1121கலைகளும் வேதமும் நீதி நூலும்
      கற்பமும் சொல் பொருள்-தானும் மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்
      நீர்மையினால் அருள்செய்து நீண்ட
மலைகளும் மா மணியும் மலர்மேல்
      மங்கையும் சங்கமும் தங்குகின்ற
அலை கடல் போன்றிவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தேன் என்றாரே            (5)