முகப்பு |
ததீசிப் படலம்
|
|
|
8733.
|
அன்ன வேலையில் ஆரிடர் தம்மொடும்
துன்னினான் ஒரு தொல் இறைக் காகவே முன்ன மாலமர் மூண்டு எழ மற்று அவன் தன்னை வென்ற ததீசி என்பான் அரோ. |
1 |
|
|
|
|
|
|
|
8734.
| கடிது போந்து கடி மகச் சாலையின் இடையது ஆகி இமையவர் யாவரும் அடையும் எல்லை அணுகலும் கண் உறீஇக் கொடிய தக்கன் குறித்து உணர்கின்றனன். |
2 |
|
|
|
|
|
|
|
8735.
| ஆகும் ஆகும் அரற்கு உரித்து அல்லன் இப் பாக மாமகம் பார்க்கும் பொருட்டினால் ஏகினன் எனக்கு அஞ்சி எனா நினைந்து ஓகை எய்தி உளம் குளிர்ப்பு ஆகியே. |
3 |
|
|
|
|
|
|
|
8736.
| வருக ஈண்டு என மற்று அவன் தன் இடை ஒரு பெரும் தவிசு உய்த்தலும் மாதவர் இரு மருங்கும் இருந்திட ஆய் இடைப் பொருவின் மா தவப் புங்கவன் மேவியே. |
4 |
|
|
|
|
|
|
|
8737.
| ஆக்கம் தீரும் அயன் புதல்வன் தனை நோக்கி எம்மை நொடித்தது என் நீ இவண் ஊக்கி உற்றது என் ஒல்லையில் யாவையும் நீக்கம் இன்றி நிகழ்த்துதி என்னவே. |
5 |
|
|
|
|
|
|
|
8738.
| தக்கன் ஆண்டுத் ததீசியை நோக்கியே நக்கன் என்பவன் நான் பெறும் கன்னியை மிக்க காதலின் வேட்டு ஒளித்து ஓர் பகல் உக்க மேல் உய்த்து உயர் வரை ஏகினான். |
6 |
|
|
|
|
|
|
|
8739.
| போய பின்னைப் புதல்விக்குத் தன் பெரு மாயை செய்தனன் மற்று அவர் தங்களை ஆயு மாறு அவ் அகன் கிரி எய்தினேன் ஏய தன்மை இருவரும் தேர்ந்து அரோ. |
7 |
|
|
|
|
|
|
|
8740.
| அடுத்த பூதரை ஆங்கு அவர் கூவியே தடுத்திடும் களத் தக்கனை நம் முனம் விடுத்திர் அல்லிர் விலக்குதிர் ஆல் என எடுத்து இயம்பினர் ஏயினர் போலும் ஆல். |
8 |
|
|
|
|
|
|
|
8741.
| இற்று உணர்ந்திலன் ஏகினன் பூதர்கள் நிற்றி நீ என்று நிந்தனை எண் இல சொற்றலோடும் துணை அதில் வெள்ளி அம் பொற்றை நீங்கிப் புரம் புகுந்தேன் யான். |
9 |
|
|
|
|
|
|
|
8742.
| தம் கண் மா நகர் சார்ந்தனன் நீங்குழி எம் கண் மாதும் எனைவந்து கண்டிலள் மங்கை என் செய்வாள் மற்று அவன் மாயை ஆல் துங்க மேன்மை துறந்தனள் போயினாள். |
10 |
|
|
|
|
|
|
|
8743.
| அந்த வேலை அரும் பெரும் வேள்வி ஒன்று எந்தை செய்துழி யான் சென்று அதற்கு முன் தந்த பாகம் தடுத்தனன் அவ்வழி நந்தி சாபம் நவின்றனன் போயினான். |
11 |
|
|
|
|
|
|
|
8744.
| எறுழ் படு தண்ணுமை இயம்பு கை உடைச் சிறு தொழில் அவன் மொழி தீச்சொற்கு அஞ்சியே முறைபடு வேள்வியை முற்றச் செய்திலன் குறை இடை நிறுவினன் குரவன் ஆகியோன். |
12 |
|
|
|
|
|
|
|
8745.
| நஞ்சு அமர் களன் அருள் நந்தி கூறிய வெம் சொலும் என் பெரு விரதமும் தெரீஇ அஞ்சினர் இன்று காறாரும் வேள்வியை நெஞ்சினும் உன்னலர் நிகழ்த்தும் வேட்கையால். |
13 |
|
|
|
|
|
|
|
8746.
