1111 | ஓதிலும் உன் பேர் அன்றி மற்று ஓதாள் உருகும் நின் திரு உரு நினைந்து காதன்மை பெரிது கையறவு உடையள் கயல் நெடுங் கண் துயில் மறந்தாள் பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல் ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய்?- இடவெந்தை எந்தை பிரானே (5) |
|