தக்கன் மகப்பெறு படலம்
 
8341.
்ஆங்கு அவன் தேவி ஆனாள் அருந்ததிக் கற்பின்                                   மிக்காள்
வாங்கிய நுசுப்பின் நல்லாள் மறைக் கொடி எனும்                                   நாமத்தாள்
பூம் கமலத்துப் புத்தேள் பொன் அடி தன்னில் வந்தாள்
ஓங்கு தொல் உலகுக்கு எல்லாம் ஒருதனி முதல்வி                                   ஆனாள்.
1
   
8342.
சேயிழை அவளொடு செறிந்து புல்லியே
மீ உயர் கமல மேல் விரிஞ்சன் காதலன்
மா இரும் பணிபதி மணிகள் ஈன்று என
ஆயிரம் மைந்தரை அருளினான் அரோ.
2
   
8343.
அப் பெரு மைந்தர்கள் ஆயினோர்க்கு எலாம்
முப் புரி நூல் விதிமுறையின் ஆற்றியே
செப்ப அரு மறைகளின் திறமும் ஈந்து பின்
இப் பரிசு ஒன்றினை இசைத்தல் மேயினான்.
3
   
8344.
நல்லது ஓர் மானதம் நணுகி நீவிர்கள்
எல்லிரும் ஈசனை எண்ணி நோற்றி இரீஇப்
பல் உயிரும் தரும் பரிசு பெற்று இவண்
செல்லுதிர் ஆல் எனச் செப்பி ஏவினான்.
4
   
8345.
ஏயின காலையில் இறைஞ்சி மைந்தர்கள்
போயினர் மானதப் பொய்கை புக்கனர்
ஆயிடைப் படிந்தனர் அரனை உன்னியே
மா இரு நோன்பினை இயற்றி வைகினார்.
5
   
8346.
நேர் அற இன்னணம் நெடிது நோற்புழி
நாரதன் என்பவன் நண்ணி ஆ இடை
வாரியுள் ஆற்றவும் வருந்து கிற்றிர் ஆல்
காரியம் யாவது கழறுவீர் என்றான்.
6
   
8347.
என்னலும் முனிவ கேள் யாங்கள் நல்கிடும்
முன் உற நல்குவான் முயன்று முக் கணான்
தன் அடி உன்னியே தவத்தை ஆற்றுதும்
அன்னதும் எந்தை தன் ஆணையால் என்றார்.
7
   
8348.
அறிந்திடு முனிவரன் அதனைக் கேட்டலும்
செறிந்திடு கரத்தொடு செம் கை தாக்கு உற
எறிந்தனன் நகைத்தனன் இது கொல் ஈசனால்
பெறும் பரிசே எனப் பின்னும் கூறினான்.
8
   
8349.
ஈசனையே நினைந்து இறைஞ்சி ஏத்தியே
பேசரும் அரும் தவம் பிடித்து மூ வகைப்
பாசம் அது அகல் நெறி படரச் சித்தியீர்
ஆசு உறு படைப்பினுக்கு ஆர்வம் செய்திரோ.
9
   
8350.
சிறப்பு உள அரும் தவம் செய்து நீர் இனி
உறப்படு கதிமுறை உரைப்பக் கேட்டிர் ஆல்
பிறப்பு உள இடர் உளது அன்றிப் பின்னரும்
இறப்பு உளது அது நுமக்கு இனியது ஆகுமோ.
10
   
8351.
இன்று நீர் வெஃகியது அற்று நான் முகன்
தன் தலை ஐந்தினில் ஒன்று சங்கரன்
பொன்திகழ் கரம் கொளப் புகுந்த தீமையும்
நின்றது ஓர் பழியையும் நினைக் கிலீர் கொலோ.
11
   
8352.
என் அலது இறையவர் இல்லை யார்க்கும் யான்
முன்னவன் என்று நான் முகத்தன் மால் ஒடு
பல் நெடு நாள் அமர் பயின்று சோதி கண்டு
அன்னம் அது ஆனதும் அறிந்திலீர் கொலோ.
12
   
