முகப்பு |
தக்கன் கயிலை செல் படலம்
|
|
|
8625.
| கறுவு கொள் நெஞ்சொடு கயவன் அன்று தொட்டு இறைவனை நினைக்கிலன் எள்ளும் நீர்மையான் உறுதலும் சில பகல் உயங்கி இச்செயல் அறிதரும் அயன் முதல் அமரர் தேர்குவார். |
55 |
|
|
|
|
|
|
|
8626.
|
மெய்ம் மா தவத்தால் திருத் தக்கு விளங்கு தக்கன்
எம்மான் தனை எண்ணலன் ஆவி இழப்பன் வல்லே அம்மா வியாமும் அவன் ஏவலை ஆற்று கின்றாம் நம் ஆர் உயிர்க்கும் இறுவாய் நணுக்கு உற்ற போலும். |
1 |
|
|
|
|
|
|
|
8627.
| ஆனால் இனித் தக்கனை எண்ணலாம் ஆயின் அன்னான் மேல் நாள் அரனால் பெறுகின்றது ஓர் மேன்மை தன்னால் மானாத சீற்றம் கொடு நம்பதம் மாற்றும் என்னா ஓ நாம் இனிச் செய் பரிசு என்று இவை ஓர்ந்து சொல்வார். |
2 |
|
|
|
|
|
|
|
8628.
| ஈசன் கயிலை தனில் தக்கன் எழுந்து செல்ல மாசு ஒன்று சிந்தை கொளத் தேற்றினம் வல்லை என்னில் நேசம் கொடுபோய் அவன் காணின் நிலைக்கும் இச்சீர் நாசம் படலும் ஒழிவாகும் நமக்கும் என்றார். |
3 |
|
|
|
|
|
|
|
8629.
| வேதா முதலோர் இது தன்னை விதியின் நாடித் தீது ஆன தக்கன் தனை மேவி நின் செய் தவத்தின் மா தானவளைச் சிவனோடு மறத்தி போல் ஆம் ஏதாம் உனது நிலைக்கு அம்ம இனையது ஒன்றே. |
4 |
|
|
|
|
|
|
|
8630.
|
குற்றம் தெரிதல் அஃதே குணன் என்று கொள்ளில்
சுற்றம் ஒருவற்கு எவன் உண்டு துறந்து நீங்கிச்
செற்றம் செய் கண்ணும் மகிழ்வு உண்டு இது சிந்தி யாயேல்
மற்று உன்னை வந்து ஓர் வசை சூழ் தரும் வள்ளல் என்றார்.
|
5 |
|
|
|
|
|
|
|
8631.
|
முன் நின்று அவர் கூறிய பான்மை முறையின் நாடி
என் இங்கு யான் செய் கடன் என்ன இறைவி யோடும்
பொன் அம் சடையோன் தனைக் கண்டு அதனை
போதி என்ன
மன்னும் கயிலை வரையே கமனம் வலித்தான். |
6 |
|
|
|
|
|
|
|
8632.
|
கான் ஆர் கமலத்து அயன் இந்திரன் காமர் பூத்த
வான் நாடர் யாரும் அவண் உற்றிடும் வண்ண நல்கி
ஆனாத முன்பில் துணையோர் அகன்று தக்கன்
போனான் அமலன் அமர் வெள்ளி அம் பொற்றை புக்கான்.
|
7 |
|
|
|
|
|
|
|
8633.
| வெள்ளிச் சயிலம் தனில் எய்தி விமலன் மேய நள் உற்ற செம் பொன் பெரும் கோயிலை நண்ணி நந்தி வள்ளற்கு உறையுள் எனும் கோபுர வாயில் சாரத் தள் அற்ற காவல் முறைப் பூதர் தடுத்தல் செய்தார். |
8 |
|
|
|
|
|
|
|
8634.
|
கடிக் கொண்ட பூதர் நிரை தன்னைக் கனன்றி யான்
முன்
கொடுக்கின்ற காதல் மடமான் தன் கொழுந னோடும்
அடுக் கின்ற பான்மை இவண் நாடி அறிவன் நீவிர்
தடுக் கின்றது என் கொல் எனக் கூறினன் தக்கன் என்போன்.
|
9 |
|
|
|
|
|
|
|
8635.
| அவ் வாசகம் சொல் கொடியோனை அழன்று நோக்கி மெய் வாயில் போற்றும் பெரும் சாரதர் மேலை ஞான்று மை வாழும் கண்டன் தனை எள்ளினை மற்று நீ ஈண்டு எவ்வாறு அணை கின்றனை சால இழுதை நீராய். |
10 |
|
|
|
|
|
|
|
8636.
|
முந்து உற்ற தொல்லை எயின் மூன்றுறை
மொய்ம்பினோர்கள்
நந்து உற்ற வையம் தனைவானை நலிவரேனும்
எந்தைக்கு நல்லர் அவர் அன்பில் இறையும் நின்பால்
வந்து உற்றது இல்லை எவணோ இனி வாழ்தி மன்னோ. |
11 |
|
|
|
|
|
|
|
8637.