| ஆனது ஒர் செயல் உணர்ந்து ஐயம் ஏற்றிடும் வானவன் தனக்கு அவி மாற்றும் பான்மையான் நான் ஒரு வேள்வியை நடாத்து கின்றனன் ஏனையது ஓர் பயன் யாதும் வேண்டலன். |
14 |
|
|
|
|
|
|
|
8747.
| அப் பெரு மகம் தனக்கு அமரர் மாதவர் எப் பரிசனரும் வந்து ஈண்டு தொக்கனர் ஒப்ப அரும் தவத்தினீர் உமக்கும் இத்திறம் செப்பினன் விடுத்தனன் செயல் இது என்னவே. |
15 |
|
|
|
|
|
|
|
8748.
|
தண் அளி புரி ததீசி தக்கனது உரையைக் கேளாப்
புண்ணியம் பயன் இன்று அம்மா பொருளினில் பவமே என்னா
எண்ணினன் வினைகள் ஈட்டு இழிதகன் இயற்கை போலாம்
அண்ணல் தன் செயலும் என்னா அணி எயிறு இங்க நக்கான்.
|
16 |
|
|
|
|
|
|
|
8749.
|
நக்கதோர்
வேலை தன்னில் நலம் தகும் ஊழிக் கான் மேல்
மிக்கு எழும் வடவை என்ன வெய்து உயிர்த்து உரப்பிச் சீறி
முக்கணன் அடியான் போலும் முறுவலித்து இகழ்ந்தாய் என்னத்
தக்கன் ஈது உரைத்தலோடும் ததீசி மா முனிவன் சொல்வான்.
|
17 |
|
|
|
|
|
|
|
8750.
|
மலர் அயன் முதலே ஆக வரம்பு இலா உயிரை
முன்னம்
தலை அளித்து உதவுகின்ற தாதையாய் அளித்து மாற்றி
உலகு எலாம் ஆகி ஒன்றாய் உயிர்க்கு உயிர் ஆகி மேலாய்
இலகிய பரனை நீத்தோ யாகம் ஒன்று இயற்ற நின்றாய். |
18 |
|
|
|
|
|
|
|
8751.
|
புங்கவர் எவர்க்கும் நல்கும் புவி புகழ் அவி
கொள்வானும்
அங்கியின் முதலும் வேள்விக்கு அதிபனும் அளிக்கின்றானும்
சங்கரன் தானே வேதம் சாற்றும் ஆல் மகத்துக்கு ஆதி
இங்கு ஒரு தேவு உண்டு என்னின் எழுக என உரைத்தி மாதோ.
|
19 |
|
|
|
|
|
|
|
8752.
|
மால் அயன் முதலோர் யாரும் வரம்பு இலித் திருவை எய்த
மேலை நாள் அளித்தோன் தானும் விமலனும்
இனையர்க்கு எல்லாம்
மூலமும் தனக்கு வேறு ஓர் முதல் இலா தவனும் எங்கள்
ஆலமர் கடவுள் அன்றி அமரரில் யாவர் அம்மா. |
20 |
|
|
|
|
|
|
|
8753.
|
தேவ தேவன் மா தேவன் சிறப்பு உடை ஈசன் எம் கோன்
மூவரின் முதல்வன் ஏகன் முடிவிற்கு முடிவாய் நின்றோன் ஆவியுள் ஆவி ஆனோன் அந்தணன் ஆதி என்றே ஏவரை இசைத்த அம்மா எல்லை இல் மறைகள் எல்லாம். |
21 |
|
|
|
|
|
|
|
8754.
|
விதி முதல் ஆகி உள்ளோர் வியன் உயிர்த் தொகை
ஆம்
ஈசன்
பதிஅவன் பணியது அன்றே பரித்தனர் இனையர்
எல்லாம்
இதுவும் அச் சுருதி வாய்மை இவை எலாம் அயர்த்து வாளா
மதி மயங்கினை ஆல் பேரா மாயை ஊடு அழுந்து கின்றாய்.
|
22 |
|
|
|
|
|
|
|
8755.
|
அந்தணர்க்கு ஆதி ஈசன் ஏனையோர்க்கு அரிய வேதா
இந்திரன் என்று வேதம் இயம்பிய மறையோர் தங்கள் முந்தையின் முதலை நீத்து முறை அகன்று ஒழுகல் பெற்ற தந்தையை விலக்கி வேறு தேடுவான் தன்மை அன்றே. |
23 |
|
|
|
|
|
|
|
8756.