8353.
நேயம் எண் உற்று என நிறைந்த கண் நுதல்
நாயகன் விதித்திட நம்மில் யாவையும்
ஆய என்று அகந்தை உற்று அமர்வன் அன்னவன்
மாயம் என்று உரைத்திடும் தளையின் வன்மை ஆல்.
13
   
8354.
பற்றொடு முழுது உயிர் படைக்கும் பான்மை ஆல்
பெற்றிடும் பயன் எவன் பெருமை அல்லது
நல்தவ முனிவிர் காள் நன்கு இது என்று ஒரு
பொன் தளை தம் பதம் பூட்டல் ஆகுமோ.
14
   
8355.
எத்துணை எத்துணை இன்பம் வேண்டுநர்க்கு
அத்துணை அலக்கண் வந்து அடையும் ஆங்கு அது
மெய்த் திறம் நீவிரும் விதியின் நிற்றிர் ஏல்
கைத்து உறு துயர் எனும் கடலில் சார்திர் ஆல்.
15
   
8356.
அன்றியும் ஈசனை அயர்த்தியாம் இறை
என்று உளம் உன்னுதிர் இசைவு இல் தீ வினை
மன்றவும் ஆற்றுதிர் மயக்கம் கொள்ளுதிர்
ஒன்றிய பேர் உணர் ஒருவிப் போதிர் ஆல்.
16
   
8357.
வீட்டிடும் இச் செயல் வீடு சேர் தர
மோட்டு உறு நிலை கொடு முயன்று கூடுதிர்
ஈட்டு உறு நல் நெறிக் இயைவது ஒன்றினைக்
காட்டியே இனைத்து எனக் கழறல் ஆகுமோ.
17
   
8358.
அற்றம் இல் தவம் புரிந்து அரிய வீட்டினைப்
பெற்றவர் அளப்பு இலர் பெறுவது ஆகியே
உற்றவர் அளப்பு இலர் உலகில் சில சில
மற்று அவர் தமது இயல் வகுப்பக் கேண் மினோ.
18
   
8359.
சுற்றம் அது அரன் அடித் தொண்டர் அல்லது
மற்று இலர் அவன் அடி மலர்களே அலால்
பற்று இலர் சாலவும் இனிய பண்பினர்
குற்றம் அது அகன்றது ஓர் கொள்கை மேயினார்.
19
   
8360.
நேசம் உற்று அடைபவர் நினைப்பின் நீக்க அரும்
ஆசு அறுத்து அருள் மொழி அறிவின் மேலையோர்
ஈசனைக் குறுகி எஞ் ஞான்றும் வாழ்பவர்
பேசுதற்கு அரியது ஓர் பெருமை எய்தினார்.
20
   
8361.
ஆதலின் அவர் என அவா இன்று உற்றிடு
மே தகு நெறி உறீஇ வீடு சேருதிர்
ஏதம் இல் வெறுக்கை பெற்று எண்ணம் தீர்ந்திடும்
தாதை தன் பணியினைத் தவிர்திர் என்னவே.
21
   
8362.
அந்தம் இல் வீடு பேறு அடையும் ஊழ் உடை
மைந்தர்கள் ஓர் புடை வந்து தேர்வு உறாத்
தந்தை சொல்லினும் இது தக்கதே எனப்
புந்தி கொண்டு அடிகளை வணங்கிப் போற்றினார்.
22
   
8363.
போற்றும் மைந்தரைப் பெரும் புறம் தழீஇ அரன்புகழ்
சாற்றி வீடு வெஃகு உறும் தவத்தினோர்கள் நிலையினைத்
தேற்றி மந்திரங்களும் செயற்கையும் புணர்த்தியே
மாற்றினன் தொல் உணர்வு தன்னை மற்று ஒரு உண்மை                                     உதவினான்.
23
   
