முகப்பு |
உமை கயிலை நீங்கு படலம்
|
|
|
8469.
|
கமலமூர்த்தியும் கண்ணனும் காண்கிலா
அமல மேனியை அன்பினர் காண் உற நிமலம் ஆகிய நீள் கயிலாயம் மேல் விமல நாயகன் வீற்று இருந்தான் அரோ. |
1 |
|
|
|
|
|
|
|
8470.
| வீற்று இருந்தவன் மெல்லடி கை தொழூஉப் போற்றி உன் தன் பொரு வரு மெய்மையைச் சாற்றுவாய் எனச் சங்கரி வேண்டலும் ஆற்ற அன்பு செய்து ஆங்கு அருள் செய்குவான். |
2 |
|
|
|
|
|
|
|
8471.
| உருவொடு குணம் செயல் ஒன்றும் இன்றியே நிரு மலம் ஆய்ச் சிவன் நிறைந்து நின்றதும் பரவிய உயிர்த் தொகைப் பந்தம் நீக்குவான் ஒரு தனிச் சத்தியால் உன்னல் உற்றதும். |
3 |
|
|
|
|
|
|
|
8472.
| ஐந்து இயல் சத்திகள் ஆயினோர் தமைத் தந்ததும் அரு உருத் தாங்கி அவ்வழிச் சிந்தனை அருச்சனை செய்தி யாவரும் உய்ந்திடச் சதா சிவ உரு ஐந்து உற்றதும். |
4 |
|
|
|
|
|
|
|
8473.
| இருபதின் மேலும் ஐந்து ஈசன் கேவல உருவம் அது ஆகியே உறைந்த பெற்றியும் விரவிய குடிலையின் விளைவு செய்து பின் அருள் புரி மூர்த்திகள் ஆய பேதமும். |
5 |
|
|
|
|
|
|
|
8474.
| முந்திய மாயைகள் மூலம் ஆகவே அந்தம் இல் தத்துவம் ஆறொடு ஆறு முன் வந்திட அளித்தது மரபின் ஐந் தொழில் சிந்தை கொள் கருணையான் நடாத்தும் செய்கையும். |
6 |
|
|
|
|
|
|
|
8475.
| வித்து இடு மூவகை வியன் உயிர்த் தொகை கதித்திடு தத்துவக் கணங்கள் அங்கு உளார் உதித்திடு முறைமையின் ஒடுங்கச் செய்து தான் மதித்து ஒரு தன்மை ஆய் மன்னி நிற்பதும். |
7 |
|
|
|
|
|
|
|
8476.
| ஆன தன் இயற்கை கள் அனைத்தும் கண் நுதல் வானவன் ஆகம மறையின் வாய்மையான் மேல் நிகழ் தொகை வகை விரியது ஆகவே தான் அருள் புரிந்தனன் தலைவி கேட்கவே. |
8 |
|
|
|
|
|
|
|
8477.
| சுந்தரி இவ்வகை உணர்ந்து தோம் இலா எந்தை நிற்கு உரு இலை என்றி பின் உற ஐந்து ஒடு பல உரு அடைந்தது என் எனக் கந்தனை அருளுவான் கழறல் மேயினான். |
9 |
|
|
|
|
|
|
|
8478.
| உரு இலை நமக்கு என ஒன்று நம் வயின் அருள் உரு அவை எலாம் என்ன அன்னது ஓர் பொருள் என உன்னியே புவனம் ஈன்றவள் பெரு மகிழ்வு எய்தி இப் பெற்றி கூறினாள். |
10 |
|
|
|
|
|
|
|
8479.
| அந்நிலை வடிவு எலாம் அருளின் ஆதலால் உன் அருள் யான் என உரைப்பது உண்மையே என் உரு ஆம் அவை என்று பாங்கு அமர் கன்னிகை வியந்தனள் கழறும் வேலையே. |
11 |
|
|
|
|
|
|
|
8480.