|
ஆதலின் எவர்க்கும் மேலாம் ஆதியை இகழா நிற்றல்
பேதைமை இன்றி ஈது ஓர் பெருமிதம் அன்று ஆல்
ஆற்ற
நோதக உன்னி யாரே நோற்பவர் அனையை நீயே
வேதம் அது ஒழுக்கம் நீத்து இவ் வேள்வியைப் புரிய நின்றாய்.
|
24 |
|
|
|
|
|
|
|
8757.
|
விலக்கினை மறையின் வாய்மை வேள்வி செய்யினும் முற்றாது
கலக்குமேல் அமலன் ஆணை காண்டி ஆல் அவனுக்கு அஞ்சா
வலத்தினர் யாவர் உண்டேல் மாய்வரே மறையும் எம் முன்
இலைப் பொலி சூலம் ஏந்தும் ஏகன் என்று ஏத்திற்று அன்றே.
|
25 |
|
|
|
|
|
|
|
8758.
|
ஆதியும் முடிவும் இல்லா அமலனுக்கு அவியை நல்கி
வேதக முறை வழாது வேள்வி ஓம்புவது நாடாய்
தீது நின் எண்ணம் என்னச் சிவன் தனக்கு அருள் பாகத்தை
மாதவன் தனக்கு நல்கி மா மகம் புரிவன் என்றான். |
26 |
|
|
|
|
|
|
|
8759.
|
அவ்வுரை கொடியோன் கூற அரும் தவ முனிவன்
கேளா
எவ்வம் ஈது உரைத்தாய் மேலாய் யாவரும் புகழ நின்ற
செவ்வியர் தமை இழித்துச் சிறியரை உயர்ச்சி செய்தல்
உய்வகை அன்றானும் ஓர் உயிர்க்கு எலா முடிவு ஈது என்றான்.
|
27 |
|
|
|
|
|
|
|
8760.
|
ஊறு
சேர் தக்கன் சொல்வான் உனது உருத்திரனை ஒப்பார்
ஆறின் மேல் ஐந்த ஆன உருத்திரர் அமர்வார் ஆசை
ஈறு சேர்தரும் ஈசானர் இருந்தனர் அவர்க்கே முன்னர்
வீறுசேர் அவியை நல்கி வேள்வியை முடிப்பன் என்றான். |
28 |
|
|
|
|
|
|
|
8761.
|
என்னலும் முனிவன் சொல்வான் ஈறு செய்து அகிலம் எல்லாம்
தன் இடை ஒடுக்கி மீட்டும் தாதை ஆய் நல்கி யாரும்
முன்னரும் திறத்தில் வைகும் உருத்திர மூர்த்திக்கு
ஒப்போ
அன்னவன் வடிவும் பேரும் அவன் அருள் அதனால் பெற்றோர்.
|
29 |
|
|
|
|
|
|
|
8762.
|
உருத்திர மூர்த்தி என்போன் உயர்பரம் பொருளாய் உள்ளே
நிருத்தம் அது இயற்றுகின்ற நித்தன் ஆம் அவன்தன் பொன்தாள்
கருத்திடை நினைந்தோர் அன்னான் காய மும் திருப்
பேர்
தானும்
பரிப்பர் ஆல் அனையர் எல்லை பகர்ந்திடன் உலப்பு இன்றாம்
ஆல். |
30 |
|
|
|
|
|
|
|
8763.
|
ஆதி தன் நாமம் பெற்றோர் அவன் இயல் அடையார் கொண்ட
ஏதம் இல் வடிவும் அற்றே என்னினும் இறைவர் என்றே
பூதலம் முழுதும் விண்ணும் போற்றிட இருப்பர் இந்த
வேதனும் புகழும் நீரான் மெய்ந்நெறித் தலைமை சார்வார். |
31 |
|
|
|
|
|
|
|
8764.
|
ஈசனை அளப்பு இல் காலம் இதயமேல் உன்னி நோற்றே
ஆசகல் உருவம் பெற்ற அன்பினற் போல்வர் இன் ஓர் வாசவன் முதலோர் போல வரத் தகார் எந்தை பால் நீ நேசம் இல்லாத தன்மை நினைந்திலர் போலும் என்றான். |
32 |
|
|
|
|
|
|
|
8765.
| என்ற காலை இருந்த தக்கன் இது நன்று நாரணன் நால் முகன் நிற்க ஈறு ஒன்று செய்யும் உருத்திரன் ஆதி ஆய் நின்றது என் கொல் நிகழ்த்துதி என்னவே. |
33 |
|
|
|
|
|
|
|
8766.
