1123 | முழுசி வண்டு ஆடிய தண் துழாயின் மொய்ம் மலர்க் கண்ணியும் மேனி அம் சாந்து இழுசிய கோலம் இருந்தவாறும் எங்ஙனம் சொல்லுகேன்? ஓவி நல்லார் எழுதிய தாமரை அன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும் அழகியதாம் இவர் ஆர்கொல்? என்ன- அட்டபுயகரத்தேன் என்றாரே (7) |
|