முகப்பு |
அனந்தன் சாப நீங்குப் படலம்
|
|
|
9451.
|
புக்கது ஒரு பொழுதில் அம் கண் முந்து ஓர் ஆலம்
பொந்தின் இடை இருந்த அமலன் பொன் தாள் உன்னி
மிக்கதவம் புரி மலை ஐங்கரத்து முன்னோன் மேவியது
மனம் கொண்டு விரைவின் ஆங்கே
அக்கணமே எதிர் சென்று வழுத்திக் காண அம்மை
அளித்து அருள் சாபம் அகறல்
ஓடும்
சக்கரமே முதலிய ஐம் படைகள் ஏந்தித் தனாது
தொல்லைப் பேர் உருவம் தன்னைப்
பெற்றான். |
1 |
|
|
|
|
|
|
|
9452.
|
மாலோன்
தொல் உருவு தன் பால் மேவக் கண்டு மகிழ் சிறந்து
சிவன் அருளை மனம் கொண்டு ஏத்தி
மோலோன் தன் முன்னர் எய்தி வணக்கம் செய்து மீண்டும்
அவன் தன்னைத் துதித்து விமல நீ என்
பால் ஓங்கு பூசனை கொண்டு அருளல் வேண்டும் பணித்து
அருள்க ஆதி பரா பரத்தின் பாலாய்
மூல ஓங்காரப் பொருளாய் இருந்தாள் முன்னம்
மொழிந்து அருள் சாபம் தொலைத்த முதல்வ என்றான். |
2 |
|
|
|
|
|
|
|
9453.
|
ஐம் கரன் தான் மால் உரைத்த மாற்றம் கேளா அன்னது செய்க
என அருளி அங்கண் மேவக்
கொங்கு உலவு மஞ்சன நீர் சாந்தம் மாலை கொழும் புகையே
முதலியன கொண்டு போந்து
சங்கரனார் மதலைதனை அருச்சித்து அன்பால் தா அறு பண்ணியம்
பலவும் சால்பில் தந்து
பொங்கிய பால் அவியின் ஒடு முன்னம் ஆர்த்திப் போற்றியே
இஃது ஒன்று புகலல் உற்றான். |
3 |
|
|
|
|
|
|
|
9454.
|
வில் நாமம் புகல்கின்ற திங்கள் தன்னில் மிக்க மதி
தனில் ஆறு ஆம் பக்கம் ஆகும்
இந் நாளில் யான் உன்னை அருச்சித்து இட்ட இயற்கை போல்
யாரும் இனி ஈறு இலா உன்
பொன் ஆரும் மலர் அடியே புகல் என்று உன்னிப்
பூசை புரிந்திடவும் அவர் புன்கண் எல்லாம்
அந்நாளே அகற்றி அகற்றி நீ உலவாச் செல்வம் அளித்திடவும்
வேண்டும் இஃது அருள்க என்றான். |
4 |
|
|
|
|
|
|
|
9455.
|
மாயன் உரை கேட்டலும் நீ மொழிந்து அற்றாக
மகிழ்ந்தன நின் பூசை என மதித்துக் கூறி
ஆயவனும் அயன் முதலாக உள்ளோர் யாரும்
அன்பின் ஒடு வாழ்த்து இசைப்ப ஆகும் என்னும்
தூயது ஒர் ஊர்தியில் எய்திக் கணங்கள் ஆனோர்
சூழ்ந்து வரக் கயிலை என்னும் துகள் தீர் வெற்பின்
நேயம் உடன் போந்து அரனை வணக்கம் செய்து நீடு அருள் பெற்றே தொல்லை
நிலையது உற்றான். |
5 |
|
|
|
|
|
|
|
9456.
| அற்றை நாளில் அரி அயன் ஆதியோர் நெற்றி அம் கண் நிமலன் பதங்களின் முற்றும் அன்பொடு மும் முறை தாழ்ந்து அருள் பெற்று நீங்கினர் பேதுறல் நீங்கினார். |
6 |
|
|
|
|
|
|
|
9457.