| இறக்கின்ற வேலை இமையோர்கள் தம் இன்னல் நீக்கிக் கறுக்கின்ற நீல மிடற்று எந்தை கருணை செய்த சிறக்கின்ற செல்வம் இசைந்து அன்னவன் செய்கையாவும் மறக்கின்றனை நீ எவன் செய்குதி மாயை உற்றாய். |
12 |
|
|
|
|
|
|
|
8638.
|
ஈசன் தனது மலர்த் தாளை இறைஞ்சி ஆற்ற
நேசம் கொடு போற்றலர் நம்மொடு நேர்தல் ஒல்லா பாசம் தனில் வீழ் கொடியோய் உனைப் பார்த்தி யாங்கள் பேசும் படியும் தகவோ பவப் பெற்றி அன்றோ. |
13 |
|
|
|
|
|
|
|
8639.
|
ஆமேனும்
இன்னும் ஒரு மாற்றம் உண்டு அண்ணல் முன்னர்
நீ மேவி அன்பில் பணிவாய் எனில் நிற்றி அன்றேல்
பூ மேல் உனது நகரம் தனில் போதி என்னத்
தீ மேல் கிளர்ந்தால் என ஆற்றவும் சீற்றம் உற்றான். |
14 |
|
|
|
|
|
|
|
8640.
| பல் ஆயிரவர் பெரும் சாரதர் பாது காக்கும் எல் ஆர் செழும் பொன் மணிவாயில் இகந்து செல்ல வல்லான் நனி நாணினன் உள்ளம் வருந்தி அங்கண் நில்லாது மீள்வான் இது ஒன்று நிகழ்த்து கின்றான். |
15 |
|
|
|
|
|
|
|
8641.
|
கொன்னாரும் செம் பொன் கடை காக்கும் குழங்கள்
கேண்மின்
எந்நாளும் உங்கள் இறை தன்னை இறைஞ்சலேன் யான்
அன்னாள் எனது மருகோன் இது அறிந்திலீரோ
இந் நாரணனும் அயனும் எனக்கு ஏவல் செய்வர். |
16 |
|
|
|
|
|
|
|
8642.
| நின்றார் எவரும் என தொண்டர்கள் நீடுஞாலம் பின்றாது போற்றும் இறையான் பெயர் தக்கன் என்பார் ஒன்றாய் உங்கள் பெரும் பித்தனை ஒல்லை வேவி இன்றா மரபில் பணிந்தே தொழுது ஏத்து கின்றேன். |
17 |
|
|
|
|
|
|
|
8643.
| நில் இங்கு எனவே தடைசெய்த நிலைமை நும்மால் செல்லும் பரிசோ மருகோனும் சிறுமி தானும் சொல்லும் படி அல்லது செய்வது என் தொண்டர் ஆனீர் ஒல்லும் படி ஆற்றுதல் உங்கட்கு உறுதி அன்றோ. |
18 |
|
|
|
|
|
|
|
8644.
|
தேற்றாமல் இன்ன வகை சூழ்ந்த நும் தேவை யாரும்
போற்றாமல் வந்து பணியாமல் புகழ்ந்து மேன்மை சாற்றாமல் எள்ளல் புரி பான்மை சமைப்பன் என்னா மேல் தான் இழைத்த வினை உய்த்திட மீண்டு போனான். |
19 |
|
|
|
|
|
|
|
8645.
|
மீண்டுதன் பதியை எய்தி விரிஞ்சனை ஆதி ஆக
ஈண்டு பண்ணவரை நோக்கி என் மகள் ஈசன் தன்பால்
பூண்ட பேர் ஆர்வத்து ஒன்றிப் புணர்ப்பது ஒன்று உன்னித்
தங்கள்
மாண் தகு வாயிலோரால் மற்று எமைத் தடுப்பச்
செய்தார்.
|
20 |
|
|
|
|
|
|
|
8646.
|
பின்னரும் பல உண்டு அம்மா பேசுவித்தனவும்
அவ்வாறு
என்னை என்று உரைப்பன் அந்தோ எண்ணினும்
நாணுக் கொள்வேன்
அன்ன ஈங்கு இசைப்பன் ஏனும் ஆவது என் அவர்பால்
போந்தேன்
தன்னை நொந்திடுவது அன்றித் தாழ்வு உண்டோ அனையர்
தம்பால். |
21 |
|
|
|
|
|
|
|
8647.
|
நன்று நன்று என்னை எண்ணா நக்கனை உமையை நீவிர்
இன்று முன் ஆக என்றும் இறைஞ்சியே பரவு கில்லீர் அன்றியும் மதித்தீர் அல்லீர் அப்பணி மறுத்தீர் ஆயின் மற்ற நும் உரிமை இன்னே மாற்றுவன் வல்லை என்றான். |
22 |
|
|
|
|
|
|
|
8648.
|
கறுத்து இவை உரைத்தோன் தன்னைக் கடவுள் யாரும் நோக்கி
வெறுத்து எமை உரைத்தாய் போலும் மேலும் நின்
ஏவல் தன்னின்
மறுத்தன உளவோ இன்றே மற்று நின் பணியின் நிற்றும்
செறுத்திடல் என்னாத் தத்தம் சேண் நகர் சென்று சேர்ந்தார்.
|
23 |
|
|
|
|
|
|