8364.
வேறு ஒரு உண்மை உதவல் செய்து விதியின் நாடி
                                  வேத நூல்
கூறுகின்ற முறை புரிந்து குமரர் யாரும் இன்னணம்
ஈறு இல் மா தவங்கள் ஆற்றி எல்லை தீர்ந்த முத்தியில்
சேறிர் என்று முனிவன் ஒல்லை சேண் எழுந்து                                   போயினான்.
24
   
8365.
போகு நாரதர் புகழ்ந்து பொன் அடித் தலத்தின் மேல்
ஓகையோடு தாழ்ந்து முன் உணர்த்து பான்மை உன்னியே
மோகம் ஆதி ஆன தீமை முழுதும் மாற்றி மோனிகள்
ஆகி மைந்தர் எவரும் அம்கண் ஆற்றினார் அரும் தவம்.
25
   
8366.
அரும் தவங்கள் பலவும் ஆற்றி அவர்கள் வீடு சேர்தலும்
இருந்து தவம் புரிந்த தக்கன் இளைஞர் பெற்றி இன்னமும்
தெரிந்தது இல்லை என்று சிந்தை செய்து போத                                  உணர்வினால்
பொருந்த நோக்கல் உற்றவள் புகுந்த பான்மை கண்டனன்.
26
   
8367.
மானதத் தடத்தின் ஊடு மாற்று அரும் தவத்தராய்
மோனம் உற்ற சிறுவர் பாலின் முன்னி வந்து நாரதன்
ஞானம் முற்றும் ஓதி என் சொல் நவையது என்று                                    மாற்றியே
மேல் நிலைக்கண் உய்த்து மீண்டும் விண் படர்ந்து                                    போயினான்.
27
   
8368.
மிக்க மைந்தர் அவன் உரைத்த விதியின் நின்று வீடுபேறு
ஒக்க லோடும் மேயினார்கள் ஒருவர் இன்றி எற்கு இனி
மக்கள் இன்று எனத் தெரீஇ வருத்தம் உற்று இருந்திடும்
தக்கன் மற்றும் ஆயிரம் தவச் சிறாரை உதவினான்.
28
   
8369.
பெற்ற மைந்தரைத் தழீஇப் பிறங்கு காமர் மீச்செல
அற்றம் இல் சிறப்பின் வேதம் அறிவுறுத்தி ஆதி ஆம்
நெற்றி அம் கணானை உன்னி நீவிர்யாவும் நல்குவான்
நல்தவம் செய்து அணைதிர் மானதத் தடத்தில் என்னவே.
29
   
8370.
கேட்ட மைந்தர் தாதை தாள் கெழீஇய தங்கள்                                 சென்னியில்
சூட்டி ஏவல் போற்றி அன்ன தூ மலர்த் தடத்து இடை
ஈட்டமோடு சென்று இருந்து தவம் புரிந்தனர்
காட்டில் உள்ள கய முனிக் கணங்கள் அம்கண் உற்று                                 என.
30
   
8371.
ஆன காலையில் அனைய மைந்தர்கள்
ஊனம் இன்றி நோற்று ஒழுக முன்னரே
போன நாரதன் புணர்ப்பு ஒன்று ஓர்ந்திடா
மானதத் தட மருங்கில் எய்தினான்.
31
   
8372.
எய்தி யாவர் நீர் யாரும் மா தவம்
செய்திர் எப் பொருள் சேர்தல் வெஃகினீர்
நெய்து இல் அன்னது நுவல வேண்டும் ஆல்
கை தவம் பெறாக் கருத்தினீர் என.
32
   
8373.
தந்தை ஆகியோன் தக்கன் ஆங்கு அவற்கு
அந்தி வண்ணனார் அருளும் பேற்றினால்
வந்த மைந்தர் ஏம் யாங்கண் மற்று அவன்
இந்த வான் தடத்து எம்மை ஏவினான்.
33
   
8374.
தேவ தேவனைச் சிந்தையில் கொடே
ஆவியோடு உடல் அலச நோற்று இரீஇ
ஓவில் பல் உயிர் உதவல் பெற்றிட
ஏவினான் எமை என்று சொற்றனர்.
34
   
