1013முனைத்த சீற்றம் விண் சுடப் போய் மூவுலகும் பிறவும்
அனைத்தும் அஞ்ச ஆள் அரி ஆய் இருந்த அம்மானது இடம்-
கனைத்த தீயும் கல்லும் அல்லா வில் உடை வேடரும் ஆய்
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் சிங்கவேழ்குன்றமே             (7)