1134 | குடைத் திறல் மன்னவன் ஆய் ஒருகால் குரங்கைப் படையா மலையால் கடலை அடைத்தவன் எந்தை பிரானது இடம்- அணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி விடைத் திறல் வில்லவன் நென்மெலியில் வெருவ செரு வேல் வலங் கைப் பிடித்த படைத் திறல் பல்லவர்-கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (8) |
|