கயமுகன் உற்பத்திப் படலம்
 
9186.
பாக சாதனன் தொல்லை நாள் வானவப் படையோடு
ஏகியே அசுரர்க்கு இறை தன்னை வென்று இகலில்
வாகை சூடியே விஞ்சையர் முதலினோர் வாழ்த்தப்
போக மார் தரும் உலகு இடை மீண்டு போய்ப் புகுந்தான்.
1
   
9187.
பொன் நகர்க்கு இறை போதலும் பொறாமையில் புழுங்கி
வன்னி உற்றிடும் அலங்கல் போல் உளம் நனி வாடி
வென் அளித்திடும் அவுணர் தம் கோமகன் வினையேற்கு
என் இனிச் செயல் எனப் பெரிது உன்னியே இனைந்தான்.
2
   
9188.
வெரு வரும்படி மலைந்திடும் அமரர் பால் மேவிப்
பொருது வென்றி கொண்டு எனக்கு அப் பெரும் புகழ்                                       புனைய
ஒருவர் எம் குலத்து இல்லை கொலோ என உரையாக்
குரு இருந்துழி அணுகியே வணங்கினன் கொடியோன்.
3
   
9189.
பொற்றையின் சிறை தடிந்தவன் சுரரொடும் போர்மேல்
உற்ற காலையில் படையுடன் யான் பொருது உடைந்து
மற்ற அவற்கு என்ன அளித்தனன் நம் பெரு மரபில்
கொற்ற வீரர்கள் யாவரும் முடிந்தனர் கூற்றால்.
4
   
9190.
கழிய மாசினை அடைந்தனம் இன்னலே கரை ஆம்
பழி கொள் வேலையில் அழுந்தினம் உடைந்திடு                                  பகைவர்க்கு
அழிவும் உற்றனம் பெரும் திறல் அற்றனம் அவுணர்
ஒழியும் எல்லை வந்து எய்தியதோ இவண் உரைத்தி.
5
   
9191.
சிறுவர் ஆயினோர் பெருமையில் பிழைப்பரேல் தெருட்டி
உறுதி பல பல கொளுத்தி மற்று அவர் தமை உயர்ந்த
நெறியின் ஆக்குதல் குரவர் தம் கடன் அது நீயே
அறிதி ஆதலின் உய்யுமாறு உரைத்தி என்று அறைந்தான்.
6
   
9192.
உரைத்த வாசகம் கேட்டலும் மன்ன நீ உளத்தில்
வருத்தம் உற்றிடல் என்னவே தேற்றி மேல் வருவ
கருத்தில் உன்னினன் தெரிதலும் வெதும்பிய காயத்து
அரைத்த சாந்தினை அப்பினன் போல ஒன்று                                 அறைந்தான்.
7
   
9193.
ஆதி அம் பரமன் தாளே அடைதகு புனிதன் தொல்லை
வேதியர் தலைவன் ஆன விரிஞ்சன் மெய் உணர்வில்                                       பூத்த
காதலன் புலன்கள் ஆய பகைஞரைக் கடந்த காட்சி
மா தவ முனிவர்க்கு ஈசன் வசிட்டன் என்று உரைக்கும்                                       வள்ளல்.
8
   
9194.
அன்னவன் மரபில் வந்தோன் அறிஞர்க்கும் அறிஞன்                               மேலாய்
மன்னிய நெறிக் கண் நின்றோன் மாகதன் என்னும்                               பேரோன்
உன் அரு மறைகள் யாவும் உணர்ந்தவன் உயர்ந்த வீடு
தன்னை இங்கு அடைவன் என்னாத் தவம் தனை
                              இயற்றல் உற்றான்.
9
   
9195.
ஆயவன் தன்பால் இன்று ஓர் அசுர கன்னிகையைத்                                        தேற்றி
ஏயினை என்னின் அன்னாள் எய்தியே அவன் தானோடு
மேயின காலை ஆங்கு ஓர் வேழமா முகத்தன் உங்கள்
நாயகன் ஆகத் தோன்றி நல் தவம் புரிவன் அன்றே.
10
   
9196.
நல் தவம் புரிதல் காணா நண்ணலர் புரங்கள் மூன்றும்
செற்றவன் மேவி மேலாம் செல்வமும் திறலும் நல்க
மற்று அவன் வானோர் தொல் சீர் மாற்றி எவ் உலகும்                                       ஆளும்
கொற்றவன் ஆவன் என்று கூறினான் குரவன் ஆனோன்.
11
   
9197.
அவ்வுரை கேட்டலோடும் அடித்துணை இறைஞ்சி ஈது
செவ்விது செவ்விது எந்தாய் செய்வல் நீ பணித்தது என்ன
எவ்வம் இல் புகரும் அற்றே இயற்றிய சென்மோ என்ன
மைவரை அனைய மேனி மன்னவன் கடிது மீண்டான்.
12
   
9198.
மீண்டு தன் இருக்கை எய்தி விபுதை என்று ஒருத்தி                                       அந்நாள்
காண் தகும் எழிலின் மிக்க கன்னி தன் குலத்தில்
                                      வந்தாள்
பூண் தகு நாணி னோடும் பொருந்தினள் அவளை எய்தி
ஈண்டு ஒரு மொழி கேட்டு அன்னாய் என் இடர் தீர்த்தி                                       என்றான்.
13
   
9199.
மன்னவர் மன்னன் கூறும் மாற்றம் அங்கு அதனைக்                                     கேளாக்
கன்னிகை ஆகி நின்ற காமரு வல்லி அன்னாள்
நின் அடித் தொண்டு செய்யும் நிருதர் தம் குலத்து                                     வந்தேன்
என் உனக்கு இயற்றும் செய்கை இசைந்தன இசைத்தி                                     என்றாள்.
14
   
9200.
உரை எனலோடு மன்னன் உன் குலத்தோரை விண்ணோர்
பொருதுவென் கண்டு மீண்டு போனதை அறிதி அன்றே
மரு அரும் குழலாய் போரில் வானவர் தம்மை வெல்ல
ஒருவரும் இல்லை நின்னால் உற்றிட வேண்டும் கண்டாய்.
15
   
9201.
ஆங்கு அதற்கு ஏதுக் கேட்டி அம் பொன் மால்
                                வரைத்து எனாது
பாங்கரில் அரிய நோன்பு பயிலுமாக அதன்பால் சென்று
நீங்கல் செல்லாது பல் நாள் நினைவு அறிந்து ஒழுகிக்                                 காலம்
தீங்கு அற நாடி அன்னான் செய்தவம் சிதைத்துச் சேர்தி.
16
   
9202.
சேருதி என்னின் அங்கு ஓர் சிறுவன் நின் இடத்தில்                                      தோன்றிப்
பார் உலகு அனைத்தும் மேலாம் பதங்களும் வலிதில்                                      கொண்டு
வீரரில் வீரன் ஆகி வெம் பகை வீட்டி எங்கள்
ஆர் அஞர் துடைக்கும் அன்னாய் அன்னவாறு அமைதி                                      என்றான்.
17
   
9203.
வேந்தனது உரையைக் கேட்ட விபுதை அம் முனிவன்                            தன்பால்
போந்து உனது எண்ணம் முற்றப் புதல்வனை அளித்து                            மீள்வல்
ஏந்தல் நீ இரங்கல் என்றே ஏகினள் இறைவன்
                           வானோர்
மாய்ந்தனர் இனி என்று உன்னி மகிழ்ச்சியோடு
                           இருந்தான் அங்கண்.
18
   
9204.
ஏகிய அசுர கன்னி ஏமம் ஆல வரையின் சார் போய்
மாகன் பால் சென்று அன்னான் மா தவத் திறத்தை                                     நோக்கி
ஆ கொடிது இவனே அல்லாதார் இது புரியும் நீரார்
மோகம் இங்கு இவனை ஆக்கி முயங்குவது எவ்வாறு                                     என்றாள்.
19
   
9205.
நேமிகள் அனைத்தும் ஆர நிவந்து எழும் வடவை                                    தன்னை
மாமுகில் மாற்ற அற்றோ மாற்றவே வல்லது என்னில்
காம வேள் எடுத்த செய்ய கணை எலாம் ஒருங்கு
                                   சென்று இத்
தோம் இல் சீர் முனியை வாட்டித் துறவையும் மாற்றும்                                    என்றாள்.
20
   
9206.
வான் உயர் தவத்தின் நிற்கும் மாகதன் யானே அல்ல
மேனகை வரினும் நோக்கான் விண்ணவர் பகைஞர்                                     தங்கள்
கோன் இஃது உணரான் போலும் குறுகி நீ புணர்தி                                     என்றால்
நான் அதற்கு இசைந்த வாறும் நன்று என நகைத்து                                     நின்றாள்.
21
   
9207.
போந்தது என் மீண்டும் என்னில் போற்றலர்க்கு
                               உடைந்து சோரும்
வேந்தன் என் உற்றாய் என்று மீளவும் விடுப்பன் அம்மா
ஏய்ந்த நேயத்தில் என்பால் எய்தி மற்று இவனே எற்குக்
காந்தனே ஆக நோற்றுக் காலமும் பார்ப்பன் என்றாள்.
22
   
9208.
என்று இவை உன்னி உற்றோர்க்கு இனிது அருள் புரியும்                                       வெள்ளிக்
குன்று உறை பெருமான் செய்ய குரை கழல் கருத்து உள்                                       கொண்டு
வன் திறல் நோன்பின் மிக்க மாகத முனிவன் நேரா
நின்று அரும் தவத்தை ஆற்ற நெடும் பகல் கழிந்தது                                       அன்றே.
23
   
9209.
மாது செய் தவத்தினாலும் வரன் முறை வழாத ஊழின்
ஏதுவின் ஆலும் அம் கண் இரும் களிற்று ஒறுத்தல்
                                   ஒன்று
காதல் அம் பிடியினோடு கலந்து உடன் புணரக்
                                   காணூஉ
ஆதரம் பெருகப் பல்கால் நோக்கினன் அரும்                                    தவத்தோன்.
24
   
9210.
மறந்தனன் மனுவின் செய்கை மனப்படு பொருளை வாளா
துறந்தனன் காமம் என்னும் சூழ்வலைப் பட்டுச் சோர்வு                                          உற்று
இறந்தனன் போல மாழ்கி இன் உயிர் சுமந்தான் இன்று
பிறந்தனன் இனைய கூட்டம் பெற்றிடுவேன் ஏல் என்றான்.
25
   
9211.
என்று இது புகன்று முன் செய் தவக் குறைக்கு இரங்கி                               என்றும்
நின்றது பழியே ஏனும் நீடு மேல் காமச் சூர் நோய்
தின்று உயிர் செருக்கும் அந்தோ செய்வது இங்கு
                              எவனோ என்னா
வென்றி கொள் முனிவன் தானும் மனத்தொடு வினவல்                               உற்றான்.
26
   
9212.
தீவிடம் தலைக் கொண்டு ஆங்கே தெறு தரு காமச்
                                   செம் தீ
ஓய்வது சிறிதும் இன்றி உள்ளுயிர் அலைக்கும் வேலை
யாவது என்று நினைக்கின் இன்னும் அரும் தவம் கூடும்                                    ஆவி
போவதில் பயன் யாது என்னாப் புணர்ச்சி மேல் புந்தி                                    கொண்டான்.
27
   
9213.
போவதற்கு எண்ணும் போதில் பொருவு இல் சீர்                              அசுரர்க்கு எல்லாம்
காவலின் ஏவல் போற்றும் கன்னிகை முனிவன் காமத்து
ஓய்வதும் பிறவும் எல்லாம் ஒருங்கு உடன் நோக்கி                              எண்ணம்
யாவதும் முடிந்தது என்னா எல்லையில் மகிழ்ச்சி                              பெற்றாள்.
28
   
