1128 | கார் மன்னு நீள் விசும்பும் கடலும் சுடரும் நிலனும் மலையும் தன் உந்தித் தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம்- தடம் மா மதிள் சூழ்ந்து அழகு ஆய கச்சி தேர் மன்னு தென்னவனை முனையில் செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன் பார் மன்னு பல்லவர்-கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (2) |
|