முகப்பு |
தக்கன் சிவபூசை செய் படலம்
|
|
|
9940.
|
மருமலர் அயன் இவை வகுப்ப நாடியே
புரிகுவன் அஃது எனப் புகன்று தாதை தாள் பரிவொடு சிறுவிதி பணிந்து காசி ஆம் திரு நகர் அதன் இடைச் சேறல் மேயினான். |
1 |
|
|
|
|
|
|
|
9941.
| சென்றனன் காசியில் சிறந்த தொல் மணி கன்றிகை ஒரு புடை கங்கை வேலையில் பொன் திகழ் செம் சடைப் புனிதற்கு ஆலயம் ஒன்று முன் விதித்தனன் உணர்வு சேர்ந்துளான். |
2 |
|
|
|
|
|
|
|
9942.
| அருள் உருவு ஆகியே அகிலம் ஆவிகள் தருவதும் கொள்வதும் ஆகித் தாணுவாய் உரு அருவு ஆகிய ஒப்பு இல் பேற் ஒளித் திரு உருவு ஒன்றினைச் சிவனுக்கு ஆக்கினான். |
3 |
|
|
|
|
|
|
|
9943.
| நாயகன் மொழிதரு நவை இல் ஆகமம் மேயின முறை தெரி விரதன் ஆகியே பாய் புனல் புனை சடைப் பரமன் தாள் மலர் ஆயிரம் ஆண்டு காறும் அருச்சித்து ஏத்தினான். |
4 |
|
|
|
|
|
|
|
9944.
| அருச்சனை புரிதலும் அயன் தன் காதலன் கருத்து உறும் அன்பினைக் கண்டு கண் நுதல் பொருக்கு என வெளிப்படப் புகழ்ந்து பொன் உலாம் திருக் கழல் வணங்கினன் தெளிவு பெற்று உளான். |
5 |
|
|
|
|
|
|
|
9945.
| அகந்தை அது ஆகியே ஐய நின் தனை இகழ்ந்தனன் என்கணே எல்லை இல் பவம் புகுந்தன அவை எலாம் போக்கி நின் இடைத் தகும் பரிசு அன்பினைத் தருதி ஆல் என்றான். |
6 |
|
|
|
|
|
|
|
9946.
| ஆயவை தொலைத்து அளித்து அவன் தன் பூசையின் நேயம் அது ஆகியே நிமலன் தன் கண நாயக இயற்கையை நல்கி வல்லையில் போயினன் தக்கனும் புனிதன் ஆயினான். |
7 |
|
|
|
|
|
|
|
9947.
| கங்கைச் சடையான் தனைத் தக்கன் அக் காசி தன்னில் அங்கு அர்ச்சனை செய்திடப் போந்துழி அம்புயன் மால் துங்கத்து இமையோர் இறையாவரும் சூர மாதர் சங்கத் தவரும் மக எல்லை தணந்து போனார். |
8 |
|
|
|
|
|
|
|
9948.
|
போகு உற்றவர்கள் அனை வோரும் பொருவு இல் சீர்த்தி
வாகு உற்ற வீரன் சயம் தன்னை வழுத்தித் தங்கட்கு ஆகு உற்ற தொல்லைத் தலம் தோறும் அடைந்து மாது ஓர் பாகத்து அமலன் தனைப் பூசனைப் பண்ணல் உற்றார். |
9 |
|
|
|
|
|
|
|
9949.
| ஆராதனைகள் புரிந்தே அனை வோரும் எங்கும் பேராது நிற்கும் பெருமான் அருள் பெற்று மெய்யில் தீராத சின்னங்களும் தீர்ந்து சிறந்து தத்த மூர் ஆகியது ஓர் பதம் மேவி உறைதல் உற்றார். |
10 |
|
|
|
|
|
|
|
9950.
| மேதக்க தக்கன் மகம் தன்னில் விரைந்து புக்கு ஆங்கு ஏதத்து அடிசில் மிசைந்தே பொருள் யாவும் ஏற்றுப் பூதத் தரின் மாய்ந்து எழுந்தே தம் புரிகள் தோறும் பேதைத் தொழில் அந்தணர் யாரும் பெயர்ந்து போனார். |
11 |
|
|
|
|
|
|
|
9951.
|
என்று இங்கு இவைகள் குரவோன் இசைத்திட்டல் கேளா
நன்று என்று சென்னி துளக்கு உற்று நனி மகிழ்ந்து குன்றின் சிறை கொய்தவன் தந்த குரிசில் உள்ளத்து ஒன்றும் கவலை இலன் ஆகி அவ் உம்பர் உற்றான். |
12 |
|
|
|
|
|
|