1142 | உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க தறி ஆர்ந்த கருங் களிறே போல நின்று தடங் கண்கள் பனி மல்கும் தன்மையானை- வெறி ஆர்ந்த மலர்-மகள் நா-மங்கையோடு வியன் கலை எண் தோளினாள் விளங்கு செல்வச் செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (6) |
|