1014நாத் தழும்ப நாஅன்முகனும் ஈசனும் ஆய் முறையால்
ஏத்த அங்கு ஓர் ஆள் அரி ஆய் இருந்த அம்மானது இடம்-
காய்த்த வாகை நெற்று ஒலிப்ப கல் அதர் வேய்ங்கழை போய்த்
தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்கவேழ்குன்றமே             (8)