1113உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும்
      உனக்கு அன்றி எனக்கு அன்பு ஒன்று இலளால்
வளங் கனிப் பொழில் சூழ் மாலிருஞ்சோலை
      மாயனே என்று வாய்வெருவும்
களங் கனி முறுவல் காரிகை பெரிது
      கவலையோடு அவலம் சேர்ந்திருந்த
இளங் கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்?-
      இடவெந்தை எந்தை பிரானே             (7)