8375.
சொற்ற காலையில் துகள் இல் தூயவன்
நல்தவம் செய்வீர் தாதன் தாளையே
பற்ற தாவுளீர் பயன் என்று உன்னலீர்
குற்றம் யாவரே குறுகலார் களே.
35
   
8376.
நோற்றி யாவையும் நோக்கிச் செய் வினைப்
பேற்றை எய்துவீர் பிறப்பு மாய்வது
மாற்றுவீர் அலீர் மயக்கம் தீர்திரோ
ஏற்றம் என் கொல் நீர் ஈகின்றீர் இனும்.
36
   
8377.
மேய மாசு தோய் விழைவின் மெய்யினர்
தூயது ஓர் தடம் துறையை எய்தியும்
சேய சேதகம் திளைத்தல் போலும் ஆல்
நீயிர் கொண்டது ஓர் நிலைமை தானுமே.
37
   
8378.
தலையது ஆகிய தவம் தனக்கு நீர்
விலையதாப் பெறும் விதியின் செய்கையும்
நிலையது ஆகுமோ நீடு நாள் ஒடே
உலகம் ஈது சீர் உறுவது அன்றியே.
38
   
8379.
போவதும் வருவதும் பொருமலும் நன்கும் இன்று
ஆவது ஓர் கதி அதே ஆர் உயிர்க்கு உறுதி ஆம்
நீவிர் அக் கதியினை நினைக்கிலீர் இறுதியும்
ஓவரும் பிறவியும் உம்மை விட்டு அகலுமோ.
39
   
8380.
சிறுவர் தம் உள்ளமும் சேய் இழை மகளிர் தம்
அறிவு மால் எய்தினோர் சிந்தையும் ஆன ஆல்
உறுவது ஓர் பனுவலும் உற்றிடும் பெற்றியே
பெறுவது ஆம் அன்றியே பின்னர் ஒன்று ஆகுமோ.
40
   
8381.
ஆதலால் உங்களுக்கு அருள் செயும் தன்மையான்
தாதை ஆகின்றது ஓர் தக்கனே எனின் அவன்
பேதை ஆம் ஈசனால் பெருவளம் பெற்றவன்
பாத தாமரையினில் பரிவு உறா நெறிமை ஆல்.
41
   
8382.
ஆங்கு அவன் மையலோன் ஆதலால் அவன் அருள்
நீங்களும் அனையரே நெறி தரும் தேசிகன்
தீங்கு எலாம் நீக்கியே சிவ கதிபால் பட
ஓங்கு பேர் அருளொடும் உணர்த்துவான் அல்லனோ.
42
   
8383.
முந்து ஆயிரவரும் முன் பரிப் பொய்கை வாய்த்
தந்தை தன் பணியின் மூதாதை போல் நல்கவே
வந்துளார் நோற்று உழி மயல் அறத் தேற்றியே
அந்த மா நெறி நிறீஇ அரிய வீடு அருளினான் ஆம்.
43
   
8384.
என்னலும் நாரதன் எழில் மலர்த் தாள் இணை
சென்னி மேல் சேர்த்தியே சிறயரேம் உய்யவே
உன்னி ஈண்டு ஏகி நீர் உணர்த்தும் மெய்ந் நெறியினை
இன்னது என்று உணர் கிலேம் எமக்கு அருள் புரிதிர்                                       ஆல்.
44
   
8385.
என்பவர்க்கு அருள் புரிந்து எண் இல் ஆர்வத்தொடு
நல் பொருள் காட்சியை நான் உமக்கு உதவியே
வன் புலத்து ஆறு போய் மதி மருண்டு இன்பமும்
துன்பு உற்று உழல் பவம் தொலைவு செய்திடுவன் ஆல்.
45
   
8386.
ஆதியார் தாள் இணை அருளொடே வழிபடும்
நீதி ஆம் நீரினார் நிலைமையாய் நின்றிடும்
பாத நான்கு அவர் பெறும் பதமும் நான்கு அதன் உளே
ஓதியார் பெறுவது ஓர் உயர் பெரும் கதி அதே.
46
   
