சாலை செய் படலம்
 
8682.
அன்று முன் ஆகவே அளப்பு இல் காலமா
ஒன்று அவ் வேள்வியில் ஓம்பு கின்றிலர்
துன்றிய முனிவரும் சுரரும் பார்தனில்
முன் திகழ் அந்தணர் முதலினோர்களும்.
1
   
8683.
ஓர்ந்தனன் அன்னதை ஊழின் தீ நெறி
சார்ந்திடு தக்கன் ஓர் வைகல் தன் முனம்
சேர்ந்திடும் இமையவர் திறத்தை நோக்கியே
ஈர்ந்திடு தீயது ஒன்று இயம்பு கின்றனன்.
2
   
8684.
எடுத்திடு சுருதியின் இயற்கை முற்று உற
வடித்திடு தேவிர்காள் வரம்பு இல் காலமா
அடுத்திடும் வேள்வியது ஆற்றல் இன்றியே
விடுத்தது என் அனையது விளம்புவீர் என்றான்.
3
   
8685.
எய்யாது வெய்ய வினை யீட்டு தக்கன் இவை                    செப்பலோடும் இமையோர்
மெய் ஆரணத்தன் முதல் நாள் இயற்று வேள்விக்                    களத்தில் அவி ஊண்
ஐயான் அனத்தர் பெற நல்கல் என்றி அதனாலும் நந்தி                    அடிகள்
பொய்யாத சாப உரையாலும் யாங்கள் புரியாது இருத்தும்                    எனவே.
4
   
8686.
அந்நாளில் ஈசன் விடுகின்ற நந்தி அறைகின்ற சாபம்                       அதனுக்கு
இந்நாளும் அஞ்சி மக வேள்வி தன்னில் யாதும்
                      செய்யாது திரிவீர்
முன்னாக யான் ஒர் பெரு மா மகத்தை முறை
                      செய்வான் முற்றி இடுமேல்
பின்னாக நீவிர் புரிமின்கள் என்று பீடில்ல வன்
                      புகலவே.
5
   
8687.
நீ முன் ஒர் வேள்வி புரிகின்றது ஐய நெறி என்று
                         இசைப்ப அவரைப்
போமின்கள் யாரும் எனவே புகன்று புரிதோறும்
                         ஏவி மிகவும்
ஏமம் கொள் சிந்தை உளதக்கன் ஊழின் இயல்பால்                          அதற்பின் ஒருநாள்
ஓமம் செய் வேள்வி புரிவான் விரும்பி உள்ளத்தில்
                         உன்னி முயல்வான்.
6
   
8688.
தொட்டா மனுத் தொல் மயனைத் தனாது சுதர் என்ன                               முன்னம் உதவிக்
கட்டாமரைக்குள் விதிபோல நல்கு கலை கற்று உளானை                               விளியா
முட்டாத வேள்வி அது ஒன்று செய்வன் முனிவோர்கள்                               தேவர் உறைவான்
எட்டாத எல்லை தனில் இன்று ஒர் சாலை இயல்பால்                               விதித்திஎனவே.
7
   
8689.
இனிது என இறைஞ்சியே ஏகிக் கங்கை அம்
புனல் நதி அதன் ஒரு புடையது ஆகிய
கன கலம் என்பது ஓர் கவின் கொள் வைப்பு இடை
வினைபுரி கம்மியன் விதித்தல் மேயினான்.
8
   
8690.
பத்து நூறு யோசனைப் பரப்பும் நீளமும்
ஒத்திடும் வகையதா ஒல்லை நாடியே
வித்தக வன்மையால் வேள்விக்கு ஓர் அரண்
அத்தகு பொழுதினில் அமைத்து நல்கினான்.
9
   
8691.
நால் திசை மருங்கினும் நான்கு கோபுரம்
வீற்று வீற்று உதவிய வயன் கொள் நொச்சியில்
ஏற்றிடு ஞாயில்கள் இயற்றி அன்னதை
ஆற்றலை உடைய தோரணம் ஆக்கினான்.
10
   
8692.
உள்ளுற அணங்கினர் உறைதற்கு ஓர் இடை
தெள்ளிதின் நல்கியே தேவர் தம்மொடு
வள்ளுரை வேல் கணார் மருவி ஆடுவான்
புள்ளுரை வாவியும் பொழிலும் ஆக்கினான்.
11
   
8693.
அப்பரிசு அமைத்து மேல் அமரர் வேதியர்
எப் பரிசனரும் வந்து ஈண்டி வெஃகின
துய்ப்பதற்கு ஒத்திடு சுவைகொள் தீம் பதம்
வைப்பது ஓர் இருக்கையும் மரபில் தந்தனன்.
12
   
