1137 | மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின்மேல் ஓர் இளந் தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை- துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூய நான்மறையாளர் சோமுச் செய்ய செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (1) |
|