8387.
முத்தி என்று இடுவதே மொழிவது ஓர் நாமம் ஆம்
அத்திறம் கடவுளர்க்கு ஆயினும் தெரிவதோ
நித்தன் அன்பு உறுவது ஓர் நெறியர் ஆய் இருவினை
ஒத்த பண்போர்களால் உணரலாம் அல்லதே.
47
   
8388.
அந் நிலைக் கண் உளார் ஆதியார் தாள் அடைந்து
இன்னலுக்கு இடையது ஆம் இப்பெரும் பிறவியுள்
பின்னர் உற்றிடுகிலர் பேசுதற்கு அரியது ஓர்
நல் நலத்தொடு கெழீஇ நாளும் இன்பு உறுவரே.
48
   
8389.
ஆதலால் நீவிரும் அந்நெறிப் பால் உறீஇ
மேதை சால் யோகினால் வீடு சேருதிர் எனா
ஆதி ஆம் இறைவன் நூல் அறையும் உண்மைகள் எலாம்
நாதனார் அருளினால் நாரதன் உரை செய்தான்.
49
   
8390.
அன்று நாரத முனி அவர் எலாம் அவ்வழி
நின்றிடும்படி நிறீஇ நெறி கொள்வான் உலக மேல்
சென்றனன் பின்னர் அச் சிறுவர் ஆயிரவரும்
ஒன்று சிந்தனையினால் உயர் தவத்து ஒழுகினார்.
50
   
8391.
உயர் தவக் கிழமையில் ஒழுகியே உற்று உளோர்
மயல் தொலைத்து அருள் சிவன் மன்னு பேர் அருளினால்
வியன் நெறிப் பாலது ஆம் வீடு பேறு எய்தினார்
அயன் மகற்கு இனிமை கூர் ஆயிரம் குமரரும்.
51
   
8392.
உங்ஙனம் நாரதன் ஓதியது உணர் உறா
இங்ஙனம் வீடு பேறு எய்தலும் சிறுவர்கள்
எங்ஙனம் போயினார் இன்னும் வந்திலர் எனா
அங்ஙனம் சிறுவிதி அயருவான் ஆயினான்.
52
   
8393.
போதத்து உணர்வால் அவர்க் கண் உறும் போழ்து                                     தன்னின்
மே தக்க மைந்தர் தமை நாரதன் மேவி மேல் ஆம்
ஓதித் திறம் உள்ளன கூற உணர்ந்து நோற்றுத்
தீது அற்று வீடு புகு தன்மை தெரிந்தது அன்றே.
53
   
8394.
தெரிகின்ற வேலைக் கிளர் கின்றது சீற்றம் உள்ளம்
பரிகின்றது ஆவி பதைக்கின்றது பையுள் மாலை
விரிகின்றது அம்மா வியர்க்கின்றது மேனி விண்ணின்
திரிகின்றது கோள் இரங்கு உற்றது ஞாலம் எல்லாம்.
54
   
8395.
தன் பாலகர் தம் செயல் கண்டு தளர்ந்து சோரும்
வன் பாலினன் ஆகிய தக்கன் வரத்தை வேண்டும்
என்பாலர் என்பால் இலது ஆக்கினன் எண்ண மிக்கு
நன்பால் உலகத்து உழல்வான் இனி நாளும் என்றான்.
55
   
8396.
மேல் நாரதன் செய் புணர்ப்பு உன்னி வெகுண்டு தக்கன்
நோனாது சாபம் நுவன்றே நனி நோற்க மைந்தர்
ஆனாரை நல்கேன் மகப் பெற்றது அமையும் என்னா
மான் ஆர் தமையே புரியத் தன் மனம் வலித்தான்.
56
   
8397.
இருபதின் மேலும் மூவர் ஏந்திழை மாரை நல்கிப்
பெருமை கொள் தக்கன் தன் மன் பிருகுவே மரீசி                                   என்போன்
கருணை கொள் புலத்தியன் அங்கிராப் புலகன் வசிட்டன்
திரிவு இல் அத்திரி தீ வேள்வி சீர்ப் பிதராவுக்கு ஈந்தான்.
57
   