| கரிமுகம் பெறு கண் நுதல் பிள்ளை தாள் பரவி முன்னம் பணிந்தனர் நிற்புழி அருள் புரிந்திட அன்னது ஒர் வேலையில் பரிவினால் ஒர் பரிசினைக் கூறுவார். |
7 |
|
|
|
|
|
|
|
9458.
| எந்தை கேண் மதி எம்மை அலைத்திடும் தந்தி மா முகத்து தானவன் செற்றி ஆல் உய்ந்து நாங்கள் உனது அடியோம் இவண் வந்து நல்கும் கைம்மாறு மற்று இல்லையே. |
8 |
|
|
|
|
|
|
|
9459.
| நென்னல் காறும் நிகர் இல் கயாசுரன் முன்னர் ஆற்று முறைப் பணி எந்தை முன் இன்ன நாள் தொட்டு இயற்றுதும் யாம் என அன்ன செய்திர் என்றான் அருள் நீர்மையான். |
9 |
|
|
|
|
|
|
|
9460.
| இத் திறம் படும் எல்லையின் நின்றிடும் அத் தலைச் சுரர் யாவரும் அன்புறீஇக் கைத்தலத்தைக் கபித்தம் அது ஆக்கியே தம் தம் மத்தகம் தாக்கினர் மும் முறை. |
10 |
|
|
|
|
|
|
|
9461.
| இணை கொள் கையை எதிர் எதிர் மாற்றியே துணை கொள்வார் குழை தொட்டனர் மும் முறை கணை கொள் காலும் கவானும் செறிந்திடத் தணிவு இல் அன்பொடு தாழ்ந்து எழுந்து ஏத்தினார். |
11 |
|
|
|
|
|
|
|
9462.
| இணங்கும் அன்புடன் யாரும் இது ஆற்றியே வணங்கி நிற்ப மகிழ் சிறந்தான் வரை அணங்கின் மாமகன் அவ் இயல் நோக்கியே கணங்கள் ஆர்த்தன கார்க் கடல் ஆம் என. |
12 |
|
|
|
|
|
|
|
9463.
| நின்ற தேவர் நிமலனை நோக்கியே உன் தன் முன்னம் உலகு உளர் யாவரும் இன்று தொட்டு எமைப் போல் இப் பணி முறை நன்று செய்திட நல் அருள் செய்க என. |
13 |
|
|
|
|
|
|
|
9464.
| கடல் நிறத்துக் கய முகன் அத்திறம் நடை பெறும்படி நல்கி அமரர் கோன் நெடிய மால் அயன் நின்று உளர்க்கு எலாம் விடை புரிந்து விடுத்தனன் என்பவே. |
14 |
|
|
|
|
|
|
|
9465.
| அம்புயக் கண் அரி அயன் வாசவன் உம்பர் அவ்வரை ஒல்லையின் நீங்கு உறாத் தம் பதம் தொறும் சார்ந்தனர் வைகினார் தும்பியின் முகத் தோன்றல் அருளினால். |
15 |
|
|
|
|
|
|
|
9466.
| முந்தை வேத முதல் எழுத்து ஆகிய எந்தை தோற்றம் இயம்பினம் இங்கு இனி அந்தம் இல் குணத்து ஆண் தகைக்கு ஓர் குணம் வந்தது என் என்றி மற்று அது கேட்டி நீ. |
16 |
|
|
|
|
|
|
|
9467.
| நல் குணம் உடைய நல்லோரும் நாட ஒணாச் சிற்குணன் ஆகும் அச் சிவன் பராபரன் சொல் குண மூவகைத் தொடர்பும் இல்லது ஓர் நிர்க்குணன் அவன் செயல் நிகழ்தல் பாலதோ. |
17 |
|
|
|
|
|
|
|
9468.
| பரவிய உயிர்க்கு எலாம் பாசம் நீக்குவான் அருளினன் ஆகியே அமலன் மால் அயற்கு இரு தொழில் முறையினை ஈந்து மற்று அவைக்கு உரியன குணங்களும் உள்ள ஆக்கினான். |
18 |
|
|
|
|
|
|
|
9469.