| கயம் தனது ஈருரி கவின்று பொற்பு உறப் புயம் தனில் அணிந்து அருள் புனிதன் நங்கை நீ நயம் தரு நின் புகழ் நாடி நம் முனம் வியந்தனை உனை என விளம்பி மேலுமே. |
12 |
|
|
|
|
|
|
|
8481.
| இருள் உறும் உயிர் தொறும் இருந்து மற்று அவை தெருள் உற இயற்றுதும் அதனைத் தீர்து மேல் மருள் உறு சடம் அதாய் மாயும் ஏனைய பொருள் உறு நிலைமையைப் புகல வேண்டுமோ. |
13 |
|
|
|
|
|
|
|
8482.
| உன்னிடை தனினும் யாம் உறுதல் இல் வழி நின் உயிர் உணர்வு உறா நினக்குக் காட்டுதும் அன்னது காண்க எனா அயனை ஆதிய மன் உயிர் இயற்றிடும் வண்ணம் நீங்கினான். |
14 |
|
|
|
|
|
|
|
8483.
| தேவர்கள் நாயகன் செயல் இலாமையால் ஆவிகள் யாவையும் சடமது ஆகியே ஓவியமே என உணர்வின் உற்றன பூ உலகே முதல் புவனம் யாவினும். |
15 |
|
|
|
|
|
|
|
8484.
| ஆட்டு வித் திடுபவன் அதுசெயா வழிக் கூட்டுடைப் பாவைகள் குலைந்து வீழ்ந்து என நாட்டிய பரன் அருள் நடாத்தல் இன்மையால் ஈட்டு பல் உயிர்த் தொகை எனைத்தும் மாய்ந்தவே. |
16 |
|
|
|
|
|
|
|
8485.
|
இந்தவாறு
உயிர்த் தொகை யாவும் ஒல்லையில்
நந்தியே சடமதாய் நணிய எல்லையில் சிந்தை செய்து இனையது தெருமந்து அஞ்சியே சுந்தரி அரன் அடி தொழுது சொல்லுவாள். |
17 |
|
|
|
|
|
|
|
8486.
| அறிகிலன் எந்தை நீ அனைத்தும் ஆகியே செறிவது முழுது உயிர்த் திறன் இயற்றியே உறுவதை என் பொருட்டு ஒருவி நின்றனை இறுதியின் அவை எலாம் இருளின் மூழ்கவே. |
18 |
|
|
|
|
|
|
|
8487.
| ஓர் இறை ஆகும் ஈது உனக்கு உயிர்க்கு எலாம் பேருகம் அளப்பு இல பெயரும் என் பிழை சீரிய உளம் கொளல் தேற்றம் பெற்று எழீஇ ஆர் உயிர் மல்குமாறு அருளுவாய் எனா. |
19 |
|
|
|
|
|
|
|
8488.
| பல் முறை பரவினள் பணிந்து நிற்றலும் அன் மலி கூந்தலுக்கு அருளி ஆவிகள் தொன்மையில் வினைப் பயன் துய்ப்ப நல்குவான் நின் மலன் நினைந்தனன் கருணை நீர்மையால். |
20 |
|
|
|
|
|
|
|
8489.
| திருத்தகு தனது அருள் சேர்ந்த பல் வகை உருத்திரர் தமக்கு முன் உணர்வு செய்துழி நிருத்தனை அவ்வழி நினைவு உற்று இச் செயல் கருத்திடை யாது எனக் கருதி நாடினார். |
21 |
|
|
|
|
|
|
|
8490.
| நாடிய எல்லையில் நான் முகத்தன் மால் தேடிய அண்ணல் தன் செய்கை ஈது எனக் கூடிய ஓதியால் குறித்து முன்னுற வீடிய உயிர்த் தொகை எழுப்ப வெஃகியே. |
22 |
|
|
|
|
|
|
|
8491.
| கண் நுதல் எந்தை தன் கழல்கள் அர்ச்சனை பண்ணுதல் உன்னிய பகவன் தொல் சுடர் விண் இடை இன்மையின் வேலை காண்கிலா மண் இடை அருச்சுன வட்டத்து எய்தினார். |
23 |
|
|
|
|
|
|
|
8492.