8398.
துய்யது ஓர் சுபத்தி புத்தி சுரேசையே திருதி துட்டை
செய்ய நற் கிரியை கீர்த்தி சிரத்தையோடு இலச்சை மேதா
மை விழிக் கத்தி சாந்தை வபுவை முன் தருமன் வேட்டுப்
பொய் தவிர் இருபான் ஏழு புதல்வரை அளித்தான்                                     மன்னோ.
58
   
8399.
கேதம் இல் பிருகு என்பான் கியாதியைக் கொண்டு புல்லி
ஏதம் இல் விதாதாத் தாதா என்று இரு சிறாரை ஈன்று
சீதள வனசம் கொண்ட செம் திருவையும் முன் தந்து
மாதவன் தனக்கு நல்கி மா தவத்து இருந்தான் மாதோ.
59
   
8400.
தாரணி புகழ் மரீசி சம்பூதி தன்னை வேட்டு ஆங்கு
ஈர் இரு பிணாக்கள் ஈந்தான் இவர் வழிப் பிறந்தார்                                    பல்லோர்
போர் இயல் புலத்தை வென்ற புலத்திய முனிவன் என்பான்
நாரி சன்னதியை வேட்டு நல் மகார் பலரைத் தந்தான்.
60
   
8401.
அங்கிரா மிருதி என்னும் ஆய் இழை தனை மணந்து
பங்கம் இல் அங்கி தீரன் பரதன் ஆம் மகாரைப் பெற்று
மங்கையர் நால்வர் தம்மை மகிழ்ந்து உடன் அளித்தான்                                      அன்னார்
தம் குடிப் பிறந்த மேலைத் தவத்தரும் அளப்புஇல் ஓரால்.
61
   
8402.
பெருமை கொள் புலகன் என்போன் பிருதியைக்
                             கொண்டு தத்தாத்
திரிதனைப் பயந்தான் அன்னோன் சீர் வழிக் கும்பன்                              போந்தான்
ஒருமை சேர்வசிட்டன் என்போன் ஊற்றசையை மணம்                              செய்து ஆங்குஓர்
தெரிவையை நல்கி மைந்தர் எழுவரைச் சிறப்பில்
                             தந்தான்.
62
   
8403.
அத்திரி என்னும் மேலோன் அனசூயை தன்னை வேட்டுச்
சத்தி நேத்திரனே திங்கள் சனி சங்க தானன் என்னும்
புத்திரர் தம்மைத் தந்தான் பொங்கு தீச் சுவாவை வேட்டு
மெய்த்திறல் படைத்த மைந்தர் மூவரை விரைவொடு                                     ஈந்தான்.
63
   
8404.
கவி புகழ் கிரது வானோன் சுமைதனை மணத்தில் கூடி
உவகையின் மூன்று பாலர் உதவினன் பிரதா என்போன்
சுவதை என்று இசைக்க நின்ற துடி இடை தன்னை                                    வேட்டுத்
தவல் அரும் சிறப்பின் மேனை தரணி மங்கையரைத்                                    தந்தான்.
64
   
8405.
அந்த நல் மேனை தன்னை ஆர்வமோடு இமவான்                                   கொண்டான்
முந்து உறு தரணி தன்னை முறையினால் மேரு வேட்டு
மந்தர கிரியை நல்க மற்று அது நோற்று முக்கண்
எந்தை தன் இடத்து எஞ்ஞான்றும் இருந்திடப் பெற்றது                                   அன்றே.
65
   
8406.
விண் உயர் மேருப் பின்னர் வேலை என்பவளை நல்கித்
தண் உறு கடற்கு நல்கச் சரவணி என்ன ஆங்கு ஓர்
பெண்ணினை அனையன் பெற்றுப் பெரும் புகழ்ப்                              பிராசினப் பேர்
அண்ணலுக்கு உதவ அன்னான் ஐயிரு மகாரைத் தந்தான்.
66