1009ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் அவுணன்
வாய்ந்த ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம் -
ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்று அழலால்
தேய்ந்த வேயும் அல்லது இல்லாச் சிங்கவேழ்குன்றமே             (3)