9214.
ஈங்கு இது காலம் ஆகும் இடனும் ஆம் இதற்கு வேறு
தீங்கு இலை இனைய கூட்டம் செய் தவம் செய்தது                                        என்னா
வாங்கிய நுதலினாளும் வல்விரைந்து எழுந்து தூயோன்
பாங்கரின் அணுகிப் பொன்தாள் பணிந்தனள் பரிவு கூர.
29
   
9215.
மின் இடை பணிந்து நிற்ப மெய் உறுப்பு அனைத்தும்                                     நோக்கிப்
பின்னரும் மால் மீக் கொள்ளப் பித்தரின் மயங்கா
                                    நின்று
கன்னியும் என்னை வெஃகும் காந்தரு வத்தின் நாளும்
இன்னவள் ஆயின் அன்றோ என் உயிர் உய்யும்
                                    என்னா.
30
   
9216.
கருத்து இடை உன்னி யார் நீ கன்னியோ என்ன
                                 லோடும்
அருத்தி கொள் முனியை நோக்கி அன்னதாம் என்ன                                  நம்பால்
வரத்தகும் கருமம் என்கொல் வல்லையில் இயம்புக                                  என்றான்
விரத்தரில் தலைவன் ஆகி வீடு பெற்று உய்ய
                                 நோற்றான்.
31
   
9217.
முருந்து எனும் முறுவலாளும் முனிவ நீ கணவன் ஆக
இரும் தவம் புரிந்தேன் பல் நாள் இன்று அது முடிவது                                       ஆகப்
பொருந்தினன் ஈண்டு நின்னைப் புல்லிய வந்தேன் என்ன
வருந்து உறாத அமுதம் பெற்ற மக்கள் போல் மகிழ்ச்சி                                       உற்றான்.
32
   
9218.
என் பெரும் தவமும் பல் நாள் என் பொருட்டு ஆக                                      நோற்று
நின் பெரும் தவமும் அன்றோ நின்னுடன் என்னை                                      ஈண்டே
அன்பு உறக் கூட்டிற்று அம்மா அடு களிறு என்னப்
                                     புல்லி
இன்புற வேண்டும் நீயும் இரும் பிடி ஆதி என்ன.
33
   
9219.
மெல் இயல் தானும் அங்கு ஓர் வெம் பிடி ஆகித்                                     தோன்றி
எல்லை இல் காதல் பின்னும் ஈதலும் முனிவன் தானும்
மல்லல் அம் களிறு அதாகி வான் உயர் புழைக்கை                                     நீட்டிப்
புல்லினன் ஊற்றம் தானே புணர்ச்சியில் சிறந்தது
                                    அன்றே.
34
   
9220.
நை உறும் உள்ளம் ஆதி நான்மையும் பொறியில் நண்ணி
ஐய உறு புலன் ஓர் ஐந்தும் ஆவியின் ஒருங்க அன் நாள்
மெய் உறு புணர்ச்சித்து ஆய வேட்கையின் மேவல் உற்றுச்
செய் உறு காமம் முற்றித் தீர்ந்திடும் காலை தன்னில்.
35
   
9221.
அயன் முதல் தலைவர் வானத்து அமர் தரு புலவர்                                  ஆற்றும்
செயல் முறைக் கடன்கள் யாவும் சிந்தினன் சிதைக்கும்                                  வண்ணம்
வய முகத்து அடவு கொண்ட வயிர்த்திடு மருப்பின்                                  நால்வாய்க்
கய முகத்து அவுணன் ஆங்கே கதும் என உதயம்                                  செய்தான்.
36
   
9222.
பற்றிய பலகை ஒள்வாள் விதிர்த்தனன் பரவை ஞாலம்
சுற்றினன் வரைகள் யாவும் துகள் படத் துணைத்தாள்                                       உந்தி
எற்றினன் உரும் ஏறு அஞ்ச இரட்டினன் உலகம்
                                      எல்லாம்
செற்றிடும் கடுவது என்னத் திரிந்தனன் சீற்றம் மிக்கான்.
37
   
9223.
அன்னது ஓர் பிடி உரோமம் அளப்பு இல அவற்றில்                              ஆங்கே
மின் இலங்கு எயிற்றுப் பேழ்வாய் விளங்கு எழில்
                             செக்கர் வாய்ந்த
சென்னி அம் குடுமி வீரர் தெழித் தெழீஇச் செம்கை                              தன்னில்
துன் இரும் படைகளோடும் தோன்றினர் தொகை இல்                              ஆன்றோர்.
38
   
9224.
இன்னவ ரோடு கூடி இபமுகத்து அவுணன் ஆர்ப்பத்
தன்னையும் பயந்தோன் தானும் தளர்ந்தனர் இரியல்
                                    போகி
முன் உறும் உருவம் கொள்ள முனிவரன் உணர்வு
                                    தோன்ற
உன்னி நின்று இரங்கி ஏங்கி ஊழ் முறை நினைந்து                                     நைந்தான்.
39
   
9225.
மாயம் ஆம் காமம் என்னும் வலை இடைப் பட்டு
                                       நீங்கும்
தூயவன் முன்னம் நின்ற தோகையைச் சுளித்து நோக்கி
நீ எவர் குலத்தில் வந்தாய் நினைந்தது என் கழறுக                                        என்னச்
சே இழை மரபும் வந்த செய்கையும் உணர்த்தி நின்றாள்.
40
   
9226.
வரன் முறை உணர்தலோடும் மாகத முனிவன் யானே
தரணியில் உயிர்களான சராசரம் தனக்கு மேல் ஆம்
சுரகுலம் தனக்கும் இன்றே துன்புறு வித்தேன் என்னா
எரிஉறு தளிர் போல் வாடி இன்னல் அங்கு கடலுள்                                      பட்டான்.
41
   
9227.
சில பொழுது இரங்கித் தேறிச் சேயிழை மடந்தை                                      நும்கோன்
மெலிவு நின் எண்ணம் தானும் வீடு பெற்று உய்ய யான்                                      முன்
பல பகல் புரிந்த நோன்பும் பார் உலகு அனைத்தும்                                      வானோர்
உலகமும் முடிந்தவே நீ ஒல்லையில் போதி என்றான்.
42
   
9228.
போதி நீ என்னலோடும் பொன் அடி வணங்கிச் சென்று
தாது உலாம் தெரியல் ஆகத் தயித்தியர்க்கு இறைபால்                                   எய்தி
ஈது எலாம் உரைத்தலோடும் எல்லையின் மகிழ்ச்சி
                                  ஆகித்
காதல் கூர் தபனன் காணும் காலை அம் கமலம்                                   போன்றான்.
43
   
9229.
தாங்க அரும் உவகை யோடும் தானவர்க்கு அரசன்                                      நண்ண
ஈங்கு உறு முனிவன் முன்போல் இனிது நோன்பு இயற்ற                                      போனான்
ஆங்கு அவண் உதித்த மைந்தர் அனைவரும் முதல்வன்                                      தன்னோடு
ஓங்கலின் குலங்கள் மேருவுடன் நடந்தது என்னச்                                      சென்றார்.
44
   
9230.
சீற்றம் கொள் தறுகண் நாகம் ஒருவழித் திரண்டது                                       என்னக்
கூற்றம் பல் உருவு கொண்டு குலாய கொட்பு என்ன                                       ஊழிக்
காற்று எங்கும் பரவிற்று என்னக் கடல் இடைப் பிறந்த                                       நஞ்சும்
ஊற்றம் கொண்டு உலாயது என்ன உலகு எலாம் திரிதல்                                       உற்றார்.
45
   
9231.
மலையினைப் பொடிப்பர் ஏனை மண்ணினை மறிப்பர்                              வாரி
அலையினைக் குடிப்பர் கையால் ஆர் உயிர்த்
                             தொகையை அள்ளி
உலையினைப் பொருவு பேழ்வாய் ஓச்சுவர் பரிதி யோடு
நிலையினைத் தடுப்பர் சேடன் நெளிதரப் பெயர்வர்                              மாதோ.
46
   
9232.
தக்கது ஓர் அவுணரோடும் தந்தி மா முகத்து வீரன்
திக்கு எலாம் உலவி எல்லாத் தேயமும் ஒருங்கே
                                    சென்று
மக்களே ஆதி ஆன மன் உயிர் வாரி நுங்கித்
தொக்கது ஓர் செந்நீர் மாந்தித் துண் எனத் திரியும்                                     அன்றே.
47
   
9233.
அத்திறம் வைகல் தோறும் அவுணரும் இறையும் ஏகிக்
கைத்து உறும் உயிர்கள் யாவும் கவர்ந்தனர் மிசைந்தார்                                         ஆகப்
பொய்த்தவர் வெறுக்கை என்னப் போயின உயிர்கள்
                                         சால
எய்த்தனர் முனிவர் தேவர் இறந்தது மறையின் நீதி.
48
   
9234.
முகரிமை அடைந்தவன் தோல் முகத்தவன்
                                அவுணரோடும்
அகல் இடம் மிசையே இவ்வாறு அமர்தலும் அனைய                                 தன்மை
தகுவர்கள் முதல்வன் ஓர்ந்து தமது தொல் குரவர் ஆன
புகரினை விடுப்ப அன்னான் போந்து இவை புகலல்                                 உற்றான்.
49
   
9235.
ஒள்ளிது ஆகிய உம் குலத்து உற்று உள
மள்ளர் யார்க்கும் ஒர் வான் குரு ஆயினேன்
தெள்ளு பன் மறைத் திட்பமும் தேர்ந்து உளேன்
வெள்ளி என்பது ஒர் மேதகு பேரினேன்.
50
   
9236.
உம் குலத்துக்கு ஒரு முதல் ஆகிய
சிங்கம் அன்ன திறலினன் உய்த்திட
இங்கு நின்புடை எய்தினன் மேல் நெறி
தங்கு நல் நயம் சாற்றுதற்கே என்றான்.
51
   
9237.
குரவன் ஆகிக் குறுகிய சல்லியன்
பரிவு ஒடு ஈது பகர்தலும் ஆங்கு அவன்
திருவடித் துணை சென்று வணங்கியே
கரிமுகத்தன் கழறுதல் மேயினான்.
52
   
9238.
இறுவது இன்றிய எம் குலத்தோர்க்கு எலாம்
அறிவ நீ அருளால் அடியேற்கு இவண்
உறுதி கூறுகின்றாய் இதன் ஊங்கினிப்
பெறுவது ஒன்று உளதே எனப் பேசினான்.
53
   
9239.
அந்த வேலை அவுணர்கள் யாவரும்
சிந்தை மேல் கொண்ட தீதினை நீத்திடா
எந்தையார் தம் குரவர் இவர் எனா
வந்து பார்க்கவன் தாளில் வணங்கினார்.
54
   
9240.
சீத வான் முகில் கோள் எனும் செவ்வியோன்
ஆதி தன் அருளால் அவணர்க்கு இறை
போதகன் முகம் நோக்கிப் பொருவு இலா
ஓதி மாண்பின் இவை உரைக்கின்றனன்.
55
   
9241.
மீ உயர் தவத்தை ஆற்றாய் விமலனை உணராய் ஒல்லார்
மாயமும் திறலும் சீரும் வன்மையும் சிறிதும் தேராய்
ஏய இவ் உடலம் நில்லாது என்பதும் கருதாய் வாளா
போயின பல் நாள் என் நீ புரிந்தனை புந்தி இல்லாய்.
56
   
9242.
முப் பகை கடந்து மற்றை முரட் பகை முடித்திட்டு                                   ஐம்பான்
மெய்ப் பகை கடந்து நோற்று விழுத்தகும் ஆற்றல்                                   பெற்றுத்
துப்பகை தொண்டைச் செவ்வாய்ச் சூரொடு புணரும்                                   வான்நாட்டுப்
உப்பகை கடந்து தொல்சீர் அடைந்திலை போலும்                                   அன்றே.
57
   
