முகப்பு |
காளிந்திப் படலம்
|
|
|
8521.
|
நீளும் தகை சேர் நிலமா மகள் தன்
கோள் உந்திய பூம் குழல் வார்ந்து எனலாய் நாள் உந்திய வீ நணுகிக் அரிதாம் காளிந்தி எனும் கடி மா நதியே. |
1 |
|
|
|
|
|
|
|
8522.
| முத்தும் கதிரும் முழு மா மணியும் தொத்து உந்திய செம் துகிரும் அகிலும் நத்தும் பிறவும் நனி நல்குவ போல் ஒத்து உந்துவது அவ் ஒலி நீர் நதியே. |
2 |
|
|
|
|
|
|
|
8523.
| எண் மேல் நிமிரும் இருநீர் பெருகி விண்மேல் உலவா விரிகின்றது ஒரீஇ மண்மேல் ஒலியா மலிகார் தழுவிக் கொண்மூ வரவு ஒத்து உளது அக் குடிஞை. |
3 |
|
|
|
|
|
|
|
8524.
| மீனார் விழி மங்கையர் விண் உறைவோர் வானார் செலவின் வரு நீள் இடையில் கான் ஆம் எனவும் கடல் ஆம் எனவும் தான் ஆகுவ அத் தடமா நதியே. |
4 |
|
|
|
|
|
|
|
8525.
| பாரின் புடையே படர் அந் நதியை நேரும் படியோர் நெடு நீர் உளதோ காரும் தெளியாக் கடல் ஈது எனவே யாரும் பெருமைத்து அஃது ஆயிடவே. |
5 |
|
|
|
|
|
|
|
8526.
| துப்பு ஆயினது ஆய்த் துவரத் தகைசேர் அப்பா உவர் அற்று அழிவு இல் பொருளின் வைப்பாய் அருளால் வரும் அவ் வொலியல் ஒப்பு ஆகுவதோ உவர் ஆழியதே. |
6 |
|
|
|
|
|
|
|
8527.
| பால் ஓங்கிய வில் பணிலம் படர் வாள் நீல் ஓங்கிய அம்பொடு நேமி எலாம் மேல் ஓங்கிய தன்மையின் மெய்த் துயில் கூர் மாலோன் தனை ஒத்தது மற்று அதுவே. |
7 |
|
|
|
|
|
|
|
8528.
| மீன் பட்டமையால் விரியும் தொழுதிக் கான் பட்டிடவும் கழு நீர் உறலால் தேன் பட்டிடவும் திரை பட்டிடவும் வான் பட்டிடும் ஓசை மலிந்ததுவே. |
8 |
|
|
|
|
|
|
|
8529.
| ஊன் பெற்று அலகில் உயிர் பெற்று அகிலம் வான் பெற்று அவள் வால் வளையாய் உற எம் கோன் பெற்றிடும் அக் கொடி மெய் உருவம் தான் பெற்றதை ஒத்தது மா நதியே. |
9 |
|
|
|
|
|
|
|
8530.
|
நஞ்சு எனக் கொலை செய் கூர்ங்கண் நங்கையர்
குடையக்
கூந்தல்
விஞ்சிய நானச் சேறும் விரை கெழு சாந்தும் ஆர்ந்து
தஞ்செனக் கொண்ட நீலத்தன்மை குன்றாது மேலோர்
அஞ்சனப் போர்வை போர்த்தால் அன்னதால் அனைய நீத்தம்.
|
10 |
|
|
|
|
|
|
|
8531.
|
இவ் உலகத்தோர் உள்ளத்து எய்திய இருளும் அன்னார்
வெவ்வினை இருளும் தன்பால் வீழ்த்திய விளங்கி ஏக
அவ்விருள் அனைத்தும் தான் பெற்று அணைந்து என் அங்கு
அங்கு ஆராய்ச்
செவ்விதின் ஒழுகிற்று அம்மா சீர்திகழ் யமுனை ஆறே. |
11 |
|
|
|
|
|
|
|
8532.
|
எத் திறத் தோறும் அஞ்ச எழுந்துமால் வரையில் சார்ந்து
மெய்த் தலை பலவும் நீடி விரிகதிர் மணிகள் கான்றிட்டு ஒத்திடு கால் கண் மேவி ஒலி கெழு செலவிற்று ஆகி மைத்துறு புனல் காளிந்தி வாசுகி நிகர்த்தது அன்றே. |
12 |
|
|
|
|
|
|
|
8533.
