114மூத்தவை காண முது மணற்குன்று ஏறிக்
கூத்து உவந்து ஆடிக் குழலால் இசை பாடி
வாய்த்த மறையோர் வணங்க இமையவர்
ஏத்த வந்து என்னைப் புறம்புல்குவான்
      எம்பிரான் என்னைப் புறம்புல்குவான் (8)