9243.
இம்மையில் இன்பம் தன்னைப் புகழொடும் இழத்தி
                                       மேலை
அம்மையில் இன்பம் தானும் அகன்றனை போலும்
                                       அன்றே
உம்மையும் இன்பம் என்பது உற்றிலை என்னில் பின்னை
எம்மையில் இன்பம் துய்க்க இசைந்து நீ இருக்கின்றாய்                                        ஆல்.
58
   
9244.
ஆக்கமும் திறலும் சீரும் ஆயுவும் நலனும் மேல் ஆம்
ஊக்கமும் வீடும் எல்லாம் தவத்தினது ஊற்றம் அன்றோ
நோக்கு உறும் இந்நாள் காறும் நோற்கலாது இனைய                                     எல்லாம்
போக்குவது என்னை கொல்லோ புகலுதி இகலும்                                     வேலோய்.
59
   
9245.
ஆற்றிடும் தருமம் விஞ்சை அரும் பெறல் மகவும் சீர்த்தி
ஏற்றிடும் கொற்றம் ஆற்றல் இருநிதி பெருமை இன்பம்
நோற்றிடும் விரதம் சீலம் நுவல் அரும் போதம் யாவும்
கூற்றுவன் கூவும் ஞான்று குறித்திடல் கூடுமோ தான்.
60
   
9246.
காலன் ஆகியது ஓர் சேர்ப்பன் காலம் ஆம் வலையை                                            வீசி
ஞாலம் ஆம் தடத்தில் வைகும் நல் உயிர் மீன்கள் வாரி
ஏலவே ஈர்த்து நின்றான் இறுதி ஆம் கரை சேர் காலை
மேலவன் கையுள் பட்டு மெலிவொடு வீடும் அன்றே.
61
   
9247.
சீரியது உடலம் என்கை தெரிந்திலை நிலைத்தல்
                                   செல்லா
ஆர் உயிர் வகையும் என்பது அறிந்து இலை ஆயுள்
                                   பல் நாள்
சாருதல் வேண்டும் என்னும் தகைமையும் நினைத்தி                                    அல்லை
பார் உயிர் இறப்ப நுங்கி இருப்பதோ பரிசு மாதோ.
62
   
9248.
மந்திரம் இல்லை மாயம் இல்லை ஓர் வரமும் இல்லை
தந்திரம் இல்லை மேலோர் தருகின்ற படை ஒன்று இல்லை
அந்தர அமரர் எல்லாம் அனிகம் ஆய்ச் சூழ நின் மேல்
இந்திரன் பொருவான் செல்லின் யாது நீ செய்தி மாதோ.
63
   
9249.
சிறியது ஓர் பயனைத் தூக்கித் தீயவர் செய்யும் சூழ்ச்சி
அறிகில ஆகி வீழ்வுற்று அகப் படு மாவும் மீனும்
பறவையும் என்ன ஒல்லார் புணர்ப்பினில் படுதி இன்னே
விறல் ஒடு வலியும் சீரும் மேன்மையும் இன்றி உற்றாய்.
64
   
9250.
ஆதலின் எவர்க்கும் மேல் ஆம் அரன் தனை உன்னி                                       ஆற்ற
மாதவம் புரிதி அன்னான் வரம் பல கேட்ட எல்லாம்
தீது அற உதவும் பின்னர்த் தேவர் உன் ஏவல் செய்வார்
மேதகும் உலகுக்கு எல்லாம் வேந்தனாய் இருத்தி                                       என்றான்.
65
   
9251.
சொன்னவை கேட்டலோடும் தொழுதகை அவுணர்                                   தோன்றல்
முன் இவை யாவரேனும் மொழிந்தனர் இல்லை யானும்
இன்னவை புரிதல் தேற்றேன் இனித் தவம் இயற்று                                   கின்றேன்
அன்னவை புரியும் தன்மை அருள் செயல் வேண்டும்                                   என்றான்.
66
   
9252.
ஐ வினை செய் பொறிகள் எலாம் அரங்கம் எனக்                   கறங்கும் அறிவு அடங்கு கின்ற
மெய் வினைய மந்திரமும் தந்திரமும் அங்கம் உறு                   விதியினோடு
கை வினையும் உள் கோளும் புறம் காப்பும் விரதம்
                  செய் கடனும் ஏனைச்
செய் வினையும் உணர்வித்து மேருவின் பால் தவம்
                  புரியச் செல்லுக என்றான்.
67
   
9253.
ஏவுதலும் கயமுகத்தோன் அவுணரொடும் புகர் அடியின்                     இறைஞ்சி அங்கண்
மேவுவன் யான் என உரையா விடை கொண்டு                     நோற்றிடுவான் விரைவின் ஏகக்
காவதம் அங்கு ஓர் இரண்டு கடப்பு அளவும் தான்
                    நின்று கண்ணின் நோக்கிப்
போவன் இனி என மகிழ்ந்து மீண்டு போய் அவுணர்
                    பதி புகுந்தான் அன்றே.
68
   
9254.
அக் காலத்து எதிர் வந்த இறைவனுடன் புகுந்த
                      எலாம் அறைய அன்னான்
இக் காலம் தான் அன்றோ அருள் செய்தீர் என
                      இயம்பி ஏத்தி அன்பால்
முக் கால் வந்தனை செய்து விடுத்திடப் போய்த் தன்                       பதத்தின் முன்னமே போல்
மிக்கானும் வீற்று இருந்தான் கடவுளரும் புரந்தரனும்                       விழுமம் கொள்ள.
69
   
9255.
மாண் தகு அவ்வலி அகலம் மருப்பு அதனை எதிர்ந்து                        தொல்லை வைப்பின் ஈங்கு
மீண்டிய திண் காழ் இரும்பின் எஃகம் முதல் வியன்                        படைகள் இயற்கை என்னக்
காண் தகைய தம் குரவன் ஆன புகர் உரை அதனைக்                        கருத்துள் சேர்த்தி
ஆண் தகை சேர் இப முகத்தோன் அவுணருடன் தவம்                        புரிவான் அகலல் உற்றான்.
70
   
9256.
அம் கண் முகில் படிந்து அறியா மேருவினுக்கு
                ஒருசார் போய் அவுணர் வேந்தன்
துங்க மிகு கருவிகளாய் வேண்டுவன கொணர்வித்துத்
                தூ நீர் ஆடிச்
செம் கதிரோன் தனை நோக்கி ஆற்று கடன் முடித்து                 முன்னைத் தீர்வு நேர்ந்து
தங்கள் குரவன் பணித்த பெற்றியினால் மிக்க தவம்                 தன்னைச் செய்வான்.
71
   
9257.
பொறியில் உறு புலன் அவித்து நவை நீக்கிக் கரண்
                      இயல் போக்கி ஆசான்
குறி வழியே தலை நின்று மூல எழுத்து உடன் ஐந்தும்                       கொளுவி எண்ணி
அறிவு தனில் அறிவாகி உயிர்க்கு உயிராய்ப் பரம்                       பொருளாய் அமலம் ஆகிச்
செறிதரு கண் நுதல் கடவுள் அடி போற்றி அவன்                       உருவைச் சிந்தை செய்தான்.
72
   
9258.
ஆயிரம் ஆண்டு புல் அடகு மேயினான்
ஆயிரம் ஆண்டு சில் புனல் அருந்தினான்
ஆயிரம் ஆண்டு அளவு அனிலம் நுங்கினான்
மாயிரும் புவி உயிர் மடுக்கும் வாயினான்.
73
   
9259.
காலம் மூவாயிரம் கழிந்த பின் முறை
மால் உறு மருத்து எனும் மாவைத் தூண்டியே
மூல வெம் கனலினை முடுக்கி மூட்டு உறா
மேல் உறும் அமிர்தினை மிசைதல் மேயினான்.
74
   
9260.
கண்டனர் அது சுரர் கவலும் சிந்தையர்
திண் திறல் அவுணன் இச் செய்கை முற்றும் ஏல்
அண்டமும் புவனமும் அலைக்குமே எனாக்
கொண்டனர் தம்பதி அறியக் கூறினார்.
75
   
9261.
கூறிய செயலினைத் தேர்ந்து கொற்றவன்
ஆறிய வெகுட்சியன் அயர்ந்து சோர் உறா
வீறியல் வாய்மையும் விறலும் ஆண்மையும்
மாறியவோ எனா மறுக்கம் எய்தினான்.
76
   
9262.
புலர்ந்தனன் இரங்கினன் பொருமல் எய்தினான்
அலந்தனன் உயிர்த்தனன் அச்சம் கொண்டனன்
உலந்தனன் போன்றனன் ஒடுங்கித் தன் உளம்
குலைந்தனன் அவன் செயல் கூறல் பாலதோ.
77
   
9263.
ஈசனை அன்று கா எதிரக் கண்டிலன்
காய் சினம் அகன்றிடும் கய முகத்தினான்
தேசிகன் அருளினால் தீயின் கண் உறீஇ
மாசு அறு தவம் செய மனத்தும் உன்னினான்.
78
   
9264.
சுற்று உற நால் கனல் சூழ நள் இடை
மற்று ஒரு பேர் அழல் வதிய அன்னதில்
கொற்ற வெம் கய முகக் குரிசில் தாள் நிறீஇ
நல்தவம் இயற்றினான் நாதன் போற்றியே.
79
   
9265.
மேயின கொழும் புகை மிசைக் கொண்டால் எனத்
தீ அழல் நடுவுறச் செல் நின்றை இரண்டு
ஆயிரம் ஆண்டையின் அவதி ஆர் உயிர்
நோய் உற இபமுகன் நோற்றல் ஓம்பினான்.
80
   
9266.
புழைக் கையின் முகத்தினன் புனிதம் ஆர் தரு
அழல் சிகை மீக் கொளத் தனது தாள் நிறீஇ
விழுத் தக நோற்றலை வியந்து நோக்கு உறீஇ
அழல் பெரும் கடவுளும் அருள் செய்தான் அரோ.
81
   
9267.
அன்னது ஓர் அமைதியில் அவுணன் மாசு உடல்
வன்னியில் உறுத்து கார் இரும்பின் மாண்டது
பொன்னினும் மணியினும் பொலிந்து பூத்தது
மின் நிவர் வச்சிர மிடலும் சான்றது ஆல்.
82
   
9268.
ஏற்ற நம் தொல் மரபு இயல் வழா மலே
போற்றிய வரும் இவன் பொறையும் மேன்மையும்
நோற்றிடும் திட்பமும் நுவலல் பாலதோ
தூற்றுதும் அலர் எனா அவுணர் தோன்றினார்.
83
   
9269.
வீசினர் நறு மலர் வியப்பின் நல் மொழி
பேசினர் புகழ்ந்தனர் பிறங்கும் ஆர்வத்தால்
ஆசிகள் புகன்றனர் அமரர் தானையை
ஏசினர் அவர் தமது இன்னல் நோக்குவார்.
84
   
9270.
தளப் பெரும் பங்கயத் தவிசின் மீ மிசை
அளப்பு அரும் குணத்துடன் அமர்ந்த நாயகன்
உளப்பட நோக்கினன் உவந்து பூ முடி
துளக்கினன் அமரர்கள் துணுக்கம் எய்தினார்.
85
   
9271.
இன்னணம் அரும் தவம் இயற்றும் எல்லையில்
பொன் அவிர் சடை முடிப் புனித நாயகன்
அன்னது நாடியே அவுணருக்கு இறை
முன்னுற வந்தனன் மூரி ஏற்றின் மேல்.
86
   
9272.
வந்து தோன்றலும் மற்று அது நோக்கி அத்
தந்தி மா முகத் தானவன் நோன்பு ஒரீஇ இச்
சிந்தை அன்பொடு சென்னியில் கை தொழுது
எந்தை தன்னை இறைஞ்சி நின்று ஏத்தினான்.
87
   
9273.
போற்று கின்றுழிப் புங்கவன் இன்று கா
ஆற்று நோன்பில் அயர்ந்தனை நீ இனிப்
பேற்றை வேண்டுவ பேசினை கொள்க எனத்
தேற்றம் மிக்கவன் செப்புதல் மேயினான்.
88
   