| விதி சிரங்கள் வியன்முடி வேய்ந்திடும் பதி சிவன் தன் பதத் துணை உட்கொடு மதி சிறந்திட வாலிதின் வைகிய ததீசி என்னும் தவமுனி சாற்றுவான். |
34 |
|
|
|
|
|
|
|
8767.
| இருவர் தம்மொடும் எண்ணிய தன்மையால் ஒருவன் ஆன உருத்திர மூர்த்தியைப் பெரியன் என்று பிடித்திலை அன்னதும் தெரிய ஓதுவான் தேர்ந்தனை கேட்டியால். |
35 |
|
|
|
|
|
|
|
8768.
| ஆதி அந்தம் இலாத எம் அண்ணலுக்கு ஓது பேரும் உருவும் ஓர் செய்கையும் யாதும் இல்லை இவ் ஆற்றினை எண் இலா வேதம் யாவும் விளம்பும் துணி பினால். |
36 |
|
|
|
|
|
|
|
8769.
| அன்னது ஓர் பரத்து அண்ணல் தன் ஆணையால் முன்னையார் இருள் மூடத் துண் மூழ்கிய மன் உயிர்த் தொகை வல்வினை நீக்குவான் உன்னியே தன் உளத்து அருள் செய்துமேல். |
37 |
|
|
|
|
|
|
|
8770.
| உருவும் செய்கையும் ஓங்கிய பேரும் உன் அருளினால் கொண்டு அனைத்தையும் முன்பு போல் தெரிய நல்கித் திசை முகன் ஆதி ஆம் சுரர்கள் யாரையும் தொல் முறை ஈந்துபின். |
38 |
|
|
|
|
|
|
|
8771.
|
ஏற்ற
தொல் பணி யாவும் இசைத்து அவை
போற்று செய்கை புரிந்து பின் யாவையும் மாற்று கின்றது மற்று எமக்காம் எனச் சாற்றினான் அத் தகைமையும் கேட்டி நீ. |
39 |
|
|
|
|
|
|
|
8772.
| அந்தம் ஆதி இன்றாகியே உயிர் எலாம் அளிக்கும் நந்தை ஆகிய தனக்கு அன்றி முழுது அடும் தகைமை மைந்தர் ஆகிய அமரர் ஆன் முடி உறாமையினால் எந்தைதன் வயில் கொண்டனன் ஈறு செய் இயற்கை. |
40 |
|
|
|
|
|
|
|
8773.
| அன்று தேவர்கள் யாவரும் எம் பிரான் அடியில் சென்று தாழ்ந்து எமக்கு இப்பணி புரிந்தனை சிறியேம் என்று தீருதும் இப்பரம் என்றலும் எம் கோன் ஒன்று கூறுதும் கேள் மினோ நீவிர் என்று உரைத்தான். |
41 |
|
|
|
|
|
|
|
8774.
|
ஆயுள் மற்று உமக்கு எத்துணை அத்துணை அளவு
நீயிர் இச்செயல் புரிமின்கள் பரம் என நினைந்தீர் தூய வித்தையால் நீறு உளது ஆக்கியே தொழுது காய மேல் புனைந்து அஞ்சு எழுத்து உன்னுதிர் கருத்தின். |
42 |
|
|
|
|
|
|
|
8775.
|
தன்மை இங்கு இவை புரிதிரேல் இத் தொழில் தரிக்கும்
வன்மை எய்து வீர் அன்றி நம் கலைகணும் மருங்கு
தொன்மை உள்ளன காட்டி நின்று அருளும் ஆல் தொலைவு
இல்
நன்மை எய்துவீர் என்று அருள் செய்தனன் நம்பன். |
43 |
|
|
|
|
|
|
|
8776.
|
அன்னவர்க் கொடே எவ்வகைச் செய்கையும் அளித்துப்
பின்னை உள்ளது ஓர் செய்கையும் புரியும் எம்
பெருமான்
முன்னை வேதங்கள் அவன் தனை ஐந் தொழில் முதல்வன்
என்னும் மற்று இது தேருதி கேட்டியால் இன்னும். |
44 |
|
|
|
|
|
|
|
8777.
