1138 | கொந்து அலர்ந்த நறுந் துழாய் சாந்தம் தூபம் தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில் சந்து அணி மென் முலை மலராள் தரணி-மங்கை தாம் இருவர் அடி வருடும் தன்மையானை- வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம் ஐந்து வளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும் சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும் செல்வத் திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (2) |
|