| முடித்திடல் இயற்றும் எம் முதல்வன் அத் தொழில் தடுப்பு அரும் வெம் சினம் தன்னில் முற்றும் ஆல் அடுத்து தவப் பான்மையால் அதன் கண் தாமதம் படுத்தினன் அத் திறம் பலரும் தேர்வர் ஆல். |
19 |
|
|
|
|
|
|
|
9470.
| மா மறை அளப்பு இல வரம்பு இல் ஆகமம் தோம் அற உதவி ஓர் தொல் மரத்து இடைக் காமரு முனிவரர் கணங்கட்கு அன்னவை தாமத குணத்தன் ஏல் சாற்றல் வல்லனோ. |
20 |
|
|
|
|
|
|
|
9471.
| வாலிய நிமலம் ஆம் வடிவம் கண்ணுதல் மேலவன் எய்துமோ வேதம் விஞ்சையின் மூலம் என்று அவனையே மொழியுமோ இது சீலம் இல்லார்க்கு எவன் தேற்றும் வண்ணமே. |
21 |
|
|
|
|
|
|
|
9472.
|
இமையவர்
யாவரும் இறைஞ்சும் கண் நுதல்
விமலன் அன்று இறுதியை விளைக்கும் பண்பினால் தம குணன் என்றியத் தன்மை செய்கையால் அமைகுணம் இயற்குணம் அறியல் பாலதோ. |
22 |
|
|
|
|
|
|
|
9473.
| ஈத்தலும் அளித்தலும் இயற்று வோர்க்குள சாத்திக ராசதம் தம்தம் செய்கையின் மாத்திரை அல்லது மற்று அவர்க்கு அவை பார்த்திடின் இயற்கை யாப் பகரல் ஆகுமோ. |
23 |
|
|
|
|
|
|
|
9474.
| அக்குணம் ஆனவை அளிக்கும் செய்கையால் தொக்கு உறும் இயற்கை அத் தொல்லையோர்கள் பால் இக் குணம் அல்லது ஓர் இரண்டும் சேரும் ஆல் முக்குண நெறி செலும் முனிவர் தேவர் போல். |
24 |
|
|
|
|
|
|
|
9475.
| நேமியால் குரு எலாம் நீலம் ஆயதும் தோம் அறு கடல் இடைத் துயில் கொள் பான்மையும் மேம் உறும் அகந்தையும் பிறவும் எய்தும் ஏல் தாமத ராசதம் தானும் உற்றவே. |
25 |
|
|
|
|
|
|
|
9476.
| அறிவொரும் உற்று உழி அனையன் கண் நுதல் இறைவனை வழிபடீஇ ஏத்தி இன் அருள் நெறிவரு தன்மையும் நீடு போதமும் பெறுதலில் சாத்திக முறையும் பெற்று உளான். |
26 |
|
|
|
|
|
|
|
9477.
| மேனி பொற்கு என்றலின் விமல வான்பொருள் நான் எனும் மருட்கையின் நவை இல் ஈசனைத் தான் உணர் தெளிவினில் தவத்தில் பூசையில் ஆனது குணன் எனலாம் அயன் தனக்குமே. |
27 |
|
|
|
|
|
|
|
9478.
| ஆதலின் விருப்புடன் அல்லது எய்தினோர் ஓதிய குண விதத்து உறுவர் கண் நுதல் நாதனுக்கு அனையது நணுகு உறாமையால் பேதைமை ஒரு குணம் அவன் கண் பேசுதல். |
28 |
|
|
|
|
|
|
|
9479.
| மூன்று என உள பொருள் யாமும் முன்னமே ஈன்றவன் கண் நுதல் என்னும் நால்மறை சான்ற அது ஆகும் ஆல் தவத்தர்க்கு என்னினும் ஆன்றது ஓர் அவன் செயல் அறியல் பாலதோ. |
29 |
|
|
|
|
|
|
|
9480.
| செம் கண் மால் முதலியதேவர் ஏனையோர் அங்கு அவர் அல்லவை அகத்து உள் வைகியே எங்குமா யாவையும் இயற்று கின்றது ஓர் சங்கரன் ஒரு குணச் சார்பின் மேவுமோ. |
30 |
|
|
|
|
|
|
|
9481.
