| முகப்பு |
திருப்பரங்குன்று சேர் படலம்
|
|
|
|
|
|
7858.
|
இன்ன பண்பினால் சிவனடி வழிபடல் இயற்றி
அந் நிலைக்களம் நீங்கியே அமரர் கண் முனிவர்
தன்ன தானை அம் தலைவர்கள் புடை தழீஇச் சாரப்
பொன்னின் மஞ்ஞையின் எருத்த மேல் கொண்டனன் புனிதன்.
|
1 |
|
|
|
| |
|
|
|
|
|
7859.
| சீர் தங்கிய மயூரமேல் அமர்தரும் செவ்வேள் சார்தல் உற்றிடு மால் அயன் மகபதி தம்மை நேர்தலில் படை வீரரை நோக்கியே நீவிர் ஊர்தி மேலராய் வம்மின் நம் புடை என உரைத்தான். |
2 |
|
|
|
| |
|
|
|
|
|
7860.
|
மற்றது காலையில் வண் துழாய் முடிக்
கொற்றவன் முதலிய குழுக் கொள் தேவரும் வெற்றி கொள் வீரரும் வேறு தத் தமக்கு உற்றிடும் ஊர்திமேல் ஒருங்கு உற்று ஈண்டினார். |
3 |
|
|
|
| |
|
|
|
|
|
7861.
| ஞாயிறு கறங்கு என நணுகும் பொன் முடிக் கோயிலின் மருங்கினில் குழீஇக் குழீஇ இரண்டு ஆயிரம் வெள்ளம் ஆம் அடல் வெம் பூதரும் ஏயென எழுந்தனர் எழுந்த பூழியே. |
4 |
|
|
|
| |
|
|
|
|
|
7862.
| மிக்கு உயர் அறிஞரை மேவில் கீழ்மை செய் மக்களு மேல் நெறி அடைதல் வாய்மையே தக்க தொல் பூதர்கள் சரணம் தோய்தலில் புக்கது பொன் நகர் புவியும் பூழியாய். |
5 |
|
|
|
| |
|
|
|
|
|
7863.
| அழற்றிய பல் கதிர் ஆத பத்திரம் நிழற்றிய விண் அளாய் நிமிர்ந்த கேதனம் குழற்றிய துளைவயிர் கோடு காகளம் மிழற்றிய பேரிகை மிகவும் ஆர்த்தவே. |
6 |
|
|
|
| |
|
|
|
|
|
7864.
| மேக்கு உயர் வட்டமும் விளங்கு காம்புமாய் நீக்கம் இல் கவிகைகள் நிழற்றி மல்குவ மாக்கிளர் பஃறொடை வானக் கம்பலந் தூக்கிய திறன் எனத் தோன்று கின்றவே. |
7 |
|
|
|
| |
|
|
|
|
|
7865.
| மேற்றலை கடவிய வெய்யன் வெம்மையால் நோற்றலை எய்தி வான் உணங்க நோன்றிரை ஆற்றலை முயன்று என அனிக வேலையுள் கோல் தலை அசைவ வெண் கொடியின் கானமே. |
8 |
|
|
|
| |
|
|
|
|
|
7866.
| பாங்கு அமை பதலையே முதல பல்லியம் ஆங்கு ஒலி வழங்குவ அவுணத் தீயரைத் தாங்கினை என்று இறை தண்டம் செய்திட வாங்கிய திரைக் கடல் வாய் விட்டு ஒக்கும் ஆல். |
9 |
|
|
|
| |
|
|
|
|
|
7867.
|
காந்தளம்
சென்னியன் கடவு மா மயில்
கூந்தொறும் கூந்தொறும் குலைந்து பஃறலைப் பாந்தளம் அசைதலும் பசலை மூக்கினால் ஆய்ந்திடு கின்றன அகிலம் குத்தியே. |
10 |
|
|
|
| |
|
|
|
|
|
7868.
| மூக்கு உடை அலகினால் முகிலைக் கீறியே ஊக்கொடு பரல் என உருமுப் பற்றும் ஆல் தீக்கிளர் அன்னது ஓர் செய்ய சூட்டு உடைக் கூக்குரல் வாரணம் கொடியது ஆகையால். |
11 |
|
|
|
| |
|
|
|
|
|
7869.