9274.
மால் அயன் இந்திரன் முதல் வரம்பு இலோர்
மேல் உறு தகையினர் வெய்ய போரிடை
ஏலுவர் என்னினும் எனக்கு என்னிட
ஆல் அமர் கடவுள் நீ அருளல் வேண்டும் ஆல்.
89
   
9275.
எற்றுவ எறிகுவ ஈர்வ எய்குவ
குற்றுவ முதலிய குழுக் கொள் வான் படை
முற்று உற வரினும் யான் முடிவு உறா வகை
அற்றம் இல் பெருமிடல் அளித்தல் வேண்டும் ஆல்.
90
   
9276.
மிக்கது ஓர் அமரரால் வியப்பின் மானுட
மக்களால் அவுணரால் மற்றையோர் களால்
தொக்கு உறு விலங்கினால் துஞ்சிடா வகை
இக்கணம் தமியனேற்கு ஈதல் வேண்டும் ஆல்.
91
   
9277.
என் நிகர் ஆகிவந்து ஒருவன் என்னொடு
முன் உற வெம் சமர் முயலும் என்னினும்
அன்னவன் படையினும் அழிவு உறா வகை
பொன் அவிர் வேணியாய் புரிதல் வேண்டும் ஆல்.
92
   
9278.
வரம் தரு கடவுளர் முனிவர் மற்றையோர்
இருந்திடும் உலகு எலாம் என்னது ஆணையில்
திரிந்திடும் ஆழியும் கோலும் சென்றிடப்
புரிந்திடும் அரசியல் புரிதல் வேண்டும் ஆல்.
93
   
9279.
அன்றியும் ஒன்று உளது அடியன் சூழ்ச்சியால்
பொன்றினும் பிறவியுள் புகாமை வேண்டும் ஆல்
என்றலும் நோற்றவர்க்கு ஏதும் ஈபவன்
நன்று அவை பெறுக என் நல்கி ஏகினான்.
94
   
9280.
பெற்றனன் படைகளும் பிறவும் தன் புறம்
சுற்றிடு கிளை எலாம் தொடர்ந்து சூழ்தர
உற்றனன் காண்தகும் உம்பர் உங்குவன்
மற்று ஒரு கயமுகன் என்று மாழ்கினார்.
95
   
9281.
காழ் உறு பெரும் தரு நாறு காசினி
வீழ் உறு தூரொடு மெலிந்து நின்றன
ஊழ் உறு பருவம் வந்து உற்ற காலையில்
சூழ் உறு தொல் நிலை என்னத் தோன்றினான்.
96
   
9282.
அற்புதம் எய்தினன் அலை கொள் வாரியில்
புல் புதம் ஆம் எனப் புளகம் பூத்துளான்
சொல் பகர் அரியது ஓர் மதர்ப்பின் சும்மையான்
சிற்பரன் கருணையில் திளைத்தல் மேயினான்.
97
   
9283.
அன்னது தேர்வு உறீஇ அவுணர் தொல் குல
மன்னனும் வெள்ளியும் மதங்க மா முகன்
தன்னை வந்து எய்தியே சயம் உண்டாக எனப்
பன்னரும் ஆசிகள் பகர்ந்து மேயினார்.
98
   
9284.
தண் அளி இல்லது ஓர் தந்தி மா முகன்
அண்ணல் அம் கட களிற்று அமரர் கோனையும்
விண்ணவர் பிறரையும் வென்று மீண்டு பின்
மண் உலகத்து அதன் இடை வல்லை எய்தினான்.
99
   
9285.
புவனி தன் இடைப் போந்து பின்
அவுணர் கம்மிய அறிஞனை
நுவலும் அன்பொடு நோக்கு உறா
உவகையால் இவை உரை செய்வான்.
100
   
9286.
நா வலம் தரு நண்ணும் இத்
தீவின் மேதகு தென் திசைப்
பூவில் ஓர் நகர் புரிதி ஆல்
மேவ வென்று விளம்பவே.
101
   
9287.
பூவின் மேல் வரும் புங்கவத்து
தேவு நாண் உறு செய்கையில்
காவல் மா நகர் கண்டு அதில்
கோவில் ஒன்று குயிற்றினான்.
102
   
9288.
வெம் கண் மேதகு வேழ முகத்தனைத்
தங்கள் தொல் பகை தாங்குவதாம் எனச்
சிங்கம் ஆற்றும் திரு மணிப் பீடம் ஒன்று
அங்கு அவன் வைக ஆற்றினன் அவ் இடை.
103
   
9289.
இனைத்தி யாவும் இமைப்பினில் கம்மியன்
நினைப் பினில் செய் நிலைமையை நோக்கியே
சினத்தின் நீங்கிய செய் தவத் தேசிகன்
மனத்தின் ஊடு மகிழ்ச்சியின் மேயினான்.
104
   
9290.
காமர் தங்கிய காப்பு இயல் அந்நகர்
தூ மதம் கெழு தோல் முகன் காதலான்
மா மதங்கபுரம் என மற்று ஒரு
நாமம் அங்கு அதற்கு எய்திட நாட்டினான்.
105
   
9291.
அந்த மா நகர் ஐது எனக் கம்மியன்
சிந்தை நாடினன் செய்திடும் காலையில்
தந்தி மா முகத்து ஆனவன் கண் உறீஇ
அந்தம் இல்லது ஓர் ஆர்வமொடு ஏகினான்.
106
   
9292.
காதம் அங்கு ஒரு பத்து எனக் கற்றவர்
ஓது கின்ற ஒழுக்கமும் ஒன்று எனும்
பாதி எல்லைப் பரப்பும் பெறு நகர்
வீதி நோக்கினன் விம்மிதம் எய்தினான்.
107
   
9293.
அரக்கர் தொல்லை அவுணர்க்கு அரசொடு
தருக்கு தானவர் தம்முடன் எய்தியே
பெருக்கம் உற்று அதன் பின்னவர் இன்னவர்
இருக்க நல்கினன் இந்நகர் யாவையும்.
108
   
9294.
அம் கண் மேவும் அணி மணிக் கோயிலின்
மங்கலத்தொடு வல்லையின் ஏகியே
சிங்க ஏற்றின் சிரம் கெழு பீடமேல்
வெம் கை மா முகன் வீற்று இருந்தான் அரோ.
109
   
9295.
போந்து பின்னர்ப் பொருவரும் தானவர்
வேந்தன் மா மகளான விசித்திர
காந்தி தன்னைக் கருது நல் நாளினில்
ஏந்தல் முன் வரைந்து இன்பு உற மேவினான்.
110
   
9296.
விண்ணின் மாந்தர்கள் மேதகு தன் குலம்
நண்ணு மாதர்கள் நாகர் தம் மாதர்கள்
வண்ண விஞ்சையர் மாதர்கள் ஆதி ஆம்
எண் இல் மாதரைப் பின் வரைந்து எய்தினான்.
111
   
9297.
பொன் நகர்க்கும் பொலங்கெழு புட்பக
மன் நகர்க்கும் அவ் வானவர் ஈண்டிய
எந் நகர்க்கும் இலா வளம் எய்திய
அந் நகர்க் கண் அமர்ந்திடல் மேயினான்.
112
   
9298.
சூழும் வானவர் தானவர் துன்னியே
தாழ ஏழ் உலகும் தனது ஆணையால்
வாழி சேர் கொடும் கோலொடு மன்னு பேர்
ஆழி செல்ல அரசு செய்தான் அவன்.
113
   
9299.
ஆவும் சங்கமும் அம்புயமும் மலர்க்
காவும் மா மணியும் கமல ஆலயத்து
தேவும் பின்வரும் தேவரும் மாதரும்
ஏவல் செய்ய இனிது இருந்தான் அரோ.
114
   
9300.
புந்தி மிக்க புகரும் புகருடன்
அந்தம் அற்ற அவுணர்கள் மன்னனும்
தந்தியின் முகத் தானவனுக்கு நன்
மந்திரத் துணையாய் அவண் வைகினார்.
115
   
9301.
அன்ன காலை அடு கரி மா முக
மன்னன் முன்வரும் வாசவன் ஆதி ஆம்
துன்னு வானவர் சூழலை நோக்கியே
இன்னது ஒன்றை இயம்புதல் மேயினான்.
116
   
9302.
வைகலும் இவண் வந்துழி நுங்கள் தம்
மொய் கொள் சென்னியில் மும் முறை தாக்கியே
கைகள் காதுறக் கால் கொடு தாழ்ந்து எழீஇச்
செய்க நம் பணி தேவர்கள் நீர் என்றான்.
117
   
9303.
அன்னது ஓதலும் அண்டர்கள் யாவரும்
மன்னன் தானும் மறுப்பதை அஞ்சியே
முன்னரே நின்று மொய்ம்பு உடைத் தோல் முகன்
சொன்னது ஓர் புன் தொழில் முறை ஆற்றினார்.
118
   
9304.
எழிலி ஊர்தியும் ஏனைய வானவர்
குழுவினோர்களும் குஞ்சர மா முகத்து
அழித கண் பணி அல்கலும் ஆற்றியே
பழி எனும் பரவைப் படிந்தார் அரோ.
119
   
9305.
கரிமுகத்துக் கயவனது ஏவலால்
பருவரல் பழி மூழ்குறு பான்மையைச்
சுரர் களுக்கு இறை தொல்லை விரிஞ்சன் மால்
இருவருக்கும் இயம்பி இரங்கினான்.
120
   
9306.
இரங்கும் எல்லையில் இந்திர முற்று உளம்
தரங்கம் எய்தித் தளர்ந்திடல் நீ எனா
உரம் கொள் பான்மை உணர்த்தி அவனொடும்
புரங்கள் அட்டவன் பொற்றையில் போயினார்.
121
   
9307.
மாகர் யாவரும் வாசவனும் புடை
ஆக வந்திட அம்புயன் மால் உமை
பாகன் மேய பனி வரைக் கோயிலுள்
ஏகினார் நந்தி எந்தை விடுப்பவே.
122
   
9308.
கண்டு நாதன் கழல் இணை தாழ்ந்து நல்
தொண்டு காணத் துதித்தலும் ஆங்கு அவன்
அண்டரோடும் அலமரல் எய்தியே
வண் துழாய் முடி வந்தது என் என்னவே.
123
   
9309.
ஆனது ஓர் பொழுதின் மால் அரனை நோக்கி ஓர்
தானவன் கயமுகன் என்னும் தன்மையான்
வானவர் தமை எலாம் வருத்தினான் அவன்
ஊனம் இல் தவம் புரிந்து உடைய வன்மை ஆல்.
124
   
9310.
வெம் கய முகத்தினன் விறலை நீக்குதல்
எங்களுக்கு அரியது ஆல் எவர்க்கும் ஆதி ஆம்
புங்கவ நினக்கு அது பொருள் அன்று ஆகையால்
அங்கு அவன் உயிர் தொலைத்து அருள வேண்டும் நீ.
125
   
9311.
என்று உரை செய்தலும் ஈசன் யாம் இவண்
ஒன்று ஒரு புதல்வனை உதவித் தோல் முக
வன் திறல் அவுணனை மாய்த்து மற்று அவன்
வென்றி கொண்டு ஏகுவான் விடுத்து மேல் என்றான்.
126
   
9312.
வீடிய பற்று உடை விரதர்க்கு என்னினும்
நாடிய அரியவன் நவின்ற வாய்மையைச்
சூடினர் சென்னி மேல் தொழுத கையராய்
ஆடினர் பாடினர் அமரர் யாருமே.
127
   
9313.
பாங்கரில் அனையரைப் பரிந்து நோக்கியே
ஈங்கு இனி நும் பதிக்கு ஏகுவீர் என
ஆங்கு அவர் எம்பிரான் அடியில் வீழ்ந்தனர்
வீங்கு உறு காதல் ஆல் விடை கொண்டு ஏகினார்.
128
   
