1107திவளும் வெண் மதிபோல் திரு முகத்து அரிவை
      செழுங் கடல் அமுதினில் பிறந்த
அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும்
      ஆகிலும் ஆசை விடாளால்
குவளை அம் கண்ணி கொல்லி அம் பாவை
      -சொல்லு நின் தாள் நயந்திருந்த
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்?
      -இடவெந்தை எந்தை பிரானே             (1)