1012எரிந்த பைங் கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடு இது எவ் உரு என்று
இரிந்து வானோர் கலங்கி ஓட இருந்த அம்மானது இடம்-
நெரிந்த வேயின் முழையுள் நின்று நீள் நெறிவாய் உழுழை
திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும் சிங்கவேழ்குன்றமே             (6)