9314.
ஏகிய எல்லையில் எண் இலா விதி
சேகரம் மிலைச்சிய சென்னி வானவன்
பாகம் உற்று உலகு எலாம் பயந்த சுந்தரத்
தோகையை நோக்கியே இதனைச் சொல்லுவான்.
129
   
9315.
யாம் பெரு விருப்புடன் இயற்று வித்திடும்
தேம் படு தருவனம் தெரிந்தும் செல்க என
வாம் பரிசு அருளினை வருவன் ஆங்கு எனாக்
காம் படு தோள் உடைக் கவுரி கூறினாள்.
130
   
9316.
ஆயது கேட்டனன் அகிலம் யாவையும்
தாய் என அருளும் அத் தையல் தன்னொடும்
சேய் உயர் விசும்பினைச் செறி தண் சோலையில்
போயினன் மறைக்கு எலாம் பொருள் அது ஆயினான்.
131
   
9317.
நீள் நுதல் கனல் விழி நிமலத்தே எனும்
தாணுவைப் போலவே தனது பாதமும்
சேண் உடைச் சென்னியும் தேவர் யாரினும்
காணுதற்கு அரியது அக் கடி கொள் சோலையே.
132
   
9318.
தேசு உடைத்து அருநிரை திரு மென் போது ஒடு
பாசடைத் தொகுதியும் பரித்து நிற்பன
ஈசனுக்கு அருச்சனை இயல்பின் ஆற்றிட
நேசமுற்றும் உடையவர் நிலையது ஒக்கும் ஆல்.
133
   
9319.
பால் உற வருவது ஓர் பரைதன் மெய் ஒளி
மேல் உறு பைம் கொடி வேத நாயகன்
ஏல் உறு தாருக வனத்தில் எய்த முன்
மால் உறு மங்கையர் வடிவம் போலும் ஆல்.
134
   
9320.
கொடிகளும் தருக்களின் குழுவு மாதுடன்
அடிகள் அங்கு ஏகலும் அனையர் செம்மையும்
சுடர்கெழு பசுமை அம் துவன்றி அன்னது ஓர்
வடிவு கொண்டு இருந்திடும் வண்ணம் போலும் ஆல்.
135
   
9321.
பூம் தரு நிரைகளில் பொருவு இல் கோட்டு இடைச்
சேந்திடு நனை பல திகழ்வ பார்ப்பதி
காந்தனை அன்பொடு கண்டு பாங்கு உளார்
ஏந்திய தீபிகை என்னல் ஆனவே.
136
   
9322.
வான் தரு ஓர் சில மலரின் காண் தொறும்
தேன் துளி விடுவன சிவனைக் கண்டுழி
ஆன்றது ஓர் அன்பினார் அகம் நெகிழ்ந்து கள்
கான்றது ஓர் புனல் எனக் கவின்று காட்டிய.
137
   
9323.
வண் தரு ஓர் சில மருப்பில் வான் நிறம்
கொண்டிடும் மது மலர் குழுமி உற்றன
எண் திரு மலை இடை வீழும் கங்கையில்
தண் துளி சிதறிய தன்மை போன்றவே.
138
   
9324.
கற்றை அம் சுடர் மணி கனகம் ஏனைய
பிற்றை என்னாது அருள் பெரியர் வன்மை போல்
மற்று அவண் உள்ள பல் மரமும் தம் பயன்
எற்றையும் உலப்பு உறாது ஈகை சான்றவே.
139
   
9325.
கா அதன் இயல்பினைக் கண்டு தன் ஒரு
தேவி யொடே அருள் செய்து சிற்பரன்
ஆவி உள் உணர்வு என அதன் உள் வைகும் ஓர்
ஓவிய மன்று இடை ஒல்லை ஏகினான்.
140
   
9326.
எண் தகு பெரு நசை எய்தி ஐம்புலன்
விண்டிடல் இன்றியே விழியின் பால் படக்
கண்டனள் கவுரி அக் கடி கொள் மண்டபம்
கொண்டிடும் ஓவியக் கோலம் யாவுமே.
141
   
9327.
பாங்கரில் வருவது ஓர் பரமன் ஆணையால்
ஆங்கு அதன் நடுவணில் ஆதி ஆகியே
ஓங்கிய தனி எழுத்து ஒன்று இரண்டு அதாய்
தூங்கு கைம் மலைகளில் தோன்றிற்று என்பவே.
142
   
9328.
அன்னவை உமையவள் காண ஆங்கு அவை
முன் உறு புணர்ச்சியின் முயற்சி செய்தலும்
என்னை கொல் இது என எண்ணித் தன் னொடு
மன்னிய முதல்வனை வணங்கிக் கூறுவாள்.
143
   
9329.
மூலம் ஆம் எழுத்து இவை முயங்கி மால் கரிக்
கோலம் ஆய்ப் புணர்வது என் கூறுக என்றலும்
ஏலவார் கரும் குழல் இறைவி கேள் என
ஆலம் ஆர் களத்தினன் அருள் செய்கின்றனன்.
144
   
9330.
முன்பு நீ காண்டலின் மூலம் ஆய் உடையது ஓர்
மன் பெரும் தொல் பொறி மருவி ஈர் உரு ஒறீஇ
அன்பினால் ஆனை போல் புணரும் ஆல் ஆகையால்
நின் பெரும் தகவினை நினைகிலாய் நீயுமே.
145
   
9331.
காட்சியால் இது செயும் காரணம் பெற்ற நின்
மாட்சி தான் யாம் அலன் மற்றியார் உணர்குவார்
ஆட்சியாய் உற்ற தொல் அருமறைக்கு ஆயினும்
சேண் செலா நிற்கும் நின் திரு அருள் செய்கையே.
146
   
9332.
என்னவே முகமனால் எம்பிரான் அம்பிகை
தன்னொடே மொழிய அத் தந்தியும் பிடியும் ஆய்த்
துன்னியே புணர் உறும் தூய செய் தொழில் விடா
முன்னமே போன்றது ஆல் முடிவு இலாக் குடிலையே.
147
   
9333.
அக் கணத்து ஆய் இடை ஐங் கரத்தவன் அருள்
முக் கண் நால் வாயினான் மும் மதத்து ஆறு பாய்
மைக் கரும் களிறு எனும் மா முகத்தவன் மதிச்
செக்கர்வார் சடையன் ஓர் சிறுவன் வந்து அருளினான்.
148
   
9334.
ஒருமையால் உணருவோர் உணர்வினுக்கு உணர்வது
                                      ஆம்
பெருமையான் எங்கணும் பிரிவு அரும் பெற்றியான்
அருமையான் ஏவரும் அடி தொழும் தன்மையான்
இருமை ஆம் ஈசனை என்ன நின்று அருளுவான்.
149
   
9335.
மருள் அறப் புகலும் நால் மறைகளில் திகழும் மெய்ப்
பொருள் எனப்படும் அவன் புவனம் உற்றவர்கள் தம்
இருள் அறுத்து அவர் மனத்து இடர் தவித்து அருள ஓர்
அருள் உருத் தனை எடுத்து அவதரித்து உளன் அவன்.
150
   
9336.
வந்து முன் இருவர் தம் மலர் அடி தலம் மிசைச்
சிந்தை ஆர்வத்தொடும் சென்னி தாழ்த்திடு தலும்
தந்தையும் தாயும் முன் தழுவி மார்பு உற அணைத்து
தம் தமில் கருணை செய்து அருளினார் அவ்வழி.
151
   
9337.
என்னரே ஆயினும் ஆவது ஒன்று எண்ணுதல்
முன்னரே உனது தாள் முடி உறப் பணிவர் ஏல்
அன்னர் தம் சிந்தை போல் ஆக்குதி அலது உனை
உன்னலார் செய்கையை ஊறு செய்திடுதி நீ.
152
   
9338.
சேய நல் மலர் மிசைத் திசை முகன் மால் முதல்
ஆய பண்ணவர் தமக்கு ஆர் உயிர்த் தொகையினுக்கு
ஏய பல் கணவருக்கும் எத் திறத்தோர்க்கும் நீ
நாயகம் புரிதி ஆல் நல் அருள் தன்மை ஆல்.
153
   
9339.
கான் உறும் கரட வெம் கய முகத்தவன் எனும்
தானவன் வன்மையைச் சாடியே தண் துழாய்
வானவன் சிறுமையும் மாற்றியே வருக எனா
ஆனையின் முகவனுக்கு ஐம் முகன் அருள் செய்தான்.
154
   
9340.
மோனமே குறியது ஆம் முதல் எழுத்து அருளிய
ஞானம் ஆம் மதலை பால் நண்ணவே பூத வெம்
சேனை ஆயின அருள் செய்து சிற்பரை யொடும்
ஆனை மா முகனொடும் அமலன் மீண்டு அருளினான்.
155
   
9341.
புங்கவர்க்கு இறைவன் ஆம் புதல்வனை நோக்கிடா
நம் கடைத் தலை யினில் நாயகம் புரிக எனா
அங்கு அருத்தியொடு இருத்தினன் அணிக் கோயில் உள்
சங்கரக் கடவுள் சுந்தரியொடு மருவினான்.
156
   
9342.
தந்தி மா முகம் உடைத் தனயன் அங்கு அணுகியே
முந்து பார் இடம் எலாம் மெய்த்து முன் சூழ்தர
நந்தி வந்தனை செய நான் முகன் முதலினோர்
வந்து வந்து அடி தொழ மகிழ்வு ஒடே வைகினான்.
157
   
9343.
அன்னதன் பின்னர் ஏ ஆயிரம் பெயர் உடைப்
பொன் உலாம் நேமியான் புனிதனைக் காணிய
மின்னு தண் சுடர் விடும் வெள்ளி மால் வரை மிசைத்
துன்னினான் ஆலயச் சூழல் முன் அணுகினான்.
158
   
9344.
அந்தி ஆர் சடை முடி அண்ணல் தன் அருளினால்
நந்தி தேவு உய்த்திட நங்கை ஓர் பங்கனாம்
எந்தை பால் எய்தியே இணை மலர்த்தாள் தொழாப்
புந்தி ஆர்வத் தொடும் போற்றி செய்து அருளவே.
159
   
9345.
நிருத்தன் அவ் விடைதனில் நேமியான் தனை
இருத்தி என்று அருள் புரிந்து இடத்தின் மேவிய
ஒருத்தியை நோக்கி ஒன்று உரைப்பம் கேள் எனா
அருத்தி செய்து ஆடல் ஒன்று அருளில் கூறுவான்.
160
   
9346.
சூதனை எம்மொடே பொருதி தோற்றனை
ஆதியேல் நீ புனை அணிகள் யாவையும்
ஈதி ஆல் வென்றனை என்னின் எம் ஒரு
பாதி ஆம் சசிமுதல் பலவும் கோடி ஆல்.
161
   
9347.
என்னலும் உமை அவள் இசைவு கோடலும்
அன்னது ஓர் எல்லையின் அரியை நோக்கியே
தன் நிகர் இல்லவன் இதற்குச் சான்று என
மன்னினை இருத்தி யான் மாய நீ என்றான்.
162
   
9348.
பற்றி இகல் இன்றியே பழவினைப் பயன்
முற்று உணர்ந்து உயிர்களை முறையில் வைப்பவன்
மற்று இது புகறலும் வனசக் கண்ணினான்
நல் திறம் இஃது என நவின்று வைகினான்.
163
   
9349.
இந்தவாறு ஆயிடை நிகழும் எல்லையில்
சுந்தரன் முதலிய உழையர் சுற்றினோர்
அந்தம் இல் பெரும் குணத்து ஆதி ஏவலில்
தந்தனர் காகொடு பலகை தன்னையே.
164
   
9350.
அது பொழுது அண்ணலும் அரியை நோக்கி இம்
முதிர் தரு கருவியை முறையின் வைக்க எனக்கு
அதும் என வைத்தலும் கவுரி நீ நமக்கு
எதிர் உறுக என்று முன் நிறுத்தினான் அரோ.
165
   
