1053தருக்கினால் சமண் செய்து சோறு தண்
      தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவார் அலக்கண்-அது கண்டு என் நெஞ்சம் என்பாய்
மருள்கள் வண்டுகள் பாடும் வேங்கடம்
      கோயில் கொண்டு அதனோடும் வானிடை
அருக்கன் மேவிநிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே             (7)