முகப்பு |
தானப் படலம்
|
|
|
9489.
|
போனது ஓர் பொழுதில் அவன் துவசம் இற்ற
மகத்தூணில்
பொருக்கு என்று எய்திக்
கான் உலாவிய கொடியும் கழுகும் மிடைந் தன
யாரும்
கலங்கத் தானே
மானம் ஆர் வேதவல்லி மங்கல நா ணும் கழன்ற
மற்று
இத் தன்மை
ஆனது ஓர் துன் நிமித்தம் பல உண்டால் முடிவோன் கண்
அவை உறாவோ. |
1 |
|
|
|
|
|
|
|
9490.
| இந்தவாறு துன் நிமித்தங்கள் பல நிகழ்ந் திடவும் சிந்தை செய்து இலன் சிறுவதும் அஞ்சிலன் தீயோன் தந்தை தன்னையும் நாரணன் தன்னையும் தகவு ஆல் முந்து பூசனை புரிந்தனன் முகமன்கள் மொழியா. |
2 |
|
|
|
|
|
|
|
9491.
| மற்றை வானவர் யாவர்க்கும் முனிவர்க்கும் மரபு ஆல் எற்று வேண்டிய அவை எலாம் நல்கியே இதன் பின் பெற்ற மங்கையர் தமக்கும் மா மருகர்க்கும் பெரிதும் அற்றம் இல்லது ஓர் மங்கலத் தொல் சிறப்பு அளித்தான். |
3 |
|
|
|
|
|
|
|
9492.
|
நாலு மா முகக் கடவுள் சேய் இத்திறம் நல்கி
மாலும் யாவரும் காத்திடத் தீத் தொழில் மகம் செய் வேலை நோக்கியே தொடங்கினன் அவ் இடை வேள்விச் சாலை தன் இடை நிகழ்ந்தன சாற்றுஅன் தமியேன். |
4 |
|
|
|
|
|
|
|
9493.
|
முன்னரே தக்கன் ஏவலும் வினை செயல் முறையால்
மன்னுதேனு ஓர் ஆடகச் சாலையின் மாடே
பொன்னின் மால் வரை நடுவு சேர் வெள்ளி அம் பொருப்பை
அன்னது ஆம் என அன்னம் ஆம் பிறங்கலை அளித்த. |
5 |
|
|
|
|
|
|
|
9494.
| ஏதம் நீங்கிய தீய பால் அடிசிலும் எண் இல் பேதம் ஆகிய முதிரையின் உண்டியும் பிற ஆம் ஓதனங்களும் வீற்று வீற்று ஆகவே உலகின் மாதிரங்களில் குல கிரி ஆம் என வகுத்த. |
6 |
|
|
|
|
|
|
|
9495.
| நெய்யினோடு அளாய் விரை கெழு நுண்டுகள் நீவிக் குய்யின் ஆவி எவ் உலகமும் நயப்பு உறக் குழுமி வெய்யது ஆகிய கருனைகள் திசை தொறும் மேவும் மையல் யானைகள் ஆம் என வழங்கிற்று மாதோ. |
7 |
|
|
|
|
|
|
|
9496.
| அண்ணல் சேர் எந்தை தோயவை நொலையலே ஆதிப் பண்ணியங் களும் தாரமும் கனிவகை பலவும் மண்ணின் மேல் உறு கிரி எலாம் குல கிரி மருங்கு நண்ணினால் எனத் தொகுத்தன யாவரும் நயப்ப. |
8 |
|
|
|
|
|
|
|
9497.
|
விருந்தினோர் கொள விழுது உடன் பால் தயிர் வெள்ளம்
திருந்து கங்கையும் யமுனையும் ஆம் எனச் செய்த அருந்தும் உண்டிகள் யாவையும் வழங்குகோ அதனில் பொருந்து கின்றது தந்தது என்றால் அது புகழோ. |
9 |
|
|
|
|
|
|
|
9498.
| தாவு இல் பாளித மான் மதம் சாந்து தண் பனி நீர் நாவி வெள்ளடை செழும் பழுக்காயொடு நறை மென் பூவும் ஏனைய பொருள்களும் நல்கின புகழ் சேர் தேவர் கோ மகன் பணி புரிகின்றது ஓர் தேனு. |
10 |
|
|
|
|
|
|
|
9499.