9351.
கவற்றினை முன்னரே உய்ப்பக் கண் நுதல்
அவற்றினைப் பின் உற அவளும் உய்த்தனள்
தவற்று இயல்பு அல்லது ஓர் வல்ல சாரி ஆல்
எவற்றினும் மேலையோர் இனிதின் நாடினார்.
166
   
9352.
பஞ்சு என உரை செய்வர் பாலை என்பர் ஈர்
அஞ்சு என மொழிவர் அஞ்சு என்பர் அன்றியும்
துஞ்சலின் நடம் என்பர் துருத்தி ஈது என்பர்
விஞ்சிய மகிழ்வொடு வெடி என்று ஓதுவார்.
167
   
9353.
அடி இது பொட்டை ஈது என்பர் அஃது என
முடிவு இல குழூக் குறி முறையின் முந்து உறக்
கடிதினில் கழறினர் கவறு சிந்தினார்
நொடு தரு கருவிகள் எதிரின் நூக்கினார்.
168
   
9354.
ஏற்றான் அவன் எய்திய இன் அருள் ஆவது ஏயோ
தேற்றாம் அஃது யார்க்கு அளப்பு அரும் செய்கை யாலே
மேற்றான் எதிராவுடன் ஆடிய மெல் இயற்குத்
தோற்றான் நெடு மால் அயன் நாடவும் தோற்று இலாதான்.
169
   
9355.
ஒன்று ஆகிய பரம் சுடரோன் உமை தன்னை நோக்கி
நன்று ஆயது நின் வலி என்று நகைத்து நம்மை
வென்றாய் அலை தோற்றனை முன்னர் விளம்பும்
                                    ஆற்றால்
நின்றார் ஒடு பூணும் எமக்கு இனி நேர்தி என்றான்.
170
   
9356.
மூன்று ஆம் உலகங்களும் ஆர் உயிர் முற்றும் முன்னம்
ஈன்றாள் அது கேட்டலும் தான் இகல் ஆடல் அஞ்சி
வான் தாவிய பேர் அடி மாயனை வல்லை நோக்கிச்
சான்றாம் என வைகினை நீ இது சாற்றுக என்றாள்.
171
   
9357.
சொல்லும் அளவில் சுடர் நேமியன் சூது உடைப் போர்
வெல்லும் தகையோன் பரன் என்று விளம்பலோடும்
நல் உண்மை சொற்றாய் திறன் நன்று இது நன்று இது
                                    என்னாச்
செல் உண்ட ஐம்பால் உமை ஆற்றச் சினம் புரிந்தாள்.
172
   
9358.
பாராய் அலை கண்ணனும் ஆயினை பாலின் உற்றாய்
தேராதது ஒன்று இலை யாவரும் தேர ஒண்ணாப்
பேர் ஆதியோன் நவை கூறினும் நீ இது பேசல் ஆமோ
காரா மெய் என்பர் மனமும் கரி ஆய் கொல் மன்னோ.
173
   
9359.
ஏம் பால் இது சொற்றனை ஆதலின் என்று மாயை
ஓம்பா வருவாய் உறுகை தவத்து ஊற்றம் மிக்காய்
பாம் பாதி என்னப் பகர்ந்தாள் பகர்கின்ற எல்லை
ஆம் பால் உருவம் அஃது அங்கண் அடைந்தது அன்றே.
174
   
9360.
அவ்வாறு அவன் பால் அணைகின்றது ஒர் போழ்தில்                                     ஆழிக்
கை வானவனும் அது கண்டு கவற்சி எய்திச்
செவ் வான் உறழும் முடியோன் அடி சென்று தாழா
எவ்வாறு எனக்கு இவ் உருவம் நீங்கும் இசைத்தி
                                    என்றான்.
175
   
9361.
கால் ஆய் வெளி ஆய்ப் புனல் ஆய்க் கனல் ஓடு
                                    பார் ஆய்
மேல் ஆகி உள்ள பொருள் ஆய் எவற்றிற்கும் வித்து                                     ஆய்
நால் ஆய வேதப் பொருள் ஆகி நண் உற்ற நாதன்
மால் ஆய் அவனுக்கு இஃது ஒன்று வகுத்து உரைப்பான்.
176
   
9362.
என்பால் வரும் அன்பின் இசைத்தனை ஈதுபெற்றாய்
நின்பால் வரும் இன்னலை நீக்குவான் நீங்குகின்றாய்
தென்பால் உலகும் தனில் அன்னது ஒர் தேயம் ஈதில்
முன் பால் வனம் ஒன்று உள மொய்ம் பின் மிக்காய்.
177
   
9363.
ஆங்கே இனி நீ கடிது ஏகினை அன்ன கானில்
பாங்கே ஒரு தொல் மரம் நின்றது பார்த்தது உண்டே
ஊங்கே பார் அரையின் மேய பொந்து ஒன்றின் ஊடு
தீங்கே உறப் போய்ப் பெரு மா தவம் செய்து சேர்தி.
178
   
9364.
அஞ்சேல் அவண் நீ உறைகின்றது ஓர் காலை யானே
எம் சேய் அவன் ஆம் கய மா முகன் எய்துவான் எனச்
செம் சேவகனுக்கு எதிர் கொண்டனை சென்று காண்டி
மஞ் சேனையாய் உனக்கு இவ் உரு மாறும் அன்றே.
179
   
9365.
என்னும் அளவில் தொழுது இறைஞ்சி இனிது ஏத்தி
அன்னது ஒர் வனத்து இடை அமர்ந்த தொல் மரத்தில்
துன்னுவன் எனக் கடிது சொல்லுதலும் யார்க்கும்
முன்னவனும் ஏக என முராரியை விடுத்தான்.
180
   
9366.
விட்டிடுதலும் கயிலை நீங்கினன் விரைந்தே
கட்டு அழகின் மேதகைய காமனது தாதை
சிட்டர்கள் பயின்று உறை தெனாது புலம் நண்ணி
மட்டு ஒழுகு தொல் மர வனத்து இடை உற்றான்.
181
   
9367.
நல் மதி உடைப் புலவர் நால்வர்களும் உய்யச்
சில்மயம் உணர்த்தி அருள் தேவன் அமர் தாருத்
தன்மை அது பெற்று நனி தண்நிழல் பரப்பும்
தொல் மர இயற்கை அதனில் சிறிது சொல்வாம்.
182
   
9368.
பசும் தழை மிடைந்த உலவைத் திரள் பரப்பி
விசும்பு அளவு நீடி உயர் வீழ் நிரை தூங்கத்
தசும்பு அனைய தீம் கனிகள் தாங்கியது தாளால்
வசுந்தரை அளந்த நெடு மாயவனை மானும்.
183
   
9369.
அண்டம் நடுவு ஆய உலகு ஏழினையும் அந்நாள்
உண்டு அருளி ஒல்லைதனில் ஓர் சிறுவன் ஆகிப்
பண்டு கரியோன் துயில்கொள் பாசடைகள் தன்பால்
கொண்ட வடம் அன்ன ஒரு கொள்கை அது
                                  உடைத்தால்.
184
   
9370.
மழைத்த பசு மேனியது மாதிர வரைப்பில்
விழுத் தகைய வீழின் இரை வீசு வட தாருத்
தழைக் குல மருப்பு மிசை தாங்கி இடை தூங்கும்
புழைக்கை கொடுமால் களிறு நாடு கரி போலும்.
185
   
9371.
பாசடை தொடுத்த படலைப் பழு மரத்தின்
வீசி நிமிர்கின்ற பல வீழின் விரிகற்றை
பூசல் இடு கூளியொடு பூத நிரை பற்றி
ஊசல் பல ஆடி என ஊக்கியன அன்றே.
186
   
9372.
ஆல் வரையின் வீழ் நிரைகள் ஆசுகம் உடற்றப்
பால் வரையின் எற்றி வருமாறு இரவி பாகன்
கால் வரையின் ஏக எழு கந்துகம் அது என்னும்
மால் வரையின் வீசு பல மத்திகை அது ஒத்த.
187
   
9373.
ஆசறு தெனாது திசை ஆளும் இறை எண்ணில்
பாசமொடு நின்றது ஒரு பான்மை அஃது அன்றேல்
வாசவனும் ஆகம் மிசை மாலிகையும் ஆமால்
வீசு பழு மா மர விலங்கலும் அவ் வீழும்.
188
   
9374.
மா நிலம் எலாம் தனை வழுத்த வரு மன்னற்கு
ஊனம் உறு காலை தனில் ஒண் குருதி வாரி
வான் முகில் கான்றல் அனைய மாண்ட தொல் மரத்தின்
மேனி தரு செய்ய பல வீழின் விரி மாலை.
189
   
9375.
இம்பர் உறை ஆலமிசை எம் உருவும் கொள்ளா
வம் புலவு தண் துவள மாயன் வரும் என்னா
வெம் பணிகள் தம்பதியின் மேவுவன போல் ஆம்
தம்பம் என வேதரை புகுந்த தனி வீழ்கள்.
190
   
9376.
கடித்தன எயிற்றின் அழல் கால வரவின் மேல்
நடிக்கும் ஒரு கட்செவி நமைக் குறுகும் என்னாத்
துடித்தன எனத் தலை துளக்கின உரோமம்
பொடித்தன நிகர்த்துள புனிற்றின் உறு புன்காய்.
191
   
9377.
கிளர்ப்பு உறு கவட்டு இலை கிடைத்த கிளையாவும்
அளப்பு இல் புகை சுற்றிட அனல் கெழுவு கற்றை
துளக்கு உறு தரக் குழுவு தோன்றியது போன்ற
விளக்கு அழல் நிகர்த்துள விரிந்த முகை எல்லாம்.
192
   
9378.
செருப் புகு சினத்து எதிர் செறுத்த மத வெற்பின்
மருப்பினை ஒசிப்பவன் வரத்து இனியல் காணா
விருப்பம் மலி உற்றதன் விழித் தொகைகள் எங்கும்
பரப்பிய நிகர்த்து உள பயம் கெழுவு பைம் காய்.
193
   
9379.
வெள்ளி படுகின்ற மதி விண் படர் விமானம்
கள்ளி படு பால் கெழு கவட்டின் இடை தேய்ப்பத்
துள்ளி படுகின்ற அளவில் ஓர் திவலை தொத்தப்
புள்ளி படு மாறு முயல் என்பர் புவி மேலோர்.
194
   
9380.
காவதம் ஒர் ஏழ் உள பராரை கணிப்பு இன்றால்
தாவறும் உயர்ச்சி அதனுக்கு மதி சான்றே
பூ உலகம் எங்கும் நிழல் போக்கி நெடிது ஓம்பும்
கோவது என நின்றது உயிர் கோளி எனும் குன்றம்.
195
   
9381.
அவ்வகை தாருவினை நோக்கினன் அணைந்தான்
பவ்வ நிற அண்ணல் துயில் பாசடைகள் தம்மோடு
எவ்வகை சுமத்திர் எனவே வினவ என்றே
வெவ் அரவினுக்கு இறைவன் மேவியது மான.
196
   
9382.
அந்தம் இல் பெரும் கடல் வளாகம் அனைத்தும்
                                    உந்தன்
உந்தியில் அடைந்தது என ஓங்கல் எழும் ஒள்வாள்
வந்து உறையினில் புகுவது என்ன வட தாருப்
பொந்தின் இடையே அணுகினான் உலகு பூத்தோன்.
197
   
9383.
சத்தி உரையால் அரி தனிப் பணியது ஆன
இத்திறம் இசைத்தனம் இனிச் சுரரை வாட்டும்
அத்திமுக வெய்யவனை ஆதி அருள் செய்யும்
வித்தக முதல் புதல்வன் வென்றமை உரைப்பாம்.
198
   