8694.
அந்தணர் ஆதியோர் அமரர் யாவரும்
வந்து உணவு அருந்துவான் வரம்பு இல் சாலைகள்
இந்திர உலகுஎன இமைப்பு இல் ஈந்தனன்
முந்தையின் மகவிதி முழுதும் நாடினான்.
13
   
8695.
விருந்தினர் பெற்றிட விரை மென் பாளிதம்
நரந்தமொடு ஆரம் வீ நறை கொள் மான்மதம்
அருந்து உறு வெள்ளடை ஆன பாகு இவை
இருந்திடு சாலையும் இயற்றினான் அரோ.
14
   
8696.
ஆன பல் வகையுடை ஆடை செய்ய பூண்
மேனது ஒர் அம் பொனின் வியன் கொள் குப்பைகள்
ஏனைய வெறுக்கைகள் மணிகள் யாவையும்
தானம் அது இயற்றிடத் தானம் நல்கினான்.
15
   
8697.
கடிகெழு சத தளக் கமலம் மேல் உறை
அடிகள் தன் நகர் கொல் என்று ஐயம் செய்திட
நடைதரு வேள்விசெய் நலம் கொள் சாலையது
இடைஉற அமைத்தனன் யாரும் போற்றவே.
16
   
8698.
நூறு எனும் யோசனை நுவலும் எல்லையின்
மாறு அகல் சாலையின் வன்னி சேர்தரக்
கூறிய மூ வகைக் குண்டம் வேதிகை
வேறு உள பரிசு எலாம் விதித்தல் செய்தனன்.
17
   
8699.
மேல் ஒடு கீழ்புடை வெறுக்கையின் மிசைக்
கோல நல் மணிகளால் குயிற்றி வாவியும்
சோலையும் பறவையும் தோம் இல் தேவரும்
போலிய ஓவியம் புனைந்திட்டான் அரோ.
18
   
8700.
புண்டரீக ஆசனம் பொருந்து நான்முகன்
தன் துளவோன் இவர் தமக்கு இருக்கையும்
எண் திசை வாணருக்கு இயல் இருக்கையும்
அண்டருக்கு இருக்கையும் அருளல் செய்து மேல்.
19
   
8701.
தொக்கு உறு முனிவரர் தொல்லை வேதியர்
ஒக்கலின் மேயினர் உறை இருக்கையும்
தக்கனுக்கு இருக்கையும் சமைத்து நல்கினான்
வைக்குறு தவிசின் நூல் மரபின் நாடியே.
20
   
8702.
தக்கனை வணங்கி நின் சாலை முற்றிய
புக்கனை காண்க எனப் புனைவன் செப்பலும்
அக்கணம் அது தெரிந்து அளவிலாது அர
மிக்கனன் மகிழ்ந்தனன் விம்மிதத்தினான்.
21
   
8703.
பூங் கமத்து அமர் புனிதன் கான் முளை
பாங்கரின் முனிவரில் பலரைக் கூவியே
தீங்கனல் மா மகம் செய்ய நூல் முறை
யாங்ஙனம் வலித்தனன் அவர்க்குச் செப்புவான்.
22
   
8704.
தரு உறு சமிதைகள் சாகை தண் அடை
பரிதிகள் மதலை நாண் பறப்பை பல் பசு
அரணி நல் முதிரைகள் ஆதி ஆவிதற்கு
உரியன உய்த்திர் என்று ஒல்லை ஏவினான்.
23
   
8705.
ஆன் ஒடு நிதிகளை மணியை ஐந்தருக்
கானினை அழைத்து நம் மகத்தைக் காணிய
மா நிலத்து அந்தணர் வருவர் உண்டியும்
ஏனைய பொருள்களும் ஈம் என்று ஓதினான்.
24
   
8706.
நல் விடை கொண்டுபோய் நவை இலான் முதல்
பல்வகை அவை எலாம் படர்ந்து வீற்று வீற்று
ஒல்வதோர் இடம் தொறும் உற்ற ஆ இடைச்
செல்வது ஓர் பொருள் எலாம் சிறப்பின் நல்கவே.
25
   
8707.
தனது உறு கிளைஞராய்த் தணப்பு இலாத ஓர்
முனிவரர் தங்களின் முப்பது ஆயிரர்
துனி அறுவோர் தமைச் சொன்றி ஏனவை
அனைவரும் விருப்பு உற அளித்திர் என்றனன்.
26
   
8708.
மற்று அவர்க்கு இருதிற மா தவத்தரை
உற்றனர் யாவரும் உண்டி அன்றியே
சொற்றன யாவையும் தொலைவு இன்று ஈமென
நல் தவத்து அயன் மகன் நயப்பு உற்று ஏவினான்.
27
   
