முகப்பு |
உமை தவம் புரி படலம்
|
|
|
8541.
|
கொண்டு தனது இல்லில் குறுகிய பின் வேத வல்லி
மண்டு பெரும் காதலோடு மகண்மையால் வளர்த்தனள் ஆல்
அண்டம் அளவு இல்லனவும் அலகிலா உயிர்த் தொகையும்
பண்டு தனது உந்தியினால் படைத்து அருளும் பராபரையை.
|
1 |
|
|
|
|
|
|
|
8542.
|
வளரும் மதிக் குழவி என மா நிலமேல் தவழ்தலோடும்
தளரு நடை பயில்கின்ற தாறும் உடன் தப்பிய பின்
முளை எயிறுள் எழு போதம் முளைத்தது எனத் தோன்றுதலும்
அளவு இல் உயிர் முழுது ஈன்றாள் ஐந்தாண்டு
நிரம்பினள் ஆல். |
2 |
|
|
|
|
|
|
|
8543.
|
ஆறு ஆன ஆண்டு எல்லை அணைதலும் அம்பிகை தனக்கு
ஓர்
கூறு ஆன பிரான் தன்னைக் கோடல் முறை
குணத்தனள் ஆய்
மாறாது நோற்பல் என மனம் கொண்டி யாய் தனக்கும்
பேறு ஆன தக்கன் எனும் பெரும் தவற்கும் இஃது உரைத்தாள்.
|
3 |
|
|
|
|
|
|
|
8544.
|
கூறுவது ஒன்று உமக்கு உண்டால் குரவீர்காள் இது கேண்மின்
ஆறு புனை செம் சடிலத்து அண்ணலுக்கே உரித்தாகும்
பேறு உடையேன் அவன் வதுவை பெறுவதற்கு
நோற்பலி யான்
வேறு ஒருசார் கடி மாடம் விதித்து என்னை விடுத்திர் என.
|
4 |
|
|
|
|
|
|
|
8545.
|
நன்று என்று மகிழ் சிறந்து நல் ஆயும் தந்தையும் ஆய்ப்
பொன் துஞ்சு தமது இருக்கைப் பொருவு இல் நகர்ப் புறத்து
ஒருசார்
அன்று அங்கு ஓர் கொடி மாடம் அணிசிறக்கப் புனைவித்துச்
சென்று அம் கண் தவம் இயற்றச் சேய் இழையை விடுக்கின்றார்.
|
5 |
|
|
|
|
|
|
|
8546.
|
முச்சகமும் தருகின்ற முதல்வி தனைத் தம் மகள் என்று
இச்சை கொடு நனிபோற்றி இருவரும் நாரொடு நோக்கி
உச்சியினைப் பல் முறை மோந்து உயிர்த்து அம்மோ
உன் உளத்தின்
நச்சிய நோன்பு இயற்றுக என நாரியரோடு ஏகுவித்தார். |
6 |
|
|
|
|
|
|
|
8547.
|
மாதவர் பால் விடை பெற்று வல் விரைவு உற்று
ஏகுதலும்
வேத வல்லி அது காணா மெய்க் கணவன் தனை நோக்கிப்
பேதை இவள் சிவனை உணர் பெற்றிமை என் மொழிக என்ன
ஈது அனையள் நிலைமை என யாவும் எடுத்து இயம்புகின்றான்.
|
7 |
|
|
|
|
|
|
|
8548.
|
பொங்கு புனல் தடத்திடை யான் புரிகின்ற தவம்
காணூஉச்
சங்கரன் அங்கு எய்திடலும் தாழ்வு இல் வரம் பல கொண்டுன்
பங்கினள் என் மகளாகப் பண்ணவ நீ என் மருகாய்
மங்கல நல் வதுவை உற மறையவனாய் வருக என்றேன். |
8 |
|
|
|
|
|
|
|
8549.
|
அற்று ஆக நின்பால் என்று அருள் செய்தான் அம் முறையே
கற்றாவின் ஏறு உயர்த்த கண் நுதலோன் முழுது உலகும்
பெற்றாளை யமுனை என்னும் பெரு நதியில் உய்ப்ப நம்பால்
உற்றாள் மற்று எஞ்ஞான்றும் உணர்வினொடு வைகினள்
ஆல். |
9 |
|
|
|
|
|
|
|
8550.
|
மா தவம் ஓர் சில வைகல் பயின்று மதிக் கோடு புனை
ஆதி தனக்கு அன்பினளாய் அரும் துணைவி ஆகின்றாள் பேதை என நினையற்க பெருமாட்டி தனை என்னக் காதலி விம்மிதம் எய்திக் கரை இலா மகிழ் சிறந்தாள். |
10 |
|
|
|
|
|
|
|
8551.