| இந்நிகழ் உற்றிட எழுந்த தானைகள் முன் அயல் கடைக் குழை மொய்த்துச் சென்றிடப் பன்னிரு மொய்ம்புடைப் பகவர் மேலவன் அந் நகரத்தினும் அகன்று போயினான். |
12 |
|
|
|
| |
|
|
|
|
|
7870.
| பொரியரை விளவு கால் புனிற்றுத் தீங்கனி வரு பயன் கொண்டு தாம் வறிது வீழ்த்து எனக் கரி இனம் பாரிடக் கணங்கள் ஆர்ப்பினால் வெருவின உணர்வில மயங்கி வீழ்ந்தவே. |
13 |
|
|
|
| |
|
|
|
|
|
7871.
| சாற்றிடில் தம்வினை தம்மைச் சூழும் ஆல் ஆற்றலில் பெற்ற மதலைக்கும் வல்லியம் மாற்றரும் துப்பு உடை வயவர் தானையுள் ஏற்றுரி முரசினுக்கு இடைந்து அழிந்தவே. |
14 |
|
|
|
| |
|
|
|
|
|
7872.
| குஞ்சரம் எறிந்திடும் கொலைவல் கோளரி எஞ்சலில் கயமுகர் எண் இல் பூதர்கள் விஞ்சிய பிளிற்று ஒலி வினவி மெய் பனித்து அஞ்சின நஞ்சு எழ அயர்ந்த தேவர் போல். |
15 |
|
|
|
| |
|
|
|
|
|
7873.
| உரங்குறை போழ்தில் யார் ஒடுங்கல் இல்லவர் வரங்குறை மான் முக வயவர் ஓதையால் கரங்குறைவு இன்றி நீள் கடுங்கண் யாளி போய்க் குரங்கு உறை சூழலுட் குலைந்து புக்கவே. |
16 |
|
|
|
| |
|
|
|
|
|
7874.
| வசை படு பாரிடம் வழுக்கலில் வகை மிசை படும் ஊற்றமாய் மேல் கொண்டு உற்றன இசை படு பாரிடம் இடிக்கும் கொட்பினால் அசை படு கின்றன அடுக்கல் ஆனவே. |
17 |
|
|
|
| |
|
|
|
|
|
7875.
| உரகமும் மடங்கலும் ஒடுங்கி உட்கியே வரைகளின் முழை புக வானத்து ஆர்ப்பன அரிமுக வீரர் தம் அரவத் தன்மையால் இரிவன புரள் வன எழிலி ஏறு எலாம். |
18 |
|
|
|
| |
|
|
|
|
|
7876.
| காட்டக எயினர் தம் கல் என் சும்மையால் கூட்டுறை புட்குலம் குலைவு உற்றால் எனச் சூட்டு உடை வாரணம் தோகை ஆர்ப்பது கேட்டு உளம் நடுங்கினர் கிலேசம் கொண்டுளார். |
19 |
|
|
|
| |
|
|
|
|
|
7877.
| அரங்கு உறு மதலை மேல் ஆடு நீரரின் மரங்களை அலைத்திடு கடுவன் மந்திகள் கரம் குலைவோடு பல் காட்டி வாய் வெரீஇ இரங்கின சேவல் அம் கொடி இடிப்பினால். |
20 |
|
|
|
| |
|
|
|
|
|
7878.
| ஆரண முழங்கு ஒலி அமரர் வாழ்த்து ஒலி சீரண இய வொலி சேனைப் பேர் ஒலி காரணம் இல்லவன் கடவு மா மயில் வாரண ஒலிகளான் மறைதல் உற்றவே. |
21 |
|
|
|
| |
|
|
|
|
|
7879.
| இடன் உறு குறிஞ்சியில் இனைய தன்மையால் நடவை கொள் பெரும் படை நடுவண் ஏகியே சுடர் பொழி வேலினான் தூய கூடலின் குடதிசை அமர் பரம் குன்றை எய்தினான். |
22 |
|
|
|
| |
|
|
|
|
|
7880.
| ஆவது ஓர் பொழுதினில் அங்கண் முன் உறை மூவிரு தவத்தரும் முளரியான் முதல் ஏவரும் எந்தையை இறைஞ்சி இவ்விடை மேவுதி சிறந்தது இவ் வெற்பு என்று ஓதினார். |
23 |
|
|
|
| |
|
|
|
|
|
7881.
