1109 | சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தட முலைக்கு அணியிலும் தழல் ஆம் போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் பொரு கடல் புலம்பிலும் புலம்பும் மாந் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம் வளைகளும் இறை நில்லா என்-தன் ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய்?- இடவெந்தை எந்தை பிரானே (3) |
|