1047வானவர்-தங்கள் சிந்தை போல என்
      நெஞ்சமே இனிது உவந்து மா தவ
மானவர்-தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை
கானவர் இடு கார் அகில்-புகை
      ஓங்கு வேங்கடம் மேவி மாண் குறள்
ஆன அந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே             (1)