்றார்.
|
4 |
|
|
|
|
|
|
|
7808.
|
செல்லல் போதும் என்று ஒழிந்திட அரற்றினோர் செந்தீயில்
செல்லல் போது நாள் மாலையும் அங்கியில் சேர்ந்து ஓங்கும்
அல்லல் போது முன் நின்றிடு நிசிஎலாம் அகன்று என்ன
அல்லல் போது மா நகர்த்திரு ஏகினள் அது காலை. |
5 |
|
|
|
|
|
|
|
7809.
|
இந்தவாறு இவர் அங்கியுள் மாண்டனர் இது நிற்கத்
தந்தை பட்டதும் சேவலும் மஞ்ஞையும் தான் ஆகித்
கந்த வேள் புடை வந்ததும் கண்டனன் கலங்கு உற்றுப்
புந்தி நொந்து நின்று இரணியன் வான் இடைப் புலம்பு உற்றான்.
|
6 |
|
|
|
|
|
|
|
7810.
|
நன்று என்பதை உணராய் நான் உரைத்த வாசகங்கள்
ஒன்றும் சிறிதும் உறுதி எனக் கொண்டு இலையே பொன்றும் படிக்கோ பொருதாய் புரவலனே என்று உன்னை முன் போல் இருந்திட நான் காண்பதுவே. |
7 |
|
|
|
|
|
|
|
7811.
|
அன்புடையன் கொல் என்று அயலார் எடுத்து உரைப்பத்
துன்பு உடையேன் போலத் துயரா அயர்கின்றேன்
என் புடையே முன்னர் எனது உயிர் கொண்டு ஏகினன் ஆல்
நின் புடையே நின்று நெடும் பழியின் நீங்காதேன். |
8 |
|
|
|
|
|
|
|
7812.
| மாற்றார் வலி கண்டு மற்று உன்னை வன் செருவில் போற்றாது ஒளித்த பொறி இலியேன் தன் முன்னம் தோற்றாமல் எங்கு ஒளித்தாய் சொல்லாய் சுதன் போலக் கூற்று ஆனவனை இன்னும் கூட மனம் கொள்ளுதியோ. |
9 |
|
|
|
|
|
|
|
7813.
|
கையார் அழல் ஏந்தும் கண் நுதலோன் தந்தவரம்
மெய்யாம் ஒரு காலும் வீடாய் அஃது எல்லாம் பொய் ஆகும் வண்ணம் புதல்வன் என வந்து உதித்தேன் ஐயா உனக்கோர் அருங்கூற்றம் ஆயினனே. |
10 |
|
|
|
|
|
|
|
7814.
| நில்லா உடலை நிலையாம் எனக் கருதிப் பல்லாரும் கண்டு பழிக்கும் படி உனக்கும் சொல்லாது அகன்றேன் நீ துஞ்சிய பின் வந்தனன் ஆல் நல்லார்களில் தேரின் நானே தலை அன்றோ. |
11 |
|
|
|
|
|
|
|
7815.
|
அத்திர நேர் கூறும் அவுணர் தமக்குள் மிக்க
குத்திரனே ஆகும் கொடியேன் நீ துஞ்சிய பின் மித்திரனே போன்று இரங்கி மீண்டேன் உனக்கு என்னைப் புத்திரனே என் கை புவிக்குப் பொறை அன்றோ. |
12 |
|
|
|
|
|
|
|
7816.
| ஆழியான் வேதன் அமரர்க்கு இறை முதலோர் வாழியாய் என்று வழுத்தியிட வைகிய நீ பூழியார் மேனிப் புராரி சிறுவன் தேரில் கோழியாய் நின்று விலா ஒடியக் கூவுதியோ. |
13 |
|
|
|
|
|
|
|
7817.
| ஓகையால் அண்டத்து உயிர்கள் எலாம் வந்து இறைஞ்சச் சேகையாய் மல்கும் திருத்தாள் கொண்டு உற்றிடும் நீ வாகை ஆர்கின்ற வடிவேல் கரத்தோனைத் தோகையாய் நின்று சுமக்குதியோ தோன்றால் ஓ. |
14 |
|
|
|
|
|
|
|
7818.
| மேற்றான் விளையும் இஃது என்றே வினயமுடன் ஆற்றான் மொழிந்தேன் அது சிறிதும் கேட்டிலையே மாற்றான் என வந்த மைந்தனுடன் போர் செய்தே தோற்றாயே அற்றால் மயிலாய்ச் சுமக்குதியோ. |
15 |
|
|
|
|
|
|
|
7819.
| மாறு உற்றிடத் தொல் வடிவம் தனை இழந்து வேறு உற்ற புள் வடிவாய் மேவினாய் ஆங்கு அதனால் ஈறு உற்றனை அன்றே என் செய்கை செய்வதற்கும் பேறு உற்றிலன் வாளா பேணினேன் இவ்வுயிரே. |
16 |
|
|
|
|
|
|
|
7820.
| பிள்ளைப் பிறை புனைந்த பிஞ்ஞகன் தன் காதலனைப் புள்ளிக் கலாபப் பொறி மயிலாய்ப் போற்றும் எல்லை எள்ளல் பொருட்டால் யான் முன் உரைத்த வற்றை உள்ளத்து இடை எந்தாய் உன்னுதியோ உன்னாயோ. |
17 |
|
|
|
|
|
|
|
7821.
|
பொங்கு உற்ற சீற்றம் பொரும் போர் இகல் உள்ளம்
தங்கு உற்ற மானம் சயம் அகந்தை வன்மை எலாம் அங்கு உற்ற நின்னை அடைந்தது இலை அவ்வனைத்தும் எங்கு உற்றது ஐயா இயம்பாய் எனக்கு அதுவே. |
18 |
|
|
|
|
|
|
|
7822.
|
என்று கனகன் இரங்கி நெடுஞ்சேணில்
நின்று தளர்ந்து நெடிது உயிர்த்துப் பூதர் எனைத்
தின்று சினம் தீர்வர் தெரியின் எனச் சிந்தை செய்து
துன்று திரை வேலை இடைத் தொன்மை போல் புக்கனனே.
|
19 |
|
|
|
|
|
|
|
7823.
| புக்க கனகன் புலர்ந்து புகரோன் பால் அக்கணமே எய்தி அழிவுற்ற தந்தையர்க்கும் தக்க துணைவர்க்கும் தாயர்க்கும் ஏனையர்க்கும் மிக்க கடன்கள் விதிமுறையே செய்தனனே. |
20 |
|
|
|
|
|
|
|
7824.
|
தாக்கிச்
சமர் மலைந்த தானவர்க்குச் செய் பரிசே
தூக்கிப் புரிந்து துயரினுக்கோர் வித்து என்றே ஆக்கத்தினை வெறுத்தே ஆதிப் பிரானை உள்ளே நோக்கிக் கதி அடைவான் நோற்று ஒரு சார் உற்றனனே. |
21 |
|
|
|
|
|
|