| எங்கண்ணும் கனை இருள் இறப்ப வீசலில் கங்குலே போன்றது இக் காலை கண் நுதல் புங்கவற்கு ஏற்றிடு பூசை செய்தும் என்று அங்கு அவர் யாவரும் ஆய்தல் மேயினார். |
24 |
|
|
|
|
|
|
|
8493.
| முண்டக மலர் கெழு முக்கண் மேலையோன் கொண்டது ஓர் ஐம் பெரும் கோலத் தேவரும் எண் தகு மூவகை இயல்புள் ஆங்கு அவர் மண்டல விதியினால் வடிவது ஆக்கியே. |
25 |
|
|
|
|
|
|
|
8494.
| எண் இரு திறத்தவாய் இயன்ற நல் பொருள் உள் நிகழ் அளியொடும் உய்த்து வேதனும் கண்ணனும் வழிபடு கங்குல் பூசையைப் பண்ணுதல் முயன்றனர் பரிவின் மேலையோர். |
26 |
|
|
|
|
|
|
|
8495.
| ஆறு இரு நாலுடன் அஞ்சு எழுத்தையும் கூறினர் எண்ணினர் கோது இல் கண்டிகை நீறொடு புனைந்து இறை நிலைமை உட்கொளா வேறு உள முறை எலாம் விதியில் செய்துபின். |
27 |
|
|
|
|
|
|
|
8496.
|
வான்
குலாம் வில்லுவம் மரு மென் பாசடை
தேன் குலா மரை இதழ் செய்ய சாதிவீ கான் குலாம் வலம் புரி கடவுள் தொல் பெயர் நான்கு யாமத்தினும் நவின்று சாத்தியே. |
28 |
|
|
|
|
|
|
|
8497.
| ஏய வான் பயறு பால் எள் நல் ஓதனம் தூய நல் உணவு இவை தொகுத்துக் கண் நுதல் நாயகன் முன் உற நான்கு யாமத்தும் நேயமொடு அம் முறை நிவேதித்து ஏத்தியே. |
29 |
|
|
|
|
|
|
|
8498.
| பின்னரும் இயற்றிடு பெற்றி யாவையும் தொல் நிலை விதிகளில் தோம் உறா வகை உன்னினர் புரிந்துழி உவந்து உருத்திரர் முன் உற வந்தனன் முக்கண் மூர்த்தியே. |
30 |
|
|
|
|
|
|
|
8499.
| அவ்விடை மருதினில் ஐந்தும் ஆறும் ஆம் மெய்வகை உருத்திரர் வேண்டி ஆங்கு அருள் செய்வது ஒர் கண்நுதல் தேவன் தொன்மை போல் எவ்வகை உயிரையும் இயற்ற உன்னலும். |
31 |
|
|
|
|
|
|
|
8500.
| எழுந்தனர் மால் அயன் இந்திரர் ஆதியர் எழுந்தனர் எழுந்தனர் யாரும் வானவர் எழுந்தனர் முனிவரர் ஏனை யோர்களும் எழுந்தன உயிர்த் தொகை இருளும் நீங்கிற்று ஆல். |
32 |
|
|
|
|
|
|
|
8501.
| அலிடை உறங்கினர் அறிவு சேர்ந்துழி மெல்லென அயர்ந்த கண் விழித்து எழுந்த போல் எல்லை இல் உயிர்த் தொகை யாவும் அவ்வழி ஒல்லையில் எழுந்தன உலகில் எங்கணும். |
33 |
|
|
|
|
|
|
|
8502.
| ஓங்கலும் கரிகளும் உலப்பு இல் நாகமும் தாங்கின தரணி பாதலத்தில் கூர்மம் ஆம் ஆங்கது போற்றிய தண்டம் தன்னிடைத் தீம் கதிர் மதி உடுப் பிறவும் சென்றவே. |
34 |
|
|
|
|
|
|
|
8503.