| ஈறு செய் முறையினை எண்ணித் தாமதம் கூறினர் அல்லது குறிக் கொள் மேலையோர் வேறு ஒரு செய்கையின் விளம்பினார் அலர் ஆறு அணி செம் சடை அமலனுக்கு அரோ. |
31 |
|
|
|
|
|
|
|
9482.
|
என்று இவை பலவும் தூயோன் இசைத்தலும் இனைய எல்லாம்
வன் திறல் வெறுக்கை எய்தி மயங்கல் ஆல் தக்கன் என்னும்
புன் தொழில் புரியும் தீயோன் பொறுத்திலன் புந்தி மீது
நன்று என அறிதல் தேற்றான் ஒரு சில நவிலல் உற்றான். |
32 |
|
|
|
|
|
|
|
9483.
|
முனிவ
கேள் பலவும் ஈண்டு மொழிவதில் பயன் என் வெள்ளிப்
பனிவரை உறையும் நும் கோன் பகவனே எனினும் ஆக
அனையவன் தனக்கு வேள்வி அவிதனை உதவேன் நீயும்
இனி இவை மொழியல் போதி என் செயல் முடிப்பன் என்றான்.
|
33 |
|
|
|
|
|
|
|
9484.
|
வளம் குலவு தக்கன் இது புகன்றிடலும் ததீசி முனி மனத்தில்
சீற்றம்
விளைந்தது மற்று அவ் அளவில் வெருவியது வடவை அழல்
விண்ணோர் நெஞ்சம்
தளர்ந்தது பொன் மால் வரையும் சலித்து அந்தக் குலகிரியும்
தரிப்பு இன்று ஆகி
உளைந்தன வேலைகள் ஏழும் ஒடுங்கியன நடுங்கியது
இவ்
உலகம் எல்லாம். |
34 |
|
|
|
|
|
|
|
9485.
|
அக் கணமே முனி அரன் தன் பெரும் சீற்றம் தனை நோக்கி
அந்தோ என்னால்
எக் குவடும் எக்கிரியும் எக்கடலும் எவ் உலகும்
யாவும்
யாரும்
தக்கன் ஒருவன் பொருட்டால் தளர்ந்திடுமோ என
முனிவு
தணிந்து தன் சூழ்
ஒக்கல் ஒடும் அவண் எழுந்து சிறு விதியின் முகம் நோக்கி
ஒன்று சொல்வான். |
35 |
|
|
|
|
|
|
|
9486.
|
சங்கரனை விலக்கி இன்று புரிகின்ற மகம் சிதைக தக்க நின்னோடு
இங்கு உறையும் அமரர் எல்லாம் அழியுற இன்னே
என்னா
இசைத்துப் பின்னர்
அங்கண் உறு மறை யோர்தம் முகம் நோக்கி
அந்தணரில்
அழி தூ வானீர்
உங்கள் குலத் தலைமை தனை இழந்திட்டீர் கேண்மின் என
உரைக்கல் உற்றான். |
36 |
|
|
|
|
|
|
|
9487.
|
பேச அரிய மறைகள் எலாம் பராபரன் நீ என
வணங்கிப்
பெரிதும் போற்றும்
ஈசனையும் அன்பரையும் நீற்று ஒடு கண்டிகை
இனையும்
இகழ்ந்து நீவிர்
காசினியின் மறையவராய் எந் நாளும் பிறந்து இறந்து
கதி உறாது
பாசம் அதன் இடைப்பட்டு மறை உரையா நெறி
அதனில்
படுதிர் என்றான். |
37 |
|
|
|
|
|
|
|
9488.
|
இனைய நெறியால் சாபம் பல உரைத்துத் ததீசி முனி இரண்டு
பாலும்
முனிவர் தொகை தன் சூழத் தான் உறையும்
ஆச்சிரமம்
உன்னிச் சென்றான்
அனையவன் தன் பின் ஆகத் தக்கன் என்போன்
பெரும் தகவும் ஆற்றும் நோன்பும்
புனை புகழும் செழும் திருவும் ஆற்றலும் ஆம் மனச் செருக்கும்
போயிற்று அன்றே. |
38 |
|
|
|
|
|
|