9384.
முந்து வேழ முகத்தவன் ஏவலால்
நொந்து சிந்தை நுணங்கிய தேவரும்
இந்திரா அதிபர் யாவரும் ஐங்கரன்
வந்தது ஓர்ந்து மகிழ்ச்சியின் மேயினார்.
199
   
9385.
ஏதம் இல் மகிழ்வு எய்திய இந்திரன்
ஆதியோர் கயிலாயத்து அணுகியே
போதகத்துப் புகர் முகப் புங்கவன்
பாதம் உற்றுப் பணிந்து பரவினார்.
200
   
9386.
பரவல் செய்திடு பான்மையை நோக்கியே
கருணை செய்து கயமுகத்து எம் பிரான்
உரையும் நுங்கட்கு உறு குறை என்றலும்
வரன் முறைப் பட வாசவன் கூறுவான்.
201
   
9387.
தொல்லை நாள் மதி சூடிய சோதிபால்
எல்லை நீங்கும் வரம் தனை எய்தினான்
கல் என் வெம் சொல் கயா சுரன் என்பவன்
அல்லல் செய்தனன் ஆற்றவும் எங்களை.
202
   
9388.
பின்னும் நங்களைப் பீடு அற வைகலும்
தன்னை வந்தனை செய்யவும் சாற்றினான்
அன்ன செய்தனம் அன்றியும் எங்கள் பால்
மன்னவே புதிது ஒன்று வகுத்தனன்.
203
   
9389.
கிட்டித் தன்முன் கிடைத்துழி நெற்றியில்
குட்டிக் கொண்டு குழை இணையில் கரம்
தொட்டுத் தாழ்ந்து எழச் சொற்றனன் ஆங்கு அதும்
பட்டுப் பட்டுப் பழி இடை முழ்கினேம்.
204
   
9390.
கறுத்து மற்று அவன் கட்டுரைக்கின்ற சொல்
மறுத்தல் அஞ்சி வரும் பழி தன்னையும்
பொறுத்து நாணமும் போக இன்று அந்தமும்
சிறப்பு இலா அச் சிறு தொழில் செய்தனம்.
205
   
9391.
ஆங்கு அவன் தன் ஆவியொடு எம் குறை
நீங்கு வித்திட நீ வருவாய் எனா
ஓங்கல் நல்கும் உமை அவள் தன் ஒரு
பாங்கர் வைகும் பரா பரன் கூறினான்.
206
   
9392.
ஆதலால் நின் அடைந்தனம் எம்முடை
ஏதம் மாற்றுதி என்று வழிபடீஇ
மோத காதிகள் முன் உறவார்த்திடப்
பூத நாதன் அருளில் புகலுவான்.
207
   
9393.
அஞ்சல் அஞ்சல் அவுணர்க்கு அரசன் ஆம்
விஞ்சு வேழ முகம் உடை வீரனைத்
துஞ்சு வித்து உம் துயர் தவிர்ப்போம் எனாக்
குஞ்சரத் திரு மா முகன் கூறவே.
208
   
9394.
இறைவனோடும் இமையவர் எம்முடைச்
சிறுமை நீங்கின செல்லலும் நீங்கின
மறுமை இன்பமும் வந்தன ஆல் இனிப்
பெறுவது ஒன்று உளதோ எனப் பேசினார்.
209
   
9395.
துன்பினை உழந்திடு சுரர்கள் இவ்வகை
இன்புறு காலையில் ஈசன் தந்திடும்
அன்பு உடை முன்னவன் ஆனை மா முக
முன்பனை அடுவதும் உன்னினான் அரோ.
210
   
9396.
பொருக்கு எனத் தவிசினின்று எழுந்து பூதர்கள்
நெருக்குறு வாய்தலின் எய்தி நீள்கதிர்
அருக்கனின் இலகிய அசலன் என்பவன்
தருக்கிய புயத்தின் மேல் சரண் வைத்து ஏறினான்.
211
   
9397.
ஏறி அங்கு அசலன் மேல் இருந்து செல் உழிக்
கா தொடர் முகில் இனம் கவை இய காட்சிபோல்
மாறு இல் வெம் பூதர்கள் வந்து சுற்றியே
கூறினர் அவன் புகழ் குலாய கொள்கையார்.
212
   
9398.
சாமரை வீசினர் தணப்பு இல் பல் மணிக்
காமரு தண் நிழல் கவிகை ஏந்தினர்
பூ மரு மது மலர் பொழிதல் மேயினர்
ஏமரு பூதரில் எண்ணிலோர் களே.
213
   
9399.
துடியொடு சல்லரி தோம் இல் தண்ணுமை
கடிபடு கரடிகை கணையம் சல்லிகை
இடி உறழ் பேரிகை இரலை கா களம்
குட முழவு இயம்பினர் கோடி சாரதர்.
214
   
9400.
சிந்தையில் உன்னினர் தீமை தீர்ப்பவன்
வந்திடு காலையின் மகத்தின் வேந்தனும்
அந்தர அமரரும் அடைந்து போற்றியே
புந்தி கொள் உவகையால் போதல் மேயினார்.
215
   
9401.
தாருவின் நறுமலர் தம் தம் கைகொடு
பேர் அருள் நுதல் விழிப் பிள்ளை மீமிசை
சேர் உற வீசியே புடையில் சென்றனர்
காரினை அடைதரு கடவுள் வில் என.
216
   
9402.
விரைந்து எழு சாரத வெள்ளம் எண் இல
நிரந்தன சூழ்தர நிமலன் மா மகன்
பெருந்தரை ஏகியே பிறங்கு தோல் முகன்
புரந்திடு மதங்க மா புரமுன் போயினான்.
217
   
9403.
ஆயது கய முகத்து அவுணர் கோடியே
வேயினர் புகறலும் வெகுட்சி கெண்டு எழீஇ
ஏயதன் படைஎலாம் எடுத்து மற்று அவன்
சேய் உயர் தனது பொன் தேரில் ஏறினான்.
218
   
9404.
பல் இயம் இயம்பின பரிகள் சுற்றின
சில்லிகொள் ஆழிஅம் தேர்கள் சூழ்ந்தன
எல்லை இல் இபநிரை யாவும் மொய்த்தன
வல் இயல் அவுணர்கள் வரம்பு இல் ஈண்டினார்.
219
   
9405.
ஆயிர வெள்ளம் ஆம் அனிகம் சுற்றிடக்
காய் கனல் விழ உடைக் கய முகா சுரன்
ஏய் எனும் அளவையில் ஏகிக் கண் நுதல்
நாயகன் மதலை தன் படைமுன் நண்ணினான்.
220
   
9406.
நண்ணிய காலையில் நவை இல் பூதரும்
அண்ணல் அம் கழல் அடி அவுணரும் கெழீஇப்
பண்ணினர் பெரும் சமர் படையின் வன்மையால்
விண்ணவர் யாவரும் வியந்து நோக்கவே.
221
   
9407.
புதிதெழு வெயில் உடன் பொங்கு பேர் இருள்
எதிர் பொரு மாறு போல் இனம் கொள் தானவர்
அதிர் கழல் பூதரோடு அமர் செய்து ஆற்றலர்
கதும் என அழிந்தனர் கலங்கி ஓடினார்.
222
   
9408.
ஓடினர் அளப்பு இலர் உயிரைச் சிந்தியே
வீடினர் அளப்பு இலர் மெய் குறைந்து பின்
ஆடினர் அளப்பு இலர் அகலுதற்கு இடம்
தேடினர் அளப்பு இலர் தியக்கம் எய்தினார்.
223
   
9409.
ஒழிந்தன கரிபரி உலப்பு இல் தேர் நிரை
அழிந்தன இத்திறம் அவுணர் தம்படை
குழிந்திடு கண் உடைக் குறள் வெம் பூதர்கள்
மொழிந்திட அரியது ஓர் விசயம் உற்றினார்.
224
   
9410.
உயர்தரு தானவர் உடைந்த தன்மையும்
புய வலி கொண்டு உள பூதர் யாவரும்
சயம் உடன் மேல் வரு தகவு நோக்கியே
கய முக அவுணர் கோன் கனலில் சீறினான்.
225
   
9411.
உளத்தினில் வெகுண்டு சென்று ஒரு தன் கைச் சிலை
வளைத்தனன் அத்துணை வளைத்துப் பேர் அமர்
விளைத்தனர் பூதர்கள் அனையர் மெய் எலாம்
துளைத்தனன் கணை மழை சொரிந்து துண் என.
226
   
9412.
அரம் தெறு பகழிகள் ஆகம் போழ்தலும்
வருந்தினர் திறலொடு வன்மை நீங்கினர்
இரிந்தனர் பூதர்கள் யாரும் ஓடினார்
புரந்தரன் இமையவர் பொருமல் எய்தவே.
227
   
9413.
கண நிரை சாய்தலும் கண்டு மற்று அது
மணிகிளர் கிம்புரி மருப்பு மாமுகன்
இணையறும் அசலன் மேல் ஏகி வல்லையில்
அணுகினன் இப முகத்து அவுணர் கோனையே.
228
   
9414.
கார் உடை இபமுகக் கடவுள் மேலையோன்
ஏர் உற வருதலும் நின்ற தூதரைச்
சீர் உறு கயமுகத் தீயன் நோக்கியே
யார் இவண் பொருவதற்கு அணுகு உற்றான் என.
229
   
9415.
பரவிய ஒற்றர்கள் பணை மருப்பு உடைக்
காரி முகம் உடையான் முக் கண்ணன் ஐம் கரன்
உரு கெழு பூதன் மேல் உறுகின்றான் சிவன்
பெருமகன் ஆகும் இப் பிள்ளை தான் என்றார்.
230
   
9416.
அன்னது கேட்டலும் அவுணன் சீறியே
பன் அரும் கலை தெரி பாகை நோக்கி நம்
பொன் இரத்தினைப் புழைக் கை மாமுகன்
முன் உறக் கடவுதி மொய்ம்ப என்னவே.
231
   
9417.
கேட்டிடு வலவையோன் கிஞ்சுகக் குரத்து
ஆட்டி இறல் பரியினம் தன்னின் மத்திகை
காட்டினன் தவறு இலாக் கனகத் தேரினை
ஓட்டினன் ஐம் கரத்து ஒருவன் முன் உற.
232
   
9418.
ஆயிடைக் கரிமுகத்து அவுணன் ஐம் கரத்து
தூயனை அழல் விழி சுழல நோக்கியே
காய் எரி எயிறு உகக் கறை கொள் பற்களால்
சே இதழ் அதுக்கியே இனைய செப்புவான்.
233
   
9419.
நுந்தை என் மா தவம் நோக்கி முன்னரே
தந்திடு பெரு வரம் தன்னைத் தேர்கிலை
உயந்தனை போதி நின் உயிர் கொண்டு என் எதிர்
வந்தனை இறை அது மதி இலாய் கொலோ.
234
   
9420.
அன்றி நீ அமர் செய அமைதி என்னினும்
வன் திறல் உனக்கு இலை மைந்த என் எதிர்
பொன்றினர் அல்லது போர் செய்து என்னை முன்
வென்றவர் இவர் என விளம்ப வல்லையோ.
235
   
9421.
தேன் பெறு தரு நிழல் திருவின் வைகிய
வான் பெறு தேவரால் மக்களால் அவர்
ஊன் பெறு படைகளால் ஒழிந்திடேன் இது
நான் பெறு வரத்து இயல் நவிலக் கேட்டி ஏல்.
236
   
9422.
பின்னரும் பல உள பெற்ற தொல் வரம்
என்னை வெல்பவர் எவர் இந்திர ஆதிபர்
தன் இடர் தணிப்பவர் போலச் சார்ந்தனை
உன்னை வென்று அன்னவர் உயிரும் உண்பன் ஆல்.
237
   
9423.
பொருது எனை வென்றனை போக வல்லையேல்
வருதி என்று உரைத்தலும் வான் உலாவிய
புரம் எரி படுத்தவன் புதல்வன் அவ் இடை
அருள் உடன் ஒரு மொழி அறைவது ஆயினான்.
238
   
