1081 | மாலும் கடல் ஆர மலைக் குவடு இட்டு அணை கட்டி வரம்பு உருவ மதி சேர் கோல மதிள் ஆய இலங்கை கெட படை தொட்டு ஒருகால் அமரில் அதிர காலம் இது என்று அயன் வாளியினால் கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும் நீல முகில் வண்ணன் எமக்கு இறைவற்கு இடம் மா மலை ஆவது-நீர்மலையே (5) |
|