1088 | பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு பொய்ந் நூலை மெய்ந் நூல் என்று என்றும் ஓதி மாண்டு அவத்தம் போகாதே வம்மின் எந்தை என் வணங்கப்படுவானை கணங்கள் ஏத்தும் நீண்ட வத்தை கரு முகிலை எம்மான்-தன்னை நின்றவூர் நித்திலத்தை தொத்து ஆர் சோலைக் காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக் கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே (2) |
|