|
இந் நிலை சேர் முது குரவர் ஏவலினால் சிலதியர் ஆம்
கன்னியர்கள் சூழ் போதக் கடி மாடம் போந்து உமையாள் சென்னி நதி புனைந்த பிரான் திருநாமம் உள் இருத்தி நல் இமயம் தலைநின்று நாளும் நனி நோற்கின்றாள். |
11 |
|
|
|
|
|
|
|
8552.
|
ஈண்டு உறு மடவார் சூழ இம் முறை இருத்த லோடும்
ஆண்டு பன்னிரண்டு சென்ற அம்பிகைக்கு அனைய காலை
வேண்டிய வேண்டியாங்கு விரதருக்கு உதவும் வண்மை
பூண்டிடு பரமன் அன்னாள் புரிந்திடு தவத்தைக்
கண்டான்.
|
12 |
|
|
|
|
|
|
|
8553.
|
கண்டு மற்று அவளை ஆளக் கருதியே கயிலை என்னும்
விண்டினை இகந்து முந்நூல் வியன் கிழி தருப்பை
ஆர்த்த
தண்டு கைக் கொண்டு வேதத் தலை நெறி ஒழுக்கம் பூண்ட
முண்ட வேதியனில் தோன்றி முக்கண் எம் பெருமான் வந்தான்.
|
13 |
|
|
|
|
|
|
|
8554.
|
தொக்கு உலாம் சூலத்து அண்ணல் தொல் புவி உய்ய வேதச்
செக்கர் நூபுரத்தாள் பின்னும் சேப்பு உற மண் மேல் போந்து
தக்கமா புரத்தின் நண்ணிச் சங்கரி என்னும் தொல் பேர்
மைக் கணாள் நோற்கும் தெய்வ மல்லல் மாளிகையில் புக்கான்.
|
14 |
|
|
|
|
|
|
|
8555.
|
அன்னை நோற்கின்ற கோட்டத்து அணுகியே அளப்பு
இல்
மாதர்
முன் உறு காவல் போற்றும் முதல் பெரும் கடையில்
சாரக்
கன்னியர் எவரும் வந்து கழல் இணை பணிதலோடும்
என் நிலை தலைவிக்கு அம்ம இயம்புக என்று இசைத்து நின்றான்.
|
15 |
|
|
|
|
|
|
|
8556.
|
நிற்றலும் கடை காக்கின்ற நேரிழை மகளிர் சில்லோர்
பொன் தொடி உமைபால் எய்திப் பொன் அடி வணங்கி ஈண்டு
ஓர்
நல் தவ மறையோன் நின்பால் நண்ணுவான் விடுத்தான் என்ன
மற்று அவன் தன்னை முன் கூய் வல்லைநீர் தம்மின் என்றாள்.
|
16 |
|
|
|
|
|
|
|
8557.
|
தம்மினீர் என்றலோடும் தாழ்ந்தனர் விடைபெற்று ஏகி
அம்மின் நேர்கின்ற நாப்பண் அரிவையர் கடைமுன் ஏகி
வம்மினோ அடிகள் எம்மோய் வர அருள் புரிந்தாள் என்னச்
செம்மலும் விரைவில் சென்று தேவி தன் இருக்கை சேர்ந்தான்.
|
17 |
|
|
|
|
|
|
|
8558.
|
தேவர்கள் தேவன் அங்கு ஓர் சீர் கெழு மறையோன் போலாய்
மேவிய காலை அம்மை விரைந்து எதிர் ஏகி மற்று என்
காவலர் தம்பால் அன்பர் இவர் எனக் கருதி அன்னான்
பூவடி வணங்கி வேண்டும் பூசனை புரிந்து நின்றாள். |
18 |
|
|
|
|
|
|
|
8559.
|
நேரமொடு அருச்சித்து ஏத்தி நின்றவள் தன்னை நீல
ஞாயிறு நிகர்த்த மேனி நகைமதி முகத்தாய் ஈண்டுயாம்
ஏயினது ஒன்றை வெஃகி விரைந்து அருள் புரிதி
என்னின்
ஆயது புகல்வம் என்ன அம்மை இங்கு இதனைச் சொல்வாள்.
|
19 |
|
|
|
|
|
|
|
8560.
|
எனக்கு இசைகின்றது ஒன்றை இசைத்தியே என்னின் இன்னே
நினக்கு அது கூடும் இங்ஙன் நினைத்தது என் மொழிதி என்ன
உனைக் கடி மணத்தின் எய்த உற்றனன் அதுவே நீ என்
தனக்கு அருள் புரியுமாறு தடுத்து எதிர் மொழியல் என்றான்.