|
உருத்திரன் என்னும் நாமம் ஒப்பு இலா அரற்கும் அன்னான்
தரத்தகு சிறார்கள் ஆனோர் தங்கட்கும் அனையன்
பாதம்
கருத்து இடை உன்னிப் போற்றும் கணங்கட்கும்
அவன்தன் மேனி
பரித்திடு வோர்க்கும் செம் தீப் பண்ணவன் தனக்கும் ஆம்
ஆல். |
45 |
|
|
|
|
|
|
|
8778.
|
இன் நலம் கடலுள் பட்டோர் யாரையும் எடுக்கும் நீரால்
உன் அரும் பரம மூர்த்தி உருத்திரன் எனும் பேர் பெற்றான்
அன்னவன் தரவந் தோர்க்கும் அடி அடைந் தோர்க்கும் அன்னான்
தன் உரு எய்தினோர்க்கும் சார்ந்தது ஆல் அவன் தனிப்பேர்.
|
46 |
|
|
|
|
|
|
|
8779.
|
செம் தழல் என்ன நின்ற தேவனுக்கு உருத்திரப் பேர்
வந்தது புகல்வன் கேட்டி வானவர் யாரும் ஈண்டி முந்தை இல் அவுணர் தம்மை முனிந்திட முயன்று செல்ல அந்தம் இல் நிதியம் தன்னை அவ்வழி ஒருங்கு பெற்றார். |
47 |
|
|
|
|
|
|
|
8780.
|
பெற்றிடு நிதியம் எல்லாம் பீடிலால் கனல் பால் வைத்துக்
செற்றலர் தம் மேல் சென்று செருச் செய்து மீண்டு தேவர் உற்று உழி அது கொடாமல் ஓடலும் தொடர்ந்து சூழ மற்று அவன் கலுழ்தலாலே வந்தது மறையும் கூறும். |
48 |
|
|
|
|
|
|
|
8781.
|
ஓது மா மறைகள் தம்மில் உருத்திரன் எனும் பேர் நாட்டி
ஏதிலார் தம்மைச் சொற்றது ஈசன் மேல் சாரா வந்த
ஆதி நாயகனைச் சுட்டி அறைந்தலும் பிறர் மாட்டு ஏறா
மேதை சால் உணர்வின் ஆன்றோர் விகற்பம் ஈது உணர்வர்
அன்றே. |
49 |
|
|
|
|
|
|
|
8782.
|
ஓங்கிய
சுருதி தன்னுள் உருத்திரன் எனும் நாமத்தால்
தீம் கனலோனை ஏனைத் திறத்தரை உரைத்த வாற்றை
ஈங்கு இவண் மொழியல் எம் கோற்கு இயம்பிய
இடங்கள் நாடி
ஆங்கு அவன் தலைமை காண்டி அறைகுவன் இன்னும் ஒன்றே.
|
50 |
|
|
|
|
|
|
|
8783.
| முந்தை ஓர் பகன் முனிவர்கள் யாவரும் முதலோடு அந்தம் இல்லது ஓர்பரம் இவர் அவரென அறைந்து தம் தமில் சென்று வாது செய்து அறிவரும் தகவால் நொந்து மற்று அவர் பிரமனை வினவுவான் நுவன்றார். |
51 |
|
|
|
|
|
|
|
8784.
|
மல்லல் மேருவின் முடிதனில் மனோவதி வைகும்
அல்லி வான் கமலத்து இடை அண்ணலை அணுகி
எல்லை தீர்ந்திடு பரம்பொருள் உணர்கிலேம் இவர்
என்று
ஒல்லை தன்னில் நீ உரைத்து அருள் செய் என உரைத்தார்.
|
52 |
|
|
|
|
|
|
|
8785.
|
உரைத்த வாசகம் கேட்டலும் நால் முகத்து ஒருவன்
கருத்தில் இங்கு இவை தெளிதர மறைமொழி காட்டி
விரித்தும் என்னினும் தெளிவு உறார் மெய்ம்மையால் விரைவில்
தெரித்து இங்கு என உன்னினன் அவர் மயல் தீர்ப்பான். |
53 |
|
|
|
|
|
|
|
8786.
| நால் தலைச் சிறு மா மகன் தாதை தன் நலம்சேர் தோற்றம் உள்ளுற உன்னியே விழி புனல் சொரிய ஏற்று எழுந்து மீக் கரம் எடா உருத்திரன் என்றே சாற்றி மும் முறை நின்றனன் தெளிதரும் தகவால். |
54 |
|
|
|
|
|
|
|
8787.
