1075மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்
      வேட்கையினோடு சென்று இழிந்த
கான் அமர் வேழம் கைஎடுத்து அலற
      கரா அதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து
      சென்று நின்று ஆழிதொட்டானை-
தேன் அமர் சோலை மாட மா மயிலைத்
      திருவல்லிக்கேணிக் கண்டேனே             (9)