| ஆவது இவ் வகை ஆவது நல்கியே அம்கண் மேவுகின்றது மணியும் அச் சங்கமும் வியன் சேர் காவும் அம்புய நிதியமும் தக்கன் ஆம் கடியோன் ஏவலால் அருள் சாலையில் அடைந்தன இமைப்பில். |
11 |
|
|
|
|
|
|
|
9500.
|
கணிதம் இல்லது ஓர் பரிதிகள் மேனியில் கஞலும்
மணிகள் ஓர் புடை தொகுத்தன ஆடக வரைபோல்
அணி கொள் காஞ்சனம் ஓர் புடை தொகுத்தன அம் பொன்
பணிகள் ஆடைகள் ஓர் புடை தொகுத்தன படைத்தே. |
12 |
|
|
|
|
|
|
|
9501.
|
மற்றும் வேண்டிய பொருள் எலாம் உதவி அம்
மருங்கில்
உற்ற வேலை அத் தக்கனது ஏவலின் ஒழுகா
நிற்றல் போற்றிய முனிவரர் யாவரும் நிலத்தோர்க்கு
இற்று எலாம் இவண் வழங்குதும் யாம் என இசைத்தார். |
13 |
|
|
|
|
|
|
|
9502.
| இன்ன வேலையில் இச் செயல் யாவையும் முன்னமே உணர் முப்புரி நூலினர் துன்னியே மனம் தூண்ட வந்து ஒல்லையில் அன்ன சாலை தனை அணைந்தார் அரோ. |
14 |
|
|
|
|
|
|
|
9503.
| சாலை காண்டலும் தக்கனை ஏத்தியே பாலர் தன்மையில் பாடினர் ஆடினர் கோல மார்பில் குலாவிய வெண்துகில் வேலை ஆம் என வீசி நின்று ஆர்த்து உளார். |
15 |
|
|
|
|
|
|
|
9504.
| மிண்டு கின்ற அவ் வேதியர் தங்களைக் கண்டு வம்மின் கதும் என நீர் எனாக் கொண்டு சென்று குழுவொடு இருத்தியே உண்டு தன்னை உதவுதல் மேயினார். |
16 |
|
|
|
|
|
|
|
9505.
|
மறு
இல் செம் பொன் மணி கெழு தட்டைகள்
இறுதி இல்லன யாவர்க்கும் இட்டு மேல் நறிய உண்டிகள் நல்கி இன்னோர் தமக்கு உறவினர் என ஊட்டுவித்தார் அவண். |
17 |
|
|
|
|
|
|
|
9506.
| அன்னகாலை அரும் பசி தீர் தரத் துன்ன உண்டும் சுவை உடைத்து ஆதலால் உன்னி உன்னி இவ் உண்டிகள் சாலவும் இன்னம் வேண்டும் என உரைப்பார் சிலர். |
18 |
|
|
|
|
|
|
|
9507.
| குற்றம் ஒன்று உள கூறுவது என் இனி நல் தவம் செய்து நான் முகனால் இவண் உற்ற உண்டி எலாம் உண ஓர் பசி பெற்றிலோம் எனப் பேது உறுவார் சிலர். |
19 |
|
|
|
|
|
|
|
9508.
| வீறும் உண்டி மிசைந்திட வேண்டும் வாய் நூறு நூறு அது என நுவல்வார் தமை ஏற வேண்டும் இதில் அமையாது எனச் சீறியே இகல் செய்திடுவார் சிலர். |
20 |
|
|
|
|
|
|
|
9509.
| புலவர் கோன் நகர் போற்றியதே உவந்து அலகில் இவ் உணவு ஆக்கியதால் எனாச் சிலர் புகன்றனர் தேக்கிட உண்மினோ உலவலீர் என ஓது கின்றார் சிலர். |
21 |
|
|
|
|
|
|
|
9510.
