1059முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன் ஊர்-தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின் ஓர் தூது ஆதி-மன்னர்க்கு ஆகி பெருநிலத்தார்
இன்னார் தூதன் என நின்றான்-எவ்வுள் கிடந்தானே             (3)