1110ஊழியின் பெரிதால் நாழிகை என்னும்
      ஒண் சுடர் துயின்றதால் என்னும்
ஆழியும் புலம்பும் அன்றிலும் உறங்கா
      தென்றலும் தீயினில் கொடிது ஆம்
தோழி ஓ என்னும் துணை முலை அரக்கும்
      சொல்லுமின் என் செய்கேன்? என்னும்
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய்?
      -இடவெந்தை எந்தை பிரானே             (4)