9424.
நிரந்த பல் படையும் நாளும் நிலைபெற நினக்குத்
                             தொல் நாள்
வரம் தருகின்ற எந்தை வல்லை நின் உயிரை வவ்விப்
புரந்தரன் முதலினோர்க்குப் பொன்னின் நாடு உதவி                              அன்னார்
அரந்தையும் அகற்றிச் செல்க என்று அருளினன்
                             எனக்கும் அன்றே.
239
   
9425.
உன் உயிர் காத்தி என்னின் உறுதி ஒன்று உரைப்பன்                                    கேண்மோ
பொன் நகர் அதனை இந்தப் புரந்தரன் புரக்க நல்கி
இந் நிலத்து அரசு செய்தே இருத்தி அஃது இசையாது                                    என்னின்
நின் உயிர் முடிப்பான் நேர்ந்து நின்றனன் இனைவன்                                    என்றான்.
240
   
9426.
என்னலும் அவுணன் பொங்கி எரிஉக விழித்துச்                                  சென்றோர்
பொன் நெடும் சிலையை வாங்கிப் பொருக்கு என புரி                                  நாண் ஏற்றி
மின் உடை வடிம்பின் வாளி வீசலும் விமலன் நல்கும்
முன்னவன் எழு ஒன்று ஏந்தி முரணொடு சிந்தி
                                 நின்றான்.
241
   
9427.
பொன் தனு முரிந்து வீழப் புகைக் கையில் பிடித்த                                     தண்டால்
எற்றினன் அனைய காலை இப முகத்து அசுரன்                                     என்போன்
மற்று ஒரு சிலையைக் கையால் வாங்கினன் வாங்கும்                                     முன்னர்ச்
செற்றனன் அதனை மைந்தன் திசைமுகன் முதலோர்                                     ஆர்ப்ப.
242
   
9428.
திண் திறல் பெற்ற வீரச் சிலை முரிந்திட்ட பின்னர்த்
தண்டம் ஒன்று ஏந்தி ஈசன் தனயனோடு எதிர்த்தலோடும்
விண்டது சோரும் வண்ணம் வெய்து எனப் புடைத்து                                       மாயாக்
கண்டகன் உரத்தில் தாக்கக் கையறவு எய்தி நின்றான்.
243
   
9429.
நடுங்கினன் சிந்தை ஒன்று நவில்கிலன் நாணத்தாலே
ஒடுங்கினன் கய வெம் சூரன் உலந்தனன் போல
                                      நின்றான்
அடும் பரி களிறு திண்தேர் அணி கெழு தானை பாரில்
படும்படி நினைந்து முன்னோன் பாசம் ஒன்று உய்த்தான்                                       அன்றே.
244
   
9430.
விட்ட வெம் பாசம் அங்கண் வெய்யது ஓர் சேனை                                    முற்றும்
கட்டியது ஆக மைந்தன் கணிச்சியும் அதன்பின் ஏவ
அட்டதால் அதனை நோக்கி ஆடினர் அமரர் தானை
பட்டன உணர்ந்து தீயோன் பதை பதைத்து உயிர்த்து                                    நொந்தான்.
245
   
9431.
முந்து தன் கரத்தில் உள்ள முரண் கெழு படைகள்
                                      யாவும்
சிந்தினன் அவைகள் எல்லாம் சேர்ந்தன திங்கள் சூடும்
எந்தையை வலம் செய்து ஏத்தி ஏவலின் இயன்ற மாதோ
வெம் திறல் அவுணன் மேல் மேல் வெகுளித் தீக் கனல                                       நின்றான்.
246
   
9432.
நின்றவன் தன்னை நோக்கி நெடிய பல் படைகள்
                               ஏவில்
சென்று இவன் தன்னைக் கொல்லா சிவன் அருள்                                வரத்தின் சீரால்
இன்று இனிச் செய்வது என் என்று இறைவரை உன்னி                                எந்தை
தன் திருக் கோட்டில் ஒன்று தடக்கையின் முரித்துக்                                கொண்டான்.
247
   
9433.
தடக்கையில் ஏந்தும் கோட்டைத் தந்தி ஆம் அவுணன்                              மீது
விடுத்தலும் அனையன் மார்பை வெய்து எனக் கீண்டு                              போகி
உடல் படி மிசையே வீழ்த்தி ஒல்லையில் ஓடித் தெள்                              நீர்க்
கடல் படிந்து அமலன் மைந்தன் கரத்தினி வந்து
                             இருந்தது அன்றே.
248
   
9434.
புயல் இனத் தொகுதி ஒன்றிப் புவிமிசை வழுக்கிற்று                                     என்னக்
கயமுகத்து அவுணன் முந்நீர்க் கடல் உடைந்தது என்ன                                     ஆர்த்திட்டு
இயல் உடைத் தேர் மேல் வீழா எய்த்தனன் அவன் தன்                                     மார்பில்
வியன் அதித் தாரை என்ன விரிந்தன குருதி வெள்ளம்.
249
   
9435.
ஏடு அவிழ் அலங்கல் திண்தோள் இப முகத்து
                             அவுணன் மார்பின்
நீடிய குருதிச் செந் நீர் நீத்தமாய் ஒழுகும் வேலைப்
பாடு உற வரும் கான் ஒன்றில் பரத்தலின் அதுவே
                             செய்ய
காடு எனப் பெயர் பெற்று இன்னும் காண்தக இருந்தது                              அம்மா.
250
   
9436.
ஆய்ந்த நல் உணர்வின் மேலோர் அறிவினும் அணுகா                                      அண்ணல்
ஈந்த தொல் வரத்தால் மாயா இபமுகத்து அவுணன்                                      வீழ்ந்து
வீந்தனன் போன்று தொல்லை மெய் ஒரீஇ விண்ணும்                                      மண்ணும்
தீந்திட எரிகண் சிந்தச் சீற்றத்தோர் ஆகு வானான்.
251
   
9437.
தேக்கிய நதி சேர்கின்ற சென்னியன் செம்மல் தன்னைத்
தாக்கிய வருதலோடும் சாரதன் தோளின் நீங்கி
நீக்க அரும் துப்பின் தாக்கி நீ நமைச் சுமத்தி என்று
மேக்கு உயர் பிடரில் தாவி வீற்று இருந்து ஊர்தல்                                    உற்றான்.
252
   
9438.
மற்று அது கண்ட தேவர் வாசவன் முதலோர் யாரும்
இற்றனன் கய வெம் சூரன் எம் இடர் போயிற்று அன்றே
அற்றது எம் பகையும் என்னா ஆடினர் பாடா நின்றார்
சுற்றிய கலிங்கம் வீசித் துண் என விசும்பு தூர்த்தார்.
253
   
9439.
காமரு புயலின் தோற்றம் காண்டலும் களிப்பின் மூழ்கி
ஏமரு கலாப மஞ்ஞை இனம் எனக் குலவுகின்றார்
தேமரும் இதழி அண்ணல் சிறுவனைத் தெரியா வண்ணம்
பூ மலர் பொழிந்து நின்று புகழினைப் போற்றல் உற்றார்.
254
   
9440.
காப்பவன் அருளும் மேலோன் கண் அகல் ஞாலம்                                       யாவும்
தீப்பவன் ஏனைச் செய்கை செய்திடும் அவனும் நீயே
ஏப்படும் செய்கை என்ன எமது உளம் வெதும்பும்
                                      இன்னல்
நீப்பது கருதி அன்றோ நீ அருள் வடிவம் கொண்டாய்.
255
   
9441.
உன் இடைப் பிறந்த வேதம் உன் பெரு நிலைமை
                              தன்னை
இன்னது என்று உணர்ந்தது இல்லை யாம் உனை
                              அறிவது எங்கன்
அன்னையும் பயந்தோன் தானும் ஆயினை அதனால்                               மைந்தர்
பன்னிய புகழ்ச்சி யாவும் பரிவுடன் கேட்டி போல்
                              ஆம்.
256
   
9442.
என்று இவர் எகினம் ஊரும் இறையொடும் இறைஞ்சி                                    ஏத்தி
நன்றி கொள் சிந்தை யோடு நகை ஒளி முகத்தர் ஆகி
மன்றவர் குமரன் தன்பால் வந்தனர் சூழ்தலோடும்
ஒன்றிய கருணை நோக்கால் உலப்பு இலா அருள்                                    புரிந்தான்.
257
   
9443.
உய்ந்தனம் இனி நாம் என்னா ஓதிமம் உயர்த்தோன்                                  வெள்ளைத்
தந்தியன் யாரும் போற்றிச் சார்தலும் சமரின் முன்னம்
வெம் தொழில் அவுணன் காயம் வீந்திடு பூதர் தம்மை
எந்தை அங்கு இனிது நோக்கி எழுதிர் என்று அருளிச்                                  செய்தான்.
258
   
9444.
அவ் வகை அருளலோடும் அர என எழுந்து போற்றி
மை வரை மிடற்றுப் புத்தேள் மைந்தனை வணங்கி ஏத்தி
எவ்வம் இல் பூதர் யாரும் ஈண்டினர் இனைய எல்லாம்
செவ்விதில் உணர்ந்து கொண்டான் தேசு இலா நிருதர்க்கு                                           ஈசன்.
259
   
9445.
மந்திரியோடும் சூழ்ந்து வருந்தினன் புலம்பி மாழ்கி
உய்ந்தனன் போவல் யான் என்று உன்னி ஓர் பறவை                                     ஆகி
அந்தரத்து இறந்த புள்ளோடு அணுகி அப் பதியை
                                    நீங்கிச்
சிந்தையில் செல்லல் கூரச் செம்பொன் மால் வரையில்                                     சென்றான்.
260
   
9446.
தாழ் உறு சாரல் ஊடு தபனனும் உணராத் தாருச்
சூழல் ஒன்று உண்டால் அங்கண் சுருங்கை யோடு
                                  இருந்த சேமப்
பூழையுள் புலம்பி உற்றான் பொன் நகர் இறைக்கும்
                                  அம் கண்
ஊழிவெம் காலில் சூழும் உலப்பு இல் பூதர்க்கும் அஞ்சி.
261
   
9447.
வானவர் பகைஞன் அந்த மதங்க மா புரியை நீங்கிப்
போனது ஓர் காலை மற்றைப் புகரும் ஓர் புள்ளது
                                     ஆகித்
தான் உறை உலகு நண்ணித் தவ மறைந்து அல்லது                                      ஆற்றி
ஊன் உடல் ஓம்புவார் போல் ஒருப் படா யோகில்                                      உற்றான்.
262
   
9448.
பூதரும் அன்ன வேலைப் புரிசை சூழ் நகரம் போகி
நீதி இல் அவுணர் ஆகி நிறம் கிளர் படை                               கொண்டோரைக்
காதி வெம் சினப் போர் முற்றிக் களத்து இடை                               வருதலோடும்
ஆதி தந்து அருளும் மைந்தன் அவ்விடை அகன்று                               மீண்டான்.
263
   
9449.
மீண்டும் செம் காட்டில் ஓர் சார் மேவி மெய்ஞ்
                               ஞானத்து உம்பர்
தாண்டவம் புரியும் தாதை தன் உருத் தாபித்து ஏத்திப்
பூண்ட பேர் அன்பில் பூசை புரிந்தனன் புவி
                               உளோர்க்குக்
காண்தகும் அனைய தானம் கணபதி ஈச்சரம் என்பார்.
264
   
9450.
புரம் எரி படுத்தோன் தன்னைப் பூசனை புரிந்த பின்னர்
எரி விழி சிதறும் ஆகு எருத்த மேல் இனிதின் ஏறிச்
சுரபதி அயன் விண்ணோர்கள் தொழுது உடன் சூழ்ந்து                                        போற்ற
அரவு என மாலோன் வைகும் ஆலமா வனத்தில்
                                       புக்கான்.
265