| அம் கண் நான்முகன் சூளினால் ஆதி அம் பகவன் சங்கரன் எனக் காட்டியே பொடிப்பு மெய் தயங்க வெம்கனல் படும் இழுது என உருகி மீ மிசை சேர் செம் கை மீட்டனன் முனிவருக்கு இனையன செப்பும். |
55 |
|
|
|
|
|
|
|
8788.
| வம்மினோ உமக்கு ஓர் உரை மொழிகுவன் வானோர் தம்மை எங்களை அளித்தனன் மறைகளும் தந்தான் மெய்ம்மை யாவர்க்கும் செய்பணி உதவினன் மேல்நாள் மும்மை ஆகிய செய்கை நம் பால் என மொழிந்தான். |
56 |
|
|
|
|
|
|
|
8789.
| அருளின் நீர்மையால் ஐந்தொழில் புரிபவன் அநாதி பரமன் நின்மலன் ஏதுவுக்கு ஏதுவாம் பகவன் ஒருவர் பாலினும் பிறந்திடான் அருவதாய் உருவாய் இருமையாய் உறை பூரணி யாவர்க்கும் ஈசன். |
57 |
|
|
|
|
|
|
|
8790.
|
முற்றும் ஆயினான் முடிவிற்கும் முடிவிற்கும் முடிவாய்
உற்று உளான் என்றும் உள்ளவன் அனைத்தையும் உடையோன்
மற்று என்னால் உரைப்பு அரியது ஓர் சீர்த்தியன் மலர்த்தாள்
பற்றினோர்க்கு அன்றி உணர ஒண்ணாத ஓர்
பழையோன்.
|
58 |
|
|
|
|
|
|
|
8791.
|
அன்னது ஓர் சிவன் பரம் என மறை எலாம் அறையும்
இன்னும் ஆங்கு அவன் நிலையினைக் கண்ணனும் யானும் உன்னி நாடியும் காண்கிலம் அவன் பதி ஒழிந்தோர் மன் உயிர்த்தொகை என்றனன் அன்ன தொல் மலரோன். |
59 |
|
|
|
|
|
|
|
8792.
|
அருள் புரிந்து பின் சிவன் அடி கைதொழுது அந்நாள்
மருள் அகன்றிடு பிதா மகன் இருந்தனன் மற்றப்
பொருளின் நீர்மையைத் தெரிந்து தம் புந்தி மேல் கொண்ட
இருள் ஒழிந்தனர் மகிழ்ந்தனர் முனிவரர் இசைப்பார். |
60 |
|
|
|
|
|
|
|
8793.
|
தாதை
யாய் எமை அளித்தனை யாங்கள் உன் தனயர்
ஆதலால் எமக்கு இத்திறம் தேற்றினை அடி கேள் ஈதலால் இன்று குரவனும் ஆயினை என்றே பாத தாமரை வணங்கினர் முனிவரர் பலரும். |
61 |
|
|
|
|
|
|
|
8794.
|
அடி வணங்கினர் தமைத் தெரிந்து இன்று தொட்டு அமலன்
வடிவம் உன்னுதிர் அருச்சனை புரிகுதிர் வயங்கும்
பொடி அணிந்து நல்லம் செழுத்து இயம்புதிர் புரைசேர்
கொடிய வெம் பவம் அகலுதிர் என விடை கொடுத்தான். |
62 |
|
|
|
|
|
|
|
8795.
| ஆதலால் எங்கள் ஈசனே பரம் பொருள் அல்லாது ஏதிலார் எலாம் உயிர்த் தொகை ஆகும் ஆல் இதனைக் காதலால் உரைத்தேன் அன்று வாய்மையே காண்டி வேதமே முதல் ஆகிய கலை எலாம் விளம்பும். |
63 |
|
|
|
|
|
|
|
8796.
|
அன்றி முன் அயன் உன் தனக்கு அரன் புகழ் அனைத்தும்
நன்று கேட்டிட உணர்த்தினன் நீ அது நாடி
நின்று மாதவம் புரிந்து இது பெற்றனை நினக்குப்
பொன்று காலம் வந்து எய்தலின் மறந்தனை போலாம். |
64 |
|
|
|
|
|
|
|
8797.
| தந்தையே முதல் யாவரும் முடிவுறும் தகவால் வந்து நின் அவை இருந்தனர் மாயை ஆல் மருண்டாய் உய்ந்திடும் படி நினைத்தியேல் அரற்கு அவி உதவி இந்த மா மகம் புரிந்திடுவாய் என இசைத்தான். |
65 |
|
|
|
|
|
|