109கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம்
ஒத்துப் பொருந்திக்கொண்டு உண்ணாது மண் ஆள்வான்
கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய
அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்
      ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான் (3)