| அன்னதொர் திறம் எலாம் அமலன் ஆணையால் தொல் நிலை அமைந்த அத் தொடர்பு நோக்கியே இந் நெறியாவையும் ஈசன் செய்கையே பின்னிலை என்றனர் பிரமன் ஆதியோர். |
35 |
|
|
|
|
|
|
|
8504.
|
மற்று இவை நிகழும் வேலை மன் உயிர்க்கு உணர்ச்சி நல்கி
உற்றனன் எந்தை என்றே உருத்திரர் உணர்ந்து தம்
முன்
பற்று அலர் எயில் மூன்று அட்ட பண்ணவன் வர நேர் சென்று
பொன் திருவடியில் வீழ்ந்து போற்றலும் அமலன் சொல்வான்.
|
36 |
|
|
|
|
|
|
|
8505.
|
ஈண்டு எமை அருச்சித்து இட்ட இயல்பினால் உயிர்கட்கு எல்லாம்
மாண்ட தொல் உணர்ச்சி நல்கி எழுப்பினம் மற்று நீவிர்
வேண்டின யாவும் கேண்மின் விரைந்து என அமலன்
தன்
கண்
பூண்ட தோர் அன்பு மிக்கோர் இனையன புகலல்
உற்றார்.
|
37 |
|
|
|
|
|
|
|
8506.
|
நிற்றலும் அல்லில் எம்போல் நின்னடி எனையர் ஏனும்
பற்றுடன் அருச்சித் தோர்க்குப் பழிதவிர் மாகத் திங்கள் உற்றிரு கதிரும் ஒன்றும் ஒண் பகல் முதல் நாள் கங்குல் பெற்றிடு சிறப்பு நல்க வேண்டும் ஆல்பெரும என்றார். |
38 |
|
|
|
|
|
|
|
8507.
|
நீவிர்
செய் பூசை தன்னை நெடிது நாம் மகிழ்ந்த
ஆற்றால்
ஆவிகள் அனைத்தும் உய்ந்த அருவினை அகன்று நும்போல்
பூவினில் என்றும் பூசை புரிந்தவர்க்கு எல்லாம் முத்தி
மேவர அளித்தும் என்றே வியன் அருள்புரிந்து போந்தான்.
|
39 |
|
|
|
|
|
|
|
8508.
|
எம் பெரும் தலைவன் ஏக உருத்திரர் யாரும் ஈண்டித்
தம் பதம் குறுகி முன்போல் சார்ந்தனர் அனைய காலை
அம் புயன் ஆதி வானோர் அனைவரும் கயிலை புக்கு
நம்பனை வணக்கம் செய்து தொழுது இவை நவிலல் உற்றார்.
|
40 |
|
|
|
|
|
|
|
8509.
|
மன் உயிர்க்கு உயிராய் உற்ற வள்ளல் கேள் யாங்கள் எல்லாம்
உன் அருள் உறாத நீரால் உணர்வு ஒரீஇச் சடமது
ஆகிப்
பல் நெடும் காலம் வாளா கிடந்தனம் பவம் மூழ்கு உற்றேம்
அன்னது தனக்குத் தீர்வு ஒன்று அருள் என அண்ணல் சொல்வான்.
|
41 |
|
|
|
|
|
|
|
8510.
|
மங்கியே உணர்வு சிந்தி மறை முறை புரியா நீரால்
உங்கள் பால் வருவ எல்லாம் உமை இடத்து ஆகும் அன்றே
இங்கு நீர் இன்று பற்றி இயற்று நும் கடன்கள் என்னப்
பங்கயா சனனும் தேவர் யாவரும் பணிந்து போனார். |
42 |
|
|
|
|
|
|
|
8511.
|
வாலிதாம் அயன் முதலினோர் வணங்கினர் ஏக
ஏலவார் குழல் உமையவள் பிரான் கழல் இறைஞ்சி மேலை நாள் உயிர்த் தொகையினுக்கு எய்திய வினை என் பால் வரும் பரிசு என் கொலோ பணித்து அருள் என்ன. |
43 |
|
|
|
|
|
|
|
8512.