|
நிலமகள் உரோம வல்லி நிலை என நகிலின் நாப்பண்
இலகிய மணித்தார் என்ன இரும்கடல் கேள்வன்
வெஃகும்
குலமகள் என்ன நீலக் கோலவார் அமுதம் என்ன
உலவிய யமுனை எம்மால் உரைக்கலாம் தன்மைத்து ஆமோ.
|
13 |
|
|
|
|
|
|
|
8534.
|
இன்ன பல் வகைத்தாய் நீடும் இரும் புனல் யமுனையின் கண்
மன்னிய நெறி சேர் மாசி மகப் புனல் ஆட வேண்டி
அந் நிலத்தவர்கள் யாரும் அடைந்தனர் உலகம்
எல்லாம்
தன் நிகர் இன்றி ஆளும் தக்கன் இத் தன்மை
தேர்ந்தான். |
14 |
|
|
|
|
|
|
|
8535.
|
மெய்ப் பயன் எய்துகின்ற வினைப்படும் ஊழின் பாலால்
அப்பெரு நதியில் அஞ்ஞான்று ஆடலை வெஃகித்
தக்கன்
மைப்படும் கூர்ங்கண் வேத வல்லியை மகளிரோடும்
ஒப்பு இல் பல் சனத்தினோடும் ஒல்லை முன் செல்ல உய்த்தான்.
|
15 |
|
|
|
|
|
|
|
8536.
|
மாற்று அமர் செம் பொன் கோயில் வயப்புலித் தவிசின் மீதாய்
வீற்று இருந்து அருடல் நீங்கி விரிஞ்சனும் முனிவர்
யாரும்
ஏற்றது ஓர் ஆசி கூற இமையவர் கணமாய் உள்ளோர்
போற்றிட யமுனை என்னும் புனலி ஆறு அதன் கண் போனான்.
|
16 |
|
|
|
|
|
|
|
8537.
|
போனது ஒர் தக்கன் என் போன் புரைதவிர் புனல் காளிந்தித்
தூ நதி இடை போய் மூழ்கித் துண் என வரலும் ஓர்
பால்
தேன் நிமிர் கமலம் ஒன்றில் சிவனிடத்து இருந்த தெய்வ
வான் நிமிர் பணிலம் வைக மற்று அவன் அது கண்ணுற்றான்.
|
17 |
|
|
|
|
|
|
|
8538.
|
கண் உறுவான் நன் மகிழ்ந்தே கையினை உய்த்து எடுத்திடுங்கால்
காமர் பெற்ற
பெண் உருவத்து ஒரு குழவி ஆதலும் விம் மிதப்
பட்டுப்
பிறை தாழ் வேணி
அண்ணல் அருள் புரி வரத்தால் கவுரியே நம் புதல்வி ஆனாள்
என்னா
உள் நிகழ் பேர் உணர்ச்சியினால் காண் உற்றுத் தேவர் குழாம்
ஒருவிப் போனான். |
18 |
|
|
|
|
|
|
|
8539.
|
அந் நதியின் பால் முன்னர் அவன் பணியால் சசி முதலாம்
அணங்கினோர்கள்
துன்னினர் ஆய் வாழ்த்து எடுப்பத் துவன்று பெரும் கிளைஞரொடும்
தூ நீர் ஆடி
மன்னும் அகன்கரை அணுகி மறை இசை கேட்டு அமர் வேத
வல்லி என்னும்
பன்னிதனை எய்தி அவள் கரத்து அளித்தான் உலகு
ஈன்ற
பாவை தன்னை. |
19 |
|
|
|
|
|
|
|
8540.
|
ஏந்து
தனிக் குழவியினைத் தழீஇக் கொண்டு மகிழ்ந்து குயத்து
இழி பால் ஆர்த்திக்
காந்தள் மலர் புரை செம் கைச் சூர் மகளிர் போற்றி இசைப்பக்
கடிதின் ஏகி
வாய்ந்த தனது திருக் கையிடைப் புக்கனள் ஆல்
தக்கன் அங்கண் வானோரோடும்
போந்து மணிக் கோயில் புக்கு தொல் முறை போல் அரசியற்கை
புரிந்து இருந்தான். |
20 |
|
|
|
|
|
|