1135 | பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து முன்னே ஒருகால் செருவில் உருமின் மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி கறை உடை வாள் மற மன்னர் கெட கடல்போல முழங்கும் குரல் கடுவாய்ப் பறை உடைப் பல்லவர்-கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (9) |
|