1125 | தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி வாய் திறந்து ஒன்று பணித்தது உண்டு நஞ்சம் உடைத்து இவர் நோக்கும் நோக்கம் நான் இவர்-தம்மை அறியமாட்டேன் அஞ்சுவன் மற்று இவர் ஆர்கொல்? என்ன- அட்டபுயகரத்தேன் என்றாரே (9) |
|