8709.
தீதினை நன்று எனத் தெளியும் நான்முகன்
காதலன் ஓர் மகம் கடிது இயற்றுவான்
வேதியர் விண்ணவர் யாரும் மேவுவான்
தூதரை நோக்கியே இனைய சொல்லுவான்.
28
   
8710.
நக்கனை அல்லது ஓர் நாகர் தங்களை
மிக்கு உறு முனிவரை வேத மாந்தரைத்
திக்கொடு வான் புவி யாண்டும் சென்று கூய்
உய்க்குதிர் ஆல் என உரைத்துத் தூண்டினான்.
29
   
8711.
முந்துற வரித்திடும் முனிவர் அவ்வழித்
தந்தனர் மகம் செயத் தகுவ யாவையும்
வந்தன நோக்கியே மரபில் உய்த்திர் என்று
எந்தை தன் அருள் இலான் இயம்பினான் அரோ.
30
   
8712.
வரித்திடு பான்மையின் வழாது போற்றிடும்
இருத்தினர் தமில் பலர் யாக சாலையுள்
திருத்திய வேதிவாய்ச் செறி பல் பண்டமும்
நிரைத்தனர் பறப்பையும் நிலையில் சேர்த்தினார்.
31
   
8713.
அசைவு அறு வேதியின் அணித்தின் ஓரிடை
வசை தவிர் மதலைகள் மரபின் நாட்டுபு
பசு நிரை யாத்தனர் பாசம் கொண்டு பின்
இசை தரு பூசையும் இயல்பின் ஆற்றினார்.
32
   
8714.
நடை இது நிகழும் வேலை நலம் இலாத் தக்கன்
                                  நல்கும்
விடை தலைக் கொண்டு போய வியன்பெரும் தூதர்                                   தம்மில்
புடவியின் மறையோர்க்கு எல்லாம் புகன்றனர் சிலவர்                                   வெய்யோன்
உடுபதி நாள் கோள் முன்னர் உரைத்தனர் சிலவர்                                   அன்றே.
33
   
8715.
காவலர் ஆகி வைகும் கந்தருவத்தர் ஆதி
ஆவது ஓர் திறத்தோர்க்கு எல்லாம் அறைந்தனர் சிலவர்                                      ஆசை
மேவிய கடவுளோர்க்கும் விளம்பினர் சிலவர் முப்பால்
தேவர்கள் யாரும் கேட்பச் செப்பினர் சிலவர் அன்றே.
34
   
8716.
விண்ணக முதல்வனுக்கு விளம்பினர் சிலவர் ஆண்டு
நண்ணிய தேவர்க்கு எல்லாம் நவின்றனர் சிலவர்
                                   மேலைப்
புண்ணிய முனிவரர்க்குப் புகன்றனர் சிலவர் ஏனைப்
பண்ணவர் முன்னம் சென்று பகர்ந்தனர் சிலவர் அம்மா.
35
   
8717.
வானவர் முதுவன் தொல்லை மன்றல் மா நகரத்து எய்திக்
கோ நகர் வாயில் நண்ணிக் குறுகினர் காப்போர் உய்ப்ப
மேல் நிறை காத லோடும் விரைந்தவற் தாழ்ந்து நின் சேய்
ஆனவன் வேள்விக்கு ஏக அடிகள் என்று உரைத்தார்                                     சில்லோர்.
36
   
8718.
மேனகு சுடர் செய் தூய விண்டு உலகு அதனை நண்ணி
மான் நிறைகின்ற கோயில் மணிக்கடை முன்னர் எய்திச்
சேனை அம் தலைவன் உய்ப்பச் சீதரர் பணிந்து வேள்விப்
பான்மை அது இயம்பி எந்தை வருக எனப் பகர்ந்தார்                                      சில்லோர்.
37
   
8719.
மற்று அது போழ்து தன்னில் மாயவன் எழுந்து மார்பு
உற்றிடு திருவும் பாரும் உடன் வர உவணர் கோமான்
பொன் தடம் தோள்மேல் கொண்டு போர்ப் படை
                                 காப்பத் தன்பால்
பெற்றனர் சூழத் தானைப் பெரும் தகை பரவச் சென்றான்.
38
   
8720.
செல்லலும் அதனை நாடித் திசை முகக் கடவுள் அம்கண்
ஒல்லையில் எழுந்து முப்பால் ஒண்தொடி மாதரோடும்
அல்லி அம் கமலம் நீங்கி அன்ன மேல் கொண்டு                                     மைந்தர்
எல்லை இல் முனிவர் யாரும் ஏத்தினர் சூழப் போந்தான்.
39
   
8721.
மாலொடு பிரமன் ஈண்டி வருதலும் மகவான் என்போன்
வேலொடு வில்லும் வாளும் விண்ணவர் ஏந்திச் சூழ
நால் இரு மருப்பு வெள்ளை நாகம் அது உயர்த்துத்                                      தங்கள்
பால் உறை குரவரோடு பாகமார் விருப்பில் வந்தான்.
40
   