| முன்பு நீ உனை வியந்தனை அத்துணை முனிந்து நின் பொருட்டினால் உயிர்கள் தம் உணர்ச்சியை நீக்கிப் பின்பு உணர்த்தினம் ஆதலின் அன்னவை பெற்ற மன் பெரும் பவம் யாவையும் நின்னிடை வரும் ஆல். |
44 |
|
|
|
|
|
|
|
8513.
|
முறையது ஆகும் ஆல் பின்னும் ஒன்று உண்டு உயிர் முற்றும்
பெறுவது ஆம் உனக்கு அல்லது பெரும் பவம்
அவற்றால்
பொறை புரிந்திடற்கு எளியவோ போற்று நீ என்றான்
சிறு விதிக்கு அருள் பரிசினை முடிவுறச் செய்வான். |
45 |
|
|
|
|
|
|
|
8514.
| நாதன் அவ்வுரை இயம்பலும் உளம் நடு நடுங்கிப் பேதையேன் செயும் பிழை தணித்து என்வயில் பெருகும் ஏதம் ஆற்ற ஓர் பரிசினை உணர்த்துதி என்னாப் பாத பங்கயம் தொழுதலும் இனையன பகர்வான். |
46 |
|
|
|
|
|
|
|
8515.
|
ஆலமே புரை நிறத்தாய் அமிழ்தினும் சுவைத்தாய்
ஞாலம் ஆர்தர ஒழுகிய காளிந்தி நதி போய்
மூல மெய் எழுத்து அன்னதோர் முதுவலம் புரியின்
கோலம் ஆகி நோற்று இருத்தி ஆல் உலகு அருள் குறிப்பால்.
|
47 |
|
|
|
|
|
|
|
8516.
|
அந் நதிக்குள் நீ பல் பகல் இருந்துழி அயன்சேய்
என்ன நின்றிடு தக்கன் என்பவன் அவண் எய்தி உன்னை நேர்ந்து சென்று எடுத்தலும் குழவியின் உருவாய் மன்னி ஆங்கு அவன் பன்னிபால் சிறுமியாய் வளர்தி. |
48 |
|
|
|
|
|
|
|
8517.
|
ஐந்து யாண்டு எனும் அளவை நிற்கு அகன்றுழி அதற்பின்
புந்தி ஆர்வ மோடு எமை நினைந்து அரும் தவம் புரிதி
வந்து யாம் அது காண் உறா மணம் செய்து மறையால்
இந்த மால் வரை இடை உனைத் தருதும் என்று இசைத்தான்.
|
49 |
|
|
|
|
|
|
|
8518.
|
இசைத்த
வாசகம் உணர்தலும் இறை உரத்து அழுந்தத்
தசைத்த பூண் முலை உமையவள் அன்னவன் சரணின் மிசைத் தன் வார்குழல் தைவர வணங்கியே விடைபெற்று அசைத்த சிந்தையள் நீங்கினள் உலகு நோற்றதனால். |
50 |
|
|
|
|
|
|
|
8519.
| ஆதி தேவனை ஒருவியே புடவியில் அணுகி ஓத வேலையை மாறுகொள் காளிந்தி உழிப் போய் வேத மூல நேர் வால் வளை உருக்கொடு விளங்கி ஏதம் இல்லது ஓர் பதும பீடத்தின் மேல் இருந்தாள். |
51 |
|
|
|
|
|
|
|
8520.
|
தெளிதரும் சிவ மந்திரம் சிந்தனை செய்தே
அளவு இல் பல் பகல் அன்னை நோற்று இருந்தனள் அவள்கண்டு
உளம் மகிழ்ந்து எடுத்து ஏகுவான் ஓங்கு காளிந்தி
நளி கொள் சிந்துவில் தக்கன் உற்றன இனி நவில்வாம். |
52 |
|
|
|
|
|
|