1141 | கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி கணை ஒன்றினால் மடிய இலங்கை-தன்னுள் பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான்-தன்னை- மறை வளர புகழ் வளர மாடம்தோறும் மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும் திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (5) |
|