|
20 |
|
|
|
|
|
|
|
8561.
|
அத்தன் ஈது உரைத்தலோடும் அம்மை அம் கையால் செவி
பொத்தி வெய்து எனக் கனன்று புந்தி நொந்து உயிர்த்து நீ இத்திறம் புகன்றது என்னை என்னை ஆளுகின்றது ஓர் நித்தன் வந்து வதுவை செய்ய நீள் தவம் செய்தேனி யான். |
21 |
|
|
|
|
|
|
|
8562.
|
என்ன
லோடும் இனையன் என்று யாரும் என்றும் இறையுமே
முன் ஒணாது நின்ற ஆதி முதல்வன் நின்னை வதுவையால்
மன்னுகின்றது அரிது போலும் மா தவங்கள் ஆற்றியே
கன்னி நீ வருந்தல் என்று கழற மாது புகலுவாள். |
22 |
|
|
|
|
|
|
|
8563.
|
பரமனே விரும்பி வந்து பாரின் மாமணம் செய
அரிய மாதவங்கள் செய்வல் அன்னதற்கு முன்னவன்
வருகிலாது தவிர்வன் என்னின் வலிதின் ஆவி நீப்பன் யான்
சரதம் ஈது பித்தனோ சழக்கு உரைத்து இருத்தி நீ. |
23 |
|
|
|
|
|
|
|
8564.
|
போதி போதி என்று தான் ஒர் புடையின் ஏக
உவகையாய்
மாது நின்தன் அன்பும் உள்ள வன்மை தானும் நன்று எனா
ஆதி தேவன் ஏனையோர்கள் அறிஉறாத வகை அவள்
காதல் நீடு தனது தொல் கவின் கொல் மேனி காட்டினான்.
|
24 |
|
|
|
|
|
|
|
8565.
|
ஆதி தன் தொல் உருவு காட்ட அமலை கண்டு மெய் பனித்து
ஏதிலார் எனா நினைந்து இகழ்ந்தனன் எனா அவவன்
பாத பங்கயங் களில் பணிந்து போற்றி செய்து யான்
பேதையேன் உணர்ந்திலேன் பிரான் மறைந்து வந்ததே. |
25 |
|
|
|
|
|
|
|
8566.
|
உன் அருட்கண் எய்து மேல் உணர்ச்சி எய்தி நிற்பன் யான்
பின் ஒர் பெற்றி இல்லை ஆல் பிழைத்தது உண்டு
தணிதி
நீ
என்னு நல்தவத்தி தன்னை இனிதின் எந்தை கண் உறீஇ
நின் இயற்கை நன்று நன்று நீ துளங்கல் என்றனன். |
26 |
|
|
|
|
|
|
|
8567.
|
என்ற நாதனைப் பினும் இறைஞ்சி எம்பிராட்டி பால்
நின்ற மாதரைத் தனாது நேத்திரத்தின் நோக்கலாள்
ஒன்றும் உன்னல் செய்திலாள் உலப்பு இல் எந்தை
தொல்
புகழ்
நன்று போற்று எடுத்து நிற்ப நாட்டம் நீர் உகுத்து
அரோ.
|
27 |
|
|
|
|
|
|
|
8568.
|
கண்டு பாங்கர் ஆய மாதர் கன்னி எம்மை நோக்கலாள்
மண்டு காதல் அந்தணாளன் மாயம் வல்லனே கொலோ பண்டு நேர்ந்துளாரை உற்ற பான்மை போலும் மேல் யாம் உண்டு தேரு மாறு என்று உளத்தில் ஐயம் எய்தினார். |
28 |
|
|
|
|
|
|
|
8569.
|
சிலதியார்க்குள் விரை விரைந்து சிலவர் சென்று தக்கன் என்று
உலகு உரைக்கும் ஒருவன் உரையுள் நண்ணி உன் மகள்
நிலைமை ஈது கேள் எனா நிகழ்ந்த யாவும் முறையினால்
வலிது கூற மற்று அவன் மனத்தில் ஓர்தல் உற்றனன். |
29 |
|
|
|
|
|
|
|
8570.
|
போத நீடு புந்தியால் புலப்படத் தெரிந்துழி
ஆதி அந்தம் இன்றி நின்ற அண்ணல் வந்தது ஆகலும்
ஏதிலா மகிழ்ச்சி பெற்று எழுந்து உள்ளியான் பெறு
மாதை அங்கு அவற்கு அளிப்பன் வதுவை ஆற்றி என்றனன்.
|
30 |
|
|
|
|
|
|