1084 | பிச்சச் சிறு பீலி பிடித்து உலகில் பிணம் தின் மடவார்-அவர் போல் அங்ஙனே அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால் அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய் நச்சி நமனார் அடையாமை நமக்கு அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும்- அவற்கு இடம் மா மலை ஆவது- நீர்மலையே (8) |
|