1131 | தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின் துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள் பூம் புனல் பொய்கை புக்கான்-அவனுக்கு இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத் திசைப்ப செருமேல் வியந்து அன்று சென்ற பாம்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (5) |
|