| அறிவு இலாத அயன் மகன் யாகம் இன்று இறுதி ஆம் என்று இசைத்தனர் அன்னது பெறுதியேனும் இப் பேர் உணவே நமக்கு உறுதி வல்லையில் உண்மின் என்பார் சிலர். |
22 |
|
|
|
|
|
|
|
9511.
| உண்டிலேம் இவண் உண்டதில் ஈதுபோல் கண்டிலேம் ஒரு காட்சியும் இன்பமும் கொண்டிலேம் இன்று கொண்டதில் ஈசன் ஆல் விண்டிலேம் எனின் மேலது என்பார் சிலர். |
23 |
|
|
|
|
|
|
|
9512.
| எல்லை இல் உணவு ஈயும் இத் தேனுவை நல்ல நல்லது ஒர் நாண் கொடியாத்து இவண் வல்லை பற்றி நம் மா நகரில் கொடு செல்லுதும் எனச் செப்புகின்றார் சிலர். |
24 |
|
|
|
|
|
|
|
9513.
| மக்கள் யாவரும் வானவர் யாவரும் ஒக்கல் யாவரும் உய்ந்திட வாழ்தலால் தக்கன் நோற்ற தவத்தினும் உண்டு கொல் மிக்கது என்று விளம்பு கின்றார் சிலர். |
25 |
|
|
|
|
|
|
|
9514.
| மைந்தன் இட்டன மாந்திட நான் முகன் தந்திலன் வயின் சாலவும் ஆங்கு அவன் சிந்தைமேல் அழுக்காறு செய்தான் எனா நொந்து நொந்து நுவலுகின்றார் சிலர். |
26 |
|
|
|
|
|
|
|
9515.
| குழுவு சேர் தரு குய்யுடை உண்டிகள் விழைவினோடு மிசைந்தன மாற்றவும் பழுது இலா இப் பரிசனர் தம் மொடும் எழுவது எப்படி என்று உரைப்பார் சிலர். |
27 |
|
|
|
|
|
|
|
9516.
|
இந்த
நல் உணவு ஈண்டு நுகர்ந்திட
நம் தம் மைந்தரை நம் மனை ஆம் கொடு வந்திலம் இனி வந்திடுமோ எனாச் சிந்தை செய்தனர் செப்புகின்றார் சிலர். |
28 |
|
|
|
|
|
|
|
9517.
| அன்ன பல பல ஆர் கலி ஆம் எனப் பன்னி நுங்கும் பனவர்கள் கேட்டனர் என்ன மற்று அவை யாவையும் ஆர்தர முன் அளித்து முனிவர் அருத்தினார். |
29 |
|
|
|
|
|
|
|
9518.
| அருத்தி மிச்சில் அகற்றி அரும் தவ விருத்தி மேவிய வேதியர் தங்களை இருத்தி மற்று ஒர் இருக்கையில் வாசநீர் கரைத்த சந்தின் கலவை வழங்கினார். |
30 |
|
|
|
|
|
|
|
9519.
| நளி குலாவிய நாவி நரந்தம் வெண் பளிதம் வெள் அடை பாகு உடன் ஏனவை அளி உலாவும் அணி மலர் யாவையும் ஒளிறு பீடிகை உய்த்தனர் நல்கினார். |
31 |
|
|
|
|
|
|
|
9520.
| அரைத்த சாந்தம் அணிந்து மெய் எங்கணும் விரைத்த பூம் துணர் வேய்ந்து பைம் காய் அடை பரித்து நின்ற பனவர் புத்தேள் உறும் தருக்கள் ஆம் எனச் சார்ந்தனர் என்பவே. |
32 |
|
|
|
|
|
|
|
9521.
| ஆன பான்மையில் அந்தணர் யாவரும் மேன காதலின் வெய்து என ஏகியே வான மண் இடை வந்து என ஏர்கெழு தான சாலை தனை அடைந்தார்களே. |
33 |
|
|
|
|
|
|
|
9522.
|
அடையும் வேலை அயன் அருள் காதலன்
விடையினால் அம் கண் மேவு முனிவரர்
இடை அறாதவர்க்கு ஈந்தனர் ஈந்திடும்
கொடையினால் எண்ணில் கொண்டலைப் போன்று
உளார்.