8722.
ஆயவன் புரத்தில் வைகும் அரம்பையே முதலா உள்ள
சேய் இழை மார்கள் யாரும் தேவரோடு அகன்றார்                                        எங்கள்
நாயகன் போந்தான் என்றே நலமிகு சசி என்பாளும்
தூயது ஓர் மானத்து ஏறித் தோகையர் காப்பச் சென்றாள்.
41
   
8723.
எண் திசை காவலோரும் ஈர் இரு திறத்தர் ஆன
அண்டரும் உடுக்கள் தாமும் ஆரிடத் தொகை
                                   உளோரும்
வண்டு உளர் குமுதம் போற்றும் மதியமும் ஏனைக்                                    கோளும்
விண் தொடர் இயக்கர் சித்தர் விஞ்சையர் பிறரும்                                    போந்தார்.
42
   
8724.
சேண் இடை மதியினோடு செறிதரும் உடுக்கள் ஆன
வாண் நுதல் மகளிர் யாரும் மகிழ்வொடு தந்தை வேள்வி
காணிய வந்தார் ஈது கண் உறீஇ அவுணர் கோமான்
சோணித புரத்துக் கேளிர் தொகை யொடும் தொடர்ந்து                                      சென்றான்.
43
   
8725.
வனைகலன் நிலவு பொன் தோள் வாசவன் முதலா உள்ள
இனையரும் பிறரும் எல்லாம் இருவர் தம் மருங்கும்                                    ஈண்டிக்
கனகல வனத்தில் செய்த கடி மகச் சாலை எய்த
முனிவர ரோடும் தக்கன் முன் எதிர் கொண்டு நின்றான்.
44
   
8726.
எதிர் கொடு மகிழ்ந்து மேலாம் இருவர் தங்களையும்
                                   அம் கண்
முதிர் தரு காதலோடு முறை முறை தழுவி வானோர்
பதி முதலோரை நோக்கிப் பரிவு செய்து இனையர்                                    தம்மைக்
கதும் எனக் கொண்டு வேள்விக் கடிமனை இருக்கை                                    புக்கான்.
45
   
8727.
மால் அயன் தன்னை முன்னர் மணித்தவிசு இருத்தி                                     வானம்
மேல் உறை மகவான் ஆதி விண்ணவர் முனிவர்                                     யார்க்கும்
ஏல் உற தவிசு நல்கி இடைப் பட இருந்தான் தக்கன்
கால் உறு கடலாம் என்னக் கடவுள் மா மறைகள்
                                    ஆர்ப்ப.
46
   
8728.
அல்லி அம் கமல மாதும் அம்புவி மகளும் வேதாப்
புல்லிய தெரிவை மாரும் பொருவு இலா உடுவி னோரும்
சொல் அரும் சசியும் ஏனைச் சூரினர் பிறரும் வேத
வல்லிதன் இருக்கை நண்ணி மரபின் வீற்று இருந்தார்                                     மன்னோ.
47
   
8729.
மா மலர்க் கடவுள் மைந்தன் மகத்தினை நாடி யாரும்
காமுறும் உண்டி மாந்திக் கதும் என மீடும் என்றே
பூமிசை மறையோர் தாமும் முனிவரும் போந்து                                  விண்ணோர்
தாம் உறும் அவையை நண்ணித் தகவினால்
                                 சார்தலோடும்.
48
   
8730.
அழைத்திடப் போன தூதர் அனைவரும் போந்து தக்கன்
கழல் துணை வணங்கி நிற்பக் கருணை செய்து அவரை                                      நோக்கி
விழுத்தகு தவத்தீர் நீவிர் விளித்தனர் தமில் உறாது
பிழைத்தனர் உளரோ உண்டேல் மொழிம் எனப் பேசல்                                      உற்றார்.
49
   
8731.
அகத்தியன் சனகன் முன்னோர் அத்திரிவசிட்டன்                                        என்பான்
சகத்து உயர் பிருகு மேலாம் ததீசி வெம் சாபத் தீயோன்
பகைத்திடு புலத்தை வென்ற பராசரன் இனைய பாலார்
மகத்தினை இகழார் ஈண்டு வருகிலர் போலும் என்றார்.
50
   
8732.
மற்று அது புகல லோடும் மலர் அயன் புதல்வன் கேளா
இற்று இது செய்தார் யாரே முனிவரில் இனையர் தாமோ
நெற்றி அம் கண்ணினார்க்கும் நேயம் அது உடையர்                                       என்னாச்
செற்றமொடு உயிர்த்து நக்கான் தேவர்கள் யாரும் உட்க.
51