1117திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை
      மலர்மிசைமேல் அயனும் வியப்ப
முரி திரை மா கடல் போல் முழங்கி
      மூவுலகும் முறையால் வணங்க
எரி அன கேசர வாள் எயிற்றோடு
      இரணியன் ஆகம் இரண்டு கூறா
அரி உரு ஆம் இவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தேன் என்றாரே            (1)