| 1108 | துளம் படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்து கொண்டு அணியாள் குளம் படு குவளைக் கண்-இணை எழுதாள் கோல நல் மலர் குழற்கு அணியாள் வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த மால் என்னும் மால் இன மொழியாள் இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்?- இடவெந்தை எந்தை பிரானே (2) |
|