1124மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க
      வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால்
      சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில்
காவி ஒப்பார் கடலேயும் ஒப்பார்
      கண்ணும் வடிவும் நெடியர் ஆய் என்
ஆவி ஒப்பார் இவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தே என்றாரே             (8)