| என்றலும் முருகவேள் யாமும் இவ்வரைச் சென்றிட நினைந்தனம் அதனைச் செப்பினீர் நன்று உமது எண்ணமும் நமது சிந்தையும் ஒன்றிய வே என உவப்பில் கூறினான். |
24 |
|
|
|
| |
|
|
|
|
|
7882.
| மைம்மலை துழனியும் வடிவம் பெற்றுடைக் கைம்மலை பொழி தரு கடாம் கொள் சாரலின் அம்மலை ஏறினன் அமலை தன்னொரு செம்மலையாகி வந்து உதித்த சிற்பரன். |
25 |
|
|
|
| |
|
|
|
|
|
7883.
| வற்றரும் திரைக் கடல் வடாது மாதிரப் பொற்றையை நுகர்ந்து எனப் புத சேனைகள் கொற்றவன் வரு பரங் குன்றின் சாரலைச் சுற்றிய மிசையினும் துவன்றிப் புக்கவே. |
26 |
|
|
|
| |
|
|
|
|
|
7884.
| காலை அங்கு அது தனில் கடவுள் கம்மியன் மாலுறு கிரிதனில் வரம்பு இல் வீதியும் கோல நல் தெய்வதக் குலமும் கோயிலும் சோலையும் வாவியும் துவன்ற நல்கினான். |
27 |
|
|
|
| |
|
|
|
|
|
7885.
| அத்துணை எம்பிரான் அமரர் கம்மியன் கைத் தொழில் நோக்கியே கருணை செய்து போய்ச் சித்திர மறுகிடைச் சேனை வீரரை வைத்தனன் மந்திர வரைப்பை எய்தினான். |
28 |
|
|
|
| |
|
|
|
|
|
7886.
| ஏயின மஞ்ஞை நின்று இழிந்து நான்முகன் மாயவன் மகபதி வயவர் மற்றையோர் ஆயினர் புடைவர அவையின் ஊடுபோய்ச் சீய மெல்லணை மிசைச் சிறப்பின் வைகினான். |
29 |
|
|
|
| |
|
|
|
|
|
7887.
| பரீ இயயல் வந்திடு பங்கயன் முதல் மரீஇயினர் தமை எலாம் வயின் வயின் தொறும் ஒரீயினன் அமரரை ஒல்லை ஏவினான் பொரீஇயினர் இல்லதோர் புனித மேலையோன். |
30 |
|
|
|
| |
|
|
|
|
|
7888.
| குலக்கிரி பொருவிய குறளின் வேந்தரும் வெலற்கு அரும் திறல் உடை வீர மொய்ம்பனும் இலக்கரும் எண்மரும் யாரும் எந்தை தன் மலர்க் கழல் தொழுதனர் மருங்கின் ஈண்டினார். |
31 |
|
|
|
| |
|
|
|
|
|
7889.
| ஏவலின் இயன்றனர் இனையர் நின்றிட மூவிரு பராசர முனிசிறார்களும் சேவலை உயரிய தேவ நாயகன் பூவடி அருச்சனை புரிந்து போற்றினார். |
32 |
|
|
|
| |
|
|
|
|
|
7890.
| வழிபடு புதல்வர்கள் வழுத்தி நின்றுழி உழுவல் அன்போடு கண்ணோடிச் செஞ்சடைக் குழவி வெண் பிறையினான் கூறும் தொல்லருள் முழுவதும் நினைந்தனன் முற்றும் உணர்ந்துளான். |
33 |
|
|
|
| |
|
|
|
|
|
7891.
| சலம் புரியும் பராசரன் எனும் முனி குலம் புரி தவம் எனும் குமரர் தேர் உறப் புலம் புரி போதகப் பொருண்மை யாவையும் நலம் புரி குமரவேள் நவின்று வைகினான். |
34 |
|
|
|
| |
|
|
|
|
|
7892.
| பொருவரு மகேந்திரப் புரத்தை நீங்கியே தரணியில் வந்தவா சாற்றினாம் இனிப் பெருமை கொள் இந்திரன் பெண்ணை எம்பிரான் திருமணம் செய்திடும் செய்கை செப்புவாம். |
35 |
|
|
|
| |
|
|