|
34 |
|
|
|
|
|
|
|
9523.
| பொன்னை நல்கினர் பூண் ஒடு பூம் துகில் தன்னை நல்கினர் தண் சுடரோன் என மின்னை நல்கும் வியன் மணி நல்கினர் கன்னியாவும் கறவையும் நல்கினார். |
35 |
|
|
|
|
|
|
|
9524.
| படி இல் ஆடகப் பாதுகை நல்கினர் குடைகள் நல்கினர் குண்டிகை நல்கினர் மிடையும் வேதியர் வேண்டிய வேண்டியாங்கு அடைய நல்கினர் அம் கைகள் சேப்பவே. |
36 |
|
|
|
|
|
|
|
9525.
| இந்த வண்ணம் இறையதும் தாழ்க்கிலர் முந்து நின்ற முனிவரர் ஆண்டு உறும் அந்தணாளர்க்கு அயினியொடு ஆம் பொருள் தந்து நின்று தயங்கினர் ஓர் புடை. |
37 |
|
|
|
|
|
|
|
9526.
| அற்றம் இல் சிறப்ப அந்தணர் ஆ இடைப் பெற்ற பெற்ற பெருவளன் யாவையும் பற்றி மெல்லப் படர்ந்தனர் பல பல பொற்றை செய்தனர் போற்றினர் ஓர் புடை. |
38 |
|
|
|
|
|
|
|
9527.
|
வரத்தின்
ஆகும் வரம்பு இல் வெறுக்கை தம்
புரத்தின் உய்த்திடும் புந்தி இல் அன்னவை உரத்தினால் தமக்கு ஒப்பு அரும் வேதியர் சிரத்தின் மேல் கொடு சென்றனர் ஓர் புடை. |
39 |
|
|
|
|
|
|
|
9528.
| அரி தன் ஊர்தியும் அன்னமும் கீழ்த்திசை அரிதன் ஊர்தியும் ஆங்கு அவன் மாக்களும் அரிதன் ஊர்தியும் ஆர் உயிர் கொண்டிடும் அரிதன் ஊர்தியும் ஆர்ப்பன ஓர் புடை. |
40 |
|
|
|
|
|
|
|
9529.
| தானம் மீது தயங்கிய தேவரும் ஏனையோர் களும் இவ்விடை ஈண்டலின் மீனம் ஆர் தரு விண் என வெண் நிலா மான கோடி மலிகின்ற ஓர் புடை. |
41 |
|
|
|
|
|
|
|
9530.
| நரம்பின் வீணை ஞரல் உறும் வேய்ங்குழல் பரம்பு தண்ணுமை பண் அமை பாடல் நூல் வரம்பின் ஏய்ந்திட வானவர்' நாடவே அரம்பை மார்கள் நின்று ஆடினர் ஓர் புடை. |
42 |
|
|
|
|
|
|
|
9531.
| தேவர் மாதரும் சில சில தேவரும் தாவு இலா மகச் சாலையின் வைகிய காவு தோறும் கமலம் அலர்ந்திடும் ஆவி தோறும் உற்று ஆடினர் ஓர் புடை. |
43 |
|
|
|
|
|
|
|
9532.
| வேத வல்லி வியப்புடன் நல்கிய காதல் மாதரும் காமரு விண்ணவர் மாத ராரும் சசியும் மகத் திரு ஓதி நாடி அங்கு உற்றனர் ஓர் புடை. |
44 |
|
|
|
|
|
|
|
9533.
| இனைய பல பல எங்கணும் ஈண்டலில் கனை கொள் பேர் ஒலி கல் என ஆர்த்தன அனையன் வேள்விக்கு அகன் கடல் யாவையும் துனைய வந்து அவண் சூழ்ந்தன போலவே. |
45 |
|
|
|
|
|
|
|
9534.
| ஊனம் மேல் உறும் உம்பரும் இம்பரும் ஏன காதலின் மிக்கு அவண் ஈண்டுவ வான ஆறு வரு நதியும் புவித் தான ஆறும் தழீ இயன் போன்றவே. |
46 |
|
|
|
|
|
|